வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

ஜலதோஷம், மூக்கடைப்பா....? இதோ பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்! Print E-mail
Monday, 21 October 2013 08:20

ஜலதோஷம், மூக்கடைப்பா....? இதோ பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்!

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோஷம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது. அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லையா... கவலையே வேண்டாம். மிக மிக உடனடியாக ஜலதோஷத்தை குணப்படுத்தும் மருந்துகள் இதோ, உங்களுக்காக!

முதலில் ஜலதோஷம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது,

தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது.

ஜலதோம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

Read more...
 
மணக்க மணக்க ஒரு மருத்துவம்! Print E-mail
Tuesday, 10 September 2013 06:08

  மணக்க மணக்க ஒரு மருத்துவம்!   

முடி கொட்டுகிறதா? தோலில் பிரச்னைகளா? மூட்டு வலியா? முடக்குவாதமா? இப்படி எந்தப் பிரச்னையானாலும் மணக்க மணக்க மருத்துவம் செய்கிறார் கீதா அசோக். ஊசி போட்டு, மாத்திரை கொடுத்து மருத்துவம் செய்வார்கள். அது என்ன "மணக்க மணக்க மருத்துவம்'' என்கிறீர்களா?

சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அரோமா தெரபிஸ்ட்டான கீதா அசோக்கைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டோம். அவர் அரோமா தெரபி கற்றுக் கொள்ள ஆஸ்திரேலியாவில் உள்ள கல்வி நிறுவனம் உட்பட, 7 கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்றிருக்கிறார்.

வாசனையை நாம் நுகரும்போது அது மூளையில் லிம்பிக் சிஸ்டத்தை அடைகிறது.

நமது உடலின் அனைத்துச் செயல்களையும் கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் லிம்பிக் சிஸ்டம், அந்த வாசனைக்கேற்ற தூண்டல்களை அளிக்கிறது.

அந்தத் தூண்டல்களினால் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நோய்கள் குணமாகின்றன.

Read more...
 
மன அழுத்தத்திற்கு மருந்து இறை நம்பிக்கைதான்! அமெரிக்க ஆய்வில் தகவல்! Print E-mail
Monday, 31 March 2014 07:59

மன அழுத்தத்திற்கு மருந்து இறை நம்பிக்கைதான்! அமெரிக்க ஆய்வில் தகவல்!

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின், இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம், பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார்.

கடவுள் நம்பிக்கை, நோய் குணமடைவது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, மனஅழுத்த நோயின் தாக்கம், மிகவும் குறைவாக இருந்தது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளைப் பற்றிய சிந்தனையோ, பக்தியோ துளியும் இல்லாத நபர்களுக்கு, மனஅழுத்தம் நோயின் தாக்கம்,எந்த வகையிலும் குறையவில்லை.

ரோஸ் மேரின் குறிப்பிடுகையில், “கடவுளிடம் நம்பிக்கை வைப்பதன் மூலம், மனநல சிகிச்சை பெறுவோருக்கு, தங்கள் பிரச்னையிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இதுதான் இந்த ஆய்வின் முக்கிய அம்சம். இந்த ஆய்வு, இனி வரும் மருத்துவ உலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

Read more...
 
ஏலக்காயின் மருத்துவ குணங்கள் Print E-mail
Friday, 28 November 2014 18:36

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காய்-cardamom என்பது நம் அடுக்களையில் இனிப்பு காரம் என்கிற எவ்வகை உணவுக்கும் மணம் சேர்ப்பதற்குத் தான் பயன்படுகிறது என்று நம்மில் பலர் இது நாள் வரை எண்ணி வந்தோம். ஆனால் அதன் மருத்துவக் குணங்களை தெரிந்து கொண்டோமானால் நிச்சயம் வியந்து போவோம்.

o  ஏலக்காய் ஒரு அகட்டு வாய்வு அகற்றி ஆகும். வாந்தியை மற்றும் குமட்டலைப் போக்கக் கூடியது. பசியைத் தூண்ட கூடியது. அல்லது அதிகரிக்கச் செய்வது. பிடிப்பைப் போக்கக் கூடியது. அல்லது கடுப்பைக் கண்டிக்கக் கூடியது. நுண்கிருமிகளைஅழிக்க வல்லது. மூச்சிரைப்பைத் தணிக்க கூடியது.

