சொர்க்கத்தை இலக்காக வைத்து உலகில் நடந்த சொர்க்கத்துத் தாரகைள்! Print
Friday, 24 November 2017 08:25

Image result for sahaba

யார் அந்த நபித்தோழர்கள்?

     D.முஹம்மது ஹுசைன் மன்பஈ        

சொர்க்கத்தை இலக்காக வைத்து உலகில் நடந்த சொர்க்கத்துத் தாரகைள்!

மார்க்கத்திற்காய் அனைத்தையும் இழந்து இன்னும் இழப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று கண்ணீர் வடித்த ஈமானில் முந்திய முன்னோடிகள்!

தந்தைக்கு முன்னால் மகனும் மகனுக்கு முன்னால் தந்தையும் அண்ணணுக்கு முன்னால் தம்பியும் தம்பிக்கு முன்னால் அண்ணணும் அல்லாஹ்வின் பாதையில் மரணிக்க போட்டிப்போட்ட உன்னத வீரர்கள்!

அல்லாஹ்வின் பாதையில் பெற்றெடுத்த மகனை முத்தமிட்டு இதற்கு பிறகு நாம் சந்திக்கும் இடம் சுவர்க்கமாக இருக்கட்டும் என்று வழியனுப்பிய பாசமிகு பெற்றோர்கள்!

சுவர்க்கத்தின் ஒரு மரத்தை சொந்தம் கொண்டாட ஆறு தோட்டத்தையும் 600 பேரித்தம் மரத்தையும் விற்று சுவர்க்கத்தை விலைக்கி வாங்கிய உன்னத வியாபாரிகள்!

இவர்களின் சிறந்த குணத்தை பார்த்து வானவர்களும் வெட்கப்படும் அளவிற்கு மிகச்சிறந்த ஒழுக்க சீலர்கள்!

நபியின் காலில் முள் குத்துவதை விட எங்கள் கழுத்துகள் அறுக்கப்படட்டும் என்று மரணத்தை தேர்வு செய்த வீர மருதுகள்!

அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எதிராக பெற்ற தகப்பன் வாளை எடுத்தாலும் பெற்ற தகப்பனையும் விட்டு வைக்காத உன்னத ஈமானுக்கு சொந்தக்காரர்கள்!

தானும் தனது மனைவி தனது பச்சிளம் குழந்தை என்று அனைவரும் பசியோடு வாழத்தயார் ஆனால், தன் ஈமானிய சகோதரன் பசியோடு இரவை கழிக்கக்கூடாது என்று குழந்தையின் உணவை சகோதரனுக்கு கொடுத்து அல்லாஹ்வை ஆச்சரியப்படுத்திய உண்மை சகோதரத்துவத்தின் சொந்தக்காரர்கள்!

குழந்தை அனாதையாக்கப்பட்டு தன் உடல் கற்களால் சல்லடையாக்கப்பட்டாலும் நாளை மறுமையில் அல்லாஹ்விற்கு முன்னால் குற்றவாளியாக நிற்க விரும்பாத இறையச்சத்தின் முழு நிலவுகள்!

கணவனுக்கு முன்னால் மனைவியை மனைவிக்கு முன்னால் கணவனை பெற்றோருக்கு முன்னால் குழந்தையை குழந்தைக்கு முன்னால் பொற்றோரை என்று எத்தனை கொடுமைள் யாருக்கு இழைக்கப்பட்டாலும் கொள்கை மாறா சுவர்க்கத்து கண்மணிகள்!

ஆடைகள் அவிழ்க்கப்பட்டு பாலைவன மணலில் கொடுமைப்படுத்தி கற்களால் அடித்து துன்புறுத்தும் போதும் "அஹதுன் அஹத்'' "இறைவன் ஒருவனே" என்று உலகிற்கு பறைசாற்றிய உன்னத இஸ்லாமிய அழைப்பாளர்கள்!

தூக்கு கயிறுகள் கழுத்தில் மாட்டப்பட்டு உடலை அம்புகள் சல்லடையாக்க குறிபார்த்த போதும் இறைவனை வணங்க சிறிது நேரம் அனுமதிவாங்கி இறைவனின் பாதையில் மரணிப்பதில் எனக்கென்ன கவலை என்று சிரித்த முகத்துடன் மரணத்தை தழுவிய இறைநேச செல்வர்கள்!

தாங்கள் நடந்து வரும் பாதையில் ஷைத்தானும் நடப்பதற்கு பயப்படுவான் என்று தனது ஈமானால் ஷைத்தானையும் குலைநடுங்க வைத்த ஈமானின் முதிர்ச்சியாளர்கள்!

வாழ் நாள் முழுவதும் இறைவனின் பாதையில் யுத்தம் செய்து உடல் முழுவதும் காயங்களால் இரத்தம் சொட்டும் போதும் கூட யுத்தகளத்தில் மரணிக்காமல் வீட்டில் அல்லவா மரணிக்கிறேன் என்று கண்ணீர் விட்ட அல்லாஹ்வின் ராணுவ வீரர்கள்!

கட்டிய கணவன் இரத்த வெள்ளத்தில் மிதந்து வயிற்றில் சுமந்த மகனின் கைகள் வெட்டுப்பட்டு தன் உடல்கள் அம்புகளால் சல்லடையான அந்த நேரத்தில் தாயே என்ன வேண்டும் இந்த நேரத்தில் நான் அல்லாஹ்விடம் பிராத்திக்கிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் கண் கலங்கிய அந்த நேரத்திலும் அல்லாஹ்வின் தூதரே நாளை மறுமையிலும் இதே போன்று உங்கள் பக்கத்தில் வாழ வேண்டும் என்று கூறிய நபியின் சுவர்க்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள்!

அர்ஷில் இருக்கும் இறைவனும் அவர்களுக்கு சலாம் சொல்லும் அளவிற்கு இறை அன்புக்கு சொந்தக்காரர்கள்!

சுவர்க்கமும் உங்களை காண ஆவலோடு இருக்கிறது என்று இறைபொருத்தை பொற்றுக்கொண்ட உன்னத மேன்மக்கள்!

source:    https://www.facebook.com/mohamedhussain.manbae/posts/1279441068876481