சட்டத்தை காரணம் காட்டி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையான அநீதி! Print
Tuesday, 22 December 2015 08:12

சட்டத்தை காரணம் காட்டி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையான அநீதி!

[ புதுடெல்லியின் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பரிசாக வழங்கப்படும் என்று பி.ஜே.பி.யின் பரிவாரம் ஒன்றிலிருந்து குரல் எழுகிறது. ஒரு முதலமைச்சரின் மகளுக்கே பாதுகாப்பு இல்லை எனும்பொழுது நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? பெண்கள் வாழ்வதற்கே தகுதியற்ற நாடாக மாறிவருகிறதா நமது நாடு?

பாலியல் பலாத்காரத்தால் வாழ்வை தொலைத்த பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவது எவ்வளவு பெரிய கொடூரம் என்பதை, ஊடகத்தில் சொகுசாக அமர்ந்துகொண்டு,  சட்டத்தை காரணம் காட்டி    (சிறுவன் எனும் முத்திரையில் தப்பிக்கும்) கயவனுக்கு வக்காலத்து வாங்கும் அறிவுஜீவி எனும் அரைவேக்காடுகள் என்றைக்கு உணரப்போகிறார்கள்?]

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய சிறுவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை திருத்த இன்னும் எத்தனை நிர்பயாக்கள் பலியாக வேண்டும்?  - ஆஷா தேவி கண்ணீர் பேட்டி

புதுடெல்லி: சிறுவனை விடுதலை செய்ததன் மூலம், நீங்கள் 18-வயதிற்கு கீழே இருந்தால் பாலியல் பலாத்காரம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு சான்றிதழ் வழங்கிஉள்ளது என்று நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறிஉள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்குற்றவாளியை விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மகளிர் ஆணையம் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் இளம்குற்றவாளியின் விடுதலையை தடுப்பதற்கு, தற்போதுள்ள சட்டங்களின்படி எந்த விதிமுறையும் இல்லை. எனவே இது தொடர்பாக தெளிவான சட்டங்கள் தேவைப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கை டெல்லி பெண்கள் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் பேசுகையில், “இந்திய வரலாற்றில் பெண்களுக்கு இது கருப்புநாள். இளம்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவது தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை நிறைவேற்றாததன் மூலம் டெல்லி மேல்-சபை நாட்டை ஏமாற்றி விட்டது” என்று கூறினார்.

மாணவியின் தாயார் ஆஷா தேவி பேசுகையில் நீதி கிடைக்கும் வரையில் போராடுவதாக கூறி உள்ளார்.

நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? எங்களுடைய ஏமாற்றத்தை விவரிக்க எந்தஒரு வார்த்தையும் கிடையாது. அனைத்து சட்டங்களையும் எங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. இந்த அமைப்பானது எங்களுக்கு நீதி வழங்குவதில் தோல்வி அடைந்துவிட்டது என்று நிர்பயாவின் தந்தை பத்திரிநாத் சிங் கூறிஉள்ளார்.

கண்ணீர் விட்டு அழுத நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, அனைவருக்கும் இதனை நாங்கள் தெரிவிக்க வேண்டும், எங்களுடைய மனுவானது 3 நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டது, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும். இங்கு குற்றவாளி சிறுவர்களுக்கு தண்டனை கிடையாது. அவர்கள் (கோர்ட்டு) பெரும்பாலும் குற்றவாளி குறித்தே கவலை படுகின்றனர். பெண்கள் ஏமாற்றப்பட்ட்னர், அவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.

பெண்கள் பாதுகாப்பிற்கு எதுவும் செய்யவேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. ”சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் வரையில் எனது போராட்டமானது தொடரும்,”

அடுத்த என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். தற்போது ஒருரேஒரு குற்றவாளி விடுதலை செய்யப்பட்டு உள்ளான். இன்னும் 4 குற்றவாளிகள் உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் நான் முறையீடு செய்த பின்னரும் குற்றவாளி சிறுவன் விடுதலை செய்யப்பட்டு விட்டான், அவனுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. மற்றவர்களுக்காவது தண்டனை கொடுங்கள், அவர்களை தூக்கிலிடுங்கள். நிர்பயாவிற்கு நீதி வழங்குங்கள்.. என்று கூறிஉள்ளார்.

“நிர்பயா வழக்கில் இருந்து மக்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால், பின்னர் என்ன எதிர்பார்க்க முடியும்?” என்று ஆஷா சிங் கூறிஉள்ளார்.

இதற்கிடையில் புதுடெல்லியின் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பரிசாக வழங்கப்படும் என்று பி.ஜே.பி.யின் பரிவாரம் ஒன்றிலிருந்து குரல் எழுகிறது. ஒரு முதலமைச்சரின் மகளுக்கே பாதுகாப்பு இல்லை எனும்பொழுது நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது. பெண்கள் வாழ்வதற்கே தகுதியற்ற நாடாக மாறிவருகிறதா நமது நாடு?