வயிற்றுக் கோளாறுகளைப் போக்க கூடியது. ஏலக்காயினின்று பெறப்படும் எண்ணெய் வயிற்றுக் கடுப்பைத் தணிக்க வல்லது. மேலும் கிருமி நாசினியாக விளங்கக் கூடியது. கால் பிளாடர் என்னும் பித்தப் பையைத் தூண்டி பித்தத்தைச் சுரக்கச் செய்வது.

o  ஏலக்காயில் கார்போ ஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச்சத்து, புரோட்டீன் எனப்படும் புரதச் சத்து பைபர் எனப்படும் நார்சத்து விட்டமின் சத்துக்களான விட்டமின் சி, நியாசின், பெரிடாக்ஸின், ரிபோபிளேவின், மற்றும் தயாமின் ஆகியன உள்ளன. தாது உப்புக்களான பாஸ்பரஸ், செம்பு, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியன மலிந்துள்ளன.

Read more...
 
உளுந்து - மருத்துவப் பயன்கள் Print E-mail
Monday, 22 December 2014 09:14

உளுந்து - மருத்துவப் பயன்கள்

நோயின் பாதிப்பு நீங்க:

கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய:

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

Read more...
 
குழந்தை இல்லாதவர்கள் கண்டிப்பாக படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும்! Print E-mail
Tuesday, 08 April 2014 07:17

குழந்தை இல்லாதவர்கள் கண்டிப்பாக படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும்!!

    கரை செல்வன்     

கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன ?:

கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு.

இந்த வயதுகளில் இல்லை எனறால் குழந்தை பிறக்காதா? அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.

சில புள்ளி விவரங்கள்:

30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 64% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?:

இதுவும் ஓரளவுக்கு முக்கியமே, ஆனால் பெண்ணின் வயது அளவுக்கு முக்கியமானது அல்ல. இதற்குக் காரணம், பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன.

Read more...
 
CANCER - புற்றுநோய் : தெரிந்த பொய்களும் - தெரியாத உண்மைகளும் Print E-mail
Friday, 07 November 2014 10:32

CANCER - புற்றுநோய் : தெரிந்த பொய்களும் - தெரியாத உண்மைகளும்

[ கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது.

கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும்,ஆசுவாசப்படுத்தி கொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.]

Read more...
 
ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி! Print E-mail
Saturday, 28 March 2015 10:10

ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி!

''இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை,'' என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து சுக்கு என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம்.

இஞ்சியை சமையலில் தாரளமாக பயன்படுத்திக் கொள்கிறோம். பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில் அதிகமாக சேர்க்கின்றனர். இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது.

இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.

Read more...
 
ஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும் Print E-mail
Friday, 03 April 2015 06:16

ஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்

மாரடைப்பா... இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப்பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும்.

உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

கோல்டன் அவர் – Golden Hour

முதல் 2 மணி நேரம் “கோல்டன் அவர்’ என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.

Read more...
 
ரத்த தானம் செய்யுங்கள்! உங்கள் உடம்புக்கு நன்மை விளையும்! Print E-mail
Thursday, 02 April 2015 06:12

ரத்த தானம் செய்யுங்கள்! உங்கள் உடம்புக்கு நன்மை விளையும்!

  ஷேக்கோ    
 
“இரத்தம் குத்தி எடுக்கும் அடியார், மிகவும் நல்லவர்தான். (ஏனென்றால்) அவர் இரத்தத்தைப் போக்கி விடுகின்றார். முதுகையும் இலேசாக்கிக் கொள்கிறார். கண்களையும் ஒளிபெறச் செய்கிறார்...” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)
 
மதுரை, சென்னை, போன்ற பெரிய நகரங்களில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பார்த்தால், அங்குள்ள வெளிக்காம்பவுண்ட் சுவர்களில், பெரிய போர்டுகள் மாட்டப்பட்டிருக்கும்.
 
