வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

வீரப் பெண்மணி நுஸைபா பின்த் கஅப் ரளியல்லாஹு அன்ஹா Print E-mail
Friday, 28 October 2016 07:49

வீரப் பெண்மணி

நுஸைபா பின்த் கஅப் ரளியல்லாஹு அன்ஹா

نسيبة بنت كعب رضي الله عنها

[ பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வீரவரலாறு! 

இப்படி ஒரு வீராங்கனையை

நிச்சயமாக உலக வரலாற்றில்

வேறெங்கும்  நாம் கண்டிருக்கவே முடியாது.   

ஒரு வரி விடாமல் படியுங்கள்!  ]

பொய்யன் முஸைலமாவின் அரசவை. நிறைய மக்கள் குழுமியிருந்தனர். "யாரங்கே கொண்டு வாருங்கள் அந்தத் தூதுவனை" என்று கட்டளை பிறப்பிக்கப்பட, கனத்த சங்கிலிகளால் அவரைப் பூட்டி, இழுத்து வந்தார்கள் காவலர்கள். கால்விலங்கு தரையில் புரள வந்து நின்றார் ஹபீப் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். 

முகத்தில் எவ்விதக் கலக்கமோ, கலவரமோ இல்லாமல், மிகவும் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார் ஹபீப். அவர் என்ன குற்றம் செய்தார் என்று விலங்கு, பூட்டு, விசாரணை? அதைக் காண மொய்த்திருக்கும் கூட்டம்?

தானும் ஒரு நபி என்று உளற ஆரம்பித்து மக்களை வழிகெடுக்க முனைந்துவிட்ட முஸைலமாவை எச்சரித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதைச் சுமந்து வந்த தூதர், தோழர் ஹபீப் இப்னு ஸைது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

தொன்றுதொட்டு தூதர்களுக்கு என்று அளிக்கப்பட வேண்டிய கௌரவம் உண்டு; அவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு. அதெல்லாம் பொது விதி. ஆனால், நபியவர்களின் எச்சரிக்கை அளித்த கோபத்தில், என்ன செய்வது என்று தெரியவில்லை மடையன் முஸைலமாவுக்கு. ஹபீபைக் கைது செய்து, மறுநாள் விசாரணைக்கு இழுத்துவரச் சொல்லியிருந்தான்.

Read more...
 
"பெண் புலி" ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹா Print E-mail
Tuesday, 01 January 2013 05:32

"பெண் புலி" ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹா

சிறு குன்றின் மேலிருந்து உடலொன்று உருண்டு வந்தது. உயிரற்ற உடல். கோட்டைச் சுவரின் உள்புறத்திலிருந்து அதை யாரோ வீசியெறிந்திருந்தார்கள். வெளியே காத்திருந்த யூதர்களின் எதிரில் 'பொத்தென்று' வந்து விழுந்தது அது.

கோட்டையின் உள்ளே உளவு பார்க்க தம் நண்பனை அனுப்பிவிட்டு, "ரொம்ப நேரமாச்சே, ஆளைக் காணோமே" என்று காத்திருந்தால் பிணமாக உருண்டு வந்து விழுந்தான் அவன். அனைவரும் பதட்டத்துடன் எழுந்து ஓடிச்சென்று பார்த்தார்கள். தலையில், உடலில் பலத்த காயம்; கசகசவென்று ஏகத்துக்கு வழிந்திருந்த குருதி; உளவாளி உயிர் பிரிந்து கிடந்தான்.

நண்பனின் உடலைக் கண்டதும் அச்சமும் அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் ஏற்பட்டுப்போய், அவர்களுள் ஒருவன், "முஹம்மது தம் சமூகத்துப் பெண்களையும் பிள்ளைகளையும் தற்காப்பு ஏற்பாடுகள் இன்றி விட்டுச் சென்றிருப்பார் என்று நாம் நினைத்திருக்கக்கூடாது" என்றான்.

கலைந்து தம் இருப்பிடங்களுக்கு வேகமாய் ஓடினார்கள் அந்த யூதர்கள். வந்த காரியம் கைகூடாவிட்டாலும் பரவாயில்லை; உயிர் பிழைத்தால் போதும் என்றாகிவிட்டது அவர்களுக்கு.

Read more...
 
ஒற்றனை ஒழித்துக்கட்டிய ஓர் வீராங்கணை! Print E-mail
Thursday, 23 December 2010 08:35

ஒற்றனை ஒழித்துக்கட்டிய ஓர் வீராங்கணை!

