ஏழு விதமான ஆச்சரியங்கள்...!!! Print
Tuesday, 26 June 2018 07:24

The Egyptian Pyramids are one of the 7 Wonders of the World

ஏழு விதமான ஆச்சரியங்கள்...!!!

1. *மரணம்* என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை   அறிந்த மனிதர்கள்,   கவலைப்படாமல்,   தன்  கடமைகளச்   செய்யாமல்

*சிரித்துக் கொண்டிருப்பது*   ஆச்சரியம்.!!!

 

2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* என்பதை அறிந்த மனிதன்,

*உலகத்தின்மீது*   *மோகம்* கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!

 

3. எந்த ஒரு செயலும்   *இறைவன் விதித்தபடியே நடக்கும்* என்பதை அறிந்த மனிதன்,

கைநழுவிச் சென்றவற்றை   எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...!!!

 

4. *மறுமை வாழ்க்கைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே இருப்பதை   நம்புகின்ற மனிதன்,

அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!

 

5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன்,

அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு* செய்வது ஆச்சரியம்...!!!

 

6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன்,

அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை*   நிறை வேற்றுவது ஆச்சரியம்...!!!

 

7. *நரகம், சொர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன்,

*உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது   ஆச்சரியம்..!!!"