குழந்தைகளும் பாலியலும் (1) Print
Thursday, 19 September 2013 07:05

  ஏ.பி.எம்.இத்ரீஸ்    

[ குழந்தைகள் பார்வையில் எல்லாமே தூய்மையானவை, எல்லாமே அதிசமூட்டுபவை. வளர்ந்தவர்கள் நாம் தான் எல்லாவற்றையும் மட்டுப்படுத்தி அழித்து விடுகின்றோம். குழந்தை மீது குற்றம் சாட்டுவதற்கு நமக்கு என்ன யோக்கிதை இருக்கின்றது? நம்முடைய மேய்ப்புக் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவோம். குழந்தைகளை மேய்ப்பது ஆடு, மாடுகளை மேய்ப்பது போல (அவற்றை மேய்ப்பதற்கும் அழகான பாடத்திட்டம் வந்து விட்டது) அல்ல. எனவே நம்மிடமிருக்கின்ற வக்கிர சிந்தனைகளை விட்டு விட்டு, இறைவன் படைத்த தூய இயல்பிலிருந்து குழந்தையை அணுக வேண்டும்.

குழந்தை தொட்டில் பருவத்தில் தனது உடல் உறுப்புக்களை பயன்படுத்தி விளையாடவே விரும்பும் விளையாடுவதால் அதிக மகிழ்ச்சி அடைகின்றது. குழந்தை பிறந்த புதிதில் உடலின் பல உறுப்புகள் அதற்கு உணர்ச்சி பூர்வமாக இருக்கின்றன.

பாலியல் உறுப்புக்கள் குழந்தை கண்டு மகிழ்வதைக் கண்டு நீங்கள் கலங்கிவிடக்கூடாது. அதற்காக குழந்தையை தண்டித்து விடாதீர்கள். (குழந்தை ஏனைய வழமையான உறுப்புக்களை தேடிக்கண்டு பிடித்து விளையாடும்)

இவ்வாறான விளையாட்டை பழக்கமாக கொண்டுள்ள ஆண் குழந்தையை பார்த்து 'தொட்டால் உண்ட கொட்டையை வெட்டுவன்' என்று பெற்றோர் பயமுறுத்துவது Castration Complex மனசிக்கலை உருவாக்குகின்றது.

இது போன்ற அச்ச (பய) உணர்வுதான் சுயஇன்பம் பெறுவதற்கு வழிவகுக்கின்றது. அதாவது தனது உறுப்பை இழந்து விடுவேன் என்று அச்ச்படுவதால் அவ்வுறுப்பை பிடித்து அதன் இருப்பை தற்காத்துக் கொள்வதற்காக அசைகின்றது.

பிறப்புறுப்புகள் ஒன்றும் இழிவானவை அல்ல. ஓர் உறுப்பு மனித விருத்திக்கு வழிவகுக்கின்றது. அடுத்த உறுப்பு அவ்வாறு பிறந்த குழந்தையை போசித்து வளர்க்கின்றது. எனவே அவ்வுறுப்புக்களால் பெற்றிருக்கின்ற ஆணும் பெண்ணும் சமூகப்பங்களிப்பைச் செய்கின்றன. அவர்களுக்கு சமூகத்தில் இடமிருக்கின்றது.

அவ்வுறுப்புக்களை கெட்ட உறுப்புக்களாக கட்டமைப்பதன் மூலம் அவ்வுறுப்புக்களைப் பெற்றிருக்கின்ற பெண்ணையையும் கெட்டவனாளாக கட்டமைக்கின்றோம். அவள் ஆற்றுகின்ற சமூகப்பங்களிப்பு அற்பமாவைகளாக ஆக்கிவிடுகின்றோம். அவளை சமூகத்தின் விளிம்பு நிலைக்கு தள்ளிவிடுகின்றோம்.]

குழந்தைகளும் பாலியலும் (1)

  ஏ.பி.எம்.இத்ரீஸ்   

பாலியல் கல்வி ஏன் தேவை? அதனை ஏன் தனியாக ஆராய வேண்டும், பாலியல் விவகாரங்கள் குழந்தைகள் அறிய வேண்டிய அவசியமிருக்கின்றதா? அல்லது இவை திருமணத்திற்கு முன் எமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்களா?

குழந்தைகளுக்கான பாலியல் கல்வி சமயப் பண்பாட்டு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முக்கியத்துவம் குறைந்தது அல்ல. எமது சமூகத்தின் பின்னடைவும் அறியாமையும் தான் இந்தத் தலைப்பில் என்னை எழுதத்தூண்டுகின்றது. பாலியல் விவகாரங்களை நாம் பார்க்கும் விதம் மிக அநிதியானது. எமது குழந்தைகளுக்கு பல்வேறு உளச்சிக்கல்கள் தோற்றுவிக்கிறது.

