Home கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி
அவமதிப்பும் உயிர்பறிப்பும் (2) PDF Print E-mail
Saturday, 29 August 2020 17:43

அவமதிப்பும் உயிர்பறிப்பும் (2)

   மௌலானா அபுல் கலாம் ஆஸாத்   ரஹ்மதுல்லாஹி அலைஹி   

    தமிழாக்கம் தி. சை. அப்துர் ரஹ்மான் உமரி     

‘நீதிமன்ற நடவடிக்கைகள்’ என்று இன்றைக்கு நாம் குறிப்பிடுகிறோமே, அதற்கு இஸ்லாம் தருகின்ற மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உலகில் வேறு எந்த நாட்டிலும், கொள்கை - கோட்பாடுகளிலும் காண முடியாது!

இஸ்லாமிய சமூக அமைப்பில் ‘குற்றம்’ ‘தண்டனை’ இரண்டையும் நீதிமன்றம் அல்லாது வேறு யாரும் வகைப்படுத்தவோ, தீர்மானிக்கவோ இயலாது.

நீதிமன்றத்திற்கு மட்டும் தான் ‘குற்றத்தை’ வகைப்படுத்தி ‘தண்டனையை’ தீர்மானித்து நிர்ணயிக்கும் உரிமை உண்டு. வேறு யாருக்கும் — அவர் எப்பேற்பட்ட மனிதராக இருந்தாலும், ஏன் ஆட்சித்தலைவர், அமீருல் முஃமினீன் ஆக இருந்தாலும் கூட — இவ்வுரிமை கிடையாது!

கேட்பாணை, விசாரணை, சாட்சியம், ஆழ்நோக்கு என்ற எல்லாவிதமான நடைமுறைகளையும் முழுமையாக நிறைவுபடுத்திய பின்புதான் நீதிமன்ற நடுவர் நடவடிக்கையில் இறங்க இயலும்!

குற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற ஒரு நபரை ஆட்சித் தலைவரோ, அமீருல் முஃமினீனோ கையும் களவுமாகப் பிடித்து விட்டால்கூட வாதியாக, சாட்சியாக நீதி அவைகளில் அவர் வழக்கு தொடுக்கலாமே ஒழிய, சுயமாக தண்டிக்கவெல்லாம் முடியாது. அவருடைய முறையீட்டை விசாரிக்கலாமா, வேண்டாமா என்ற முடிவையும் கூட நீதி மன்றம்தான் எடுக்க வேண்டியிருக்கும்!

Read more...
 
ஷிர்க் (ஓரிறைவனைவிட்டு வேற்றுத் தெய்வங்களுக்கு அடிபணிதல்) (2) PDF Print E-mail
Tuesday, 25 August 2020 07:48

ஷிர்க் (ஓரிறைவனைவிட்டு வேற்றுத் தெய்வங்களுக்கு அடிபணிதல்) (2)

     "ஷிர்க்" என்றால் என்ன?     

"ஷிர்க்" என்றால் அரபி மொழியில் "பங்கு" என்று அர்த்தம். நீங்களும் உங்களுடைய நண்பர்களும் சேர்ந்து ஒரு கம்பெனியை ஆரம்பக்கிறீர்கள். தமிழில் அதை "குழுமம்" என்கிறோம். (குழுவாக ஆரம்பித்துள்ளதால்) அரபியில் அதை "ஷிர்க்கா" என்கிறார்கள். பங்காளியை அதாவது பார்ட்னரை "இஷரீக்" என்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாமும் சமம் என்று கூறுகின்ற பொது உடைமைக்கொள்கையை (கம்யூனிஸக் கொள்கையை) அரபியில் "இஷ்திராகிய்யா" என்கிறார்கள்.

ஷரீஅத்தில் "ஷிர்க்" என்றால், படைத்த இறைவனோடு இன்னொன்றை இணையாக்குவது என்று பொருள். அதாவது...

1) அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவனை இறைவனாக படைத்தவனாக கருதினால் அது "ஷிர்க்"

2) நமது வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அல்லாஹ் அல்லாத இன்னொருவன் அளிப்பதாகக் கருதினால் அது "ஷிர்க்".