ஸஃபிய்யாஹ் பின்த் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு எந்த உருவமும் மங்கலாகத் தெரியும் அந்த அதிகாலையில் இப்படிப்பட்ட சந்தேகம் எழுந்ததில் ஆச்சரியமில்லைதான்.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மற்ற தோழர்களும் மதீனா நகரின் எல்லையில் தோண்டப்பட்டிருக்கும் அகழின் உட்புறத்தில் போருக்காக அணிவகுத்திருக்க ஓர் ஆண் உருவம் மட்டும் இங்கே எப்படி? அது யாராக இருக்கும்?’ என்கின்ற சந்தேகம் அவர்களுக்கு!

ஏன்? இந்த சந்தேகம்? என்ன நிகழ்வு? பார்ப்போமே!

போர் என்றால் நகரத்தை விட்டு விலகி மைதானம் போல் திறந்த வெளியில் தமக்கு சகலவிதத்திலும் தோதுவான ஓரிடத்தில் தான் நடத்துவது வழக்கம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கமும் அதுவாகத்தான் இருந்தது. இது தவிற இன்னும் கூடுதலாக போருக்கான சில விதிமுறைகளும் அவர்களிடம் உண்டு.

Read more...
 
வீரப் பெண்மணி பேகம் ஹஜ்ரத் மஹல் Print E-mail
Wednesday, 08 January 2014 09:39

வீரப் பெண்மணி பேகம் ஹஜ்ரத் மஹல்

The Great Indian Freedom Fighter 

Begum Hazrat Mahal

ஆங்கிலேயரை எதிர்த்து வீர சுதந்திரம் வேண்டி நின்ற வீரப் பெண்களின் வரலாற்றுப் பட்டியலை வரிசைப் படுத்தும்போது நிச்சயமாக பேகம் ஹஜ்ரத் மஹலுக்கு முக்கிய இடமுண்டு..

ஆண்களை தைரிய புருஷர்கள் என்று வர்ணிக்கும் வரலாறுகளுக்கும் சமூகத்துக்கும் மத்தியில் மனத்தெளிவுடன் கூடிய தைரியம் கொண்ட ஒரு முஸ்லிம் பெண்மணி அடக்கு முறைக்குப் பணியாமல் ஆசை வார்த்தைகளுக்கு உடன்படாமல் வாழ்ந்து காட்டினார் என்றால் அவர் பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகும்.

இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் புல்லரிக்க வைப்பதுடன் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்தப் பெண்மணியை நினைத்து இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம்களையும் தலை நிமிரவும் செய்கிறது. (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு பற்றிப் பார்க்கலாம்.

1857 - இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக இப்படி ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

Read more...
 
இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம் பெண்களின் பங்கு Print E-mail
Sunday, 15 May 2011 08:23

Image result for இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம் பெண்களின் பங்கு

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம் பெண்களின் பங்கு

[ சுதந்திர இந்தியவிற்காக பாடுபட்ட பலரின் பெயர்களை கேட்டு இருப்போம், பெருமைப்பட்டு இருப்போம், அதனை மீண்டும் உமிழ்வதல்ல இக்கட்டுரையின் நோக்கம். பரவலாக அறியப்படாத, வரலாற்றில் மறைக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் சுந்தந்திர தாகத்தையும், அவர்கள் உருவாக்கிய தாக்கத்தையும் தான் இங்கு நாம் காணப் போகிறோம்.]

இந்திய சுதந்திரம் என்றாலே மகாத்மா காந்தி தான் நம் அனைவரின் மனதில் தோன்றுவார். இதற்கு அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் மற்றும் யுக்திகள் மறுப்பதற்கும், மறைப்பதற்கும் இல்லையென்றாலும். மறுபக்கம் ஒரு தனி மனிதன் மட்டும் தான் போராடி சுதந்திரம் பெற்று தந்தார் என்று நினைப்பது, நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கசாப்பு கடைக்கு காந்தியின் பெயர் சூட்டுவதற்கு சமம் (அப்படிப்பட்ட அறியாமை).