எமது பிற்போக்கான தன்மை அது எடுத்துக் காட்டுகின்றது. இதில் குழந்தைகள் எந்தப் பங்கும் அறியாதவர்களாக பெற்றோர்கள் அது பற்றிய மிகப்பெறும் அறியாமையில் வாழ்கின்றனர். அவர்களிடம் கேட்கவும் முடியாது கேட்டாலும் சங்கோசப்படுவார்கள்.

பாலியல் கல்வி என்பது குழந்தைகள் கட்டிளமைப் பருவத்தை அடைந்ததும் நாம் செய்ய போகும் நூல் வழி பாடமாக அல்லது அது குழந்தை மரணிக்கும் வரை நடைபெறும் தொடர்ச்சியான தொழிற்பாடாகும். முன்பள்ளிப் பருவத்திலிருந்து குழந்தை பேசத்தொடங்கும் முன் பெற்றோர் பாலியல் கல்வியை அணுகப்பழக வேண்டும். அதாவது குழந்தைகள் தமது பாலுறுப்புக்கள் கையாளும் விதத்திலிருந்து தொடங்குகின்றது.

பாலியல் விடயங்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு தந்தை மற்றும் ஆசிரியரோடு சேர்ந்தது கூடுதல் சுமை தாய் மீதே சுமர்த்தப்படுகின்றது. பெற்றோர் அல்லது பயிற்றுவிப்பாளரின் பொறுப்பை செல்லுபடியற்றதாக்காமல் பெற்றோரை முன்னிறுத்தியதாகவே எனது உரையாடல் அமைகின்றது.

குழந்தை தொட்டில் பருவத்தில் தனது உடல் உறுப்புக்களை பயன்படுத்தி விளையாடவே விரும்பும்

விளையாடுவதால் அதிக மகிழ்ச்சி அடைகின்றது.

குழந்தையின் முதல் கவனத்தைப் பெறுவது விரல்களாகும். விரல்களை உயர்த்திப் பார்க்கின்றது. பின்னர் அவற்றை சூப்புகின்றது.

ஆரம்பத்தில் பெருவிரலைத்தான் சூப்ப ஆரம்பிக்கின்றது.

பின்னர் கால் விரலைகளை கண்டுபிடித்து அவற்றைப் பிடித்து அணுகுகின்றது.

கால் பெருவிரலையும் சில போது குழந்தை சூப்ப எத்தணிக்கின்றது.

அதன் பிறகு தான், ஆடைகளையும் களையும் போது திரும்ப அணிவதில்லை. நிர்வானமாக இருக்கவே விரும்புகின்றது.

கால்களை உதைத்து விளையாட ஆசைப்படுகின்றது.

தனது பாலுறுப்புக்கள் வெளியில் தெரியும்போது உடலின் இந்தப் பகுதியை காண ஆச்சரியப்படுகின்றது.

விரல்களைப் பயன்படுத்தி விளையாட அனுமதிக்காமல் கைகளை பாலுறுப்புகளை விட்டு உயர்த்தும் போது தான் குழந்தை பாலுறுப்புகளுக்கும் ஏனைய உறுப்புகளுக்குமிடையிலான வேறுபாட்டை முதன் முறையாக புரிய ஆரம்பிக்கின்றது.

அதேவேளை அவ்வுறுப்புக்கள் தொடுவதற்கு கராமாக்கப்பட்டது என்ற அறிவையும் பெற்றுக்கொள்கின்றது.

குழந்தை பிறந்த புதிதில் உடலின் பல உறுப்புகள் அதற்கு உணர்ச்சி பூர்வமாக இருக்கின்றன. அவை அணைத்தையும் சூப்பவே ஆசைப்படுகின்றது. இது தான் சாப்பாட்டுக்குப் பிறகு விரல்களை சூப்புவதையும் இதன் தொடர்ச்சியாக கொள்ளமுடியும். அவ்வாறு சூப்புவதன் காரணமாக பொருட்களின் தன்மையை குழந்தைகள் அறிந்து கொள்கிறது.

குழந்தைகள் கை விரல்களை சூப்புவதோடு கையில் அகப்படும் எப்பொருளையும் சூப்ப ஆசைப்படுகின்றது. அதன் பிறகு மலங்கழிப்பது ஓர் இன்பமாக உணர்கின்றது. அதன் பின் அதனை விட அதிக உணர்ச்சி தரும் உறுப்பை நாடுகின்றது. குழந்தை பாலுறுப்புக்களை தொடுவதன் மூலம் அடையும் இன்பம் விரல்களை சூப்புவதன் மூலம் அடையும் இன்பதிற்கு இணையாதது. இதனை ஆங்கிலத்தில் Sexual Organs Play என்று அழைப்பார்கள்.

