எங்கிருந்து வந்தேன்? எனக்குத் தெரியாது! |
![]() |
Saturday, 02 July 2011 08:14 | |||
எங்கிருந்து வந்தேன்? எனக்குத் தெரியாது! மவ்லவீ, அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் நளீமி
நான் வந்தேன் எங்கிருந்து என்பது எனக்குத் தெரியாது ஆனாலும் வந்தேன் என் முன்னால் ஒரு பாதையைக் கண்டேன் அதில் நடக்கலானேன் நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான் நடந்து கொண்டே இருப்பேன். எப்படி வந்தேன்? எனது பாதையை எப்படி கண்டேன்? எனக்குத் தெரியாது.
இந்த உலகின் நான் புதியவனா? அல்லது, பழையவனா? நான் சுதந்திரமானவனா? அல்லது விளங்குகள் இடப்பட்ட கைதியா? எனது வாழ்வில் என்னை நான் ஓட்டுகிறேனா? அல்லது நான் ஓட்டப்படுகின்றேனா? இவற்றையெல்லாம் தெரிய வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன் ஆனால் இவை ஒன்றும் எனக்குத் தெரியாது.
எனது பாதை இது நீளமானதா? அல்லது குறுகியதா? இதில் நான் ஏறுகின்றேனா? அல்லது இறங்குகின்றேனா? அல்லது சுழிவாங்கப்படுகின்றேனா? நான் பாதையில் செல்கிறேனா? அல்லது நானும் பாதையும் நிற்க காலம் தான் ஓடுகிறதா? எனக்குத் தெரியாது.
நான் ஒரு மனிதனாக மாறுவதற்கு முன்னால் எதுவாகவும் இருக்கவில்லையா? அல்லது, ஏதாவது ஒன்றாக இருந்தேனா? இந்த புதிருக்கு பதிலுண்டா? அல்லது இது என்றும் புதிராகவே இருக்குமா? எனக்குத் தெரியாது. ஏன் எனக்குத் தெரியாது? அதுவும் எனக்குத் தெரியாது.
(2011, மே மாதம் 20,21,22, ஆம் தேதியில் மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ''இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்'' எனும் கருப்பொருளில் நிகழ்த்திய உரையில் இடம்பெற்ற கவிதயாகும் இது.)
|