ஏனென்றால், இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது பலரின் கூட்டு ஒத்துலைப்பினாலும், விடா முயற்சியாலும், பலரின் உயிர் தியாகத்தினாலும் கிடைத்தது என்பதனை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல தியாகிகள், மாவீரர்கள் என்று பலரும் போராடி, உயிர் நீத்த பின்னரே, இன்றைய சுதந்திர இந்தியா அயல் நாட்டவரின் அடிமை தளத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட ஒரு மாபெரும் சுதந்திரம், ஒரு தனி மனிதானலோ அல்லது ஒரு தனி மதத்தவராலோ கிடைத்தது என்று கூறினால், அது பச்சப் பொய்யாகவே தான் இருக்க முடியும். வரலாற்றை சற்று புரட்டி பார்த்தல், இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமும், பொருள் வசதியும் அளித்தவர்களில் இஸ்லாமியர்களே முதல் இடம் வகிப்பார்கள். இதில் வரலாற்றில் வெளிவந்தது சில பெயர்கள், மறைக்கப்பட்டதோ பல பெயர்கள்.

Read more...
 
கூடுதல் சிறப்பு, உலகிலிருந்து செல்லும் பெண்களுக்கா? அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா? Print E-mail
Thursday, 16 February 2012 08:10

கூடுதல் சிறப்பு, உலகிலிருந்து செல்லும் பெண்களுக்கா? அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா?

[ உம்முஸல்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள், "உலகிலிருந்து செல்லும் பெண்களுக்குக் கூடுதல் சிறப்பா? அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா?"

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,

"ஒரு விரிப்பின் அடிப்பாகத்தைவிட, மேல் பாகத்திற்கு இருக்கும் சிறப்பு போல, உலகிலிருந்து சென்ற பெண்களுக்கு ஹூருல் ஈன்களை விட சிறப்பு உண்டு''. பின் உம்முஸல்மா ரளியல்லாஹு அன்ஹா கேட்டார்கள், "ஏன்? எப்படி?'' என்று.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "அவர்கள் தொழுகிறார்கள், நோன்பிருக்கிறார்கள். இன்னும் பல வணக்க வழிபாடுகளைச் செய்கின்றனர்." என்றார்கள்.

பெண்களுக்குப் பல ஆண்கள் கணவர்களாக இருக்க வேண்டும் என்று இந்த உலகில் எந்தப் பெண்ணும் ஏங்குவதில்லை. எனினும், சொர்க்கத்தில் பல கணவர்களை விரும்பும் மனநிலை எந்த பெண்ணுக்காவது இருக்குமாயின், அவர்கள் விருப்பம் நிறைவேற்றப்படும்.

அதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் வசனம் ஒன்று "நீங்கள் விரும்புவது எதுவும் உங்களுக்கு அங்கு உண்டு" (41:31) என்று கூறுவதை கவனிக்கவும். பெண்களுக்கு மட்டும் அவர்கள் விரும்புவது தடுக்கப்படும் என்று எண்ணவே வேண்டாம்.]

Read more...
 
முஃமினான பெண்ணிடம் இருக்க வேண்டியதும் இருக்கக்கூடாததும்! Print E-mail
Friday, 10 February 2012 07:29

முஃமினான பெண்ணிடம் இருக்க வேண்டியதும் இருக்கக்கூடாததும்!

      ரிப்கா பின்த் ஆதம்பாவா அஷ்ஷரயிய்யா      

அடிமைத்தனத்திலும், மடமைத்தனத்திலும் வேரூன்றி வாழ்ந்த அந்த ஜாஹிலிய சமுதாயத்தில் பெண் சமுதாயம் பல இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்டனர்.

ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஒந்தவொரு உரிமையும் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. சமூகத்தில் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்திலே நோக்கப்பட்டனர். பெண் பிள்ளை பிறந்து விட்டால் அதை உயிருடன் புதைக்கக்கூடியவர்களாக இருந்தனர். இல்லையெனில் இழிவான ஒரு நிலையில் அதை விட்டுவைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அவளை அவர்கள் நோக்கியதெல்லாம் ஒரு இன்பப்பொருளாகவேதான் இருந்தது. எந்தளவுக்கெனில் அப்பெண்ணுக்கு பிள்ளை பிறந்து விட்டால் அந்தப் பிள்ளையின் சாயலை வைத்துத்தான் தந்தையை குறிப்பாக்கினர். இந்த அளவு ஜாஹிலிய சீர்கேட்டில் பெண்கள் சிக்கித் தவித்தனர்.

Read more...
 
பெண்களைப் பாதுகாப்பது இஸ்லாமே! Print E-mail
Sunday, 15 May 2011 06:41

[ பெண்களின் உரிமைகள் தேடி குரல்கொடுப்பதாக நடிக்கும் பெண் எதிரிகளிடமிருந்து பெண்களை பாதுகாப்பதற்காக எழுதப்பட்ட ஒரு சிறிய ஆக்கமே இது.

