ஜனநாயகம் VS இஸ்லாம் Print
Friday, 30 June 2017 10:46

ஜனநாயகம் VS இஸ்லாம்

ஜனநாயகம் (Democracy) என்பது ஒரு கிரேக்க தத்துவமாகும்.

ஜனநாயகம்(Democracy)என்ற சொல் கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்படுகின்றது. ‘டிமோ’(DEMO) என்பது மக்கள் என்பதையும் ‘கிரேசி’ (CRACY) என்பது இறைமை அல்லது அதிகாரம் என்பதையும் குறிக்கின்றது.

இதன் அடிப்படையில் மனிதன் தன் மனோயிச்சையின் மூலம் தன்னை இறைமையாகவோ அல்லது இறை அதிகாரத்தையோ எடுத்து கொள்கிறான்.

ஜனநாயகம் என்பது மனிதர்கள் மனிதர்களை அடிமைப்பட்டு வாழத்தூண்டும் கிரேக்கர்களின் ஆட்சி முறையாகும் உண்மையில் இதன் தோற்றம் தெளிவான ஓர் ஏமாற்றாகும்.

பண்டைய கிரேக்க ஆளும் வர்க்கம் தமது குடிமக்களை திருப்திப்படுத்தவும் தமது அதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்டவும் மேற்கொண்ட ஓர் தந்திரமாகும் எனும் விடையம் ஒருபுறமிருக்க இந்த கோட்பாட்டின் பிரதான அம்சமே மனிதர்களே தமது வாழ்வின் சட்டங்களை இயற்றிக்கொள்ளலாம் என்பதோடு பெரும்பான்மையின் முடிவுதான் இறுதி தீர்வாகவும் அமைந்துவிடும்

இந்த கிரேக்க சிந்தனை அடிப்படையிலான ஆட்சிமுறை 17 ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் மட்டுமே நடைமுறையில் இருந்தது.

இந்த முறை எப்போது உலகத்தில் பெரும்பாளான நாடுகளில் நடைமுறையில் வந்தது என்று பார்த்தால் உலக யுத்தத்திற்க்கு பிறகும் காலனியாதிக்கம் மற்றும் மதத்தின் பெயரால் கிருத்துவ மன்னர்கள் செய்த அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகவும் புரட்சிகள் வெடித்ததன் மூலமே ஜனநாயகம் பல நாடுகளில் ஆட்சியியலாக மாறியது.

இறைவனுக்குரியதை இறைவனுக்கு கொடுத்துவிடுங்கள் மனிதர்களுக்குரியதை மனிதர்களுக்கு கொடுத்துவிடுங்கள் அதாவது வணக்க வழிபாடுகள் இறைனுக்கும் உலக வாழ்வு மனிதனுக்கும் என்ற அடிப்படையில் மதசார்பின்மை (Secularism) என்ற கருத்தும் பரப்பபட்டு நடைமுறை படுத்தப்பட்டது.

இதுவரை ஜனநாயகம் யாருடைய சிந்தனை, அதன் அடிப்படை என்ன, அது எப்போது நடைமுறை படுத்தப்பபட்டது என்பதை சுருக்கமாக பார்த்தோம்

இப்போது ஜனநாயம் எப்படி இஸ்லாத்திற்க்கு முரண்படுகிறது, அது எப்படி குஃப்ர் என்பதை பார்ப்போம்.

ஒரு முஸ்லீம் தன்னுடைய வணக்கம் வழிபாடு வாழ்வு எப்படி அமைய வேண்டும் யாருக்கு உரியது என்பதை அழகாக சொல்லித்தருகிறது பாருங்கள்.

"(அன்றி,) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை." (அல்குர்ஆன் 6:162)

இப்படி இருக்க வேண்டிய ஒரு முஸ்லீம் தனது மனோ இச்சையை இலாஹ் (இறைவன்) ஆகவும், தன்னை ஹாக்கீம் ஆகவும் கருதமுடியுமா? அப்படி கருதும் ஒரு மனிதனை ஏற்று அந்த கருத்தில் நாம் பங்காளியாகவும் முடியுமா? இந்த செயலை நிலை நிறுத்த நாம் பிரதிநிதி தேர்ந்து எடுக்க முடியுமா?

அல்லாஹ்வே இலாஹ் (இறைவன்) ஆகவும் ஹாக்கீம் ஆகவும் இருக்கிறான் ஆகவே இவற்றில் யாரையும் இணையாகவும் துணையாகவும் ஆக்குவது குஃப்ர் ஆகும். ஒரு முஸ்லீம் இணையாகவும் துணையாகவும் ஆக்கவும் முடியாது, ஆக்கவும் கூடாது.

இங்கு நாம் சுட்டி காட்டியுள்ள அல்லாஹ்வுடைய பெயர்களுக்கு அது சார்ந்த பண்புகளுக்கும் விளக்கங்களை அல்குர்ஆனில் பார்க்கலாம்.

தனது மனஇச்சையையே இலாஹ் (இறைவனாக) எடுத்துக்கொண்டவனை நீர் காணவில்லையா! அவனுக்கு நீர் பாதுகாவலனாக இருப்பீரா? (அல்குர்ஆன் 25:43)

(நபியே!) நீர் இவர்களைப் பார்க்கவில்லையா? “உமக்கு இறக்கியருளப்பட்ட வேதத்தையும் உமக்கு முன்னால் இறக்கியருளப்பட்ட வேதங்களையும் நாங்கள் நம்பினோம்” எனக் கூறுகின்றார்கள். எனினும், அவர்கள் தீர்ப்புக்காக தம் விவகாரங்களை தாஃகூத்திடம் கொண்டு செல்லவே விரும்புகின்றார்கள். ஆயினும் தாஃகூத்தை நிராகரிக்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப் பட்டிருந்தார்கள். ஷைத்தான் அவர்களை முற்றிலும் வழிகெடுத்து வெகுதூரம் கொண்டு செல்ல விரும்புகின்றான். (அல்குர்ஆன் 4:60)

தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை. தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. இனி எவர் தாஃகூத்தை* நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் திட்டமாக, மிகப் பலமான பிடிமானத்தைப் பற்றிக் கொண்டவராவார். அது என்றுமே அறுந்துவிடாது. (அவர் தன்னுடைய ஆதரவாளனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட) அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிவோனுமாய் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:256)

தாஃகூத் எனும் அரபுச் சொல்லுக்கு வரம்பு மீறுதல் என்று பொருள். திருக்குர்ஆனின் மொழிமரபில் இறைநெறியை விட்டு நழுவிச் சென்று தன் சட்ட திட்டங்களை மாற்றார் மீது செலுத்தும் ஒவ்வொருவனையும் இச்சொல் குறிக்கும்

உதாரணமாக இறைநெறிக்கு மாற்றமாக இச்சைகளின்பால் இட்டுச் செல்லும் மனம், பொய்மையின் பக்கம் அழைப்பு கொடுக்கும் ஷைத்தான், இறைவனின் சட்டத்திற்கு எதிராகத் தன் சட்டத்தையும், தன்னாதிக்கத்தையும் செலுத்தும் தனி மனிதன், கூட்டம், சமூகம் அல்லது இயக்கம் ஆகிய அனைத்துமே தாஃகூத் எனும் இந்தச் சொல்லில் அடங்கி விடுகின்றன, எனவே ஜனநாயகம் அல்குர்ஆனின் அடிப்படையில் தாஃகூத் என்ற நிலையில் வந்து விடுகிறது இப்படி பட்ட தாஃகூத்தை நிராகரிக்க வேண்டும் என்பதே அல்குர்ஆனின் போதனையாகும்.