"பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது இஸ்லாம் மட்டுமே" Print
Saturday, 16 May 2020 21:29

"பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது இஸ்லாம் மட்டுமே"

"பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது இஸ்லாம் மட்டுமே" என காதில் கேட்ட உடன் திருகுர்ஆன் ஓதி இஸ்லாத்தை ஏற்று கொண்ட ரஷ்ய மாடல் அழகி.

ரஷியாவில் பிரபலமான மாடல் அழகி அலியாஷானா என்பவர் தற்போது இஸ்லாத்தை ஏற்று கொண்டு உள்ளார். அவர் தனக்கு இஸ்லாம் எப்படி கிடைத்தது என்பதை ரஷ்யாவின் கால்சூட் பத்தரிக்கைக்கு பேட்டி கொடுத்து உள்ளார்.

நான் ரஷ்யாவில் திடிரென அதிஷ்டவசமாக பிரபல மாடல் அழகியாக இருந்தேன். நான் அந்த துறை தேர்வு செய்ததில் இருந்து பல்வேறு வாய்ப்புக்கள் பல கம்பெனி கையெழுத்து என மிகவும் பிஸியாக இருந்தேன்.

நான் சில நிறுவனங்கள் மூலமாக 18 நாடுகளில் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளேன். இப்படி போன வாழ்க்கை திடிரென பிஸி நேரம் குறைந்து கொண்டே இருந்தது..

என்னை விட சில அழகிகள் வந்து கொண்டே இருப்பதால் நிறுவனங்கள் குறைந்தது. பின்னர் என்னை தொடர்பு கொண்ட நிறைய நிறுவனங்கள் என் உடலில் உள்ள துணிகள் குறைத்து காட்டி பணம் சம்பாதிக்க தான் தொடர்பு கொண்டனர்.

இன்னும் சில வாய்ப்புகள் என் உடலையே விலைக்கு கேட்டனர். இப்படி நெருக்கடியான சூழ்நிலை மன ரீதியான குழப்பம் திடிரென உடல் துணிகளை குறை காட்டி விளம்பரம் நடிக்க ஆரமித்தேன்.

விழுந்த வாய்ப்புகள் மீண்டும் அதிகமானது எண்ணற்ற நிறுவனங்களின் மூலமாக வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது. ஆனால் எல்லோருக்கும் என்னை ஒரு உடல் விற்கும் பொருளாக பார்க்க ஆரம்பித்தனர். எனக்குள் இருந்த மன குழப்பம் அதிகரித்து கொண்டே இருந்தது.

திடீரென ஒரு நிறுவனம் உடன் ஒப்பந்தம் போடும் நிகழ்ச்சியில் விருந்து கொடுக்கபட்டது. அந்த நிறுவனத்தின் முதலாளி முஸ்லிம். அவர் ஒப்பந்தம் போடும் போதே முழு ஆடையுடன் முகம் மட்டும் தெரியும் ஒரு விளம்பரத்தை தயாரிக்கும் பணிகளை துவங்க போவதாக சொன்ன உடன் எனக்கு மிக பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. உடலில் சிறு துணி உடன் நடிக்க பலர் நம்மை அணுகும் போது இவர் மட்டும் ஏன் இப்படி சொல்கிறார் என குழப்பம்!

விளம்பரத்தில் முஸ்லிம் பெண்ணாக நடித்தேன். ஹிஜாப் அணிந்து நடித்தேன். அந்த நேரம் என்னை நானே பெண்ணாக உணர்வு வந்து என்னுள் ஒரு வெட்கம் வெளிப்பட்டது.

வீடியோவில் என்னை பார்த்த போது வித்தியாசமான முறையில் இருந்தது. அப்போது திடிரென அந்த முதலாளி வாயில் இருந்து வந்தது வாரத்தை "மாஷா அல்லாஹ் பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பு இஸ்லாம் தான்."

அதை கேட்டதும் அவர் இடத்தில் நான் உடனே கேட்டது, ''இது எல்லாம் எங்கே சொல்ல படுகிறது?"

அவர் திருகுர்ஆன் எடுத்து வந்து என் கையில் கொடுத்தார்.

ஒரு வாரம் எங்கேயும் போகாமல் வீட்டில் அமர்ந்து திருகுர்ஆன் படித்தேன். உடனே என் நண்பர் மூலமாக தெரிந்த முஸ்லிம் குடும்பம் மூலமாக இஸ்லாத்தை ஏற்று கொண்டு தற்போது நான் ரமலான் நோன்பு வைத்து கொண்டு இருக்கேன். இப்போது என்னை நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் என பேட்டியை முடித்தார்.

ஒரு முஸ்லிம் வாயில் வந்த வார்த்தை பிரபல மாடல் அழகி இஸ்லாத்தை ஏற்று கொண்டது என்பது "தான் நாடியோருக்கு இறைவன் தனது மார்க்கத்தை எதாவது ஒரு வகையில் கொண்டு செல்கிறான்" என்பதை நாம் படிப்பினைகளாக பெற வேண்டும்.

தமிழாக்கம்: A.யாசர் அராபத்

தகவல்: ISLAM IS WORLD MEDIA

THOWHEEDISM மீடியா செய்தி பிரிவு..