வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

வாட்டும் வெயிலில் வேலைவாங்குவது ‘ஹராம்’ Print E-mail
Saturday, 20 August 2011 11:41

   வாட்டும் வெயிலில் வேலைவாங்குவது ‘ஹராம்’  

சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடும் வெப்பம் மிகுத்த இந்த அரபு நாடுகளில் கோடை காலங்களில் உச்சி வெயிலில் தொழிலாளர்களை வேலை வாங்குவது குறித்தும் இதனால் பல தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவது குறித்தும் பல்வேறு தரப்பிலிருந்து சவூதி அரசின் மனித உரிமை ஆணையத்திற்கு பல குற்றச்சாட்டுகள் வந்தன.

இது ஒரு சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் சவூதி அரேபியாவின் தலைமை நீதியியல் சபையின் உறுப்பினர் டாக்டர் அலி பின் அப்பாஸ் அல் ஹாக்கிமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "கோடை காலங்களில் வெயிலின் உச்சக்கட்ட நிலையில் தொழிலாளர்களை வேலை வாங்குவது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானது.

Read more...
 
புனிதமானது ஓர் முஸ்லிமின் இரத்தம் Print E-mail
Sunday, 02 October 2011 07:05

புனிதமானது ஓர் முஸ்லிமின் இரத்தம்

துரதிஷ்டவசமாக இன்றைய உலகில் முஸ்லிம்களே முஸ்லிம்களின் இரத்தத்தை மிகச்சாதாரணமாக ஓட்டுகின்ற சம்பவங்களை நாம் அதிகளவில் பார்த்து வருகின்றோம். அல்லது கேள்விப்படுகின்றோம். அண்மைக்காலங்களில் பாகிஸ்தான், சோமாலியா, யெமன், பலஸ்தீனம் போன்ற நாடுகளில் இந்நிலை விருத்தியடைந்து வருகின்றமையை நாம் கண்டோம்.

சில காலங்களுக்கு முன் வெளிவந்த அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையில் சோமாலியாவில் இரு முரண்பட்ட முஸ்லிம் தரப்புக்கள் மோதிக்கொண்டதில் 12 முஸ்லிம்கள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர். அவ்வறிக்கை இதற்கு கிஸ்மாயோ எனும் சோமாலிய துரைமுக நகரை கைப்பற்றிக் கொள்வதற்காக அஸ்ஸபாப் அணியினரும், கிஸ்புல் இஸ்லாம் அணியினரும் மோதிக்கொண்டதே காரணமாகும் எனத் தெரிவித்திருந்தது.

மறுபக்கத்தில் சவூதி அரேபியா மற்றும் ஈரானின் பின்னணியில் யெமனில் முஸ்லிம்கள் தமக்கிடையே மோதிக்கொள்வதைப் பார்க்கிறோம். மேலும் பலஸ்தீனத்தில் அல்பதாஹ் இயக்கமும் ஹமாஸும் மோதிக்கொண்டு இரத்தம் சிந்தியதையும் நாம் மறக்க முடியாது. அதேபோல பாகிஸ்தானில் பாகிஸ்தானின் முஸ்லிம் அரச படைகள் தமது நாட்டையே சேர்ந்த ஸ்வாத் பிராந்தியி முஸ்லிம்களை இராணுவ ரிதியாகத்தாக்குவதையும், தலிபான்களும் பாகிஸ்தான் துருப்புக்களும் தமக்கிடையே இரத்தம் சிந்திக்கொல்வதும் அப்பிராந்தியத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வருவதைப்பார்க்கிறோம்.

Read more...
 
ஏகத்துவம் உருவாக்கிய சகோதரத்துவம்! Print E-mail
Friday, 16 January 2015 07:02

ஏகத்துவம் உருவாக்கிய சகோதரத்துவம்!

இந்த இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபடக் கூடாது; ஒருமைபாட்டுடனும், ஒத்த கருத்துடனும் இருந்து விடக் கூடாது என்பதற்காக உலக முழுவதும் படாதபாடுபட்டு கொண்டிருக்கின்றாரகள். அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம்களாகிய நாமும் அறிந்தும் அறியாமலும் துணை போய்க் கொண்டிருக்கின்றோம். இன்றை இஸ்லாமிய சமுதாயம் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, தனித்தனி ஜமாஅத்ஆகளாக, கட்சிகளாக, கழகங்களாக சிதறிக்கிடக்கின்றன.