இஸ்லாமிய சட்டங்களின் தூரநோக்கு அறியா அறிவிளிகள், ஆய்வு என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் தப்பும், தவறுமாக சொல்லிக் கொண்டிருக்கும் அறிவிளிகளுக்கு சில செய்திகளை, இங்கு குறிப்பிடுவதே இக் கட்டுரையின் நோக்கம்.]

அரண்டவன் கண்னுக்கு இருண்டதெல்லாம் பேயாக்தான் தோன்றும் என்பார்கள் (இஸ்லாத்தில் பேய் இல்லை)

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்பவர்கள் படித்தவர்களில் அதிகம் என்பார்கள்......

அறபு தெரியாத முஸ்லிம் அறிஞர்கள் இஸ்லாமிய சட்டங்களைச் சொல்லி தர்கித்துக்கொண்டு சண்டை பிடிப்பதாக சொல்லிக்கொண்டே அறபு மொழியின் எழுத்துக்கள் என்னவென்றே தெரியாதவர்கலெல்லாம் விமர்சிக்க முன்வந்துவிட்ட சூழலில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

உலகம் நவீன பிரச்சினைகளுக்குள் சிக்குண்டிருக்கும் போது இன்னும் என்ன மாக்ஸிஸமும் கம்யூனிஸமும்? என்று தலையை பிய்த்துக்கொண்டு ஒரு இந்து சகோதரர்!

Read more...
 
இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கிய பொருளாதாரப் பொறுப்புகளும் கடமைகளும் Print E-mail
Tuesday, 24 May 2011 06:35

இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கிய பொருளாதாரப் பொறுப்புகளும் கடமைகளும்

இஸ்லாம் பெண்களுக்கு பொருளாதார ரீதியான உரிமைகளை வழங்கயது போலவே அவளுக்கு பொருளாதார ரீதியிலான பொறுப்புக்களையும், கடமைகளையும் விதித்துள்ளதைக் காண்கிறோம். இந்த பொறுப்புக்களையும், கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றும்போது தான் இஸ்லாமிய சமூகம் அதன் மூலம் மகத்தான பயன்களை பெறுகிறது என்பதில் சந்தேகமில்லை. இதனையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

ஒரு பெண் தனது கணவனின் வீட்டு விவகாரங்களை கண்காணிப்பவளாகவும், அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி வினவப்படுபவனாகவும் உள்ளாள்.

அந்த வகையில் இஸ்லாம் பெண்களுக்கு விதித்துள்ள அடிப்படையான சில பொருளாதார பொறுப்புக்களை

1. வீட்டில் பண ரீதியான திட்டமிடல்

2. ஹலாலான வழியில் சம்பாதிப்பதில் கணவனோடு ஒத்துழைப்பு வழங்கல்

3. செலவினங்களில் நடுநிலைமையை கையாளல்

4. உழைப்புக்கும் செலவுக்குமிடையில் சமநிலையைப் பேணல்

நோக்குவோம்.

5. எதிர்காலத்திற்காக சேமித்து வைத்தல், ஆகிய தலைப்புகளில்!

Read more...
 
முஸ்லிம் பெண்கள் சம்பாத்தியம்! Print E-mail
Sunday, 12 February 2012 07:34

முஸ்லிம் பெண்கள் சம்பாத்தியம்!

[ குடும்பம் என்றால், அதில் தாய், தகப்பனுக்கும், பிள்ளைகளுக்கும் பல கடமைகள் இருக்கு. இஸ்லாத்தில் என்னதான் மனைவி பணக்காரியாக இருந்தாலும், சம்பாதிப்பவளாக இருந்தாலும், குடும்பத்தின் பராமரிப்புக்கு சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் கணவனுக்கு மட்டுமே இருக்கு. மனைவி தான் சம்பாதிக்கிறாளேன்னு கணவன் ஜாலியா இருக்க முடியாது.

அதே போல, மனைவி சம்பாதிப்பதில் அவள் குடும்பத்திற்கு செலவு செய்ய கடமை இல்லை.

அதாவது, ஒரு குடும்பத்தில கணவன், மனைவி இருவரும் சம்பாதிச்சாலும், மனைவிக்கு குடும்பத்துக்காக செலவு செய்யனும்கிற அவசியமே இல்லை. அப்படிக்கட்டாயப்படுத்த கணவனுக்கோ, இல்லை அவள் தகப்பனுக்கோ, பிள்ளைகளுக்கோ இன்னும் வேறு யாருக்குமே உரிமை இல்லை.

