மன அமைதி இசையில் கிடைக்காது தூய இஸ்லாத்தில்தான் கிடைக்கும் Print
Thursday, 20 February 2014 22:08

["இஸ்லாம் ஒன்றில்தான் அன்பு, அமைதி, சகோதரத்துவம் என்ற அனைத்தும் எனக்கு கிடைத்தது.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைத்தாலே உள்ளார்ந்த ஒரு அன்பு என்னுள் மேலிடுகிறது.

கூடிய விரைவிலேயே மக்கா மதினா போன்ற புனித நகரங்களுக்கு பயணம் மேற்கொள்வேன். இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்த எனக்கு குர்ஆனின் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வந்தது.

இறைவனைப் பற்றிய உண்மைகள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. எனது உள்ளம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு சொன்னது. எனவே இன்று நான் உங்கள் முன் முஹம்மது யூசுஃபாக நிற்கிறேன்."]

இந்தி பிண்ணனி பாடகர் ஹான்ஸ் ராஜ் இஸ்லாத்தை ஏற்றார்!

இந்திய மாநிலமான பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் ஷாஃபிபூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஹான்ஸ் ராஜ். சர்தார் ரஷ்பால் சிங் மற்றும் மாதா சிர்ஜான் கவுர் என்ற தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். இசை பின்னணி இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் ஹான்ஸ் ராஜ். தனது இசை ஆர்வத்தால் ரியாலிடி ஷோவில் முதல் பரிசை தட்டிச் சென்றார்.

பல விருதுகளைப் பெற்றவர். கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர். இருந்தும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்தது.

முடிவில் இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்தார். மன அமைதி இசையில் கிடைக்காது தூய இஸ்லாத்தில்தான் கிடைக்கும் என்று உறுதிபூண்டு தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். தனது பெயரை முஹம்மது யூசுஃப் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

பஞ்சாபி மொழியில் அமைந்த கிராமிய பாடல்களையும் சூஃபி பாடல்களையும் பாடி தனது ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். தனியாக ஆல்பமும் மற்றும் திரைப்படங்களிலும் நிறைய பாடியுள்ளார். பாகிஸ்தான் பாடகர் நுஸ்ரத் ஃபதே அலிகானுடன் ஒரு படத்தில் பாடியும் உள்ளார். வாஷிங்டன் பல்கலைக் கழகமும் சான் ஜோஸ் மாநில பல்கலைக் கழகமும் இவரை கௌரவித்து அவார்டும் கொடுத்துள்ளது. சிரோண்மணி அகாலி தள வேட்பாளராக ஜலந்தர் லோக்சபா சீட்டுக்காக 2009ல் நின்று வெற்றியும் பெற்றவர்.

இஸ்லாத்தை ஏற்றதைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கும் போது

"இஸ்லாம் ஒன்றில்தான் அன்பு, அமைதி, சகோதரத்துவம் என்ற அனைத்தும் எனக்கு கிடைத்தது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைத்தாலே உள்ளார்ந்த ஒரு அன்பு என்னுள் மேலிடுகிறது.

கூடிய விரைவிலேயே மக்கா மதினா போன்ற புனித நகரங்களுக்கு பயணம் மேற்கொள்வேன். இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்த எனக்கு குர்ஆனின் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வந்தது.

இறைவனைப் பற்றிய உண்மைகள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. எனது உள்ளம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு சொன்னது. எனவே இன்று நான் உங்கள் முன் முஹம்மது யூசுஃபாக நிற்கிறேன்."

என்று மகிழ்ச்சியோடு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

என்ன ஒரு ஆச்சரியமான நிகழ்வு. இந்த அரசும், நீதித்துறையும், காவல்துறையும், பத்திரிக்கைத்துறையும், நமது நாட்டு வரலாற்றுத் துறையும் திட்டமிட்டு இஸ்லாத்துக்கு எதிராக எதிர் மறை கருத்துக்களை விதைத்து வருகின்றன. இந்தியாவில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் இந்துத்வாவாதிகளால் கொல்லப்படுகின்றனர். இனி வரும் காலங்களில் இந்தியாவில் இஸ்லாமியர்களின் எதிர்காலம் அவ்வளவுதான் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

ஆனால் இத்தனை சூழ்ச்சிகளையும், பொய்களையும் மீறி இஸ்லாம் நமது தொப்புள் கொடி உறவான இந்துக்களை அன்போடு அரவணைத்துக் கொள்கிறது. இது எப்படி சாத்தியம்?

‘அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், ‘நாம் நிச்சயமாக இவற்றை முன்னரே கேட்டிருக்கின்றோம், நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லி விடுவோம். இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை’ என்று சொல்கிறார்கள். (அல்குர்ஆன் 8:31)

அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்’ (அல்குர்ஆன் 8:30)

எத்தனை சூழ்ச்சிகள் செய்து இறைவனின் மார்க்கத்தை இந்த உலகை விட்டு துடைத்தெறிய வேண்டும் என்று பலரும் முயன்றாலும் நம்மை படைத்த இறைவன் அதற்கு மேல் சிறந்த சூழ்ச்சியை செய்து எதிரிகளை திகைப்புக்குள்ளாக்குகிறான். அதைத்தான் தினமும் நாம் பார்த்து வருகிறோம்.

ஒன்றை கவனித்தீர்களா? இஸ்லாத்தை ஏற்கும் ஒவ்வொருவரும் 'நாங்கள் குர்ஆனை படித்து இஸ்லாத்தை ஏற்றோம்' என்கின்றனர். எவருமே முஸ்லிம்களைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றதாக சொல்லவில்லை. அந்த அளவு முஸ்லிம்களாகிய நமது நடவடிக்கை இருக்கிறது. உலக முஸ்லிம்களின் வாழ்க்கை குர்ஆனாக மாறி விட்டால் இஸ்லாமிய பிரசாரத்துக்கு அவசியமே இல்லை. இஸ்லாம் தானாக வளரும்.

இது போன்ற மத மாற்ற செய்திகளை ஏன் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று பலர் கேட்கலாம். உலகம் முழுவதும் அதிலும் குறிப்பாக இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்தது வாளால் என்று நமது வரலாறு முதல் நம் நாட்டு இந்துத்வாவாதிகள் வரை பொய்களை பரப்பி வருகின்றனர். நமது வரலாறு சொல்வது அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கவே இது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

ஹான்ஸ் ராஜூம், யுவன் சங்கர் ராஜாவும், திலீபனும் இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த பெருமையும் இல்லை. மாறாக முஹம்மது யூஃசுபாக, முஹம்மது ஹாலிக் யுவனாக, ஏ ஆர் ரஹ்மானாக மாறியதால் இவர்கள்தான் அந்த பெருமையை பெறுகிறார்கள்.

source: http://www.siasat.pk/