வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

தீவிர நோய்ப் பரவலின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய தனிமையிருப்பு Print E-mail
Tuesday, 31 March 2020 07:34

தீவிர நோய்ப் பரவலின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய தனிமையிருப்பு

[ பள்ளிவாசல்களில் ஜமாஅத் தொழுகைகள், ஜுமுஆ தொழுகை போன்றவை நடைபெறாமல் இருப்பது இப்போது கவலைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இது, உணர்வு பூர்வமாகப் பார்த்தால் சரிதான். ஆயினும் அறிவு ரீதியாகப் பார்த்தால் இது குறித்துக் கவலை கொள்வதற்குச் சட்ட ரீதியாக எதுவுமில்லை. ]

    வழிகாட்டும் அமவாஸ் கொள்ளைநோய்     

அமவாஸ் என்பது இன்றைய ஃபாலஸ்தீனில் ஜெரூசலேமுக்கும் ரமல்லாவுக்கும் இடையே ஜெரூசலேமிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலிருந்த ஒரு சிற்றூர். 1967ஆம் ஆண்டில் நடந்த யூத ஆக்கிரமிப்பு அக்கிரமத்தால் அவ்வூர் மக்கள் துரத்தப்பட்டு வீடுகள் தகர்க்கப்பட்டன.

இன்று இந்தப் பெயரில் அப்படியொரு சிற்றூர் இல்லை.

Read more...
 
பேரழிவுகளின் நோக்கம் என்ன? Print E-mail
Wednesday, 01 April 2020 07:38

பேரழிவுகளின் நோக்கம் என்ன?

எந்தப் பேரழிவாக இருந்தாலும் நாம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறோம் என்பதைத்தான் தெளிவுபடுத்துகிறது.

ஆணவம் பிடித்த, அதிகார வெறிபிடித்த “பலமிக்க” அதிபர்கள், இராணுவத் தளபதிகள், இராணுவப் படைகள் என்று அனைத்து பலங்களையும் ஒன்றுகூட்டினாலும் அல்லாஹ்வின் ஆற்றலின் முன்பு அவை ஒன்றுமே இல்லை.

பேரழிவுகள் நல்லவர்களையும் கெட்டவர்களையும் ஒருசேர அழிக்கின்றன. அது ஓர் இறைநம்பிக்கையாளருக்கும் இறைநம்பிக்கையற்றவருக்கும் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. மேலும் அவற்றினால் எந்த அர்த்தமும் இல்லை. ஏனென்றால் அவை அவற்றிலிருந்து எந்தவொரு உணர்வையும் ஏற்படுத்த முடியாது என்று சிலர் கூறுகின்றனர்.

இது உண்மையல்ல. அவற்றின் தாக்கத்தில் வித்தியாசம் இருக்கின்றது.

அது ஓர் இறைநம்பிக்கையாளரின் வாழ்க்கையில் அவரது இறைநம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகிறது. ஏனெனில் ஓர் இலைகூட இறைவனின் அனுமதியின்றி கீழே விழுவதில்லை என்று இறைநம்பிக்கையாளர் நம்புகிறார்.

Read more...
 
"அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே" Print E-mail
Tuesday, 07 April 2020 06:58

"அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே"

அமெரிக்கா ஈராக்கின் அப்பாவி மக்களை கொல்லும் போது, மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

அமெரிக்கா ஆஃப்கான் அப்பாவி மக்களை கொல்லும் போது, மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

அமெரிக்கா வியாட்நாம் அப்பாவி மக்களை கொல்லும் போது, மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

இஸ்ரேல் பாலஸ்தீன அப்பாவி மக்களை கொல்லும் போது, மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

பர்மா ரோஹிங்யா அப்பாவி மக்களை கொல்லும் போது மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

Read more...
 
