வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

பெண்குழந்தை வரவு ஓர் நற்செய்தி Print E-mail
Monday, 23 June 2014 11:33

பெண்குழந்தை வரவு ஓர் நற்செய்தி

''அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்கு கூறப்பட்ட கேட்ட செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து வாழ்கிறான். இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்). கவனத்தில் கொள்ளுங்கள் அவன் தீர்பளிப்பது மிகவும் கேட்டது.'' (திருக்குர்ஆன் 16: 58)

பெண் குழந்தைகளை வெறுப்பதோ அதனால் கவலைப்படுவதோ, அதை இழிவானதாக கருதுவதோ, அதை கொலை செய்வதோ இறைவனிடத்தில் மிகப்பெரிய பாவமான காரியமாக இருக்கிறது.

மேற்படி வசனத்தில் பெண் குழந்தை பிறந்த செய்தியை பற்றி சொல்கிறபோது அது ஒரு நற்செய்தி என்கிறான் அவளைப் படைத்தவன்! பெண் குழந்தைகளை வெறுப்பவர்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் நமக்கு பாரமாக இருக்கும் என்றால், இறைவன் அதை நற்செய்தி என்று சொல்வானா?

Read more...
 
குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள் Print E-mail
Monday, 01 September 2014 07:16

குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். ஒவ்வொரு நாட்டின் வருங்கால தூண்கள். நாளைய தேசத்தை வழிநடத்த இருப்பவர்கள். இத்தகைய குழந்தை செல்வங்கள் சிறப்பான முறையில் வளர்க்கப்பட வேண்டும்.இல்லையென்றால் இவர்கள் மிகவும் எளிதாக வழி தவற வாய்ப்புள்ளது.

சிறு வயதில் குழந்தைகள் பழகும் பழக்கங்கள், அவர்களின் மனப்பான்மை அனைத்தும் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வழி தவறிய குழந்தைகளால் குடும்பத்திலும் நாட்டிலும் குழப்பமும் வேதனையும் தான் மிஞ்சும்.

தற்போதுள்ள சழ்நிலைகள் அடுத்த தலைமுறையினர் சந்திக்க இருக்கும் குழப்பங்களை குறித்து அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. குழந்தைகளுக்கு தேவையான துணிமணிகள், விளையாட்டு பொருட்கள் என எந்தவொரு பொருளை வாங்குவதற்கும் அதிகமான சிரமப்பட வேண்டியுள்ளது.

Read more...
 
விவாகரத்து பெறும் பெற்றோர்களால் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம் Print E-mail
Monday, 12 January 2015 06:37

விவாகரத்து பெறும் பெற்றோர்களால் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம்

விவாகரத்து செய்துகொள்ளும் பெற்றோர்களால், அவர்கள் குழந்தைகளின் எதிர்காலமும் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிறது. இந்நிலை மாற இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

விவாகரத்து கோரி வழக்கு தொடரும் தம்பதிகளுக்கு குழந்தை இருந்தால் விவாகரத்து மூலம் அவர்கள் மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சினை எழுகிறது. அதனால் அவர்கள் சமூக விரோதியாகும் அபாயமும் இருக்கிறது. பெண் குழந்தைகள் வக்கிர குணம் கொண்டவர்களால் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது.

விவாகரத்து கோரும் தம்பதியின் குழந்தைகளை யார் வைத்துக் கொள்வது என்பது பற்றி இந்து திருமண சட்டப்பிரிவு 26-ல் கூறப்பட்டுள்ளது. இதன்படி, குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விச் செலவு குறித்து இடைக்கால உத்தரவு மட்டுமே பிறப்பிக்க முடியும்.

அதாவது, குழந்தையைப் பார்க்கும் அனுமதி, குழந்தைக்கான செலவுத் தொகை போன்ற கோரிக்கைக்காக இடையீட்டு மனுதாக்கல் செய்யலாம். ஆனால், பிரதான விவாகரத்து வழக்கு முடியும்போது, இடையீட்டு வழக்கும் முடிவுக்கு வந்துவிடும். அதுபோன்ற நேரத்தில், குழந்தையின் பாதுகாப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.