3) நன்மையையும் தீமையையும் தரக்கூடிய சக்தி யாருக்காவது இருப்பதாக நினைத்தால் அது "ஷிர்க்".

4) அல்லாஹ் அல்லாத இன்னொரு சக்தியிருப்பதாக நம்பி, அல்லது இன்னொருவருக்கு சக்தியிருப்பதாக நம்பி அவரையோ அதனையோ திருப்திப்படுத்த முயற்சி செய்தால் அது "ஷிர்க்".

5) அல்லாஹ் அல்லாத ஒரு சக்திக்கு முன்னால் தலை வணங்கினாலோ நேர்ச்சை செய்தாலோ துஆ கேட்டாலோ அது "ஷிர்க்".

6) அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும் அளவுக்கு சக்தி இருக்கின்றது என்று யாரைப் பற்றியாவது நம்பினால் அது "ஷிர்க்".

7) இறந்துபோன அவ்லியாக்கள், நல்லடியார்கள் நமக்காக அல்லாஹ்விடம் வாதாடுவார்கள் என்ற நம்பினால் அது "ஷிர்க்".   அதே போன்று,

8) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான ஆற்றலும் வல்லமையும் இன்னொரு பொருளுக்கும் இருப்பதாக நினைத்தால் அதுவும் "ஷிர்க்".

9) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரங்களை இன்னொரு பொருளுக்கு அளித்தால் அதுவும் "ஷிர்க்".

Read more...
 
ஷிர்க் (ஓரிறைவனைவிட்டு வேற்றுத் தெய்வங்களுக்கு அடிபணிதல்) (1) PDF Print E-mail
Monday, 17 August 2020 17:45

ஷிர்க் (ஓரிறைவனைவிட்டு வேற்றுத் தெய்வங்களுக்கு அடிபணிதல்) (1)

       Syed Abdur Rahman Umari       

o  இஸ்லாமின் அடிப்படைகள்

o  ஓரிறைக் கொள்கையே மனிதனின் தேவை

o  ஷிர்க், குஃப்ர் என்பதன் விளக்கம்

o  ஷிர்க்கை பற்றிய தவறான விளக்கம்

o  ஷிர்க்கிற்கான காரணம்

o  ஷிர்க் மனிதர்களிடத்தில் எவ்வாறு தோன்றுகிறது?

o  ஷிர்க்கின் துவக்கம்

o  சிலைகள் பிறந்த கதை!

o  இஸ்லாமும் ஜாஹிலிய்யத்தும்

o  சிலைகளின் நவீன வடிவங்கள்

o  முஸ்லிம்களுடைய தவறான புரிதல்

o  "ஷிர்க்" என்றால் என்ன?

o  முஸ்லிம்களை வழிகெடுப்பது எப்படி?

o  நவீன சிலைகள்

o  வழிபாடு என்றால் என்ன?

o  ஷிர்க்கைப் பற்றிய தவறான கண்ணோட்டம்

o  ஷிர்க் என்பது அல்லாஹ்வுக்கு எதிரான சதி

o  ஷிர்க் என்பதே அறியாமை

o  ஷிர்க் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்

o  இஸ்லாமோடு தொடர்பில்லாத முஸ்லிம்களின் செயல்கள்

o  ஷிர்க் ஃபிஸ் ஸாத்

o  ஷிர்க் ஃபில் சிஃபாத்

o  ஷிர்க் ஃபில் லவாஜிம்

Read more...
 
மில்லத்தே இப்ராஹீம் PDF Print E-mail
Thursday, 30 July 2020 20:41

மில்லத்தே இப்ராஹீம்

      Sayed Abdurrahman Umari       

"மேலும், எவர் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து, தன்னுடைய செயல்களை அழகாக்கிக் கொண்டு ஒருமனப்பட்டு இப்ராஹீமின் வழிமுறையையும் பின்பற்றினாரோ அவரை விடச் சிறந்த வாழ்க்கை நெறி உடையவர் யார்? இப்ராஹீமையோ அல்லாஹ் தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்." (அல்குர்ஆன் 4:125)

இபாதத் மற்றும் இஸ்லாமிற்கான இலக்கணம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்

இபாதத் என்றால் வழிபாடு என்றல்ல பொருள்.