“உங்கள் சமுதாயம் ஒரே சமுதாயமே இதில் பிரிவுகளே இல்லை” என்ற அல்குர்ஆனின் வேத வரிகளுக்கு மாற்றமாக சமுதாயம் பிரிந்து உள்ளது. கட்சிகளும், இயக்கங்களும், கழகங்களும் எப்பொழுது முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டன? நீங்கள் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டில் இருந்தனவா?

ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் இருந்தனவா? அல்லது ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்தனவா? ஷைகுல் இஸ்லாம் என்று போற்றப்படுகின்ற இமாம் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வாழ்ந்த ஹிஜ்ரி 8-ஆம் நூற்றாண்டிலாவது இவ்வியக்கங்கள் இருந்தனவா? இமாம் ஸுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வாழ்ந்த காலத்தில் இவ்வியக்கங்கள் இருந்தனவா?

Read more...
 
பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்! Print E-mail
Friday, 27 May 2011 07:52

  எம்.மக்பூலா பஷீர், குளச்சல் 

பெண்ணைப் பெற்றவர் படும் பெருமை!

பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தினை பறைசாற்றும் பொன்னார் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சில பொன்மொழிகள் இதோ!

1. எவர் தம் இரண்டு பெண் மக்களை அவ்விருவரும் பருவமெய்தும் வரை நன்றாக வளர்க்கின்றாரோ அவர் இறுதி நாளில் என்னோடு இவ்வாறு வருவார் என்றுரைத்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். (நூல்: முஸ்லிம்)

2. ஒரு முஸ்லிமான சகோதரனிடம் இரண்டு பெண் மக்களிருக்க அவர் அவர்களை நல்ல முறையில் வைத்துக் கொண்டால் அவரை அவ்விரு மக்களும் சுவனத்தில் சேர்த்து வைப்பர். (நூல் : புகாரி)

3. எவர்களிடம் பெண்மக்கள் மூவர் உள்ளனரோ அவர், அவர்களிடம் பொறுமை காட்டியும், தன் சக்திக்கு இயன்ற மட்டும் நல்ல ஆடைகளை அவர்களுக்கு அணிவித்தும் வந்தாரோ அவருக்கு நரக நெருப்பைத் தடுக்கும் திரையாக அம்மூவரும் அமைந்துள்ளனர். (நூல் : புகாரி)

Read more...
 
''இஸ்லாம் உலகம் முழுவதற்கும் பொருந்திப் போகக்கூடிய மார்க்கம்'' - இம்ரான் கான் Print E-mail
Friday, 08 February 2013 05:21

''இஸ்லாம் உலகம் முழுவதற்கும் பொருந்திப் போகக்கூடிய மார்க்கம்'' - இம்ரான் கான்

[ 1980-களில் என் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களால் நான் இறைவனை நோக்கித் திரும்பினேன். அதில் ஒன்று கிரிக்கெட். அந்த ஆட்டத்தில் நான் மாணவனாக இருந்த காரணத்தால், உண்மையில் நான் எதிர்பார்க்கும் வாய்ப்பு இறைவன் நாடியிருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று உணரத்தொடங்கினேன். அந்த நேரத்தில் இறைவனை நான் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு தெளிவாகவே இருந்தது.

திருக்குர்ஆன் முஸ்லிம்களை "தீவிரவாதிகள்" என்று அழைக்காமல் "நடுநிலையாளர்கள்" என்றே அழைக்கிறது. இறைத்தூதருக்கு, "மக்களிடம் சென்று இறைச் செய்திகளை சொன்னால் போதும்; மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்களா இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை" என்று கூறப்பட்டது. எனவே அடுத்தவர் மீது உங்கள் கருத்தை திணிக்கலாமா எனும் கேள்விக்கே அங்கு இடமில்லை.

மிக மோசமான செயல், சில தனி நபர்கள் அல்லது குழுக்கள் தங்கள் அரசியல் நலன்களுக்காக இஸ்லாத்தினைத் தங்கள் விருப்பம் போல் வளைத்துக் கொள்கிறார்கள்.

இன்றைய நாளில் இஸ்லாத்தில் சில கடமைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் நாடுகளும், மதத்தின் பேரால் மக்களின் உரிமைகளை மீறும் நாடுகளும்தான் இஸ்லாமிற்கு மோசமான விளம்பரங்கலைத் தருகின்றன. உண்மையில், இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு கீழ்படியும் சமூகம்தான் விடுதலையடைந்த சமூகமாக இருக்க முடியும்.]