பாலியல் பலாத்காரத்தால் வாழ்வை தொலைத்த பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவது எவ்வளவு பெரிய கொடூரம் என்பதை, ஊடகத்தில் சொகுசாக அமர்ந்துகொண்டு சிறுவன் எனும் முத்திரையில் தப்பிக்கும் கயவனுக்கு வக்காலத்து வாங்கும் அறிவுஜீவி எனும் அரைவேக்காடுகள் என்றைக்கு உணரப்போகிறார்கள்?

ஒரு பெண்ணை பலாத்காரம் செய்யத் தெரிந்தவனை சிறுவன் என்று சொல்வதைவிட அறிவீனம் வேறு ஏதேனும் இருக்க முடியுமா? பலாத்காரம் மட்டுமல்ல கொடூரமான கொலை செய்தனை... அதுவும் சிறார் சிறையில் இருந்து அவனுக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ்.. "இவன் திருந்தவில்லை" என்பதாக இருக்கும்போது சட்டத்தை காரணம் காட்டி விடுவித்ததது சரிதானா? உடனடியாக சட்டத்தை மாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும். இல்லையெனில் சிறுவர்கள் துணிந்து பாலியல் பலாத்காரம் செய்வதில் இந்தியா கிண்ணஸ் சாதனை படைக்கும் கேவலத்திற்கு ஆளாக நேரிடும்.

 

நிர்பயா பேசுகிறேன்.....

கிழித்தெறியப்பட்ட ஒரு வெண்காகிதத்தின் உடலுக்குத் தீ மூட்டிக் குளிர்காய்கின்றன அரசியலமைப்புச் சட்டங்களும்,ஊடகங்களும்.....

நம்மைக் கடந்து செல்லும் ஒவ்வாெரு பெண்ணும் வேற்று நபரினாலாே (அ)தம் குடும்பத்தினராலாே பாலியல் தாெந்தரவிற்கு ஆளாக்கப்படுகின்றனர் ஏதாே ஒரு வகையில்....

ஆறறிவுள்ள, அவளை விட வலிமையாகப் படைக்கப்பட்ட நாம் இந்நிலைக்கு வெட்கித் தலை குனிய வேண்டும்....
திட்டுவதில் கூட பெண்குறியைப் பயன்படுத்தும் நாம் என்றுணரப்பாேகிறாேம்..., அதன் வழியேதான் நாம் இவ்வுலகைக் கண்டாேம்...நம் சந்ததியும் காணுமென்பதை....

இதற்கெல்லாம அவளணியும் ஆடையே காரணம் எனக்கூறும் நாம் ஐம்பது வயது கிழவியிடமும் , பிறந்து ஏழு மாதமேயான குழந்தையிடம் எந்தக் கவர்ச்சியினால் மதியிழந்தாேம்....

காண்பவரனைவரையும் புணரும் நமக்கு மிருகமெனும் பெயரை விடுத்து மனிதன் எனக் கூறக் காரணமென்ன....

மாதத்தின் மூன்று நாட்களில் அவள்படும் வேதனையை காணச் சகிக்காதக் கடவுளே அவளைக் காண வேண்டாமென்று ஒதுக்கி வைத்துவிட்டான்....ஆனால் அவளிடமிருந்து தாேன்றிய நாமாே அவளின் குருதி வழியும் தேகத்தில்கூட சுகம் காண்கிறாேம்...

ஐந்து நிமிடச் சிற்றின்பத்திற்காக அவளின் வாழ்நாளனைத்தையும் விலையெனக் கேட்காதீர்கள்...

நமது கரங்கள் அவளை அணைத்துப் பாதுகாக்கவே படைக்கப்பட்டன...அவளுமக்கு எவ்வுறவாயினும்...,நீர் தாங்கிக் காெள்ள முன் வரவில்லையெனும்பட்சத்தில் அவளைத் தவற விட்டுவிடாதீர்.... 

பெண்களை வெறும் சதைப்பிண்டமாகக் காணும் இந்நாட்டில் பல நிர்பயாக்கள் உதித்துக்காெண்டேயருப்பர்...உமது அன்னையாக,மனைவியாக,குழந்தையாக....

பெண்களே.....!தத்தமது பிள்ளைக்கு பாலினக் கல்வியையும்,மாற்றாளின் கண்ணீருக்குக் காரணமாயிருப்பது ஆண்மையன்று என்பதைப் புரியச் செய்யுங்கள்....

இறுதியாக....இங்கு ஒவ்வாெரு நிர்பயாக்கும் நியாயம் சரியான நேரத்தில் வழங்கப்படாவிடினும்...."தெய்வம் நின்றே காெல்லும்...."