ஆண் குழந்தை ஆரம்பத்திலேயே ஆண்குறியை அறிந்து கொள்கின்றது. (அந்த இடத்திலிருந்து தான் இன்பம் வருகின்றது என்பதை) இது இறைவன் படைத்த இயற்கை உணர்வாகும். இதனைக் கண்டு பயப்படவே கலங்கவே தேவையில்லை. இது குடலும் இரைப்பையும் நிரம்பும் போது ஏற்படும். தொடர்ச்சியான நரம்பின் செயற்பாடாகும். சிறுநீர் கழிக்கும் போது குடலும் இரைப்பையும் வெறுமையாகிவிடுகின்றது, இந்த உணர்வும் கலைந்து விடுகின்றது. இது இறைவன் இயற்கையாக உடலில் ஏற்பாடு செய்துள்ள ஒரு தொழிற்பாடு.

ஆடை விலகும் போது உங்கள் குழந்தை தனது குறியுடன் விளையாடினால் நீங்கள் அவதானிப்பதாக காட்டிக்கொள்ளாதீர்கள். குழந்தை தனது விரல்களுடன் விளையாடுவதைப் போலவே நினைத்து விளையாடுகிறது. கால்மேஸ் அணியும் போது குழந்தை பாதங்களை பிடிக்க முயன்றால் எப்படி அதனை கையைத் தொட்டு தூரமாக்குவீர்களோ அதே போன்று குழந்தை குறியைப் பிடித்து விளையாடும் போது செய்யுங்கள். அதாவது குழந்தைக்கு ஆடை அணிவிக்கின்றீர்கள் வேறெதுவுமில்ல என்பது போல செய்யுங்கள். இவ்வாறு இரு இடங்களுக்கிடையிலும் வேறுபாடு இருக்கின்றது என்பதை குழந்தை உணரக்கூடாது.

பாலியல் உறுப்புக்கள் குழந்தை கண்டு மகிழ்வதைக் கண்டு நீங்கள் கலங்கிவிடக்கூடாது. அதற்காக குழந்தையை தண்டித்து விடாதீர்கள். (குழந்தை ஏனைய வழமையான உறுப்புக்களை தேடிக்கண்டு பிடித்து விளையாடும்) பாலியல் உறுப்புக்களைப் பிடித்து விளையாடுவதைக் கண்டு நீங்கள் தடுத்திடவும் வேண்டும். இந்தப் பருவத்தில் குழந்தை கையை உபயோகப்படுத்துவது மிகவும் அவசியமாகும். இதனூடாகத் தான் குழந்தை வெளி உலகத்தைத் தெரிந்து கொள்கின்றது.

இவ்வாறான விளையாட்டை பழக்கமாக கொண்டுள்ள ஆண் குழந்தையை பார்த்து 'தொட்டால் உண்ட கொட்டையை வெட்டுவன்' என்று பெற்றோர் பயமுறுத்துவது Castration Complex மனசிக்கலை உருவாக்குகின்றது. ஆடையில்லாத பெண் குழந்தைகள் இவ்வாறு நான் சிறுவர்களை காணும் போது அக்குழந்தை ஆண்குறி தறிக்கப்பட்டு விட்டதாக எண்ணிக் கவலைப்படுகின்றார்கள். இவ்வாறான குழந்தைகள் நோவு இன்பத்துக்கு உட்பட்டுவதாக இட்டும் பயப்பட ஆரம்பிக்கின்றார்கள். இது தான் Castration Complex என்று அழைக்கப்படுகின்றது.

இது போன்ற அச்ச (பய) உணர்வுதான் சுயஇன்பம் பெறுவதற்கு வழிவகுக்கின்றது. அதாவது தனது உறுப்பை இழந்து விடுவேன் என்று அச்ச்படுவதால் அவ்வுறுப்பை பிடித்து அதன் இருப்பை தற்காத்துக் கொள்வதற்காக அசைகின்றது. இதன்பின் ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ அடுத்த குழந்தைகளை ஆடையின்றி பார்க்க விரும்புகின்றது. இருபாலாரினருக்குமுள்ள இந்த வேறுபாட்டிலுள்ள யதார்த்தத்தை அவர்கள் அறிய விரும்புகின்றார்கள். அவ்வாறு இது குறித்து அவர்கள் வினாவும் போது முடியுமான அளவு எளிமையாக அவ்வேறுபாட்டை நாம் எடுத்துக்கூறவேண்டும்.