இப்படி ஒரு கட்டளை இருக்கும்போதே நாம தெரிஞ்சுக்கலாம், பெண்கள் வேலைக்கு போவதையும், சம்பாதிப்பதையும் இஸ்லாம் எந்த விதத்திலும் தடுக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு கட்டளை தான் எனக்கு கண்டிப்பா சம்பாதிக்கனும்கிற ஆசைய தூண்டிச்சே. பின்ன, நாம சம்பாதிச்சத நம்ம இஷ்டப்படி செலவு செய்யலாம்தானே? (ஆனா அதை நேர்வழியில் செலவு செய்வது முக்கியம். ஏன்னா அதைத்தந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லனுமில்லையா?)]

Read more...
 
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் (1) Print E-mail
Tuesday, 06 September 2011 20:24

முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்

ஆசிரியர் : ஷேக் டாக்டர் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான், தமிழாக்கம் : S. கமாலுத்தீன் மதனி

வெளியீடு : அறிவு ஆராய்ச்சி மற்றும் மார்க்கத்தீர்ப்பளிக்கும் தலைமையகம், ரியாத்.

 முன்னுரை 

பிரிவு - 1  பொதுவான சட்டங்கள்

இஸ்லாத்திற்கு முன்பு பெண்கள் நிலை

இஸ்லாத்தில் பெண்கள் நிலை

இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்

பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

Read more...
 
ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் எது? Print E-mail
Saturday, 11 February 2012 07:21

ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் எது?

அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.

உதவுவதன் மூலம் உயிர் வாழலாம் என்ற உண்மையை மனித வரலாற்றின் துவக்கக் காலத்திலேயே பெண் அறிந்து வைத்திருந்தாள்.

உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டதை போலவே, பெண் ணுக்கும், உலகில் சுமூகமாக வாழ்வதற்கு இணக்கமாகவும், பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட்டிருக்கிறது.

நல்ல பராமரிப்பாளனாக, நல்ல பாதுகாவலனாக, நல்ல தந்தையாக, நல்ல காதலனாக இருந்து மேற்கண்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்த ஆண் தான் அவளுக்குத் தேவைப்பட்டான். இத்தகைய திறனுள்ள ஆடவனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவளுடைய பாலுணர்வு மட்டுமின்றி, பராமரிக்கும் திறனும், பரிவும் மிகப் பெரிய ஆயுதங்களாக இருந்தன.

Read more...
 
அலங்காரத்தை மறைத்துக்கொள்ளுங்கள் - அல்லாஹ்வின் அருள் கிட்டும்! Print E-mail
Wednesday, 23 March 2011 09:42

அலங்காரத்தை மறைத்துக்கொள்ளுங்கள் - அல்லாஹ்வின் அருள் கிட்டும்!

இஸ்லாம் பெண்களுக்கென சில ஒழுக்க மாண்புகளையும் தனித் தன்மையான தோற்ற அமைப்பையும் அமைத்துள்ளது. மஹ்ரம் அல்லாத அன்னிய ஆண்களிடையே செல்வதற்கோ அல்லது வீட்டிலிருந்து வீதிக்கு வருவதற்கோ அவள் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகளை நிர்ணயித்துள்ளது. அதுதான் முஸ்லிம் பெண்களுக்குரிய "ஹிஜாப்’ பர்தா என்று சொல்லப்படும் ஆடையாகும்.

தங்களை முஸ்லிம்களென வாதிக்கும் பலருடைய இல்லங்களில் காணப்படுவது போன்று முரண்டு பிடிக்கும் பெண்களை உண்மை முஸ்லிமின் இல்லங்களில் காண இயலாது.

ஒருவர் தனது மனைவியை அல்லது சகோதரியை அல்லது மகளை அரைகுறை ஆடையுடன் தலையைத் திறந்து போட்டவளாக, நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் வெளியேறிச் செல்வதைக் காணுகிறார். இஸ்லாமின் ஒழுக்கப் பண்புகளும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலை மாற்றுவதற்குரிய முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அவர் அவனுக்குரிய வீரத்தை இழந்து மார்க்கத்திலிருந்து விலகி அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகி விட்டார் என்பதுதான் பொருளாகும். கண்டிக்காமலிருந்த குற்றத்திற்காக உண்மையான பாவமன்னிப்புக் கோருதலைத் தவிர வேறெந்த பரிகாரமும் அவருக்கு இருக்க முடியாது.

Read more...
 