Read more...
 
நபி (ஸல்) அவர்களின் திருமண வாழ்த்து துஆவும், அதற்கு எதிரான நவீன (பத்)துஆக்களும்! Print E-mail
Saturday, 23 March 2013 06:54

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமண வாழ்த்து துஆவும், அதற்கு எதிரான நவீன (பத்)துஆக்களும்!

''(முஃமீன்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள், வரம்பு மீறுகிறவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.'' (அல்குர்ஆன் 7:55)

''(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்கப் பணி வோடும், அச்சத்தோடும் உரத்த சத்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவு கூறுவீ ராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.'' (அல்குர்ஆன் 7:205)

துஆவுக்குரிய அல்லாஹ்வின் நிபந்தனை: துஆ பணிவாகக் கேட்கப்பட வேண்டும். பணிவின்றி சப்தமாக கேட்பதே முதல் குற்றம்; வரம்பு மீறிய செயல். அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து சென்ற நபிமார்களை இழுத்து இவர்கள் கேட்கும் துஆ நல்ல துஆவாக அல்லாஹ்வால் ஏற்கப்படுவதாக இருந்தால் நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதைக் கற்றுத் தந்திருப்பார்கள். மறைத்திருக்க மாட்டார்கள்.

Read more...
 
எங்க அப்பன் யானை வளர்த்தார்! Print E-mail
Wednesday, 01 May 2013 07:13

M U S T    R E A D

எங்க அப்பன் யானை வளர்த்தார்!

தம்முடைய மூதாதையர் குறித்த பெருமையாடல் கதை, ''எங்க அப்பன் யானை வளர்த்தார்'' கூறுபவரின் தந்தை யானை வளர்த்தார், வல்லமையாளர். மகன் தனது வலிமையைக் காட்ட ஒரு ஒட்டகமாவது வளர்த்திருக்க வேண்டாமா? எல்லோரும் தொடுக்கக்கூடிய வினா!

அப்பன் பெருமை, யானை வளர்த்த கதையைக் கூறி மதிப்பு பெற முனைவது. அப்பன், யானைப் பெருமையில் நடமாடுவது போன்று சமூகத்தினர், இறைத்தூதர் ரசூலுல்லாஹ்வின் தியாகம், உழைப்பு, புகழில் குளிர் காய்கின்றனர்.

''எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தியாகத்தைப் பாருங்கள்!'' உங்கள் தியாகம் என்ன (B)பாய் கேட்கப்படுகிறது. பதில்... இல்லை!

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமண எளிமையை நோக்குங்கள்.!'' கூறப்படுகிறது. சமூகத்தில் எளிமைத் திருமணங்கள் நடக்கின்றனவா. பூசணிக்காயை அல்ல. அண்டாவையே சோற்றுக்குள் மறைக்கும் அவல நடைமுறையையும், நபிவழி முறையையும் துளியளாவாவது ஒப்பீடு செய்யவியலுமா? மாற்று சமூக மக்களின் மௌனக்கேள்வியிது. நபியவர்களின் வியர்வைக் கடலுக்குள் மூழ்கி மறைந்து கொண்டு கள்ளத்தனம், கபடத்தனம் அரங்கேற்றப்படுகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகழ்போரில் பட்டினி பொறுத்தார்கள். 2 கல்லை வயிற்றில் கட்டினார்கள். சில நாட்கள் அவர்கள் வீட்டில் அடுப்பெரியவில்லை கூறுகிறோம். வருடத்தில் 30 நாள் நோன்பு. 30,000ம் பேர் வாழக்கூடிய பகுதியில், 3,000ம் பேர் தொழக்கூடிய பள்ளியில் 3ஆம் நோன்புக்கு 150 பேரை மட்டுமே தொழுகைக்கு காணமுடிகிறது.

நோன்பு திறப்பு இஃப்தார் நேரம் மாலை 6 மணி 36 நிமிடம். 5 மணிக்கே மஸ்ஜித் சென்று கஞ்சி கொட்றா முன்பு அமர்ந்து கொள்கின்றனர். 13 மணிநேரம் பசி பொறுக்க முடியாத நிலையில், கல்லு கட்டிய கதை பேசப்படுகிறது.

Read more...
 
நம்மிடம் புகுந்துள்ள அந்நிய அநாச்சாரம்...! மாற்றம் வருமா? Print E-mail
Tuesday, 14 May 2013 18:53

நம்மிடம் புகுந்துள்ள அந்நிய அநாச்சாரம்...! மாற்றம் வருமா?