அப்த் என்றால் அடிமை. அப்துல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் அடிமை.

இபாதத் என்றால் எந்த ஆதிக்கத்திற்கும் கட்டுப்படாமல் இறைவன் ஒருவனுக்கே அடிமையாய் இருப்பது எனப்பொருள்.

இஸ்லாம் என்பது ஒரு மார்க்கத்தின் பெயரோ சமயத்தின் பெயரோ அல்ல.

இஸ்லாம் என்றால் ஓரிறைவனுக்கு மட்டுமே முற்றிலும் கட்டுப்பட்டு வாழ்வது எனப்பொருள்.

நினைத்துப் பாருங்கள். இப்ராஹீமை அவரது இறைவன் சில விஷயங்களில் சோதித்தபோது அவர் முழுமைப்படுத்தினார். அதுகண்ட இறைவன் நான் உன்னை மக்களுக்கு தலைவராக ஆக்குவேன் என்றான். எனது சந்ததியையுமா? என்றார் அவர். அநீதியாளர்களுக்கு என் வாக்கு பொருந்தாது என்றான் இறைவன். (அல்குர்ஆன் 2:124)

Read more...
 
அர்ப்பணிப்புப் பெருநாள்! (1) PDF Print E-mail
Wednesday, 29 July 2020 08:01

அர்ப்பணிப்புப் பெருநாள்! (1)

(அஸ்ஸாஃப்பாத் வசன விளக்கத் தொகுப்பு)     

     சையத் குதுப் ஷஹீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி     

     தமிழாக்கம்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி     

o  அர்ப்பணிப்புப் பெருநாள் தரும் செய்தி

o  இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம்   அவர்களின் வரலாறு

o  இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு

o அண்ணல் இப்ராஹீமின் தனிச்சிறப்புகள்

o நம்பிக்கை மிக்க முஃமின்!.

o நிகழ்வின் நினைவாக!

Read more...
 
அர்ப்பணிப்புப் பெருநாள்! (2) PDF Print E-mail
Wednesday, 29 July 2020 07:42

அர்ப்பணிப்புப் பெருநாள்! (2)

(அஸ்ஸாஃப்பாத் வசன விளக்கத் தொகுப்பு)

    சையத் குதுப் ஷஹீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி     

     தமிழாக்கம் சையத் அப்துர் ரஹ்மான் உமரி      

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்

அவர்களின் வரலாறு

அதன்பிறகு, அண்ணல் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாமுடைய வரலாறு வருகின்றது. அந்த வரலாற்றின் இரண்டு முக்கியக் கூறுகள் இங்கே சொல்லப்படுகின்றன. முதல் கூறில், அண்ணல் இப்ராஹீம் தமது சமூக மக்களுக்கு முன் எடுத்துவைத்த இறையழைப்பும் அதன் தொடர்ச்சியாக துண்டுதுண்டாக சிலைகளை உடைத்த நிகழ்வும் சொல்லப்படுகின்றது.

அதனால் வெகுண்ட அம்மக்கள் அண்ணல் இப்ராஹீமை தீயில் சுட்டுப் பொசுக்கிக் கொல்ல முடிவு செய்தார்கள். இறைவனோ அவரைக் காப்பாற்றி விட்டான். அவரது பகைவர்களை தோல்வியுறச் செய்தான். வரலாற்றின் இப்பகுதி குர்ஆனின் வேறுபல அத்தியாயங்களிலும் இடம் பெற்றுள்ளது.

