வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5



Link -7

bismillah1 (2)

தொழுகை ஓதுதலை ஒலிபரப்ப வேண்டாம்! Print E-mail
Saturday, 13 November 2010 11:20

பள்ளிவாசலில் தொழுவதை வெளி மைக்கின் மூலம் ஒலிபரப்ப வேண்டாம் என்று தமிழகத்தின் மூத்த ஆலிம்களில் ஒருவரான மவ்லவீ, டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்களைத் தலைவராகக் கொண்ட நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்மானம். ஒவ்வொரு மஹல்லாவும் பொறுப்புணர்வுடன் அதை ஏற்று நடப்பது மிகவும் அவசியம் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.

நோன்பு கால தராவிஹ் தொழுகைக்கு தெருவுக்குத்தெரு மைக்கை கட்டி வயோதிகர்களையும், நோயாளிகளையும், பெண்களையும், குழந்தைகளையும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளையும் பற்றி சிறிதுகூட கவனத்தில் கொள்ளாமல்; தொல்லைக்குள்ளாக்கும் செயலை ஏதோ நன்மையான காரியமாக் கருதி அதை நடைமுறைப்படுத்தி வருவது அமைதி மார்க்கமான இஸ்லாம் காட்டித் தந்த வழியல்ல.

கூட்டுத்தொழுகை என்பது பள்ளிவாசலுக்கு வருகின்றவர்களுக்கு மட்டுமே. அதை வெளி மைக் மூலமாகவும் தெருவுக்குத்தெரு குழல் ஒலிபெருக்கி மூலமாகவும் ஒலிபரப்பும்போது வீட்டிலுள்ள பெண்கள் தனித்து தொழும்போது அது எவ்வளவு இடையூறை விளைவிக்கும் என்பதை எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

Read more...
 
யார் பொறுப்பு? Print E-mail
Tuesday, 18 September 2012 12:12

   யார் பொறுப்பு?  

[ அனாச்சாரங்களை கண்டிக்கும் இலட்சியத்தோடு அறப்போர் புரிபவன் மிஷ்காத்தை கரைத்துக் குடித்தவனாக இருக்க வேண்டியதில்லை

5, 7, 10 ஆண்டுகள் என்று அரபி மதரஸாக்களில் கற்றுத் தேர்ந்து படாடோபங்களோடு காட்சி தரவேண்டியதில்லை.

கலைகள் பலவற்றில் சட்ட நுணுக்க வல்லுனர்களாக ஆராய்ந்தறிந்த சாஸ்திரியாக இருக்கத்தான் வேண்டுமென்ற விதியும் இல்லை.

அனைவராலும் அது முடியக்கூடிய காரியமா? இஸ்லாம் அப்படி ஏதேனும் சட்டம் விதிக்கவில்லை.

புனிதமும் ஜீவாதாரமுமான தொண்டு புரிய இலாயக்குள்ளோர் மதகுருமார்களான மெளலவிகள் தான் என்பது நம்மிடை நிலவி வரும் தவறான கருத்து.

ஒவ்வொருவனுக்கும் மதப்பணியைக் கடமையாக்கி இருக்கிறது. "லாலாஹ இல்லல்லாஹு" இந்தக் கலிமா மந்திரத்தை ஓதி விட்டாலே போதுமே. ]

Read more...
 
கதைக் களமான மஸ்ஜித்கள்! Print E-mail
Friday, 05 October 2012 21:43

கதைக் களமான மஸ்ஜித்கள்!

[ தமிழகத்தில் மதரஸா, பள்ளிவாசல் திறந்து கொண்டேயிருக்கின்றனர். விஸ்தீரணப் படுத்துதல், பிரம்மாண்டப்படுத்தல் நடக்கிறது. நிதி கேட்டு அலைதல் ஒரு புறம்.

அனைத்துக்கும் பேஸ் குர்ஆன். அதைப் புறக்கணித்துவிட்டு அனைத்து வேலைகளும் நடத்தப்படுகிறது.

குர்ஆன் செவிமடுப்பதில் வெறுப்பு காட்டுகின்றனர்.

நன்நோக்கத்தோடு மஸ்ஜித் நிர்வாகம் ஏற்பாடு செய்வது விழலுக்கு இறைத்த நீராகிறது.

ஷரிஅத் அடிப்படையில் குர்ஆன் அறியவேண்டும் ஆர்வமில்லை.

கடுமையாகப் புறக்கணிக்கின்றனர்.

விளைவு?! குர்ஆனும், மஸ்ஜித்தும் மனிதர்களைப் புறக்கணிக்கும்.]

Read more...
 
ஷரீஅத் சட்டமா? ஊர் வழக்கமா? சமுதாயம் சிந்திக்க வேண்டும்! Print E-mail
Saturday, 27 November 2010 09:18

  மவ்லவி, டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி 

[ ஷரீஅத் வழிகாட்டுதலை ஒதுக்கிவிட்டு ஊர் கட்டுப்பாடு, ஜமாஅத் வழக்கம் என்ற பெயரில் பல கொடுமைகள் பரவலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலை நீடித்தால் இஸ்லாத்திற்கு மிகப்பெரும் ஆபத்தும் விபத்தும் ஏற்படலாம். எனவே, ஷரீஅத்தையும், மார்க்கத்தையும் மீறி ஏற்படுத்தப்பட்டுள்ள ஊர் கட்டுப்பாடுகளையும் வழக்கத்தையும் எதிர்த்து போராடி ஒழித்துக்கட்டுவது அவசியத்திலும் அவசியமாகும்.