தீர்மானங்கள் போடும் போது 'அல்லாஹு அக்பர்' என்று கூறலாமா? Print E-mail
Sunday, 19 April 2015 07:26

தீர்மானங்கள் போடும் போது 'அல்லாஹு அக்பர்' என்று கூறலாமா?

திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? அல்லது ஓரிரு நாட்கள் கழித்துத் தான் வைக்க வேண்டுமா?

பத்து வயதுச் சிறுவன் இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா?

Read more...
 
பாவம் செய்த பாவிகள் பிற பாவிகளுக்கு அறிவுரை கூறக்கூடாதா? Print E-mail
Tuesday, 18 December 2018 08:31

பாவம் செய்த பாவிகள் பிற பாவிகளுக்கு அறிவுரை கூறக்கூடாதா?

அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது!

இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் கூற்று!

"பாவிகள் பிற பாவிகளுக்கு அறிவுரை கூறக் கூடாது’ என்றிருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு ஒருவரும் இவ்வுலகில் அழைப்பு பணி செய்ய இயலாது!"

ஆம். நிதர்சனமான உண்மை!

அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்களுக்கு கட்டுப்படுவதில் யாருமே தவறிழைக்காமல் இருக்க முடியாது. மறதியின் காரணமாகவோ அல்லது சோம்பலின் காரணமாகவோ அல்லது அலட்சியமாகவோ ஏதாவது ஒருவகையில் நாம் இறைவனின் கட்டளைகளை மீறியவர்களாகவே இருக்கிறோம். அனைவருக்கும் இந்த நிலை இருக்கிறது. குறைபாடு இல்லாமல் மனிதர்களில் யாரும் இருக்க இயலாது! ‘நான் எந்த பாவமும் செய்யாதவன்’ என எவரும் கூற முடியாது!

Read more...
 
கலிமதுத் தௌஹீதுக்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள் (1) Print E-mail
Wednesday, 16 November 2011 07:35

கலிமதுத் தௌஹீதுக்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள் (1) 

''லாஇலாஹ இல்லல்லாஹ்'' என்ற அரபு வாசகத்துக்கு ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறுயாரும் இல்லை’ என்று தமிழில் கருத்துக் கூறலாம். மக்கத்து காஃபிர்கள் சூரியன், சந்திரன், கல், மனிதர்கள் போன்றவற்றையெல்லாம் கடவுளாக ஏற்றிருந்தனர். உண்மையில் இவைகள் கடவுளல்ல. கடவுள் தன்மைக்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.

அல்லாஹ்வின் படைப்புக்கள் கடவுள்களாக வணங்கப்பட்டாலும் அவை வணங்கத் தகுதியானவைகளல்ல. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்பதையே இக்கலிமா நமக்குணர்த்துகின்றது. எனவே ‘வணங்கப்படுபவன் அல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லலை’ என்று கலிமாவுக்கு நாம் விளக்கம் சொல்லக் கூடாது. ‘வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை’ என்றுதான் அதற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டும். இது மொழி பெயர்ப்பு சம்பந்தமான ஒரு சிறு விளக்கம்.

முஸ்லிம் சமூகம் கலிமதுத் தவ்ஹீதை முழுமையாக ஏற்றிருந்தாலும் ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு விதமாக விளக்கம் சொல்வதைப் பார்க்கிறோம்.

விளக்கமாகச் சொல்வதென்றால் அந்த விளக்கங்களிடப்படையில்தான் அந்த ஜமாஅத்துக்களே உருவாகியுள்ளன. அதில் பிரதானமான இரண்டு தவறான விளக்கங்களை தெளிவுபடுத்துவதே இவ்வெழுத்தின் நோக்கம் .

தப்லீக் ஜமாஅத் அமைப்பினர் கலிமாவுக்கு தவறான விளக்கங்களை வழங்கி தமது பிரசாரத்தில் அடிப்படையாகவே அதைப் போதித்து வருவதைக் காண்கிறோம்.

Read more...
 
ஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா? Print E-mail
Tuesday, 06 December 2016 08:48

ஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா?