Read more...
 
பச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை Print E-mail
Tuesday, 15 September 2015 06:29

பச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை

பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை.

அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது.

அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.

இப்படிப்பட்ட 'வளர்ந்த பிள்ளைகள்' எல்லா விஷயத்திலும் 'அம்மா பிள்ளை'யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.

சில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடுவார்கள். ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருப்பார்கள்.

இது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கைதான் இப்படி விரலை சப்பச் செய்கிறது.

இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது.

Read more...
 
குழந்தைகளை கொல்ல சொட்டு மருந்து, தடுப்பூசி! Print E-mail
Sunday, 13 September 2015 07:45

குழந்தைகளை கொல்ல சொட்டு மருந்து, தடுப்பூசி!

பிறந்த குழந்தைக்கு பெரிய அட்டவணை வைத்து கொண்டு ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடையே சொட்டுமருந்துகள் வேறு!

இதுவெல்லாம் உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க என்று நம்பியே நாம் செய்கிறோம். இருந்தும் ஏன் மாதம் மாதம் ஜுரம், வைரஸ் ஜுரம், வாந்தி, பேதி, மலேரியா என்று மருத்துவ மனைக்கு நடையா நடக்கிறோமே ஏன்?

நாம் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று நம்பி போட்ட தடுப்பூசி, சொட்டு மருந்து ஆகியவற்றின் பக்கவிளைவுகள்தான் இந்த ஜுரம், வாந்தி பேதி, மலேரியா போன்றவைகள் எல்லாம் என்றால் நம்ப முடிகிறதா? நாம் நோய் வரக்கூடாது என்று போட்ட தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்! இதற்க்கு சில உதாரணங்களை பார்ப்போம்.

போலியோ சொட்டு மருந்து :

போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்த உண்மையை சொல்பவர் வேறு யாரும் அல்ல சொட்டு மருந்தை கண்டுபிடித்த ஜோனல் சால்க் தான். ”1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!” என்று அமெரிக்க செனட் கமிட்டியில் இவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Read more...
 
தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை! Print E-mail
Thursday, 14 January 2016 09:05

தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை!

    ரெஹானா சுல்தானா    

சொத்துக்கள் உறவினர்களுக்குச் சென்று விடாதிருக்க முஸ்லிம்கள் தங்களுக்கு பெற்ற  பிள்ளையில்லாத நிலையில் தத்தெடுத்து வளர்க்கின்றனர்.

குழந்தை இல்லாதவர்களின் சொத்து அவர்களுடைய இரத்த உறவுகளில் எவர் எவருக்கு எவ்வளவு பங்கு என்று இறையால் நிர்ணயிக்கப் பெற்றிருக்க இறை நியதிக்கு மாறாக ஏமாற்றுத்தனம் புரிதல் சமூகத்தில் இருக்கிறது. இதற்கு தத்து என்ற சொல் உதவுகிறது.

“சுவீகாரம், தத்தெடுத்தல்’’ குறித்து குர்ஆன் அத் 3, வசனங்கள் 4,5 கூறுவதைக் காண்போம்.

“இன்னும் உங்களுடைய வளர்ப்பு மக்களை உங்களுடைய புதல்வர்களாகவும் அவன் ஆக்கவில்லை; இவை உங்களுடைய வாய்களினால் கூறிக்கொள்ளும் உங்களுடைய சொல்லாகும்; இறைவன் உண்மையைக் கூறுகிறான் நேர்வழியைக் காட்டுகிறான். (வளர்ப்புப் பிள்ளைகளாகிய) அவர்களை அவர்களுஆடய தந்தைகளுக்குரியவர்களாகவே நீங்கள் அழையுங்கள். இறைவனிடத்தில் அது மிகுந்த நீதியுடையதாகும். அவர்களுடைய தந்தைகளை நீங்கள் அறியவில்லையானால் அப்பொழுது தீனில் உங்களுடைய சகோதரர்களாகவும், நண்பர்களாகவும் இருக்கின்றனர்.” (அல்குர்ஆன் 3:4,5)

Read more...
 
விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் Print E-mail
Saturday, 03 December 2016 07:52

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்

[ குழந்தைகள் நன்கு ஓடியாடுவதுதான் அந்த குழந்தையின் கல்வித் திறனை அளவிடும் கருவியாகும் ]

எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

விளையாடிக் கொண்டே இருக்கிறான், கொஞ்ச நேரம் கூட உட்கார மாட்டான் என்றும், எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்கிறான் என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். அப்படியானால் இந்த ஆராய்ச்சி முடிவு உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.

ஆம், நெதர்லாந்தில் உள்ள வ்யூ யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், குழந்தைகளின் உடல் அசைவுகளுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் உள்ள தொடரபு குறித்து ஆய்வு செய்தனர்.

இவர்கள் நேரடியாக குழந்தைகளை இந்த ஆய்வில் பங்கேற்கவைக்காமல், ஏற்கனவே குழந்தைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளை வைத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

Read more...
 
குழந்தைகளுக்கு விளையாட்டுச் சிகிச்சை Print E-mail
Saturday, 03 December 2016 08:16

குழந்தைகளுக்கு விளையாட்டுச் சிகிச்சை

விளையாட்டுச் சிகிச்சை குழந்தைகளின் உணர்வுபூர்வமான பிரச்னைகளை கண்டறியவைத்து அவைகளை நல்ல முறையில் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது

பெரியவர்களுக்கு ஏதேனும் உணர்ச்சிப் பிரச்னை வந்தால் அவர்களால் அதை ஓரளவு சிறப்பாகக் கையாள இயலும். காரணம் அவர்களுக்கு தங்களுக்கு ஏதோ பிரச்னை என்று பெருமளவு புரிந்துவிடும்.

அந்த உணர்வுகளை அவர்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் இயலும். அதன்மூலம் அவர்களது பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குழந்தைகளுக்கு உணர்வுப் பிரச்னைகள் வரும்போது அவர்களால் அதை புரிந்துகொள்ளவும் இயலாது, வெளிப்படையாக சொல்லவும் இயலாது. ஆகவே அவர்களுக்கு விளையாட்டுச் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது.

குறிப்பாக, மிகவும் இளைய வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு மிக நல்ல சிகிச்சை ஆகும். சில குழந்தைகளால் தங்கள் மனதில் உள்ளதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் போகலாம், சிலர் வெட்கப்படலாம், சிலர் தங்களுடைய பிரச்னைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் அசௌகரியம் அடையலாம்.

அதுபோன்ற நேரங்களில் விளையாட்டைப் பயன்படுத்தி அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்ப்பது சாத்தியமாகிறது. இது குழந்தைகளுக்கு இயல்பாகவே வரும் ஒரு விஷயம் என்பதால், இது ஒரு நல்ல சிகிச்சை ஆகிறது.

Read more...
 
குழந்தைகள் முன்பு உடைமாற்றாதீர்கள்! Print E-mail
Wednesday, 05 April 2017 07:44

குழந்தைகள் முன்பு உடைமாற்றாதீர்கள்!

நமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறது. வளர்இளம் பருவத்தை எட்டும் சிறுவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களைப் பார்க்கும் நோயாளிகளாக மாறுவது என, குழந்தைகள் சிறு பருவத்திலேயே பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகின்றனர்.

பெற்றோர் செய்வதை அப்படியே காப்பியடிப்பதும், கொஞ்சமாகத் தெரிந்த விஷயங்களை ஆர்வத்தோடு தேடித் தெரிந்துகொள்வதும் இந்த வயதின் இயல்பு.

பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் முன்பு உடை மாற்றுவது. குழந்தைதானே அவர்களுக்கு என்ன புரியப்போகிறது என்ற எண்ணம் ஒரு பக்கம். சிறு வயதிலேயே பெண்ணுடல் பற்றித் தெரிந்துகொண்டால், அவர்களின் எண்ணத்தில் வித்தியாசம் தெரியாது என்று நினைக்கிற அம்மாக்கள் இருக்கிறார்கள்.