    சகோ.முஹம்மத் றியாஸ்    

அன்பின் முஸ்லிம் இளைஞர்களே, யுவதிகளே!

அல்லாஹ் மனிதர்களாகிய நம்மை மிகவும் அழகிய படைப்பாக படைத்துள்ளான்.

அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதற்காக படைக்கப்பட்டுள்ள மனித உடலில் ஆன்மா என்ற ரூஹூம் இரண்டரக் கலந்துள்ளது.

இறைவனை மட்டுமே வணங்கவேண்டிய மனிதனை, இறை நினைப்பை விட்டும் மாற்றி தாங்கள் வணங்கும் ஷைத்தானை வணங்கச்செய்வது எவ்வாறு என்று இந்த ஷைத்தான்கள் சிந்தித்தனர்.

இவர்களின் ஆராய்ச்சிபடி மனிதனின் சிந்தனை, செயலாற்றல் மற்றும் அவனுடைய உடல் இம்மூன்றையும் வசப்படுத்திவிட்டால் அம்மனிதனை தாங்கள் விரும்பியபடியெல்லாம் ஆட்டிப்படைக்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இவர்கள் மனித இனத்தின் புனிதத்தை எவ்வாறெல்லாம் அழிவிற்கு உட்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொள்ள ஆக்கத்தை இறுதிவரை படியுங்கள்.

Read more...
 
பாலியல் வன்முறையின் விசாரணை - பெண்ணின் கண்ணியம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் Print E-mail
Monday, 18 February 2013 11:05

பாலியல் வன்முறையின் விசாரணை - பெண்ணின் கண்ணியம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்

பாலியல் வன்முறையின் தன்மையை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எப்பொழுதெல்லாம் ஒரு பெண்ணின் தன்னாட்சி நிலைக்கெதிராக ஒரு ஆண் உறவு கொள்கிறானோ அங்கே அந்தச் சம்பவம் நிகழ்கிறது. அங்கே பெண்ணின சமத்துவ உரிமை, அவளுடைய சுயமதிப்பு தாக்கப்படுகிறது.

கற்புடமை, கன்னித்தூய்மை போன்ற கருத்துப் படிவங்கள் கட்டமைக்கப்படுவதற்கு முன்பே எப்பொழுதெல்லாம் அவள் மேல் ஆண் பாலியல் அதிகாரம் செய்ய முனைந்தானோ அங்கே அந்தக் குற்றம் நடைபெற்றது.

ஆணாதிக்க சமூகத்தில் இந்தக் குற்றத்தை குடும்ப கெளரவம், மானம் என்ற சாயமும், புனிதம், தூய்மை என்ற வர்ணமும் பூசப்பட்டு அந்த வன்முறையின் உண்மைத் தன்மை மறைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நடைபெறும்பொழுது ஒரு கொடுங்குற்றம் நடைபெறுகிறது, இதற்கு அவள் பொறுப்பல்ல, அதற்கும் கெற்ரவத்திற்கும் இணைப்பும் இல்லை. அவள் எவ்விதத்திலும் களங்கப்படவுமில்லை. இதை முதலில் நாம் புரிந்து கொண்டால் தான் பெண்ணுக்கு நீதி கிடைக்கும், அவள் உரிமை பாதுகாக்கப்படும்.

இந்த உரிமைப் பறிப்பு அவளுடைய மனப்பக்குவத்தின் வளர்ச்சியையோ, எனது உடல் என்ற புலனுணர்வையோ சார்ந்ததில்லை. அவளுடைய சம்மதமின்றி நடக்கிறது. அவள் வாய் திறந்து வேண்டாம் என்று சொல்லாமல் மெற்னமாக இருந்தால் அது சம்மதமாகாது. அவள் அச்சத்தால் ஆற்றலிழந்து போயிருக்கலாம், பலவந்தத்தால் அவள் கைகள் செயலற்றுப் போயிருக்கலாம், இந்தச் செயலின் தாக்கத்தை மனதளவில் புரிந்துகொள்ள முடியாத சிறுமியாக இருக்கலாம், மாற்றுத்திறனாளியாக இருக்கலாம், மனவளர்ச்சியடையாதவராக இருக்கலாம். எவ்வாராயினும் அது அப்பெண்ணின் மீது ஏற்பட்ட அதிகாரத்தாக்குதலே.

Read more...
 
தொன்மை மறவேல்! Print E-mail
Friday, 17 May 2013 19:04

kondrai vendhan

தொன்மை மறவேல்!