அந்த போர்டுகளில் ரத்த தானம் செய்யுங்கள். அதனால் உங்கள் உடம்புக்கு நன்மை விளையும். ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கும் நன்மை விளையும் என்பதாக எழுதப்பட்டிருக்கும்.
 
ரத்தத்தை தானம் செய்து, நோயாளிகளுக்கு உதவும்படியாக, மருத்துவமனைகள் அவ்விதம் விளம்பரப்படுத்துகின்றன.
 
ரத்தத்தை தானம் செய்வதன் மூலம் ரத்த தானம் செய்பவருக்கு உடம்பு கலகலப்பாக ஆகிறது. ரத்த ஓட்டம் சீர் பெறுகிறது. ரத்தம் அதிகரிக்க வழி ஏற்படுகிறது. உடல் தினவு குறைகிறது. ரத்த அழுத்த நோய் போன்றவை வராமல் பாதுகாப்பு ஏற்படுகிறது – என்றெல்லாம் கூறுகின்றார்கள் இன்றைய டாக்டர்கள்.

Read more...
 
மிட் நைட் எக்சர்சைஸ்! Print E-mail
Monday, 11 June 2012 05:59

 Image result for midnight exercise

             மிட் நைட் எக்சர்சைஸ்!             

நானும் தான் தினமும் மூச்சு வாங்க நடக்கிறேன், மிஷினில் ஏறி வெயிட் பார்த்தால், குறையவே மாட்டேங்குதே, நாள் கணக்கில் ஓடியும், ஒரு கிலோ கூட குறைய மாட்டேங்குதே..." என்று மனதுக்குள் புலம்பும் ரகமா நீங்கள்?

அப்படியானால், நீங்கள் உங்கள் எடை குறைய, பணத்தை கண்டபடி யார் யார் சொல் கேட்டோ, செலவழிக்கிறீர்கள் என்று அர்த்தம்? வேண்டாம், பணத்தை கண்டபடி செலவழிப்பதை விடுங்கள்.

அதுபோல, வெயிட் குறைய, தண்ணீர் குடிக்க கூட பயப்படுவீர்களே, சாப்பிடுவதையும் குறைத்து விடுவீர்கள், சில சமயம், உடற்பயிற்சி செய்வதற்காக மணிக்கணக்கில் வயிற்றை காய வைப்பீர்களே, உண்மை தானே. அதையும் முதலில் விடுங்கள்.

Read more...
 
சுவாச மரணங்கள்: சுவாசிக்கும் முன் யோசி! Print E-mail
Monday, 29 June 2015 17:22

சுவாச மரணங்கள்: சுவாசிக்கும் முன் யோசி!

[  எக்காரணத்தைக் கொண்டும் வாயினால் சுவாசிக்காதீர்கள்.

இணையத்தில், பேஸ்புக்கில் ஷாட் செய்யும் போது உதடுகளை இறுக மூடிக் கொள்ளுங்கள். மூக்கினால் சுவாசியுங்கள்.]

இணையத்தில் இன்றைய தலைமுறையினர் ஜிமெயில், பேஸ்புக் ஷாட்டுகளில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுவரஸ்யத்தில் முச்சு விடுவதையே மறந்து விடுகிறார்கள்.

வாயை திறந்து கணினியை திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் மூக்கினால் மூச்சு விடுவதை மறந்து பெரும்பாலும் வாயினால் தான் மூச்சு விடுகிறார்கள். இப்படி மூச்சு விடுவதால் என்ன குறைந்து போய்விட போகிறது என்று கேட்கிறீர்களா? இந்த பழக்கத்திற்குப் பின்னால் பெரும் ஆபத்து இருக்கிறது.

சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது. ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள்.

காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்ஸ. ஆனால் காலையில் பார்க்கும்போது இருவரின் உயிரற்ற உடல்கள்தான் காரில் இருக்கின்றன. ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்?

Read more...
 
மூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா? Print E-mail
Thursday, 31 October 2013 06:53

மூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா?

நான் போன மாதம் என் வேலை விஷயமாக ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு ஹிந்து. நன்கு படித்து ஈரோட்டில் சொந்தமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியும் ஒரு ஸ்கூலும் நடத்தி வருபவர். என் கணவரின் உடல்நிலை பற்றியும், மூளையில் ஹெமரேஜ் ஆனது பற்றியும் வலது கை இயக்கம் சரியாக மருந்தே இல்லை என்றும் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன விஷயங்கள் அப்படியே அவரின் மொழியில் தருகிறேன்:

”உங்க பெற்றோர் வீடு இருப்பதாக சொல்லும் கந்தசாமி வீதியில் குடியிருக்கும் முஹம்மத்அலி-யை உங்களுக்கு தெரியுமா?”

“தெரியும் ஆனால் அவ்வளவாக பழக்கம் இல்லை”

“மேடம்... அவருடைய பேரன் 3 வயது குழந்தை. பிறந்ததில் இருந்து ஹார்ட்டில் சின்னதாக ஒரு பிரச்சினை இருந்து வந்தது. அவர்கள் குடும்பம் இருப்பது சவூதியில். அவர்கள் அக்குழந்தையை அழைத்துக் கொண்டு ஹஜ்ஜுக்கும் சென்று வந்தனர். அக்குழந்தை கிராஅத் ஓதும் அழகைக் கண்டு சவூதிகளே வியந்து பாராட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த குழந்தை இந்தியாவில் இருந்த போது திடீரென்று சுயநினைவை இழந்து விட்டது. அக்குழந்தையை ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள்.

என்ன செய்தும் குழந்தைக்கு சுயநினைவு மட்டும் வரவே இல்லை. இதற்கும் மேல் இதற்கு ட்ரீட்மெண்ட் இல்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள்.

Read more...
 
நமது உடலின் உறுப்பும், ஒவ்வொன்றின் பணி நேரமும்! Print E-mail
Saturday, 16 April 2016 09:12

நமது உடலின் உறுப்பும், ஒவ்வொன்றின் பணி  நேரமும்!

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.

தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

Read more...
 
இரண்டு மருத்துவ சிகிச்சைகளும் ஜின்னும்! Print E-mail
Friday, 29 January 2016 07:25

இரண்டு மருத்துவ சிகிச்சைகளும் ஜின்னும்!

ஜின் பிடித்தலுக்கான வைத்தியம்

     ஹைத்துரூஸ்    

[ Nor Azian என்ற மலேசிய பெண்மணி ஜின்னால் ஏற்படக்கூடிய நோய்கள், அது குறித்த அடையாளங்களை ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வியல் கல்வி மலேசியா “The University Kebangsaan Malaysia” ‘UKM’ மற்றும் “யூனிவர்சிட்டி செயின்ஸ் மலேசியா” இவ்விரண்டு பல்கலைக்கழகங்களும் வழங்குகின்றன.

''இன்னும் நிச்சயமாக மனிதர்களிலிருந்து ஆண்கள் சிலர், ஜின் ஆண்கள் சிலரைக் கொண்டு பாதுகாப்பு தேடுகின்றனர். எனவே, அவர்களுக்கு (ஜின்களுக்கு) அழிச்சாட்டியப் போக்கை அதிகப்படுத்திவிட்டனர்.'' (குர்ஆன் 72:6)

முஸ்லிம்கள் உளவியல், மனநோய்களில் சிக்கிக்கிடக்கின்றனர். ஜின்கள் குறித்து குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை குறித்து நாம் அறிந்து கொள்வது நமக்குக் கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. புறக்கணித்தோமானால், குர்ஆனின் ஒரு பகுதியையே புறக்கணித்த குற்றத்திற்கு ஆளாகுவோம்.]

Read more...
 
