மதராசப்பட்டினம்-மதராஸ்-மெட்ராஸ்-சென்னை! Print
Sunday, 05 April 2015 06:26

முஸ்லிம்களால் உருவான பெயர் தான் மதராஸ் மருவி மெட்ராஸ் என மாறி உள்ளது

சரித்திர உண்மையை மறைக்க அதனால் தான் சென்னை என மாற்ற பட்டுள்ளது ஆய்வில் அதிர்ச்சி...

மதராஸ் முஸ்லிம்கள்.. மதராசப்பட்டினம்-மதராஸ்-மெட்ராஸ்-சென்னை

அரபு வணிகர்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவு என்பது மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்தே வந்துள்ளது. குறிப்பாக தென் இந்தியாவில் உள்ள கேரளா, தமிழகத்தில் உள்ள குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம், தொண்டி, கீழக்கரை, பரங்கிப்பேட்டை, காயல், அதிரை மற்றும் மண்ணடிப்பட்டினம் ஆகிய நகரங்களில் வணிகம் செய்துவந்துள்ளனர்.

வணிகர்களாய் வருகை தந்து இங்கே வாழ்ந்த அரபுகள்.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால துவக்கத்தில் முஸ்லிம்களாய் மாறி வணிகத்திற்கு வருகிறார்கள். இன்று சென்னையில் உள்ள மண்ணடி(பட்டினத்தில்) அதிகமாக வசித்தனர். அவர்களை அக்கால மக்கள் "மூர்கள்" என அழைத்தனர். அதன் அடிப்படையில் இன்றும் மண்ணடியில் மூர் தெரு உள்ளது.

ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி அவர்கள் கூறுகிறார் "சென்னையில் முதலில் குடியேறியவர்கள் முஸ்லீம்கள்"

மயிலாப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது பிராமண சமூகத்தினர்தான். ஆனால் ஒரு காலத்தில் அங்கு பெரும்பான்மையாக வசித்தவர்கள் முஸ்லீம்கள் என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி

மதரசப்பட்டினமும் முஸ்லிம்களும்

இது வெள்ளையர் இங்கு வருவதற்கு முன் ஆற்காடு நாவபின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்த நிலப்பரப்பில் மதரசா என்ற பள்ளிக்கூடங்கள் நிறைந்து இருந்ததால், மதராஸ் என்று அழைக்கப் பட்டது என்று காரணியும் உண்டு

17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் பெரியவர் ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

டி.நகரில் இன்றும் முஸ்லிம் பெயர்களில் உஸ்மான் ரோடு, பசுலுல்லாஹ் சாலை,அபிபுல்லா சாலை உள்ளது

முஸ்லிம்களுக்கு பெரியமேட்டில் பெரிய மசூதி உள்ளது(1838)

திருவல்லிக்கேணி பெரிய மசூதி, சரித்திர சான்றுகளாக இன்றளவும் விளங்குகின்றன.

-வேர்களை தேடிய பயணத்தில்...