மூன்றை கேட்டேன்! இரண்டை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்! Print
Monday, 16 April 2018 09:21

மூன்றை கேட்டேன்! இரண்டை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்!

சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மதீனா புறநகரில் மேட்டுப் பகுதியான) "ஆலியா"விலிருந்து வந்து பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள்.

அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் நாங்களும் தொழுதோம்.

பிறகு நீண்ட நேரம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

பிறகு எங்களை நோக்கித் திரும்பி, "நான் என் இறைவனிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் பிராத்தித்தேன். அவற்றில் இரண்டை எனக்குத் தந்தான்; ஒன்றை மறுத்து விட்டான்.

நான் என் இறைவனிடம், "என் சமுதாயத்தாரை (ஒட்டுமொத்தமாக) பஞ்சத்தால் அழித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதை எனக்கு அவன் வழங்கினான்.

அவனிடம் நான் "என் சமுதாயத்தாரை வெள்ள நீரில் (ஒட்டுமொத்தமாக) மூழ்கடித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதையும் எனக்கு அவன் வழங்கினான்.

அவனிடம் நான் "(என் சமுதாயத்தார்) தமக்கிடையே மோதிக்கொள்ளக்கூடாது" எனப் பிரார்த்தித்தேன். ஆனால், (அந்தப் பிரார்த்தனையை ஏற்க) அவன் மறுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹுல் முஸ்லிம்: 5539.)

o    முஸ்லிம் உம்மத் ஒற்றுமையடையாது! என்று ஃபத்வா வழங்கக்கூடியவர்கள் இந்த ஒரு ஹதீஸை வைத்து தீர்ப்பு வழங்குகின்றனர்.

உண்மையிலேயே முஸ்லிம் சமூகம் ஒற்றுமையடையாதா? தெரிந்தவர்கள் பதியவும்.