வரலாற்றின் அடுத்த கூறு முற்றிலும் புதியது. இந்த அத்தியாயத்தில் மட்டும்தான் அது இடம்பெறுகின்றது. அண்ணல் இப்ராஹீம் கண்ட கனவு, மகன் இஸ்மாயீலை பலிகொடுக்க முனைந்தது, அவரது உயிர் காப்பாற்றப்பட்ட நிகழ்வு ஆகியன இதிலுள்ளன. இரண்டாம் கூற்றில் உள்ள இத்தகவல்கள் யாவும் விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லப்பட்டுள்ளன.

சிந்தனையையும் கவனத்தையும் ஒருசேர ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது, சொல்நயம். இறைவன் ஒருவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிவது, அவனுக்கு முன்பாக அனைத்தையும் ஒப்படைத்துவிடுவது, உயிரையும் உடைமைகளையும் அவன் ஒருவனுக்கே அர்ப்பணித்து விடுவது போன்றவற்றிற்கான ஒப்பற்ற உதாரணங்களை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது இது. மனித குல வரலாறு நெடுக இதற்கு இணையான இன்னொரு நிகழ்வை நம்மால் காணவே இயலாது.

Read more...
 
அர்ப்பணிப்புப் பெருநாள்! (3) PDF Print E-mail
Wednesday, 29 July 2020 07:28

அர்ப்பணிப்புப் பெருநாள்! (3)

(அஸ்ஸாஃப்பாத் வசன விளக்கத் தொகுப்பு)

    சையத் குதுப் ஷஹீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி     

     தமிழாக்கம் சையத் அப்துர் ரஹ்மான் உமரி      

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்   அவர்களது வரலாற்றின் அடுத்த கூறு

வரலாற்றின் அடுத்த கூறு இப்போது ஆரம்பமாகின்றது. தந்தையோடும் சமூகத்தோடுமான அவரது நிகழ்வுகள் முடிவடைந்துவிட்டன.

நெருப்பில் போட்டு அந்நெருப்பிற்கு அவர்கள் நரகம் எனப் பெயர் சூட்டியிருந்தார்கள் எரித்துக்கரிக்க முடிவு செய்தார்கள். ஆனால் அவர்களைக் கீழேதள்ள இறைவன் முடிவு செய்திருந்தான். அவர்களது சதியிலிருந்து இப்ராஹீமை பாதுகாப்பாக வெளிக்கொணர்ந்தான். அத்தருணத்தில்தான் தமது வாழ்க்கையின் ஒரு கட்டத்தை முடித்துவிட்டு அடுத்த கட்டத்தில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அடியெடுத்து வைத்தார்கள். வாழ்க்கைப் புத்தகத்தில் ஓர் அத்தியாயத்தை முடித்துவிட்டு அடுத்த அத்தியாயத்தைப் புரட்டினார்கள்.

"நான் என்னுடைய இறைவனின் பக்கம் செல்கின்றேன்; அவனே எனக்கு வழிகாட்டுவான்' என்றார் இப்ராஹீம். (99)

நாட்டைத் துறந்து ஹிஜ்றத் ஆம், அண்ணல் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் சொன்ன வார்த்தைகள் இவையே. என் இறைவனை நோக்கி நான் போகின்றேன். ஹிஜ்றத் என்பதுதான் இதற்குப் பொருள். முதலில் சிந்தனையாலும் உள்ளத்தாலும் செய்தாக வேண்டிய ஹிஜ்றத் இது. சிந்தனையை அடக்கி புலன்களை ஒடுக்கிய பிறகுதான் புலம் பெயருதல். விருப்பங்களை முதலில் மாற்றியாக வேண்டும் அப்புறம் தான் வசிப்பிடத்தை மாற்றவேண்டும்.

இந்நிகழ்விற்குப்பின் கடந்த காலத்தோடு தொடர்புடைய அனைத்தையும் விட்டுவிட்டார் அண்ணல் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம். தமது நினைவுகளைக் கூட கொண்டு வராமல் விட்டு விட்டார்கள்!.

Read more...
 