      மவ்லவி அப்பாஸ் அலீ MISc      

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு செய்தி வந்தால் முதலில் அந்த செய்தி ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். சஹீஹான ஹதீஸிற்குரிய அனைத்து நிபந்தனைகள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றாக எடுத்துக்கொள்ளப்படும்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்குரிய நிபந்தனைகளில் ஒன்று விடுபட்டாலும் அது பலவீனமான செய்தியாகிவிடும். இதன் பின் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொடர்பு படுத்தி அறிவிக்கக்கூடாது. மேலும் அதனடிப்படையில் மார்க்கத் தீர்ப்பும் தரக்கூடாது.

ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதை ஆராயும்போது இத்துறையில் பாண்டித்துவம் பெற்ற நமக்கு முன்னால் வாழ்ந்த நல்லறிஞர்கள் என்ன தீர்ப்பு வழங்கினார்கள் என்பதையும் அவசியம் கவனிக்க வேண்டும். ஏனெனில் அவர்களே இவ்விசயத்தில் நம்மை விட நன்கறிந்தவர்கள்.

Read more...
 
ஒரு தமிழன் இஸ்லாமியனாய் இருந்தால்தான் தமிழனாக இருக்க முடியும் Print E-mail
Thursday, 18 October 2018 07:26

ஒரு தமிழனாய் ஏன் இஸ்லாத்தை ஏற்கலாம்? சித்தாந்த ஒற்றுமை என்ன?

நன்மை தீமையை ஆய்ந்து அறிய வேண்டும்...!

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். (குறள் 511)

- எப்படி தெரியுமா நன்மையையும் தீமையையும் பிரித்து வரையறை செய்ய முடியும்?

சுயஅறிவும் நூலறிவும் சேர்தல் வேண்டும்!

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. (குறள் 636)

- தமிழில் வேதம் (முதல் நூல் எனப்படும் கடவுள் மனிதனுக்கு பணித்தது- நன்னூல்& தொல்காப்பியம் பொருள் அதிகாரம் மரபியல்.94) உண்டு அவை என்னவென்று உனக்கு தெரியுமா?

அந்த நூலைத்தான் ஆய்ந்து அறியவேண்டும்! அவைகளின் சிந்தாந்த தொகுப்பு பின்வருமாறு

Read more...
 
பெற்றோரின் சம்மதமின்றி பெண் திருமணம் செய்யலாமா? Print E-mail
Friday, 30 January 2009 07:41

கேள்வி : முஸ்லிம் பெண் இந்துவை திருமணம் செய்யலாமா?

பெண் பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாமா?

அவ்வாறு திருமணம் செய்தால் பெற்றோரின் பங்கு என்ன?

இந்நிலையில் ஜமாத்தார்களின் நிலை என்ன?

பதில் :  இந்துக்கள் இணைவைப்பவர்கள் என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. இணைவைப்பவர்களை திருமணம் செய்து கொள்ள முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை. அதற்கு கீழ்காணும் வசனம் சான்றாக உள்ளது.

(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;.

அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;.

இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்;. (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;.

ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)

இந்துவை ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்கான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது 'இணைவைப்பவர்கள் முஸ்லிமாகிய உங்களை நரகத்தில் கொண்டு சேர்த்து விடுவார்கள் என்ற பெரிய அபாயம் இருக்கிறது' என்கிறான்.

முஸ்லிம்கள் ஈமானை நம்பிக்கையை இழக்க வேண்டியது வரும், அதனாலேயே அப்படிப்பட்ட திருமணத்தை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

Read more...
 
இஸ்லாமில் அவநம்பிக்கைக்கு இடமில்லை! அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது! Print E-mail
Wednesday, 01 July 2020 06:55

இஸ்லாமில் அவநம்பிக்கைக்கு இடமில்லை! அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது!

கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கும் வரை இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. கத்தியை வைத்த பிறகே உதவி வந்தது.