தோழனோடும் ஏழைமை பேசேல்!

எப்படியிருக்கீங்க-? நண்பர், உறவினர், அறிமுகமானவர் தொடுக்கும் இவ்வினாவிற்கு பலரது பதில், ''இறைவன் போதுமானவன்''. ''என் தேவைகளை அவன் நிறைவு செய்கிறான்.'' ''அல்ஹம்லில்லாஹ்'' மொழிதலாக இருக்காது.

என்னத்த சொல்றது....! நெலமை ரொம்ப மோசமாகவிருக்கிறது. வருமானமில்லை. பிள்ளைகள் சரியில்லை. பெண்டாட்டி சரியில்லை. தொழில் சரியில்லை. வரவேண்டிய பணம் வரவில்லை. தொடர் புலம்பலிருக்கும். நலன் விசாரித்தவர் நெருக்குதலுக்குள்ளாகி நெளியும் நிலைக்குத் தள்ளி தம்முடைய நிறைவு காணாத குறைகளை எதிராளி செவிக்குள் திணித்துக் கொண்டேயிருப்பர்.

உயிருக்குயிராய் பழகிய நண்பனாக இருந்தாலும் உனது வறுமை, கஷ்டத்தை அவரிடம் கூறாதே. பயனற்ற சொற்களைப் பேசி அவர் நேரத்தை வீணடிக்காதே. ஒன்றுக்கும் உதவாதவைகளைப் பேசி அறிவு பலவீனத்தை காட்டி நண்பர் மனத்தில் உன்னைப் பற்றிய உயர்வுகளை, நீயே கட்டுடைக்காதே ''தோழனோடும் ஏழைமை பேசேல்'' என்று ஒளவை ஒரிவரியில் உரைக்கிறார்.

Read more...
 
குர்ஆன், ஹதீஸை பின்பற்றச் சொல்லும் நான்கு இமாம்கள்! Print E-mail
Wednesday, 25 May 2011 07:01

நான்கு இமாம்களும் குர்ஆன், ஹதீஸைத்தான் பின்பற்றச் சொல்கிறார்கள்

     இமாம்கள் வாழ்ந்த காலங்கள்:     

அபூஹனிபா ரஹ்மதுல்லாஹி அலைஹி, 70 ஆண்டுகள் ஹிஜ்ரி 80 முதல் 150 வரை

மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, 86 ஆண்டுகள் ஹிஜ்ரி 93 முதல் 179 வரை

ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி, 54 ஆண்டுகள் ஹிஜ்ரி 150 முதல் 204 வரை

ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி, 77 ஆண்டுகள் ஹிஜ்ரி 164 முதல் 241 வரை

மரியாதைக்குறிய இமாம்கள் குர்ஆன், ஹதீஸையே இறுதி தீர்வாக கூறுகிறார்கள்.

     இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்:     

ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கும் போது அதை ஏற்றுக் கொள்வதே என் வழியாகும். (ஆதார நூல்கள்: ரஸ்முல் முஃப்தி, ஹாஷியா பின் ஆபிதீன், ஈகாலுல் ஹிமம்)

Read more...
 
நபி வழி என்றால் என்ன? Print E-mail
Saturday, 13 March 2010 08:06

'SUNNAH' The way of the Prophet Muhammad, pbuh...

நபிவழி எப்போது தொகுக்கப்பட்டது?   எப்படித் தொகுக்கப்பட்டது? என்ற வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால்,

நபிவழி என்றால் என்ன?நபி வழியைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் என்ன? நபி வழியைப் பின்பற்றாதவருக்குரிய தண்டனை என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

நபி வழிக்கு அரபியில் ''சுன்னத்'' என்று சொல்லப்படும். இந்தச் சொல்லிற்கு அகராதியில் பொதுவாக ''வழி'' என்று பொருள் இருந்தாலும், இஸ்லாமிய பழக்கத்தில் அது நபி வழிக்குத்தான் பயன் படுத்தப்படுகிறது. அதாவது நபி அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகளுக்கு ''சுன்னத்'' என்று சொல்லப்படுகிறது. இவைகளுக்கு ''ஹதீஸ்'' என்று ஒரு மறு பெயர் சொல்லப்படுவதுண்டு, என்றாலும் ''சுன்னத்'' என்ற சொல்லிற்கும், ''ஹதீஸ்'' என்ற சொல்லிற்குமிடையில் சிறு வேறுபாட்டை நம்மால் காண முடிகிறது.