இது குறித்து மனநல மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் ஆண், பெண் இருவருமே, அவர்கள் முன்பு டிரஸ் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போதே அனைத்து விஷயங்களும் தெரியும். ஒரு வயதில் இருந்தே குழந்தையின் முன்பு டிரஸ் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வெளிநாடுகளின் கலாச்சாரம் வேறு., எனவே அங்கு வளரும் குழந்தைகளுக்கு உடை என்பது பெரிய விஷயமாக ஈர்ப்பதில்லை. ஆனால் நம் நாட்டு குழந்தைகள் அப்படி வளர்க்கப்படவில்லை. சமூகமும் அதுபோன்று மாறவில்லை எனும்போது நாம்தான் குழந்தைகள் முன்பு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். உடை மாற்றும்போது நம்மை பார்க்கும் குழந்தைகளின் மனதில் அதிர்ச்சி ஏற்படும். அவற்றை அவர்களால் காட்டத் தெரியாது. அவை அப்படியே தொடரும்போது பாலியல் குழப்பத்துக்கு ஆளாவார்கள்.

Read more...
 
பர்ஸக் என்னும் திரை! Print E-mail
Tuesday, 18 June 2019 07:28

பர்ஸக் என்னும் திரை! 

“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்:   ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’  என்று கூறுவான்.   ‘நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’  (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.” (அல்குர்ஆன் 23 : 99-100)

இந்த வசனத்தின் மூலம் நாம் பெற வேண்டிய தெளிவுகளும், படிப்பினைகளும் ஏராளம் இருக்கின்றன.

இந்த வசனத்தில், இறந்து விட்ட ஒருவன் மீண்டும் இவ்வுலகிற்கு திரும்ப வருவதற்காக அனுமதி கேட்கிறான். அதுவும் நன்மையான காரியங்களைச் செய்வதற்காக. ஆனால் அவனுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு அல்லாமல் அவர்களுக்கு முன்னே பர்ஸக் என்னும் திரையையும் இட்டுவிடுவதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

இவ்வளவு தெள்ளத் தெளிவாக இறைவன் கூறியிருக்க,   இறந்தவர்கள் ஆவியாக இவ்வுலகிற்கு வந்து சிலரை பிடித்து ஆட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் முஸ்லிம்களில் சிலர் கூறி வருகின்றனர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம்,   நல்ல நிலைமையில் இருக்கின்ற மனிதன்  திடீரென்று அசாதாரணமான நிலைக்கு மாறி ஆட்டம் போடுதல், கூச்சல் போடுதல், பிற மொழிகளில் பேசுதல், தானாக சிரித்தல், மற்றவர்களை ஏசுதல், அச்சுறுத்தல் போன்ற காரியங்களைச் செய்வதால் தான்.

இந்த வகையான காரியங்களைச் செய்யும் ஒருவனைப் பேய் பிடித்து விட்டதாகவும், இறந்தவனின் ஆவி அவனின் உடலில் புகுந்து அவனை அவ்வாறு ஆட்டுவிப்பதாகவும் கூறி அவனுக்கு தட்டு, தகடு, தாயத்து போன்றவற்றை செய்துக் கொடுத்து பாமர மக்களை ஏமாற்றி அதன் மூலம் வயிறு வளர்க்கும்   ஏராளமான போலிகள் எல்லா சமுதாய மக்களிடமும், குறிப்பாக   நமது சமுதாய மக்களிடம்    அதிகம் இருக்கிறார்கள்.

மூட நம்பிக்கைகளை அறவே ஒழித்துக் கட்டிய மார்க்கம் நமது இஸ்லாமிய மார்க்கம். நமது மார்க்கத்தில் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. இவைகள் அனைத்தும் மனிதனை வழிகெடுப்பதற்கான ஷைத்தானின் ஏமாற்று வேலைகள்.

Read more...
 