வாசனை Print E-mail
Wednesday, 28 December 2016 07:48

வாசனை

       ரஹ்மத் ராஜகுமாரன்      

மனிதனது நாசி எவ்வளவு தூரத்திற்கு வாசனையை நுகரும் சக்தியைக் கொண்டிருக்கும்?

எவ்வளவு தூரம் என்பது கணக்கு அல்ல! எவ்வளவு நுட்பம் என்பதுதான் கணக்கு! நுகருவதற்கு வாசனை மூக்கை வந்து சேர வேண்டியது ஒரு Must (கட்டாயம்).

பஸ் ஸ்டாண்டில் போடும் கறி, மசால்வடை காற்றினில் கலந்து உங்கள் வீட்டுக்குள் வந்து மூக்கினில் நுழைந்துதான் அதை உங்களால் நுகர முடியும் ஆனால் கொஞ்சம் வாசனைப் போதும் ஒரு மில்லியன் காற்று மாலிக்யுல்களில் ஒரே ஒரு மாலிக்யுல் மசாலா வாசனை மூக்கின் அருகில் வந்தால் போதும் உடனே நாக்கு வேறு உமிழ் நீர் சுரந்து 'நான் ரெடி 'நீங்கள் வடை வாங்க ரெடியா?"

நுகரும் சக்தி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி சிவப்பிந்தியர்களில் ஒரு பிரிவினர் வேட்டையாடும் போது முகர்ந்து பார்த்தே கொஞ்ச தூரத்தில் மான் இருக்கிறது இந்தப் திரும்பி கொஞ்ச தொலைவில் உள்ள பொந்துக்குள் முயல் ஜோடியாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பார்கலாம்.

Read more...
 
மலம் கழிக்க ஆரோக்கியமான நேரம் எது? Print E-mail
Friday, 18 November 2016 07:56

மலம் கழிக்க ஆரோக்கியமான நேரம் எது?

இதர கடன் பிரச்சனைகளை விட, இந்த காலை கடன் பிரச்சனை தான் மனிதர்களை பாடாய்ப்படுத்தி விடும். எந்த சிரமும் இன்றி காலை கடனை கழிப்பவர்கள் தான் உண்மையில் புண்ணியம் செய்தவர்கள்.

இன்றைய ஸ்மார்ட் போன் டிஜிட்டல் யுகம், உணவு கலாச்சார மாற்றங்கள் போன்றவை மலம் கழித்தலில் பிரச்சனைகள், கோளாறுகளை உண்டாக்குகின்றன.

மலம் கழித்தலில் உண்டாகும் பிரச்சனைகள் உங்கள் ஆரோக்கியத்தை மெல்லே, மெல்ல கரையான் போல அரிக்க துவங்கும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

Read more...
 
கீறிக் கிழிக்கும் அறுவை சிகிச்சைக்கு வித்திட்ட இஸ்லாம் Print E-mail
Monday, 10 April 2017 08:07

கீறிக் கிழிக்கும் அறுவை சிகிச்சைக்கு வித்திட்ட இஸ்லாம்

      முஹம்மத் பகீஹுத்தீன்      

மருத்துவ துறையில் முஸ்லிம்கள்

மருத்துவத் துறைக்குப் பங்காற்றிய அறிஞர்கள்

மருத்துவ துறையை ஊக்குவித்த இஸ்லாம்

மருத்துவத் துறையில் பெண்கள்

பெண்கள் ஆண்களுக்கு சிகிச்சையளித்தல்

சத்திர சிகிச்கைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு

மருத்துவம் வெறும் உடம்புக்கு மாத்திரம் அல்ல

படைப்பினங்களில் மாற்றம் செய்தல்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

Read more...
 
பிரேத பரிசோதனை நடப்பது என்ன? Print E-mail
Tuesday, 10 May 2016 06:33

பிரேத பரிசோதனை நடப்பது என்ன?

மரணங்களுக்குப் பின்னால் உள்ள எத்தனையோ புதிர்களைத் தீர்க்கக்கூடிய இடம் பிரேதப் பரிசோதனை அறை.