உதாரணமாக ''தனக்கென எதை விரும்புகிறானோ, அதை தனது சகோதரனுக்கும் விரும்பாதது வரை ஒருவன் உண்மை விசுவாசியாகமாட்டான்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''சொன்னதாக'' அவர்களைப் பற்றி அறிவிக்கப்பtடுள்ள இந்தச் செய்திக்கு ''ஹதீஸ்'' என்று சொல்லப்படும். இந்தச் செய்தி மூலமாக நமக்குக் கிடைக்கின்ற விஷயம் இருக்கிறதே அது ''சுன்னத்'' அதாவது தனக்கென விரும்பும் ஒன்றை தனது சகோதரனுக்கும் ஒருவன் விரும்பும்போது நபி அவர்களின் ''சுன்னத்தை'' செயல் வடிவில் பின்பற்றியவனாக ஆகிவிடுகின்றான்.

Read more...
 
கருக்கலைப்பு செய்வது குற்றமா? Print E-mail
Tuesday, 16 March 2010 08:41

கருக்கலைப்பு செய்வது குற்றமா?

       முஹம்மது இன்ஃபாஸ்    

திருக்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று தெளிவான கட்டளை உள்ளது.

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (திருக்குர்ஆன்6:140)

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அது,  நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்பதே.

பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந் தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப் படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (திருக்குர்ஆன்6:151)

Read more...
 
பிளவும், பிரிவினையும், பிடிவாதத் தலாக்கும்! Print E-mail
Wednesday, 20 October 2010 11:54

பிளவும், பிரிவினையும், பிடிவாதத் தலாக்கும்!

    மவ்லவீ, அ. முஹம்மது கான் பாகவி     

கணவன் - மனைவி இடையே சுமூகமான உறவில்லாமல், அடிக்கடி சண்டையும் சச்சரவும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது என வைத்துக் கொள்வோம். இவர்கள் இதே குழப்பமான நிலையில் வாழத்தான் வேண்டுமா? அல்லது நீதிமன்றம் தலையிட்டு இருவரையும் பிரித்துவைத்து விடலாமா?

இத்தகைய தருணங்களில் தம்பதியரின் பிரச்சனைகளைப் பரிசீலித்து ஒரு முடிவு எடுப்பதாகவேண்டி, கணவன் குடும்பத்திலிருந்து ஒருவரும், மனைவி குடும்பத்திலிருந்து ஒருவருமாக ‘இரு நபர் நடுவர் குழு’ ஒன்றை நியமிக்க வேண்டும் என்பது மார்க்கச் சட்டமாகும். தம்பதியரில் ஒருவர் மற்றவரைப்பற்றிப் புகார் செய்யும்போது ஷரீஅத் நீதிமன்றம் இந்த நடுவர் குழுவை ஏற்படுத்தலாம். பிரச்சனையை விவாதித்து நடுவர் குழு நீதிமன்றத்திற்கு அறிக்கை தரும்.

தம்பதியரிடையே சமாதானம் செய்து வைத்து, இருவரும் இல்லற வாழ்க்கையைத் தொடரச் செய்ய முடியும் என்று நடுவர் குழு கருதுமானால், அவ்வாறே செய்ய வேண்டும். பிரிவினை செய்ய நீதிபதிக்கு அதிகாரம் கிடையாது. இல்லை, இருவரும் இனி இணைந்து வாழ வாய்ப்பில்லை என்று நடுவர் மன்றம் கருதினால், இருவரையும் தன் விஷேச அதிகாரத்தைக் கொண்டு நீதிபதி பிரித்து வைக்கலாம். இந்தப் பிரிவினை ‘பாயின்’ தலாக்காக கருதப்படும்.

Read more...
 
Unable to stop sinning? Print E-mail
Tuesday, 03 April 2018 08:09

How Do You Stop Sinning? Why Do I Keep Sinning? Biblical ansers

      Unable to stop sinning?      

A man came to Hazrat Ibrahim ibn Adham Rahmathullahi Alaihi, and said,

"Abu Ishaq, I am unable to control my self. Please give me something to help me with it."

"If you accept five conditions, " said Ibrahim, "and are able to put them into practice, your disobedience will not cause you any problem."

"Just tell me what they are, Abu ishaq!" the man said.

"The first is that when you want to disobey Allah you do not eat anything he provides."

"Then how will I get anything to eat? Everything on the earth is from him!"

Read more...
 