இன்பத் திளைப்பில் முஃமின்கள் Print E-mail
Thursday, 03 March 2016 06:44

இன்பத் திளைப்பில் முஃமின்கள்

ஹஜ்ரத் பராஃ பின் ஆஜிப் ரளியல்லாஹு அன்ஹு ஒரு ஹதீஸில் கூறுவதாவது;  ஒரு முறை ஒரு அன்சாரியின் ஜனாஸாவை அடக்குவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றோம். 

நாங்கள் அடக்குமிடத்தை அடைந்த பொழுது அதுவரி கப்ரு தோண்டப்படாதிருந்ததைக் கண்டோம். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உட்கார்ந்தார்கள். நாங்களும் எண்களின் தலைகளில் பறவைகள் உட்கார்ந்திருப்பதைப் போன்று அமைதியாகவும் மரியாதையுடனும் அமர்ந்தோம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது கையிலிருந்து ஒரு குச்சியினால்(விசனமுடையவன்) கிளறிக் கொண்டிருப்பதைப் போன்று பூமியில் குத்திக் கொண்டிருந்தனர். அப்போது தமது தலையை உயர்த்தி, ''கப்ரின் வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுங்கள்! என இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள்.

''நிச்சயமாக ஒரு முஃமின் இவ்வுலகைத் துறந்து மறு உலகை முன்னோக்கும் நேரத்தில் சூரியனைப் போன்று பிரகாசமுள்ள வெண்ணிற முகமுடைய மலக்குகள் வானத்திலிருந்து அவரை நோக்கி வருகின்றனர். தங்களுடன் சுவர்க்கத்திலிருந்து கபன் துணிகளும் வாசனைப் பொருள்களும் கொண்டு வருகின்றனர்.

மரண நேரத்திலிருப்பவருடைய கண்பார்வை எட்டும் வரை மலக்குகள் பெரும் கூட்டமாக அவரருகில் அமர்வார்கள். பின் மலக்குல் மௌத் வந்து அவரின் தலையருகில் அமர்ந்து, 'பரிசுத்த ஆத்மாவே! அல்லாஹ்வின் மன்னிப்பு, அவனது பொருத்தம் ஆகியவற்றின் பக்கம் வருவாயாக! என அழைக்கின்றார். அதைச் செவியுறும் முஃமின் உயிர் தண்ணீர்ப் பாத்திரத்திலிருந்து தண்ணீர் வழிந்தோடுவது போன்று மிகச் சுலபமாக வெளியேறுகிறது.

Read more...
 
வாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை! Print E-mail
Wednesday, 11 May 2016 06:33

வாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை!

ஒரு வீட்டின் உரிமையாளரிடம் சென்று ஒருவர் தமக்கு வாடகைக்கு வீடு வேண்டுமென்று அந்த வீட்டில் தாம் குடியிருக்கப்போவதாகவும் கேட்டுக் கொண்டார். அவ்வீட்டின் உரிமையாளர் அவர் கேட்டுக் கொண்டபடி ஒரு வீட்டை வாடகைக்காக கொடுத்து அவ்வீட்டிலேயே குடியிருக்கும்படி ஏற்பாடு செய்து கொடுத்து அவரிடம் சொன்னார்...

''இந்த வீடு வாடகை வீடுதான். இந்த வீட்டிலிருந்து என்றோ ஒரு நாள் வெளியேறும்படி வரும். ஆனால் எந்த முன் அறிவிப்பும் கொடுக்கப்படாமல் திடீரென்று வெளியேற்றப்படும். அதற்குத் தகுந்தபடி உன்னுடைய வாழ்க்கையை அமைத்துகொள், மறந்துவிடாதே! இந்த வீடு வாடகை வீடுதான் தற்காலிகமாகத் தங்குவதற்காக வேண்டிதான் தரப்பட்டிருக்கின்றது'' என்று அறிவிப்புச் செய்து அவ்வீட்டை ஒப்புக்கொடுத்தார்.