குழந்தை சூ... போன அல்லது கக்கா போன உடுப்பை நீங்கள் மாற்றும் போது அருவருப்பை தெளிவாக வெளிப்படுத்தினாலும் குழந்தை அதனை அவதானிக்கின்றது. பாலியல் உறுப்புகள் கழிவகற்றல் உறுப்புகளுடன் தொடர்புற்றிருந்தால் அவை அழுக்கானவை என்ற மனப்பதிவை பெறுகின்றன. இதனால் மிக இளமைப் பருவத்திலிருந்தே மிக மோசமான மனப்பதிவுகளை ஏற்படுத்தி வருகின்றோம். எதிர்கால பாலியல்சார் வாழ்க்கையை நாம் மிக ஆரம்பத்திலேயே சீரழிவுக்கு வித்திடுகின்றோம் என்பதனை மறந்து விடக்கூடாது.

தன்னை யோசிக்கக்கூடிய, தன்னைக் கொண்டு கண்ணியமான ஆளுமையான குழந்தை எப்படி உருவாக்குவது. குழந்தைகள் பார்வையில் எல்லாமே தூய்மையானவை, எல்லாமே அதிசமூட்டுபவை. வளர்ந்தவர்கள் நாம் தான் எல்லாவற்றையும் மட்டுப்படுத்தி அழித்து விடுகின்றோம். குழந்தை மீது குற்றம் சாட்டுவதற்கு நமக்கு என்ன யோக்கிதை இருக்கின்றது? நம்முடைய மேய்ப்புக் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவோம். குழந்தைகளை மேய்ப்பது ஆடு, மாடுகளை மேய்ப்பது போல (அவற்றை மேய்ப்பதற்கும் அழகான பாடத்திட்டம் வந்து விட்டது) அல்ல. எனவே நம்மிடமிருக்கின்ற வக்கிர சிந்தனைகளை விட்டு விட்டு, இறைவன் படைத்த தூய இயல்பிலிருந்து குழந்தையை அணுக வேண்டும்.

பிறப்புறுப்புகள் ஒன்றும் இழிவானவை அல்ல. ஓர் உறுப்பு மனித விருத்திக்கு வழிவகுக்கின்றது. அடுத்த உறுப்பு அவ்வாறு பிறந்த குழந்தையை போசித்து வளர்க்கின்றது. எனவே அவ்வுறுப்புக்களால் பெற்றிருக்கின்ற ஆணும் பெண்ணும் சமூகப்பங்களிப்பைச் செய்கின்றன. அவர்களுக்கு சமூகத்தில் இடமிருக்கின்றது. அவ்வுறுப்புக்களை கெட்ட உறுப்புக்களாக கட்டமைப்பதன் மூலம் அவ்வுறுப்புக்களைப் பெற்றிருக்கின்ற பெண்ணையையும் கெட்டவனாளாக கட்டமைக்கின்றோம். அவள் ஆற்றுகின்ற சமூகப்பங்களிப்பு அற்பமாவைகளாக ஆக்கிவிடுகின்றோம். அவளை சமூகத்தின் விளிம்பு நிலைக்கு தள்ளிவிடுகின்றோம்.

எமது பிள்ளை வளர்ப்பில் பங்களிப்பு வழங்கியவை கெட்ட வார்த்தைக்காக இருக்கின்றன. நாம் கட்டமைத்திருக்கும் தூஷணத்தில் நாம் தான் பருகவும் செய்கின்றேம். ஆனால் அல்குர்ஆன் எமது விசுவாசத்தின் படி புனித நூல். அந்த நூல் கெட்ட வார்த்தைக்காக இந்த உறுப்புக்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால் பெண் உறுப்புக்களைப் பற்றி பல இடங்களில் பிரஷ்தாபிக்கின்றது. அல்குர்ஆனை வாசிப்பதால் தவாபு கிடையாது ஆனால் குர்ஆனை விளங்காமல் ஓதினால் தவாப் கிடைக்கும்.

ஒவ்வெரு ஹர்புக்கும் பத்து நன்மை என்று ஹதீஸ் கூறுகின்றது. பாலியல் உறுப்பை, அவற்றின் தொழிப்பாட்டை அவை தொடர்பான சட்டங்களையும் பேசுகின்ற ஆயத்துக்களை குழந்தையே பேராசிரியரோ ஓதும் போது இருவருக்கும் நன்மை கிடைக்கத்தானே வேண்டும். கெட்ட உறுப்புக்காக எப்படி நன்மை கிடைக்க முடியும்?

நன்றி: மைமதர்லேன்ட்

கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள   "Next"   ஐ    "கிளிக்"   செய்யவும்.