இஸ்லாத்தில் மகப்பேற்றுத்துறையின் முக்கியத்துவம் Print E-mail
Monday, 25 July 2011 07:13

இக்கட்டுரை இஸ்லாத்தில் மருத்துவத்துறையின் முக்கியத்துவம் பற்றியும், அதில் பெண்களின் பங்களிப்புப் பற்றியும், குறிப்பாக பெண்கள் தொடர்பான மருத்துவப் பகுதியில் அவர்கள் விஷேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் ஆராய்கிறது..

இஸ்லாத்தில் மகப்பேற்றுத்துறையின் முக்கியத்துவம்

  ஏ.பி.எம். இத்ரீஸ்   

[ இன்றைய மருத்துவ உலகம் ஆன்மீகத்தை இழந்துவருகின்றது. அங்கு மதச்சார்பற்ற சிந்தனைகள் வலுத்துவிட்டதால் வைதீகக் கட்டுப்பாடுகளும் ஒழுக்க விழுமியங்களும் படிப்படியாக மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பெண்ணை வெற்றுடம்பாக மட்டும் பார்க்கும் பார்வையே அங்கே மேலோங்கியிருக்கின்றது. அவ்வுடம்பில் இறைவனின் ஆன்மாவும் இயங்குவது மேற்குலகின் மருத்துவக் கண்களுக்கு இன்றும் புலப்படவில்லை. எனவே மருத்துவத்துறையைக் கற்கும் ஒரு முஸ்லிம் சகோதரி இன்றைய மருத்துவ உலகின் போக்கையும் தனது பணியையும் சரிவரப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

துரதிஷ்ட வசமாக முஸ்லிம்கள் எல்லாத்துறைகளையும் விட மருத்துவத்துறையிலும் பின்தங்கியவர்களாக காணப்படுகின்றனர். அவர்களிடம் போதியளவு மருத்துவர்கள் இல்லாததைப்போல் மருத்துவ உட்பிரிவுகளிலும் விசேட தேர்ச்சிபெற்றவர்களும் மிக அரிதாகவே காணப்படுகின்றனர். குறிப்பாக மருத்துவப் பீடத்திற்குத் தெரிவாகும் சகோதரிகளும் தமக்கேற்ற துறையை (மகப்பேற்றுத் துறை) தெரிவு செய்வதில் தயக்கம் காட்டிவருவதும் கவலைக்கிடமான விடயமாகும்.

போதியளவுக்கு சமூகத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியளவு வைத்தியர்களை உருவாக்குவதைப் போன்று அத்துறையில் சிறப்புத் தேர்ச்சிபெற்றவர்களை உருவாக்குவதும் ஃபர்ளு கிஃபாயாவாகும்.]

Read more...
 
பெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ''ஜமீலா''க்கள் Print E-mail
Friday, 17 February 2012 08:23

பெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ''ஜமீலா''க்கள்

 மவ்லவி S.H.முஹம்மது இஸ்மாயீல் ஸலஃபி 

[ ஜமீலா எனும் பெயர் கொண்ட இந்த இரு பெண்களின் இயல்புகளும், குணங்களும் உலக அழிவு வரை நிகழும் பெண்களுக்குத் தேவையான ''இல்லற சட்டங்கள் இரண்டை'' வழங்கி விட்டன. இஸ்லாம் பெண்களின் உணர்வுகளை ஊணப்படுத்தாது எவ்வளவு அழுத்தங்கொடுத்து அக்கரை செலுத்துகின்றது என்பதற்கு இவர்களின் தொடர்பாக இறங்கிய இறைவசனங்கள் சான்றாக அமைந்துவிட்டன.

இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லை என்று வாய்க்கிழிய கூக்குறலிடுபவர்கள் இந்த இரு பெண்களின் சம்பவங்களை அறிந்திருப்பார்களேயானால் ஊமையாகிப்போய் நிற்பார்கள். இதற்கு ஈடான பெண் சுதந்திரத்தை இன்றைக்கும் எந்த மேற்கத்திய நாடுகளில் கூட காணமுடியாது. அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகத் தூய்மையானவன், எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குறியவன் வேறு எவருமில்லை அல்லாஹ்வைத் தவிர.]

Read more...
 
பெண்களுக்கு முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம்?! Print E-mail
Wednesday, 17 August 2011 12:42

பெண்களுக்கு முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதே!

இன்றைய கணினி யுகத்தில் ஐ.டி. பணியாளர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது.

இதில் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இவ்வாறு அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதே என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், ஏராளமான பெண்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.

கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் அவர் தெரிவிக்கிறார். இவ்வாறு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் சிடு சிடுவென இருப்பதற்கு, நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் காரணம் என்பதை அவர்கள் உணரவில்லை.

Read more...
 