அம்மனிதரும் அவ்வீட்டில் குடியிருந்து வந்தார். ஆனால் நாளாக, நாளாக அந்த வீடு வாடகை வீடு என்பதை மறந்து தமக்கு வரக்கூடிய வருமானம் அனைத்தையும் அவ்வீட்டை அலங்கரிப்பதிலேயே செலவ செய்து வந்தார். அவருக்கு சொந்த வீடு ஒன்று இருந்தது. ஆனால் அந்த சொந்த வீட்டைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை.

Read more...
 
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்... Print E-mail
Friday, 03 June 2016 06:17

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்...

நான் வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்திருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானது.

எப்படியிருந்தாலும் என் பணிச்சுமைகள் எல்லாம் தாண்டி நானும் வாழ்க்கையில் சிறிது சந்தோசங்களை அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில் தான் அறிந்து கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து கொண்டு என் முழு வாழ்க்கையையும் திரும்பி பார்க்கும் இந்த தருணத்தில் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள், பணம், புகழ் எல்லாம் செல்லா காசாக, அர்தமற்றதாக மரணத்தின் முன் தோற்று போய் நிற்பதை உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது.

Read more...
 
நிச்சயிக்கப்பட்டது நிழலாகத் தொடரும் Print E-mail
Wednesday, 19 October 2016 07:28

நிச்சயிக்கப்பட்டது நிழலாகத் தொடரும்

நம்முடைய பிறப்பு; நம்முடைய விருப்பு, வெறுப்பிற்கிணங்க அமையவில்லை. நம்முடைய இறப்பும் நம்முடைய விருப்பு, வெறுப்பிற்கிணங்க அமையப்போவதில்லை.  அதாவது நம்முடைய இவ்வுலக ஆரம்பமும், முடிவும் நம்முடைய விருப்பு, வெறுப்பிற்கிணங்க இல்லை. நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை

ஆனால், இவ்வுலக வாழ்வில் நாம் நினைப்பது அனைத்தும் நம்முடைய எண்ணம், சொல், செயல், நம்முடைய மனைவி, மக்கள், உற்றார், உறவினர்கள், அதைச் சார்ந்த சுற்றுப்புற சூழல்கள், நிகழ்வுகள் அனைத்தும் நம்முடைய விருப்பு வெறுப்பிற்கிணங்க நிகழவேண்டும், அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுகிறோம்.

நம்முடைய இவ்வுலக வாழ்விற்கான வாழ்வாதாரங்களான பொன், பொருள், துணைவன், துணைவி, இடம், உணவு அனைத்தும் நம்முடைய தாயின் கருப்பையில் ஏக வல்லோனால் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அதனை செம்மையாக, முழுமையாக அடைய வேண்டிய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். அனைத்து உத்திகளையும் பிரயோகித்து பெற முயற்சிக்கிறோம்.

Read more...
 
ஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்? Print E-mail
Wednesday, 12 October 2016 09:27

ஸிராத் பாலத்தை மின்னல்வேகத்தில் கடப்பவர் யார்?

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக நபித்தோழர்கள் ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:

மறுமை நாளில் அல்லாஹு தபாரக வத ஆலா மக்களை ஒன்று சேர்ப்பான். முஃமின்கள் (தங்கள் மண்ணறைகளிலிருந்து) எழுந்து நிற்பார்கள். சுவர்க்கம் அவர்களுக்கு சமீபமாக்கப்படும்.

அப்பொழுது அம்மக்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து அவர்களிடம் எங்களின் தந்தையே! இச் சுவனத்தை எங்களுக்காக திறக்கச் செய்யுங்கள்! எனக் கூறுவார்கள். அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உங்கள் தந்தையின் தவறுதான் உங்களை சுவனத்தைவிட்டு வெளியேறச் செய்து விட்டதே! ஆகவே நான் (சுவனத்தைச் திறக்கச் செய்யும்) இப்பணிக்கு உரியவன் அல்ல! நீங்கள் என் பிள்ளை நபி இப்ராஹீம் கலீலுல்லாஹ்விடம் செல்லுங்கள்! எனக் கூறுவார்கள்!

