ஓர் அன்பான வேண்டுகோள்! Print
Friday, 31 December 2010 08:41

அன்பிற்கினிய வாசகர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,

இவ்விணையதளத்தின்  முகப்புப் பக்க  வலது பக்க மேற்பகுதியில்    ''அஸ்மாஉல் ஹுஸ்னா'' எனும் அல்லாஹ்வின் 99 திருநாமங்களை  வீடியோவில்  அதன் அர்த்தத்துடன் காணலாம்.

தினசரி முதன்முதலாக இந்த இணையதளத்தை பார்வையிடுவதற்கு முன், அதை ஓதும் பழக்கத்தை மேற்கொண்டால் இன்ஷா அல்லாஹ், சில நாட்களில் எளிதாக உள்ளத்தில் மனப்பாடமாகிவிடும்.

நாம் சுவனம் (Paradise) செல்வதற்கு அது ஒரு காரணமாகக்கூட அமையலாம்.

ஏனெனில் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்;

"அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன. எவர் அவைகளை மனனமிட்டு அதன்படி செயல்படுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்" (நூல்: புகாரி).

குறிப்பாக குழந்தைகளும், சிறார்களும் மற்றும் பெண்களையும், இளைஞர்களையும் அதை மனனம் செய்யும்படி தூண்டுங்கள். உங்களுக்கு மட்டும் சொர்க்கம் வேண்டாமா என்ன...? நீங்களும் மனப்பாடம் செய்யுங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

- adm.  www.nidur.info