மலையளவு நெருப்பில் தூக்கி எறியும் வரை இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. நெருப்பில் தூக்கி எறிந்த பிறகே உதவி வந்தது.

நைல் நதி வரை எதிரிகள் துரத்தி வந்தபோதும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் நதி பிளந்து அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.

இரண்டு மலைகளுக்கு நடுவே ஏழு முறை ஓடும் வரை அல்லாஹ்வின் உதவி அன்னை ஹாஜிரா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதற்கு பிறகே ஜம் ஜம் கிடைத்தது.

Read more...
 
அல்குர்ஆனும் கிறிஸ்தவர்களும்! Print E-mail
Thursday, 25 October 2018 07:15

கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே உள்ள இசைவான பொது விஷயங்கள்

''(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள்'' (அல்-குர்ஆன் 3:64)

தந்தையின்றி பிறந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு)  அவர்களின் பிறப்பு ஓர் அற்புதம்!

மலக்குகள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்.

அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்; ''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்;

இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' (அச்சமயம் மர்யம்) கூறினார்: ''என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?'' (அதற்கு) அவன் கூறினான்: ''அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான்.

அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ''ஆகுக'' எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.'' இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். (அல்-குர்ஆன் 3:45-48)

Read more...
 
அறிவியலும் குர்ஆனும் ஒருபோதும் முரண்படாது எனும் கருத்து தவறானது Print E-mail
Friday, 04 January 2019 08:00

அறிவியலும் குர்ஆனும் ஒருபோதும் முரண்படாது எனும் கருத்து தவறானது

அறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா? ஆம் முரண்படுகிறது!

அறிவியல் ரீதியில் குர்ஆன் நூறு சதவீதம் துல்லியமானது எனச் சில முஸ்லிம்கள் கோருகிறார்கள். ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல.

உண்மையைப் பரிபூரணமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒன்றாக அறிவியல் பார்க்கப்படுகிறது. அதே சமயம், குர்ஆன் அந்த உண்மையைப் படைத்தவனின் வாக்காக இருப்பதால், தர்க்க ரீதியில் அவ்விரண்டுக்கும் நடுவே கனகச்சிதமான பொருத்தம் நிலவியாக வேண்டும் (என எதிர்பார்க்கப்படுகிறது).

எனினும் இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அறிவியலொன்றும் உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியல்ல. இதை ஒப்புக்கொள்வதற்கு நீங்கள் ஒரு கூனிய (Thomas Kuhn எனும் அமெரிக்க இயற்பியலாளரின் கருத்தியலை ஏற்கும்) பின்நவீனத்துவவாதியாக இருக்க வேண்டியதில்லை.

அறிவியலின் பெரும்பகுதி இயல்பிலேயே தற்காலிகத் தன்மையிலானது என்பதை அறிவியல்சார் சமூகமே ஒப்புக்கொள்கிறது. அதாவது, புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்படும் போதெல்லாம் அறிவியல் புதுப்பிக்கப்படுகிறது, பரிணமிக்கிறது.

Read more...
 
"குலா" மூலம் மணவிலக்குப் பெற்ற பெண் மீண்டும் அதே கணவனை மணப்பது கூடுமா? Print E-mail
Friday, 31 May 2013 06:10

"குலா" மூலம் மணவிலக்குப் பெற்ற பெண் மீண்டும் அதே கணவனை மணப்பது கூடுமா?