அவமதிப்பும் உயிர்ப்பறிப்பும் (1) PDF Print E-mail
Saturday, 25 July 2020 07:36

அவமதிப்பும் உயிர்ப்பறிப்பும் (1)

    மௌலானா அபுல் கலாம் ஆஸாத்     

    தமிழாக்கம் தி. சை. அப்துர் ரஹ்மான் உமரி     

இன்று நம்முன் விடைகளை எதிர்பார்த்து சில கேள்விகள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன.

1)  இறுதித்தூதர் இறைவனின் தூதரை யாரேனும் ஒருவன் அவமதித்து விட்டால், கேவலமாக திட்டித் தீர்த்தால் அவனுடைய உயிரைப் பறித்து விட வேண்டும் என்பதுதான் இஸ்லாமியச் சட்டமா? அவனுடைய தலைக்கு விலையை நிர்ணயிப்பது முஸ்லிம்கள் மீதான மார்க்கக் கடமையா?

2) ஊர் பேர் தெரியாத யாரோ ஒருவன் இறைத்தூதரைக் கேவலப்படுத்தி விட்டான். அவன் யாரென்று அவன் சார்ந்துள்ள சமூக மக்களுக்கே சரியாகத் தெரியாது. அம்மக்கள் அவனைக் கண்டிக்கவும் இல்லை. ஒட்டுமொத்தமாக அந்த சமூகமக்கள் அனைவரையும் புறக்கணிப்பதும் ஊர் விலக்கம் செய்வதும்தான் இஸ்லாமியக் கட்டளையா?

3) இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத — முஸ்லிம் அல்லாத ஒருவன் இவ்வாறு செய்தாலும் அவனைத் தீர்த்துக் கட்டுவதுதான் இஸ்லாமியத் தண்டனையா?

4) தன்குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டு வருத்தம் தெரிவித்த பின்பும் அதனை ஒப்புக் கொள்ளாமல் வேறு வகையான தண்டனைகளை முஸ்லிம்கள் அவனுக்கு வழங்கித்தான் ஆக வேண்டுமா?

இஸ்லாமிய சட்டநெறிமுறைகளில் தண்டனைகளின் நிலை இப்பிரச்சனையின் உள்ளே ஆழப்புகுமுன் இரண்டு விஷயங்களைப் புரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

Read more...
 
மற்றவர்களின் மனவருத்தத்தை ஈட்டாதீர்கள் PDF Print E-mail
Tuesday, 21 July 2020 07:42

மற்றவர்களின் மனவருத்தத்தை ஈட்டாதீர்கள்

      Sayed Abdur Rahman Umari       

ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றவர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும் பரினை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பார்.

‘மென்மையால் நிரம்பியவர், கருணையால் நிறைந்தவர்’ என இறுதித்தூதர் எம்பெருமானாரைப் பற்றி எடுத்துச்சொல்கின்றது, வான்மறை குர்ஆன்.
..
சில ஆண்டுகளுக்கு முன்னால் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பு ஒன்றை சரிபார்க்கும் பணி வந்தது. நானும் ஹாஃபிழ் முஹ்யுத்தீன் காஸிமி அவர்களும் சில அத்தியாயங்களை சரிபார்த்துக் கொடுத்தோம். ஹதீஸ் மொழிபெயர்ப்பாளர் எனும் அடைமொழியோடு கூடிய ஆலிம் பெருந்தகை ஒருவர் செய்திருந்த மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பதைக் காட்டிலும் கடினமானது மற்றவர்கள் பெயர்த்ததை சரிபார்ப்பது
.
இறைத்தூதரின் பல சொற்பிரயோகங்களுக்கு சரியான பொருளையும் அதற்கு நிகரான தமிழ்ச்சொல்லையும் தேடி வெகுதொலைவு பயணிக்க வேண்டியிருந்தது.

பல நபிமொழிகள் நம்பவேமுடியாத திகைப்பை ஏற்படுத்தின. நாங்கள் பணிசெய்யும் ‘அழகைப்’ பார்த்து பணியைக் கொடுத்தவர் திரும்பப் பெற்றுக்கொண்டார். 
.
மகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்திய நபிமொழிகளில் ஒன்று இது!.

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

ஆனால் இதன் சரியான மொழிபெயர்ப்பை யாரும் தருவதில்லை.

