அல்லாஹ்வின் சூளுரை Print
Sunday, 11 June 2017 10:16

அல்லாஹ்வின் சூளுரையைக் கேட்டீர்களா...?

கேட்போம் கேட்போம் அல்லாஹ்விடமே கேட்போம். ரமளானில் கேட்காமல் வேறு எப்பொழுது கேட்கப்போகிறோம்..? புனிதமான இரவும்  பகலும் ஆட்கொண்டிருக்கும் மாதமல்லவா...?! அதுவும் நன்மைகளை வாரிப்பொழியும்  மாட்சிமைப் பொருந்திய "லைலதுல் கத்ர்" இரவை உள்ளடக்கிய மாதமல்லவா...?!

தவற விட்டு விடாதீர்கள். கேளுங்கள், கேளுங்கள்! தேவையான அனைத்தையும் கேளுங்கள். செருப்பின் வார் அறுந்து போனாலும் அல்லாஹ்விடம் கேட்கச்சொன்னார்களே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்! அவரவர்கள் தங்களின் குடும்பத்தேவை, சமுதாயத் தேவை சிறியதோ, பெரியதோ அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேளுங்கள்.

முக்கியமாக இம்மையில் சுபீட்சமான, ஆரோக்கியமான நல்வாழ்வையும், மறுமையில் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பையும், உயர்வான சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவுஸையும், அதற்கும் மேலாக அல்லாஹ்வை கண்குளிர காணக்கூடிய நற்பாக்கியத்தையும் கேட்க மறந்துவிடாதீர்கள்.

www.nidur.info