பின்னர் மக்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வருவார்கள். (அவர்களிடம் இதே கோரிக்கையை முன் வைப்பார்கள்) அதற்கு நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் இப்பணிக்குரியவன் அல்ல,, நான் இறைவனின் உற்ற நேசனாக ஆகிவிட்டதெல்லாம் மிகப் பின்னால் தான். நீங்கள் அல்லாஹு தஆலாவிடம் உரையாடிய நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் நாடுங்கள்! எனக் கூறுவார்கள்.

Read more...
 
தடுத்துவிட முடியுமா? Print E-mail
Friday, 24 February 2017 09:05

தடுத்துவிட முடியுமா?

இறைவன் சிந்திக்க சொன்ன சமுதாயமே!

சிந்திக்காமல் தடுமாறும் சமுதாயமே!

தடுமாறும் காரணம் எது?

வீரமா? அழகா? அறிவா?

செல்வமா? குடும்பமா? இளமையா?

அரசியலா? சினிமா-வா?

பெருமையா? கர்வமா?

ஆடம்பரமா? பதவியா?

சிந்திக்காமல் தடுமாற வைப்பது எது?

தெரிந்துக்கொள்ளுங்கள்.

மரண நேரம் விதிக்கப்பட்டுவிட்டது. (அல்குர்ஆன் 3 :145)

Read more...
 
''சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது... Print E-mail
Sunday, 22 January 2017 08:42

''சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது...

குவைத் நாட்டின் மிகப் பெரும் செல்வந்தரான நசீர் அல் கஹராபி அவர்களின் இறுதி வீடுதான் இது. இவருடைய வங்கி கணக்கின் மதிப்பு 12 பில்லியன் அமெரிக்கன் டாலர்.

நமக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் ஒரு நொடியில் திருப்பி எடுத்துக் கொள்ளும் வல்லமையாளன் இறைவன் என்பதை ஒவ்வொரு நிமிடமும் மனத்துள் கொள்ள வேண்டும்.

இறைவன் வாக்குறுதி அளித்திருக்கிறான். "தன்னை நினைப்பவர்களை அவன் நினைப்பதாக".

அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் (இதை) உணர்வதில்லை. (அல்குர்ஆன் 23:55,56)

இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? (அல்குர்ஆன் 26:129)
‘‘நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (அல்குர்ஆன் 4:78)

Read more...
 
மரணம் - வெறுக்க வேண்டிய ஒன்றா? Print E-mail
Friday, 05 May 2017 06:58

மரணம் - வெறுக்க வேண்டிய ஒன்றா?

[ உண்மையில் எவர் மரணத்தை படிக்கின்றாரோ, புரிந்து கொள்கின்றாரோ அவர் வாழ்வை புரிந்து கொள்கின்றார். ]

மனிதன் விரும்பாத ஒரு விஷயம். பிறர்க்கு வரும்போது ஆதங்கம் படும் மனிதன். தனக்கும் வரப்போகிறதே என்று எண்ண மனம்வருவதில்லை.

நெஞ்சுவலியை லேசாக உணரும்போதோ, பயணம் செய்யும் வாகனம் தடுமாறும்போதோ மரண பயம் தொற்றிக்கொள்கின்றது. பிரபலமான மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரிடம்,

"மரணத்தை பற்றியும் அதன் பிறகுள்ள வாழ்வை பற்றியும் என்ன நினைக்கிறீங்க?"

"ஒன்றுமில்லை"

சில நேரங்களில் மனிதன் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறான். கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவிஷயத்தை தவிர. இந்த எழுத்தாளரை பாருங்க இவருடைய அறிவு ஃபேமஸை, காசு பணத்தை வாங்கி தந்ததே தவிரவெறொன்றும் உபயோகமில்லை. உண்மையில் இது அறிவே இல்லை. இவர்கள்தான், "எங்களுக்கு அறிவு இருந்திருந்தால்இப்படி கைசேதப் பட மாட்டோம்" என்று மறுமையில் புலம்புவார்கள். நாம் பல நேரங்களில் இப்படி இருக்கின்றோமா?