Hijab is not for only one gender Print E-mail
Monday, 08 September 2014 06:32

Hijab is not for only one gender

By: Ebrahim Moosa

The usage of the word Hijab nowadays tends to immediately conjure up imagery on Islamic clothing obligations for women, the jilbab, niqab, abaya, headscarf etc. and the uphill battle many Muslim women face in embellishing themselves Islamically.

What, I feel, seems to be far less considered in the public discourse today is the male factor: How males should conduct themselves and the Shariah protocol relating to their dressing.

I was hence relieved to hear some cogent counsel on the subject recently from Mufti Ismail Menk through a Youtube clip that eventually gave rise to a much needed on-air discussion on Cii Radio’s Ulama In Focus show. Mufti Menk offers a valuable reminder that Hijab is a generic concept that should apply equally to males and females. True, the finer rulings regarding dressing of the genders may differ, but the objectives of Hijab in both instances are the same.

An apt demonstration for this parity is provided in the Qur’aan wherein Allah SWT commands both men and women to lower the gazes in modesty(with men, in fact, being addressed prior to women): 

Read more...
 
Difference Between Rasul (Messenger) & amp; Nabi(Prophet) Print E-mail
Friday, 29 May 2009 06:41

Image result for Difference Between Rasul (Messenger) & amp; Nabi(Prophet)

One May Wonder What is the difference between terminology Rasul and Nabi, following is the important information to understand the difference of these two great positions :

The Quran has used both the words, Nabi and Rasul, which shows that there were two kinds of messengers.

1. Some of the messengers were Nabi only.

2. Some messengers were both Nabi and Rasool.

The difference between Rasul and Nabi is that,

1. A Rasul was a messenger of Allah who was given a new Shariat (codes of law) from Him. And a Nabi was also the messenger of Allah, but he was not given any new Shariat and followed the shariat of earlier Rasul. Sheikh Mufid, a great scholar of Islam writes in his book, Awa’il al-Maqalat, "every messenger is a prophet [Nabi], but not every Prophet is a Rasul [Apostle]. All Rasules were Nabi but all Nabis were not Rasuls.

Read more...
 
Is it true that marriage constitutes one half of our faith? Print E-mail
Friday, 16 October 2009 07:44

License to wed: Legal implications of Muslim marriage

Q. Is it true that marriage constitutes one half of our faith?

How about people who do not get the opportunity to get married?

I have an aunt who never got married simply because the offers of marriage she received when she was young did not meet her expectations. She did not feel that she would be comfortable with anyone. Does this mean that she is at fault from the Islamic point of view?

A.  Nothing in the Quran or the Hadith speaks of marriage as constituting one half of our religion. Yet this notion is commonly held throughout the Muslim world. Wherever you go in Muslim countries you hear it as an accepted fact. So, where does it come from?

One Hadith reported by Anas ibn Malik quotes the Prophet (peace be upon him) as saying: "When God grants someone a good wife, then He has helped him with one half of his religion. Let him remain God-fearing in attending to the other half." (Related by Al-Tabarni and Al-Hakim.)

When you carefully examine the wording of this Hadith you realize that it gives a totally different concept from the common notion. It does not speak of marriage as a concept, institution, or common practice.

Read more...
 
மனித வாழ்வில் மனசாட்சி! Print E-mail
Saturday, 11 January 2014 07:11

மனித வாழ்வில் மனசாட்சி!

"மனசாட்சிக்கு பயந்து நடந்துக்கோ...."
"மனசாட்சி இருந்தா இப்படி செய்வியா..?"

இதைப்போன்ற வாசகங்கள் பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்துவதை காண்கிறோம். ஆக இவ்வாக்கியங்கள் மனசாட்சிக்கு பயந்தால் மட்டுமே போதுமானது எல்லா செயல்களிலும் நீதமாக இருக்க முடியும் என்பது போல் தோன்றுகிறது... உண்மையாக மனசாட்சி மட்டும் மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் நீதி செலுத்த போதுமானதா - கண்டிப்பாக முடியாது ...ஏன்?

ஒரு செயலை செய்வதால் ஏற்படும் விளைவு நன்மையா? தீமையா என பகுத்து அஃது தீமையே தவிர்த்து நன்மையே செய்ய தீர்மானிப்பதே மனசாட்சியின் பிரதான வேலை. பொதுவாக மனசாட்சி என்பது பெரும்பாலும் நன்மை செய்வதை அடிப்படையாக கொண்டிருந்தாலும் இரண்டு அடிப்படை காரணங்கள் மனசாட்சியின் செயல் போக்கை மாற்றுகிறது

(1) நிலையற்ற மனித எண்ணங்கள்

(2)  னிதர்கள் வாழும் சூழல், சமுகம் இவ்விரு நிலைகளும் மனசாட்சியின் செயல் திறத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதை பார்ப்போம்.

