ஆண்களின் மொழி! Print
Sunday, 03 June 2012 16:45

    ஆண்களின் மொழி!    

 

பெண்களின் அங்கங்களை

அணுணுவாக எக்ஸ்ரே கண்களால்

வெட்கமின்றி மேயும் இளைஞர்களின் பார்வை...

 

அவர்களைக் கூசி ஒதுங்கச் செய்யும்

கொச்சையான கமென்டுகள்...

 

பிதுங்கி வழியும் கூட்டத்தினுள்

பேருந்தின் உரசல்கள்...

 

மாணவிகளைத் தின்னும் ஆசிரியர்கள்

சிறுமிகளைக் குதறும் பக்கத்து வீட்டு மாமாக்கள்...

 

உடன் பயிலும் சகமாணவிகளைக்கூட

ரூட் போட்டு மடக்கி ருசிக்க வேண்டிய

கறித்துண்டுகளாகக் கருதும் மாணவர்கள்...

 

உடன்பிறந்த தங்கை குளிப்பதைக்கூட

வாய்ப்புக் கிடைத்தால்

ஓட்டை வழியே பார்த்து ரசிக்கும் வல்லூறுகள்....

பெற்ற மகளைக்கூட விட்டுவைக்காத அப்பாக்கள்...

 

இவ்வளவையும் இவர்கள் செய்வார்களாம்...

 

ஆனால், அவனுக்கு வருபவள் மட்டும்

இருபத்து நாலு கேரட்டுத்தங்கமாக

சேதப்படாமல் இருக்கவேண்டுமாம்.

- மாதவி.