முதலில் ""குலா" என்பதற்கான விளக்கத்தை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

கணவன், மனைவியருக்கிடையே ஏற்பட்டுவிட்ட பிணக்கைப் போக்கி சமாதானம் செய்து வைக்க முற்படும் இரு வீட்டார் சார்பான நடுவர்கள் சமாதானம் செய்து வைக்க முயலும் போது கணவன் சமாதானத்துக்கு முன்வந்த போதும் மனைவி அதை ஏற்காத நிலையில் கணவன்-மனைவி இருவரும் அல்லாஹ்வின் வரம்புக்குள் நிலைத்திருக்க மாட்டார்கள் என்று நடுவர்களும் அஞ்சும்போது, ''மனைவியானவர் கணவனிடமிருந்து பெற்றதை திரும்பக் கணவனிடமே கொடுக்கச் செய்து பிரித்து விடுவதில் தவறில்லை'' என்பதை குர்ஆன் 2:229 மூலம் அறிய முடிகிறது.

இப்படிக் கணவனிடமிருந்து பெற்றதை மனைவி திரும்பக் கணவனிடமே கொடுத்துத் திருமண ஒப்பந்தத்தை தானாகவே முறித்துக் கொள்ள முன் வருவது தான் குலா என்பதாகும்.

அல்குர்உ, குல்உ, குலா என்று கூறப்படும் சொல்லுக்கு அகராதியில் கழற்றிவிடுதல் என்பது பொருளாகும். மனைவியிடமிருந்து ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு அவளிடமிருந்து பிரிந்து விடுவதற்குக் கணவன் சம்மதம் தெரிவிப்பதையே வழக்கத்தில் ""குலா" என்பர்.

Read more...
 
மார்க்க விஷயங்களில் விட்டுக்கொடுத்தல் Print E-mail
Thursday, 27 December 2018 07:44

மார்க்க விஷயங்களில் விட்டுக்கொடுத்தல்

       மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி      

தமிழில் மொழிப்பெயர்க்கப்ட்ட அஷ்ஷைய்க் பின்பாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஃபத்வா

    கேள்வி:    

நமக்குள் ஒன்றுபட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். முரண்பட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம்! என்ற இமாம் ஹஸனுல்பன்னா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது கூற்று சரியானதுதானா?

    பதில்:      

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவனது தூதர் மீதும் அவரது தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

மேலே குறிப்பிட்ட கூற்று (தப்ஸீர்) அல்மனாரின் ஆசிரியர் ஷைக் ரஸீத் ரிழா அவர்களுடைய கூற்றாகும். பின்னர் ஷைய்க் ஹஸனுல்பன்னா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது ரஸாயில்களில் இதனைக் குறிப்பிட்டார். அதிகமான மக்கள் இது ஹஸனுல் பன்னா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது கருத்து எனக் கருதும் அளவுக்கு அவர் பெயரில் இக்கூற்று பிரபல்யமடைந்துவிட்டது.

மேற்படி கூற்றின் முதற்பகுதி நமக்குள் உடன்பாடான விடயங்களில் ஒருவருக் கொருவர் உதவியாக இருப்போம் என்பதாகும். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடில்லாத ஏகோபித்த அடிப்படையில் உள்ள நல்ல விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றது.

இது குர்ஆனிலும் நபிமொழியிலும் கட்டாயமாக்கப்பட்ட “தஆவுன்” ஒருவருக் கொருவர் உதவி செய்தலாகும்.

Read more...
 
ஆட்சி அதிகாரம் நம்மிடம் இருந்தால் தான் இஸ்லாமை சரியாக பின்பற்ற முடியும் என்பது சரியா? Print E-mail
Thursday, 20 December 2018 07:23

ஆட்சி அதிகாரம் நம்மிடம் இருந்தால் தான் இஸ்லாமை சரியாக பின்பற்ற முடியும் என்பது சரியா?

      மெளலவி இம்தியாஸ் யூசுஃப் ஸலஃபி      

மக்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரப் பணியினை கொண்டு செல்லும்போது முதலிடம் கொடுக்க வேண்டிய அம்சம் எது? என்பதில் சிலர் பிரச்சினைப்படுகிறார்கள்.