பெண்களின் முந்தைய நிலை! ஏன், இன்றைய நிலையும்தான்! Print E-mail
Monday, 26 March 2012 21:38

 பெண்களின் முந்தைய நிலை! ஏன், இன்றைய நிலையும்தான்!

பெண்களை பற்றிய நூல் ஒன்று கண்ணில் தட்டுபட்ட, இப்புத்தகத்தில் பல தகவல்கள் அதிர்ச்சி கலந்தவையாக இருப்பதுடன் ஆச்சர்யமான விஷயங்களும் உள்ளது. ஆண்கள் மீதான வெறுப்புணர்ச்சியை ஆசிரியர் ஆங்காங்கே காட்டியிருக்கிறார். காரணம்? முகாந்திரம் ஏதாவது இருக்கலாம். படியுங்கள்.

'சரித்திரம் ஆண்களின் வக்கிரத்தால் எழுதப்பட்டது. பெண்களின் உணர்ச்சிக்கோ அங்கு துளியளவு கூட இடமளிக்கப்படவில்லை.' ஒரு பகுதியில் ஆசிரியர் இப்படி எழுதி இருந்தார். பல சரித்திர சாதனை பெண்களை பற்றி எழுதிய அவர் எழுத்துகளுக்கு மறைவில் தென்படும் வெறுப்புணர்ச்சியின் காரணம் என்னவாக இருக்கும்.

சரித்திரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் கூட அதற்கு ஒரு காரணமாய் அமையலாம். சரித்திர ஏடுகளில் பெண்களுக்கு பல கொடுமைகளும் நிகழ்ந்திருக்கிறது. அதை பற்றிய தகவல்கள் சிலவற்றை இங்கே காண்போம்.

4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை ‘பாரோ’ என நாம் அழைப்போம். ‘பாரோ’ என்றால் ஆண்டவன் எனப் பொருள்படும். மன்னனை கடவுள் என ஏற்க மறுத்த பெண்ணை, பேழையில் வைத்துக் கொதிக்கும் நீரில் விட்டு, வேகவைத்துக் கொலை செய்தார்கள். தன்னைக் கடவுள் எனக் கருதும் ஒரு ஆணால் தண்டனைக் கொடுக்கப்பட்டு, மற்றொரு ஆணின் கையில் கொலையுண்டு போகிறாள் கொடூர முறையில்!

Read more...
 
பூவையருக்கு பூப்போன்ற அறிவுரைகள் (1) Print E-mail
Monday, 22 August 2011 10:50

 1. எனது இனிய இஸ்லாமிய சகோதரிகளே!

எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்!

அல்லாஹ் கூறுகின்றான்:

தர்மத்தை பற்றி அல்லது நன்மையானவற்றை பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. (அன்னிஸா- 4 : 14)

உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை பெற்றுத்தரக்கூடியதாகவும், சுருக்கமானதாகவும், விளக்கமானதாகவும், கருத்தாழமிக்கதாகவும் அமைந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் மலக்குகள் எப்பொழுதும் உனது பேச்சை பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

ஒவ்வொருவரின் வலது புறத்திலும், இடது புறத்திலும் அமர்ந்து (செயல்களை) எழுதும் இரு வானவர்கள் மனிதனிடம் இல்லாமல் எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை. (காஃப்- 50 : 17,18)

Read more...
 
அவள்..... அவள்...... அவள்.... Print E-mail
Wednesday, 04 January 2012 08:23


 அவள்..... அவள்...... அவள்....

மனைவி பிரசவத்துக்காகப் பிறந்த வீட்டுக்குச் செல்லும்போது, ‘இங்க பாரு, ஒரு ஆண் வாரிசைப் பெத்து எடுத்தீன்னா உடனே பக்கத்து வீட்டுக்கு போன் பண்ணிச் சொல்லு. பெண் குழந்தை பிறந்ததுன்னா தகவலே சொல்ல வேணாம். உங்க வீட்லயே இருந்துடு’ என்றார் கணவர்.

‘பெண் குழந்தையும் நம்ம குழந்தைதானே? ஏன் இப்படிப் பேசுறீங்க?’

‘ஏன் பேச மாட்டே? ரெண்டு தங்கச்சிகளைக் கரை சேர்க்கறதுக்குள்ள என் பாடு திண்டாட்டமா ஆச்சு. இதுல எனக்கும் ஒரு பொண்ணு பொறக்கணுமா? நமக்கு ஒரே ஒரு குழந்தைதான். அதுவும் என் வாரிசா இருக்கற மாதிரி ஆணாகத்தான் இருக்கணும்.’

