கவிதைக்கு கருத்து முக்கியம் Print
Wednesday, 08 February 2017 08:44

கவிதைக்கு கருத்து முக்கியம்

       கரீம்கனி       

வசை, திட்டு, புகழ், அழகியல் பாடுதல் சாதாரண விஷயங்கள். அவை கவிதையாகாது. அல்லாஹ் குழந்தையை பிறக்க வைக்கிறான். கணவன் இல்லாமலேயே கரு உருவாக்க தன்னால் முடியும் என்று உலகுக்கு நிரூபித்துக் காட்டினான்.

நேற்றுவரை வெறுமனே தெரிந்த நிலத்தில் இன்று செடி, பயிர், மரம் வளர வைக்கிறான். பட்டுப்போன மரத்தைத் துளிர்க்க வைக்கிறான். ஏதுமில்லாத மரத்தில் எண்ணற்ற காய்கள், பழங்கள் வெளிக்கொணர்கிறான். இது அல்லாஹ் தன் சக்தியால் உருவாக்கும் படைப்பாற்றல்.

நேரடியாக உணரக்கூடியவை. நேரடியாக உணரமுடியாத ஒன்றை தன் எழுத்து வலிமையால், படைப்பாற்றலால் உருவாக்கிக் காட்டுவது கவிஞனின் திறமை. அதை அல்லாஹ்வின் புறத்திலிருந்தே அவன் பெறுகிறான்.

பொதுவாக எழுதி கவிதையை கவிதையாக்குபவர்கள் நிறைய உள்ளனர். ஒரு பிரச்சினையை, சப்ஜெக்டை கவிதையாக்கும் கிரியேட்டிவிட்டி வேணும். தான் அனுபவிப்பது போன்ற உணர்வை வாசிப்பவர் பெற்றால் அது கவிதை. குறிப்பிட்ட தீமைகளை மையப்படுத்தி கவிதை படைக்கணும்.

கட்அவுட் வைப்பது, நீண்டகாலமாக ஒருவரே பதவியில் இருப்பது, சில இனம், சாதியினரே மற்றவர்க்குரியதை தட்டிப்பறிப்பது, நகர அகதிகள். இமாம் குணாதிசயங்கள். முஅதீன் பணி. ரோட்டில் அடுப்பு வைத்து தோசை சுட்டு விற்பவர். பூ விற்பவர். பழம் விற்பவர். காய்கறி விற்பவர். மீன் விற்பவர். பிச்சை எடுப்பவர். சைக்கிளில் பொருள் விற்பவர். தள்ளுவண்டி வியாபாரி, கேஸ் விநியோகிக்கும் கூலிகள். ஷேர் ஆட்டோ ஓட்டுநர். பெட்ரோல் பங்க் ஆண், பெண் ஊழியர். கல்வி நிறுவனப் பணம் பறித்தல். மருத்துவமனைகளில் பணம் பறித்தல். ஓசி ஹஜ்ஜில் சென்று திரும்புவோருக்கு சவாபு உண்டா?

தலாக்கான பெண்கள் திருமண வாழ்வு.

வக்பு சொத்துகள், வக்பு செயல்பாடு.

ஓய்வுபெற்ற பிறகு வீட்டில் பொழுதுபோக்கும் வாத்தியார்கள்.

கறிக்கடைக்காரர். ஆட்டுக்கால்களை சுத்தம் செய்து விற்பவர்.

இடியாப்பம் சுட்டு பிழைப்பவர்.

பார்பர். பாத்திரத்திற்கு ஈயம் தேய்ப்பவர். சாணை பிடிப்பவர்.

வண்ணார். தள்ளுவண்டியில் தையல் மெஷின் வைத்து வீதியில் நின்று தைப்பவர்.

கடைகளுக்குச் சென்று சாம்பிராணி போடுபவர்.

வீதி சுத்தம் செய்யும் தொழிலாளி.

பள்ளிவாசல், நிறுவனங்கள்.

அடுக்குமாடிக் குடியிருப்பு காவலாளி.

பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி கணவனுக்கு உணவு சமைத்து தனக்கும் எடுத்து அவசரமாக பணிக்கு ஓடும் பெண்கள்.

பேருந்தில் ஆணோடு இடித்து பிதுங்கி பயணப்படும் பெண்களின் அவலம்.

பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பிரச்சினைகள்.

ஷேர் ஆட்டோவில் ஆண்களுடன் பயணிக்கும் பெண்களின் பரிதாபம்.

வாடகை வீட்டார் பிரச்சினை. உரிமையாளர் பிரச்சினை.

ரேஷன் கடை. மணல் திருட்டு. அடுத்தவர் நிலத்தை அபகரித்தல்.

ஏராளமான மக்கள் பிரச்சினைக்கான நிஜமான, உயிரோட்டமுள்ள கருத்தலைப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

தோண்டியெடுத்து கவிதையாக்கப்பட வேண்டும்.

யதார்த்த கவிதை வரிகள் மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்து ஒவ்வொருவருடைய வாழ்வுக்குள்ளும் பொருந்துகின்றன. அத்தகைய கவிதைகளை முஸ்லிம் சமூகக் கவிஞர்கள் படைக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. பழக்கப்பட்ட சொற்கள். ஒரேமாதிரியான தலைப்புகள். ஒரேவிதமான சிந்தனைகள், சொற்கள் அடுக்குதல், கைவிடப்படவேண்டும் புதிய எழுத்துகள், பிரதிபை ஆழமான சிந்தனை வெளிப்படவேண்டும்.

source: மார்ச் 2011 முஸ்லிம் முரசு - http://jahangeer.in/?paged=5