‘தனது கரத்தாலும் நாவாலும் மற்றவர்களுக்கு எத்தொல்லையும் தராமல் இருப்பவரே உண்மை முஸ்லிம்’ என்றே மொழிபெயர்க்கிறார்கள்.

Read more...
 
பள்ளிக்கஞ்சிக்கும் இரவுப்பொழுது கழிக்க பயான்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்ம ஒளிக்கும் கொடுப்போம் PDF Print E-mail
Saturday, 25 April 2020 21:13

பள்ளிக்கஞ்சிக்கும் இரவுப்பொழுது கழிக்க பயான்களுக்கும்

கொடுக்கும் முக்கியத்துவத்தை

ஆன்ம ஒளிக்கும் கொடுப்போம்

      அப்துர் ரஹ்மான் உமரி       

வழிபாடுகளை ஆன்ம நலன் கொண்டே பார்க்கவேண்டும்.

வழிபாடுகள் யாவும் ஆன்மாவால்,

ஆன்ம நலனை முன்னிறுத்தி,

ஆன்மாவை மென்மேலும் உயிரூட்டவும்

ஒளியூட்டவும்தான் செய்யப்படுகின்றன.

அவற்றிலும் சில வழிபாடுகள் முழுக்க முழுக்க ஆன்மாவிற்கான சத்துணவாக அமைந்துள்ளன.

அவ்வகையில் முதலிடம் வகிக்கின்றது, நோன்பு.

மண்பிண்டத்தினுள் வைக்கப்பட்ட ஒளியுருவாகிய ஆன்மாவிற்கு ஷரீஅத் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றது.

வான்மறை குர்ஆனின் மையத் தலைப்பே ஆன்ம நலம்தான் என்றால் மிகையாகாது.

நம் கருத்தும் கவனமும் உழைப்பும் பாடுபடலும் தேடலும் ஓடலும் எத்திசை நோக்கி என்பதிங்கே முதன்மை பெறுகின்றது. மண்ணுடல் சார்ந்த புலன் இன்பங்களை நிறைவுபடுத்தவா? இல்லை, ஆன்ம நலனை முதன்மைப் படுத்தி அதன் ஒளிவீச்சை மென்மேலும் மெருகூட்டவா?

Read more...
 
வான்மறை குர்ஆன் இலக்கும் எதிர்பார்ப்பும் PDF Print E-mail
Friday, 24 April 2020 19:27

வான்மறை குர்ஆன் இலக்கும் எதிர்பார்ப்பும்

     அப்துர் ரஹ்மான் உமரி      

இயற்கை நியதி ஒன்று உள்ளது. காரிருள் சூழ்ந்து கவிழ்ந்து விடுகையில் அதன் நெஞ்சை கிழித்துக் கொண்டு ஒளிக்கதிர் ஒன்று உதயமாகின்றது. இருள்களை அகற்றி சூழலை ஒளிமயமாக ஆக்குகின்றது.

மனிதகுல வரலாற்றில் ஒளியின் வெளிச்சத்தின் மிகப்பெரிய வெள்ளப்பிரவாகம் 14 நூற்றாண்டு களுக்கு முன்னால் ஒரு ரமழான் மாதத்தின் நிறைவில் சங்கை பொருந்திய இரவொன்றில் தோன்றியது. நானிலம் முழுக்க அநீதமும் சீர்குலைவும் நிறைந்து காணப்பட்ட பொழுது அது.

"மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன." (அல்குர்ஆன்:   அர்ரூம்: 30,41)

நிலப்பரப்பில் மட்டுமன்றி நீர்ப்பரப்பிலும் சீர்குலைவு நிரம்பி விட்டிருந்தது. படைத்த உண்மையான இறைவனை விட்டுவிட்டு தானே கற்பித்துக் கொண்ட பொய்க்கடவுளர்களையும், மனோ இச்சைகளுக்கு இறையாண்மை உரு கொடுத்தும் மனிதன் வணங்கிக் கொண்டிருந்தான்.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>

Page 1 of 5