“இஸ்லாமிய அரசாங்கம்” (கிலாஃபத்) நிறுவுவது சம்பந்தமாகவே முஸ்லிம்களை வழிநடத்த வேண்டும். அரசாங்கம் உருவாகினால் தான் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றக் கூடியதாகவும் அதிகாரபூர்வமாக நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எனவே கிலாபத் அமைப்பது பற்றிய போதனைகளை முதலில் போதிக்கவேண்டும்'' என்கிறார்கள்.

மார்கக் விவகாரங்கள் பற்றிய முரண்பாடுகளோ அகீதா பற்றிய சீர்குலைவுகளோ ஏனைய விடயங்கள் பற்றிய விளக்கங்களோ பேசி மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படுத்தாமல், மக்கள் எந்தெந்த நம்பிக்கைகளில் -கொள்கைகளில்- இருந்து செயற்படுகிறார்களோ அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு வேண்டும், என்கிறார்கள்.

அகீதா பற்றியும் ஸுன்னாவுக்கு முரணான விடயங்கள் பற்றியும் பேசி அவைகளை அடையாளம் காட்டி தஃவா செய்தால் சமூகம் பிளவுபட்டு விடும், ஒற்றுமை குழைந்து விடும், ஐக்கியம் கருதி அதனை விமர்சிக்காமல் விலகி நிற்க வேண்டும், அவரவர் விரும்புகின்ற போக்கில் விட்டுவிடவேண்டும், என்பதாக கூறுகிறார்கள்.

Read more...
 
முர்தத் விஷயத்தில் இஸ்லாமிய சட்டம் Print E-mail
Thursday, 15 November 2018 08:56

முர்தத் விஷயத்தில் இஸ்லாமிய சட்டம்

      D.முஹம்மது ஹுசைன் மன்பஈ      

(1) முர்தத் என்ற வார்த்தையின் நேரடி அருத்தம் மாற்றுதல் இஸ்லாமிய வரலாற்றில் முர்தத் என்பது இஸ்லாமிய சிந்தனையில் பிறந்து அல்லது இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு இஸ்லாமிய மார்கத்தை விட்டு வெளியேறுபவனை முர்தத் என்று அழைக்கப்படும்.

முர்தத் (இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுதல்) நான்கு வகைப்படும்:

1. கொள்கையின் (நம்பிக்கை) மூலம் முர்தத்

2. பேச்சின் மூலம் முர்தத்தாக மாறுதல்

3. செயல்களின் மூலம் முர்தத்

4. அல்லாஹ் கடமையாக்கிய செயல்களை மறுத்தல் அல்லது அல்லாஹ் தடுத்த விசயங்களை ஆகுமாக்குதல்.

Read more...
 
எது ஈஸால் ஸவாப்? Print E-mail
Monday, 19 September 2016 07:21

எது ஈஸால் ஸவாப்?

மரணித்தவர்களுக்காக துஆ செய்வது, பாவமன்னிப்பு தேடுவது, தர்மம் செய்வது, கூலி வாங்காமல் குர்ஆன் ஓதுவது இதைப் போன்றே நஃபிலான தொழுகை நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களின் மூலம் ஈஸால் ஸவாப் என்ற பெயரில் செய்வதானது மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

ஆனால் அதே சமயத்தில் ஈஸால் ஸவாப் என்ற பெயரில் குறிப்பிட்டு செய்வதும் வருடாவருடம் என்ற பெயரில் செய்வதும் பித்அத்தாகும். இந்த செயலிற்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ், இஜ்மா, கியாஸ் எதிலும் ஆதாரமில்லை.

இந்துக்களின் சடங்கு சம்பிரதாயங்களாகும் :

அதற்கு மாறாக இந்த வழிமுறையானது இந்துக்களின் சடங்கு சம்பிரதாயங்களாகும். ஏனெனில் அவர்களிடத்திலும் நாளை குறிப்பாக்குவது என்பது வழமையில் உள்ளது.