வாழ்வை நம் மனம் விரும்பும் அளவுக்கு, நம் மனம் லயிக்கும் அளவுக்கு மரணத்தை ஏன் விரும்பவில்லை?. மரணத்தைநோக்கிய விஷயத்தில் ஏன் நம் மனம் லயிக்கவில்லை? வாழ்வை, மரணத்தை பற்றி எத்தனையோ, கருத்துக்கள் தத்துவங்கள்முன் வைக்கப்பட்டு மனித உள்ளத்தை மரணிக்க செய்திருக்கின்றதே தவிர. மன அமைதியை வழங்கவில்லை. ஆனால்,இஸ்லாம் தனக்கே உரிய எளிமையான பாணியில் மரணத்தை பற்றிய உயர்ந்த கருத்தை முன்வைக்கிறது.

Read more...
 
மஹ்ஷரில் மனிதனின் நிலை Print E-mail
Monday, 24 September 2018 07:18

மஹ்ஷரில் மனிதனின் நிலை

    எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி மங்கலம்     

ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையைக் கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். மறுமை வாழ்க்கை என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்கு பல படித்தரங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மண்ணறை வாழ்க்கை, உலகம் அழிக்கப்படுதல், மீண்டும் எழுப்பப்படுதல், விசாரிக்கப்படுதல், கூலி வழங்கப்படுதல் என்று பல படித்தரங்கள் மறுமைக்கு இருக்கின்றன.

ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்பட்டு மஹ்ஷர் எனும் வெட்டவெளி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தருணத்தில், மனிதர்கள் பல நிலைகளில் இருப்பார்கள். அப்போது அனைவருக்கும் பொதுவான நிலைகளும் இருக்கின்றன.

அடுத்ததாக, நல்லவர்களும் கெட்டவர்களும் இம்மை வாழ்க்கையில் தாங்கள் பெற்றிருந்த எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு ஏற்றவாறு சில வகையான தோற்றங்கள், நிலைகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவ்வாறு அந்நாளில் மக்கள் பல நிலைகளைப் பெற்று பல பிரிவுகளாகப் பிரிந்து இருப்பார்கள். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் அறியலாம்.

''அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காக பல பிரிவினர்களாக ஆவார்கள். அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.''    (அல்குர்ஆன் 99:6-8)

ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,   "ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும்போதிருந்த (மன)நிலையிலேயே எழுப்பப்படுவார்''   என்று கூறியதை நான் கேட்டேன். (நூல்: முஸ்லிம் 5518)

Read more...
 
ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை! Print E-mail
Saturday, 27 October 2018 06:47

ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை!

எனது பெயர் ஜனாஸா!

நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.

என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாசீன் சூராவை ஓத ஆரம்பித்தனர்.

மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது. எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன. ஆம்! வந்துவிட்டார். மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார்.

Read more...
 
"கப்ரு" குறித்து நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் Print E-mail
Thursday, 12 July 2018 22:33

Flowers are placed on the alleged burial site of Boston Marathon bombing suspect Tamerlan Tsarnaev in Doswell, Va. on May 10, 2013.

"கப்ரு" குறித்து நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

‘கப்ரு’ தான் நிச்சயமான வீடாகும். எனினும் அதை அதிகமாக நினைப்பவர்கள் நம்மில் வெகு சிலரே. அது குறித்து ஒரு சமயம் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவாகும் இது.

‘புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைப்போற்றிப் புகழ்ந்து அவனிடமே உதவி தேடுகிறேன். மேலும், அவனிடம் பிழை பொறுக்க வேண்டுகிறேன். நம் நஃப்ஸ{களால் (மனோ இச்சைகளால்) விளையும் தீமைகளை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.

அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது. அவ்வாறே அல்லாஹ் வழிதவறும்படி விதித்து விட்டவர்களை யாராலும் நேர்வழியில் செலுத்திடவும் முடியாது. மேலும் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 2 of 99

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article