தமது சொந்த ராணுவ பேரரசை கட்டியமைக்கப் போவதாக அறிவித்துள்ள சவூதி அரேபியா! Print
Tuesday, 10 October 2017 11:33

Image result for saudi arabia king visit russia

தமது சொந்த ராணுவ பேரரசை கட்டியமைக்கப் போவதாக அறிவித்துள்ள சவூதி அரேபியா!

உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் சில காரணங்களால் ஜித்தாவிலுள்ள தமது தூதரகத்தை மூடியது.

அதிலிருந்து சவூதி அரேபியாவின் மன்னர்கள் யாரும் ரஷ்யா சென்றதில்லை.

இதற்கிடைப்பட்ட காலத்தில் ரஷ்யா சிதறுண்டு 6 முஸ்லிம் நாடுகள் உதயமாகின.

இந்நிலையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் ரஷ்யாவுக்கு பயணம் சென்று திரும்பியுள்ளார்.

சவூதி அரேபியா - ரஷ்யா உறவை விரும்பாத அமெரிக்க, இஸ்ரேலிய ஊடகங்கள் சல்மான் தமக்கு பணிவிடை செய்வதற்காக ரஷ்யாவுக்கு 1500 பணியாளர்களை கொண்டு சென்றதாகவும், சல்மான் விமானத்திலிருந்து இறங்கும் போது தங்க எஸ்கலேட்டரில் இறங்கியதாகவும், எஸ்கலேட்டர் பாதியில் பழுதடைந்து விட்டதாகவும், இன்னொரு தங்க எஸ்கலேட்டர் வந்த பிறகே சல்மான் இறங்கியதாகவும், இதுப்போன்ற இன்னும் ஏராளமான கட்டுக்கதைகளை செய்திகளாக வெளியிட்டன.

அமெரிக்க - இஸ்ரேலிய ஊடகங்கள் எடுத்த வாந்தியை அப்படியே விழுங்கி இந்திய ஊடகங்களும் அதே வாந்தியை எடுத்தன.

80 ஆண்டுகளாக ரஷ்ய அதிபர்கள் பலர் சவூதிக்கு சென்றும் ரஷ்யாவோடு சவூதி இணக்கம் காட்டாமல் அமெரிக்காவோடே இணக்கம் காட்டியது.

80 ஆண்டுகால வரலாற்றை மாற்றி அமைக்கும் விதமாக சல்மான் ரஷ்யா சென்றது சர்வதேச அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவினால் சவூதிக்கு ஒரு முகத்தையும், இஸ்ரேலுக்கு ஒரு முகத்தையும் காட்ட தெரியுமென்றால் சவூதியினால் அமெரிக்காவுக்கு ஒரு முகத்தையும், ரஷ்யாவுக்கு ஒரு முகத்தையும் காட்ட தெரியாதா என்ன ?

ராணுவ பலத்தில் முதலிடம் உள்ள அமெரிக்காவிடம் சவூதி பல பில்லியன் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வாங்குவதுபோல் ராணுவ பலத்தில் இரண்டாமிடம் உள்ள ரஷ்யாவுடனும் சவூதி பில்லியன் கணக்கில் இரண்டு நாட்களுக்கு முன் ராணுவ தளவாடங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.

ராணுவ பலத்தில் மூன்றாமிடம் உள்ள சீனாவிடம் சவூதி அராம்கோ தொடர்பான பெரும்பாலான ஒப்பந்தங்களை போட்டுள்ளது.

இந்நிலையில் சவூதி அரேபியா தமது சொந்த ராணுவ பேரரசை கட்டியமைக்க போவதாகவும் அறிவித்துள்ளது.

-முகநூல் முஸ்லிம் மீடியா