நேசம் Print
Thursday, 16 June 2016 14:11

நேசம்

    முஹம்மத் ஜுபைர் அல்புஹாரி    

உண்மையில் சிலர் மீது அன்பு ஏற்படுவது இயற்கையானது அதற்கு எந்த காரணமும் தேவையில்லை.

ஒரு தாய், தந்தை தன் குழந்தை மீது கொண்டுள்ள நேசம்!

குழந்தைகள் தாய், தந்தை மீது கொண்டுள்ள நேசம்!

கணவன் மனைவிக்கு இடையே உள்ள நேசம்!

சகோதரன் சகோதரி ஆகியருக்கிடையே உள்ள நேசம்!

உறவினர் மீது ஏற்படும் நேசம்!

இன்னும் சொல்லப்போனால் சொந்த ஊர், சொந்த நாடு மீதுள்ள நேசம்!

இவைகளுக்கெல்லாம் எந்த காரண காரியமும் தேவை இல்லை, நேசம் மனதில் தானாகவே உருவாகிவிடும்.

இவற்றை விட முன்னிலை கொடுக்கவேண்டிய நேசம் அல்லாஹ்வும் அவனது தூதரின் மீது கொள்ளவேண்டிய நேசம்.

நபிகள் கூறினார்கள் :

''ஒருவரும் ஈமான் கொண்டவாராக ஆகமுடியாது எதுவரை என்றால் தனது தாய் தந்தை மற்ற மக்களை காட்டிலும் என்மீது நேசம் கொள்ளாதவரை'' என்றார்கள்.

இறைதூதரின் மீது கொள்ளும் நேசம், இறைவனின் பக்கம் நம்மை நெருங்க உதவும் .

இஸ்லாம் மனிதனின் அத்துணை விடயங்களுக்கும் தீர்வும் சரியான கட்டுபாடுகளும் விதித்துவிட்டது, சொல்லபோனால் இஸ்லாம் எந்த விடையத்தையும் விட்டுவைக்கவில்லை. அத்துணையும் தெளிவாக்க பட்டுவிட்டது.

இஸ்லாம் பட்டியலிடுகிறது நேசத்தின் தராதரம் என்னவென்று

அல்லாஹ் அவனது தூதர் மீது நேசம் கொள்ளுவது,

தாய் மீது நேசம் கொள்ளுவது,

தந்தை மீது நேசம் கொள்ளுவது,

குழந்தைகள் மீது நேசம் கொள்ளுவது,

கணவன் மனைவி மீது, மனைவி கணவன் மீது நேசம் கொள்ளுவது,

சகோதரன் சகோதரி நேசம்,

உறவினர் மீது நேசம் கொள்ளுவது,

முஸ்லிம் சகோதரத்துவ நேசம்.

இஸ்லாம் வரையறுக்கும் நேசம் ஒரு வரையறைக்குட்பட்டது. அது தான் குர்ஆனும் நபி மொழியும் வலியுறுத்தும் ஒரே ஒரு விதி அல்லது ஒரு சூத்திரம்.

''இறைவனுக்காக நேசம் கொள்வது, இறைவனுக்காக கோபம் (வெறுப்பு) கொள்வது.''

இந்த வரையறையை விட்டு எந்த நேசமெல்லாம் உருவாகிறதோ அதுவெல்லாம் சைத்தானிய நேசம் தான்.

குறிப்பாக காதல் என்று திருமணத்திற்கு முன் உண்டாகும் ஒருவித கவர்ச்சி அதை ஒரு பந்தம் என்று சொல்லி பந்தத்தை கேவலப்படுத்த மாட்டேன். .

இளைஞர்களே! இறைவன் அனுமதித்த ஒரு அழகிய பந்தம் திருமணத்தின் மூலம் உருவாகும் கணவன் மனைவி பந்தம். அதன் நேசம் பற்றி இறைவன் அழகாக கூறுகிறான்.

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்- சூரத்துல் ரூம் -21)

கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் அன்பும் கிருபையும் அல்லாஹ் அவனது அத்தாட்சியாக கூறுகிறான். அப்படிபட்ட இறை பொருத்தத்தை ஏற்று வாழ நம் அனைவருக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக ! ஆமீன்

நட்புடன்
முஹம்மத் ஜுபைர் அல்புஹாரி

source: https://suvanapparavai.wordpress.com/