’பொண்ணா பொறக்கறது ஒண்ணும் என் கையில இல்லை. ஆணோ, பொண்ணோ பொறக்கறதுக்குக் காரணம் ஆம்பிள்ளைங்கதான்னு படிச்சிருக்கேன்!’

‘படிச்சவள்ங்ற திமிர்ல பேசறீயா? இந்தக் கதை எல்லாம் வேண்டாம். கிளம்பு!’

Read more...
 
பெண் என்பவள் ஆணுக்கு ஒரு புதிராகவே எப்போதும் தெரிகிறாள்! ஏன்? Print E-mail
Monday, 02 January 2012 07:50

( ஒருமுறையல்ல, பலமுறை படித்தாலும் பிரமிப்பாக இருக்கிறது இக்கட்டுரையின் ஆய்வு! ஆணையும் பெண்ணையும் வித்தியாசமான கோணத்தில் - குணாதிசயங்களில் படைத்த இறைவனை புகழாமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு ஆணும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. பெண்களும் கூட..!)

[ தன் திறமையைத் தானே உணராதவள். அன்பு என்ற நீரூற்று தனக்குள்ளேயே இருந்தாலும், எப்போதும் அதை வெளியே யாரிடமாவது தேடி அலைபவள் பெண். இளம் வயதில் பெற்றோரிடம், பருவத்தில் திருமணத்திற்குப் பிறகு கணவனிடம், தாயான பிறகு குழந்தைகளிடம் என்று எப்போதும் யாரையாவது அண்டியே இருப்பவள் பெண்.

அவளால் தன் காலில் தானே நிறக முடியாது என்று பிறர் குறை கூறுவது உண்டு. ஆனால், இது குறையல்ல. இதுதான் நிறை. பிறரிடம் எப்போதும் எதிர்பார்த்து, அதை அவர்கள் தந்தாலும், தராவிட்டாலும் பெண் எப்போதும் தந்து கொண்டேதானிருக்கிறாள். எனவே, அண்டி வாழ்வது பெண்ணிற்கு குறையல்ல நிறை.

ஆணைச் செயல்பட வைத்து அந்த செயலுக்கு உள்ளாவது பெண். ஒன்றும் தெரியாத அப்பாவி ஆணை, தன் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தி ‘அடப்பாவி’ ஆணாக்குபவள் பெண். ஒன்றும் தெரியாதது போல் ஒரு பெண் நடித்தால், ஆண்மை பொங்கி எழி, ஒரு ஆண் அறிவாளியாக மாறித்தானே தீர வேண்டும்?

"என்னங்க இதைத் திறந்து குடுங்க’ என்று மூடியைத் திறக்க முடியாதது போல் பெண் நடித்தால், ஆண்மை பொங்கி எழுவது இயல்புதானே? துருப்பிடித்த மூடியைத்திருகி, கையெல்லாம் சிவந்திருந்தாலும் தன் ஆண்மை வெளிப்பட ஒரு சந்தர்ப்பம் கொடுத்ததற்காக ஒரு ஆண் பெண்ணிற்கு நன்றி செலத்துகிறான். அடிமையாகிறான். ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது இப்படித்தான் தூண்டி விடுபவள் பெண். தூண்டப்படுவது ஆண். செயல்பட வைப்பவள் பெண். செயலைச் செய்வது ஆண்.]

Read more...
 
வெற்றிகரமான குடும்பத்தலைவிக்குரிய அழகு சாதனங்கள் (1) Print E-mail
Saturday, 22 October 2011 07:45

   வெற்றிகரமான குடும்பத்தலைவிக்குரிய அழகு சாதனங்கள் (1)  

"மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;;;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்." (அல்குர்ஆன் 04:01)

இறைவன் தன்னுடைய திருமறை நெடுகிலும் இந்த முஸ்லிம் சமுதாயத்தைப் பார்த்து, ஓ! இறைநம்பிக்கை கொண்டவர்களே! என்று விளித்துப் பேசுவதைப் பார்க்கலாம். இறைவன் நிர்ணயித்துள்ள வரம்புகளின் மீது நம்முடைய முழு கவனத்தையும் செலுத்தினோமென்றால், அந்த வரம்புகளின் இறுதி முடிவு வெற்றியை அடித்தளமாகக் கொண்டிருப்பதைக் காணலாம். அவனது அந்த கருணையின் அடிப்படையில் தான் நாம் இன்று ஒரு வெற்றிகரமான சமுதாயத்தின் சொந்தக்காரர்களாக, இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 3 of 98

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article