Home செய்திகள் உலகம் ஏமனில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பம் இல்லை என்று கேரள நர்சுகள் கூறுவது ஏன்?
ஏமனில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பம் இல்லை என்று கேரள நர்சுகள் கூறுவது ஏன்? PDF Print E-mail
Friday, 03 April 2015 18:12
Share

ஏமனில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பம் இல்லை என்று கேரள நர்சுகள் கூறுவது ஏன்?

உள்நாட்டு போர் உச்சகட்டம் அடைந்து உள்ள ஏமனில் கேரள மாநிலத்தை சேர்ந்த நர்சுக்கள் 100-க்கும் மேற்பட்டோர்கள் சிக்கி உள்ளனர்.

அவர்கள் சம்பளத்தை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்புவதா அல்லது வாங்கிய கடனை அடைக்க கூடுதல் சம்பளத்தில் சேர்ந்த வேலையில் தொடர்ந்து நீடிப்பதா என்ற சூழ்நிலையில் மிகவும் கடுமையான முடிவை எடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்திய அரசு ஏமனில் சிக்கிஉள்ள இந்தியர்களை 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்கள் நர்சுகளே.

ஏமனில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏடன் நகரை தங்கள் வசம் கொண்டுவந்து உள்ளனர். அவர்களை தடுக்கும் விதமாக சவுதி அரேபியா தலைமையில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கட்டான ஒரு சங்கடத்திற்கு இந்திய மருத்துவ தொழிலாளர்கள் எதிர்க்கொண்டு உள்ளனர். ஏமனில் சிக்கி தவிப்பர்கள் பெரும்பாலானோர் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் அதிகளவு கடன் வாங்கி படிக்க வைத்து தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு பணத்தை சம்பாதிப்பதற்காக அனுப்பி வைக்கின்றனர்.

கடன்கள் வாங்கி படிக்கும் அவர்கள், கூடுதல் கட்டணம் இடைத்தரகர்களுக்கும் கட்டி வெளிநாட்டில் வேலை பெறுவதற்காக கூடுதல் கடன் அடைகின்றனர். இதற்கிடையே நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுகளுக்கு வேலைக்கு ஆள் எடுப்பதை தடுக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

ஏடனில் உள்ள அல்-நாஹிப் மருத்துவமனையில் வேலை செய்துவரும் இந்திய ஆண் நர்சு ஜாய் பேசுகையில், "நான் தற்போது இங்குதான் தங்கிஉள்ளேன்," என்று தொலை பேசியில் தெரிவித்துஉள்ளார். ஏமனில் சிக்கிதவிப்பவர்களை மீட்கும் பணியில் இந்தியா தீவிரமாக இறங்கி உள்ளது. ஏடனில் இருந்து கடந்த செவ்வாய் அன்று இந்திய கடற்படை விமானம் 349 இந்தியர்களுடன் வெளியேறியது. ஆனால் ஜாய் இந்திய கப்பலில் ஏற கூடாது என்று முடிவு எடுத்துவிட்டார்.

"இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உள்ள பிரபலமான மருத்துவமனை நர்சுக்கு ஒருமாதம் சம்பளமாக 400 அமெரிக்க டாலர்கள் வழங்கும். ஆனால் தங்கும் இடம் மற்றும் உணவு மிகவும் அதிகவிலையாக இருக்கும். ஆனால் ஏமன் எனக்கு மிகவும் நன்றாக உள்ளது. என்னால் எனது சம்பளத்தை வங்கியில் சேமிக்க முடியும்" என்று ஜாய் கூறிஉள்ளார். வேலையில் அனுபவம் இல்லாத நிலையில், நல்ல இடத்தில் வேலை கிடைக்க சுமார் லட்சக்கணக்கில் இடைத்தரகருக்கு பணம் கொடுத்து உள்ளார். ஜாய் தற்போது மாதத்திற்கு 600 அமெரிக்க டாலர்கள் (ரூ. 37000) சம்பளமாக பெறுகிறார். ஜாய்க்கு அங்கு தங்கும் இடம் மற்றும் உணவு ஆகியவை இலவசம் ஆகும். தன்னால் பெற்றோருக்கு பணம் அனுப்ப முடியும், கல்வி கடனை அடைக்க முடியும். என்று கூறி உள்ளார்.

ஏடனில் இருந்து கப்பல் மூலம் இந்தியா மக்களை வெளியேற்றிய நிலையில், சனாவில் இருந்தும் மக்களை விமானம் மூலம் வெளியேற்றி உள்ளது. தொடர்ந்து சவுதி தலைமையிலான படைகள் தாக்குதல் நடத்துவதால் கூடுதல் விமானங்கள் அங்கு செல்ல முடியவில்லை. கேரளாவில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நர்சிங் பயிற்சி மையங்கள் சுமார் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. ஊள்ளூரில் வழங்கப்படும் ஊதியம் வருத்தம் அளிக்கக்கூடிய நிலையில், கூடுதல் ஊதியம் பெறவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். கேரளாவில் நர்சுகளுக்கு தொடக்க ஊதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. வயது மூப்பு மற்றும் அனுபவம் அதிகமாக இருந்தால் வருமானமானது ரூ. 25 ஆயிரமாக அதிகரிக்கும்.

வெளிநாடுகளில் வேலை பெறுவதற்கு மிகவும் கடும் போட்டி உள்ளது. இதற்கிடையே வேலைக்கு செல்ல விரும்புவர்களிடம் அதிக சம்பளம் மற்றும் பாதுகாப்பு எனகூறி கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த வாரம் கொச்சியில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஏஜெண்ட் நிறுவனம் ஒன்றில் சோதனை மேற்கொண்டனர். ஊழல், சதிதிட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றி பெயரில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கி உள்ளது. நிறுவனம் சுமார் 1200 நர்சுகளை துபாய்க்கு வேலைக்கு செல்லை எடுத்து உள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 19.5 லட்சம் வரையில் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இது சட்டமுறை கட்டணத்தை விட 100 மடங்கு அதிகமாகும்.

இந்திய தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் நிபந்தனைகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடியின் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களால் வெளிநாடுகளுக்கு நர்சுகள் பணியமர்த்தப்படுவதற்கு மத்திய அரசு தடைவிதித்து உள்ளது. மே மாதத்தில் இருந்து இரண்டு அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே கேரளாவில் செயல்பட அனுமதி அளிக்கப்படும். சாதாரண கட்டணம் மற்றும் இராஜதந்திர வழிகளில் நாடுகளில் லஞ்சத்தை தடுப்பது ஆகியவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தாம்சன் ராய்ட்டர்ஸ் தெரிவித்து உள்ளது.