பிரபல்யமான வரலாற்றாசிரியர் அல்லாமா "பைரோனி" குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்துக்களிடத்தில் மரணித்தவரின் உரிமைகள் சம்மந்தப்பட்டதில் வாரிசுகளின் மீதுள்ள கடமையானது; விருந்தளிப்பது, இறந்த நாள் பதினொன்றாவது நாள் பதினைந்தாவது நாள் உணவளிப்பது, இவ்வாறே வருடத்தின் முடிவிலும் உணவளிப்பது.

மேலும் ஒன்பதாவது நாள் வரை வீட்டிற்கு முன்னால் சமைத்த உணவையும் தண்ணீர் குவளையையும் வைப்பது, அவ்வாறு செய்யவில்லையெனில் மைய்யத்தின் ரூஹானது கோபமடையும். பசித்தவாறு தாகித்தவாறு சுற்றும். குறிப்பாக பத்தாம் நாள் மரணித்தவரின் பேரில் அதிகமான உணவை தயார் செய்து ஏழைகளுக்கு கொடுக்கப்படும். (کتاب الہند)

Read more...
 
புரிந்துகொண்ட விஷயம், புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்: வித்தியாசம் என்ன? Print E-mail
Monday, 01 June 2020 17:47

புரிந்துகொண்ட விஷயம், புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்: வித்தியாசம் என்ன?

    மௌலவி. ஹிதாயத்துல்லாஹ், நூரி     

நான் புரிந்துகொண்ட விஷயம் என்பதற்கும், நான் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தில் தான் இந்த உலகின் எல்லா சிக்கல்களும் தொற்றி நிற்கிறது.

("விஷயம்" என்பதில் எதை வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம். இஸ்லாம், அரசியல், உலகம், மனிதர்கள், பிற கொள்கைகள்... இன்னும் பல...)

தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் என்று இந்த உலகில் எதுவுமே இல்லையென்றாலும் கூட எத்தகைய நபர்களால் அவை அணுகப்படுகிறது என்பதை வைத்தே அவற்றின் தீர்வும் தள்ளிப் போகிறது. தடைபட்டு நிற்கிறது.

எல்லோருக்கும் தம் சமூகத்தை உயர்த்தும் ஆசையும், கனவும், இலட்சிய வேட்கையும் நிறைய இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை செயல்படுத்தும் நுணுக்கமும் திறனும் எல்லோரிடமும் இருக்கிறதா...?

ஏராளமான கருத்துக்களைப் பகிர்கிறோம். சிந்தனைகளை முன்வைக்கிறோம். விரிவாகப் பேசி விவாதிக்கவும் செய்கிறோம்.

இறுதியில்..

Read more...
 
என் உம்மா ஒரு தீவிர வாசகி Print E-mail
Saturday, 04 July 2020 08:04

என் உம்மா ஒரு தீவிர வாசகி

    படிப்பினைகள் நிறைந்த வாழ்க்கை வரலாறு     

[ இன்னும் பத்து நாட்களில் என் உம்மா மௌத்தாகி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. வீட்டில் நாள் தவறாமல் உம்மாவின் நினைவுகள் மீட்டப்படுகின்றன.   உம்மா நோயுற்றிருந்த இறுதி வேளையிலும், மரணித்த பின்பும் நான் இட்ட பதிவுகளின் தொகுப்பு இது. -ஷாறா  ]

என் உம்மாவுக்கு வயது 85. உம்மா ஒரு தீவிர வாசகி. எங்கள் எல்லோருக்கும் புத்தகக் காதல் உம்மாவிடமிருந்துதான் வந்திருக்கிறது. வாசிப்பில்தான் அவரது வாழ்வில் பெரும் பகுதி கழிந்திருக்கிறது. இத்தனைக்கும் எழுத்தறிவில்லாத ஒரு தாயின் மகள் அவர்.

வாசிப்பதற்காக நான் தோழிகளிடமிருந்து ஆவலோடு நூல்களை எடுத்துக் கொண்டு போவேன்.