ஆனால், இந்தியாவில் பெரும் பாலான பிரேதப் பரிசோதனைகள் முறையாகச் செய்யப்பட வில்லை என்கிறார் மருத்துவர் டிகால்.

சட்டம் சார்ந்த சிறப்பு மருத்துவரான இவர், பல வருட அரசுப் பணிக்குப் பிறகு, தற்போது தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் இணை தடயவியல் மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

இதுவரை 2,000 பிரேதப் பரிசோதனைகளைச் செய்துள்ளார். 2ஜி வழக்கில் சர்ச்சைக்குரிய முறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்படும் சாதிக் பாட்சாவின் உடலைப் பரிசோதனை செய்தவர் இவர்தான்.

தடயவியல் ஆய்வுகள் மற்றும் பிரேதப் பரிசோதனை முறைகளில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்து நம்மிடம் பேசுகிறார்.

Read more...
 
பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவது ஏன்? Print E-mail
Sunday, 17 April 2016 06:59

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவது ஏன்?

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவது அவர்களை மூளை சிதைவில் இருந்து பாதுக்கும் என்ற ஆய்வு முடிவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் உண்மை தூதர் என்பதை உறுதி செய்கிறது.

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பான வற்றை கொடுப்பது நபி வழியாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரித்தம் பழத்தை மென்மையாக பிசைந்து பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுத்துள்ளார்கள் அப்படி கொடுக்கவும் கர்பித்துர்ள்ளார்கள்.

பேரித்தம் பழத்தை பெற்று கொள்ளதவர்கள் சீனி தேன் போன்ற இனிப்பான பொருள்களை தொட்டு பிறந்த குழந்தையின் நாவில் தடவுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் இது நபி வழியில் இருந்து பெறப்பட்ட அறிவாகும்.

நபிகள் நாயகம் சர்வசாதரணமாக இந்த அறிவை நமக்கு கற்று தந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் இந்த அறிவுக்கு பின்னால் மிக பெரியதொரு மருத்துவ குணம் ஒளிந்திருக்கிறது என்பதை அன்றைய கால மக்கள் அறிந்திருக்க வாய்பில்லை.

Read more...
 
வலதுபுறம் உறங்கி வயதைக் கூட்டுங்கள்! Print E-mail
Sunday, 24 July 2016 08:44

வலதுபுறம் உறங்கி வயதைக் கூட்டுங்கள்!

     ஜெ. நாகூர்மீரான்    

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்பற்றிய சுகாதாரம் குறித்துள்ள ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. அவை இன்றைய நவீன அறிவியலோடு ஒத்துப்போகின்றன. அவ்வாறு ஹதீஸ்கள் பலவற்றை எடுத்து சிகிச்சையின்போது கடைப்பிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இரவு உறங்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த முறையில் உறங்கினார்கள், அந்த முறை குறித்து இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறுவது என்னவென்பதைக் காண்போம்.

o மல்லாக்க, குப்புற, இடது, வலது ஒருக்களித்து பல நிலைகளில் மனிதர்கள் உறங்குகின்றனர். அவ்வாறு உறங்குவது சரியல்ல. வலதுபுறமாக மட்டுமே துயில வேண்டும். அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த ஹதீஸ்களைக் காண்போம்.

'அல்பகரா இப்னு அஸீஃப்' கூறியதாக புகாரி ஷரீஃபில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படுக்கும்போது வலப்புறமாகப் படுத்து, "யா அல்லாஹ்! என் ஆன்மாவை உன்னிடம் ஒப்படைக்கிறேன். எனது முகத்தை உன்னை நோக்கியே திருப்பிக் கொள்கிறேன். உன் உதவியை நாடுகிறேன். உன்னையன்றி என்னைக் காப்பாற்ற எவருமில்லை. மேலும், உனது வேதத்தை நம்புகிறேன். நீ தந்த நபித்துவத்தையும் நம்புகிறேன்." என்பார்கள்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 5 of 91

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article