Read more...
 
குழந்தைகள்மீதான பாலியல் கொடுமை - இந்தியாவில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும் ரகசியம்! Print E-mail
Friday, 12 November 2010 15:53

A protest in India against child sex abuse

குழந்தைகள்மீதான பாலியல் கொடுமை -

இந்தியாவில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும் ரகசியம்! 

குழந்தைகள்மீதான பாலியல் கொடுமை (Child Sexual Abuse) இந்தியாவில் மறுத்து, மறைத்துவைக்கப் பட்டிருக்கும் பெரும் ரகசியம். காரணம், அறியாமை, ஒப்புக்கொள்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த குழப்பம், அச்சம், இப்படிப் பல. விளைவு: குழந்தைகள் பாதுகாப்பு உரிமையை இழக்கின்றனர். இக்கொடுமையை அனைத்து வகைப்பட்ட குழந்தைகளும் - பொருளாதார, சமூக, சாதி, பால் வேறு பாடின்றி - அனுபவிப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.

பள்ளிகளின் அவல நிலை குற்றங்கள் நடப்பதற்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்குகிறது.

குறிப்பாக, சுயநிதிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு, அதிலும் பெண் குழந்தைகளுக்கு, பாதுகாப்பற்ற சூழல்; அவற்றில் இருட்டு மூலைகளில் பதுங்கி, குழந்தைகளின் இயற்கை யான இயலாமையையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு பாயக் காத்திருக்கும் வக்கிரங்கள்; இப்பள்ளிகளின் ஆங்கில மீடியத்தையும் தேர்ச்சி விகிதங்களையும் கண்டு பெருமிதம் கொண்டு, குழந்தைகளைக் காவு கொடுக்கும் பெற்றோர்; பள்ளிகளின் மேல் எந்தக் கண்காணிப்பும் செலுத்தாத கல்வித் துறை; குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறையற்ற சமூகம். இத்தனைக்கும் பலியாகின்றனர் குழந்தைகள்.

Read more...
 
கவனம்! வாலிபப்பருவம்! Print E-mail
Friday, 10 October 2014 06:50

கவனம்! வாலிபப்பருவம்!

நாம் இவ்வுலக வாழ்க்கையில் மூன்றுவித பருவமாற்றங்களை சந்திக்கவேண்டியுள்ளது. அது குழந்தைப் பருவம். இளமைப் பருவம், முதுமைப் பருவமாகும்.

இம்மூன்று பருவத்திலும் மிக முக்கியமான பருவமாக வாலிபப்பருவம் இருக்கிறது. இவ்வாலிபப்பருவத்தின் ஆரம்பநிலையை மிகக் கவனமுடன் கடந்து செல்லவேண்டியதாக இருக்கிறது.

இப்பருவம் மனிதனது வாழ்வின் நல்வழியையும் தீயவழியையும் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கிறது.

இந்த ஆரம்பநிலை வாலிபப்பருவத்தை ஒருமனிதன் எவ்வித கலங்கமுமின்றி கடந்து வந்து விட்டானேயானால் அம்மனிதன் இவ்வுலகவாழ்வில் அனைத்திலும் மிகத் தூய்மையானவனாக வெற்றிபெற்றவனாக ஆகிவிட அதிக வாய்ப்பு உள்ளது.

காரணம் இப்பருவத்தைக் கடக்கும்போது மனதுடன் நிறைய போராட வேண்டி உள்ளது. மனதில் உள்ள கட்டுப்பாட்டை இப்பருவத்தைக் கடக்கும்வரை பலமாக பிடித்து நிறுத்திவைக்கவேண்டியதாக இருக்கிறது.

வாலிபப்பருவத்தின் ஆரம்பகட்டத்தில் எதிலும் அனுபவமில்லாத காரணத்தினால் எதையும் பெரும் பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அலட்ச்சியமாக பொறுப்பில்லாமல் விளையாட்டாக நடந்து கொள்ளும் பருவமாக இருக்கிறது. ஆனால் இதன் பின்விளைவுகளை அனுபவப்பட்ட பின்னரே அறிந்து கொள்வார்கள்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 99 100 Next > End >>

Page 99 of 106

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article