உம்மா எனக்கொரு வேலையைத் தந்து விட்டு நூலை வாசிக்கத் தொடங்கிவிடுவார்.

எதிர்த்துப் பேசவோ, சண்டை பிடிக்கவோ தெரியாமல் உம்மா வாசித்து விட்டுத் தரும் வரை ஏக்கத்தோடு காத்திருப்பேன்.

சமரசம், அல்ஹஸனாத் இதழ்களை வாசிக்கும் வரை உம்மாவுக்கு மாதமே பிறக்காத மாதிரிதான். அவரது மூத்த மகன் அரும்பு சஞ்சிகையை வெளியிடத் தொடங்கிய பின் அதன் தீவிர அபிமானியாக மாறிவிட்டார் உம்மா.

Read more...
 
எல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது? Print E-mail
Friday, 04 April 2014 08:20

எல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது?

இன்று பெற்றோர்களுடன் பிள்ளைகள் எப்படி நடந்துக் கொள்கிறார்கள்? அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களின் சிறப்பை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஹதீஸிலே வந்துருக்கிறது, 'சொர்க்கத்துடைய கதவுகளில் மேலான கதவு ஒன்று உள்ளது. நீங்கள் விரும்பினால் அதனை பாதுகாத்து கொள்ளலாம் அல்லது அதனை வீணாக்கி விடலாம்.'

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.. ''நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மேலான அமல் எது? எனவும் அல்லாஹு தாஆலாவிற்கு எல்லாவற்றையும் விட மிகவும் விருப்பமான அமல் எது? எனவும் வினவினேன். அதற்கு அவர்கள் 'தொழுகையை அதன தன் நேரத்திலே தொழுவதாகும்' என்று கூற மீண்டும் நான் 'அதற்கு பிறகு என்ன? என்று வினவினேன். அதற்கு அவர்கள் 'தாய் தந்தையருடன் நல்ல முறையில் பழக வேண்டும்' எனக் கூற மீண்டும் நான் 'அதற்குப் பிறகு என்ன? என்று வினவினேன். அதற்கு அவர்கள் 'அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்வதாகும்' என நவின்றார்கள்.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிகின்றார்கள்.. 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்திலே ஒரு மனிதர் ஆஜராகி 'நான் ஜிஹாதில் பங்கு கொள்வதற்காக வேண்டி உங்களிடத்தில் அனுமதி தேடுகிறேன்' எனக் கூறினார். அதற்கு நாயகமவர்கள் 'உம் தாய் தந்தையர் உயிருடன் இருக்கின்றனரா? என வினவியதற்கு 'ஆம்! உயிருடன் இருக்கின்றனர்' என அம்மனிதர் பதிலளித்தார். 'அவர்களுக்கு கித்மத் செய்வதைக் காட்டிலும் ஜிஹாதுடைய நன்மை குறைவுதான்' என திருவாய் மலர்ந்தருளினார்கள்.''

Read more...
 
அன்பே உருவான அம்மா.... (1) Print E-mail
Monday, 26 April 2010 08:18

 

அன்பே உருவான அம்மா....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,

அல்லாஹ்வுடைய அருளும் பாதுகாப்பும் கிடைத்து நீங்கள் நல்ல சுகமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எழுதிய அன்புக் கடிதம் கண்டேன். எனினும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அதற்கு பதில் எழுத தாமதித்து விட்டேன். எல்லாவற்றிற்கு முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

நீங்கள் என்னைப்பற்றி கொண்டுள்ள எண்ணமும் என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதேபோன்று, நான் என்னுள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்து கூற முடியாதவை.

உங்கள் அன்பு நிறைந்த முகத்தைக் காண ஓடோடி வர வேண்டும் என என்னுள்ளம் ஆசைப்படுகிறது. எனினும் நான் பெற்றுவரும் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால் நான் ஒரு கணமும் உங்களை விட்டுப் பிரிந்திருக்க மாட்டேன்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 4 of 107

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article