இன்றைய கால கட்டத்தில் இந்த அநியாயங்களை எதிர்த்து போராடி இஸ்லாத்தை நிலைநிறுத்த பாடுபடுவதுதான் மிகப்பெரும் ஜிஹாது.

சங்கைக்குறிய உலமாக்களும், ஷரீஅத் உணர்வு நிறைந்த சமுதாயப் பெருமக்களும் இந்த அறப்போருக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும்படி ஷரீஅத்தின் பெயரால் கேட்டுக்கொள்கிறோம்.]

முஸ்லீம்களின் வாழ்க்கை நெடுகிலும் ஷரீஅத்தின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும். ஷரீஅத்தை ஓரங்கட்டிவிட்டு முஸ்லீம் என்ற பெயரால் வாழவே முடியாது.

Read more...
 
கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன? Print E-mail
Thursday, 12 March 2009 07:43

கனவுகள் மெய்பட வாழ்க்கையில் பணம் மிக முக்கியமான ஒன்றாகி விடுகிறது. ஒவ்வொரு மனிதனும் செல்வந்தானாக வேண்டும் என்று விழைகிறான். குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஒரே ஒரு நேர்வழியாக அயல் நாட்டு வாழ்கையை அவன் தேர்ந்தெடுக்கிறான். கடமைகளுக்காக வாழ்கையை அடகு வைக்கிறான். ஃபாரின் வாழ்க்கையில் அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன?. இவற்றை யதார்த்தமாய் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

சிறு வயதில் வானத்தை அண்ணாந்து பார்த்து சிறு குருவி போல் கடந்து செல்லும் விமானங்களை அதிசயமாக நாம் பார்த்ததுண்டு. அப்போதைக்கு அது எங்கு செல்கிறது ? ஏன் செல்கிறது நாம் யோசிப்பதில்லை,சிறு வயதில் நாம் அதனை வியப்போடு பார்க்க மட்டுமே செய்கிறோம்.

நாம் வளர்கிறோம், படிக்கிறோம்,கனவுகளும் நம்மோடு சேர்ந்து வளர்கிறது. வாழ்கையின் அடிப்படை தேவைகளுக்கு கூட கடின படும் எண்ணிலடங்காத குடும்பங்கள் இருக்கின்றன. செய்து முடிக்கவேண்டிய கடமைகள் கனவுகளை காட்டிலும் அதிகமாகி போகிறது.!

Read more...
 
இஸ்லாம்-ஈமான்: வேறுபாடு என்ன? Print E-mail
Tuesday, 16 February 2010 08:33

இஸ்லாம் என்றால் என்ன?

ஈமான் என்றால் என்ன?

இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?

இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ''இறைத்தூதர் அவர்களே! 'ஈமான்' எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?'' என்று கேட்டார்.

அவர்கள், 'ஈமான்' எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.

''இறைத்தூதர் அவர்களே! 'இஸ்லாம்' (அடிபணிதல்) என்றால் என்ன?'' என்று அவர் கேட்டார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான 'ஸக்காத்'(Zakaath) தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்'' என்றார்கள்.

அம்மனிதர், ''இறைத்தூதர் அவர்களே! ''இஹ்ஸான்'' (நன்மை புரிதல் என்றால் என்ன?'' என்று கேட்டார்.

Read more...
 
டென்ஷன் ஆவது ஏன்? Print E-mail
Sunday, 14 March 2010 10:14
டென்ஷன் ஆவது ஏன்?

  ஸஃபியா என்.ஜமான்   

[ நான்கு பேருக்கு விருந்து கொடுப்பதாக இருந்தாலும்கூட பெண்களுக்கு டென்ஷன் ஏற்பட்டுவிடும்.

மாணவர்களுக்குப் பரீட்சை வந்தாலே முதலில் டென்ஷனாவது பெற்றோர்கள்தான். இது முற்றிலும் தவறானதாகும். எப்பொழுதாவது ஒரு நாள் அந்த வருடத்திற்கான பரீட்சை வரும் என்று எமக்குத் தெரியும்தானே எனவே அதற்குத் தகுந்த மாதிரி எம்மை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பணிப்பெண்கள் என்ற போர்வையில் வெளிநாடு வரும் பெண்கள் படும்பாட்டைக் கொஞ்சம் உற்று நோக்குவோமானால் அதுவும் கூட பருவக்கோளாறினால் ஏற்படுகின்ற டென்ஷன் என்றால் அது மிகையாகாது.

நம்மில் பெரும்பாலானவர்கள் கணவரை, பிள்ளைகளை அவரவர் வேலைகளுக்கு வாகனங்களில் அனுப்பிவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு தேவையில்லாமல் டென்ஷனாவது. எங்கே போய் சேர்ந்திருப்பார்களோ அல்லது இடையில் ஏதாவது ஆகியிருக்குமோ என்றெல்லாம் தடுமாறுகிறார்கள் எனவே நாம் அவர்களை அனுப்பும் போது படைத்தவனை நினைத்து அவனுடைய துணையுடன் போய்வரும்படி வழியனுப்ப வேண்டும்.

மனோபாவம்தான் எல்லாவகையான டென்ஷனுக்கும் காரணமாக அமையும்.

டென்ஷன் அடிப்படை மையமே நமது உள்ளம் தான். இது கெட்டு விட்டால் எமது உடலே கெட்டுவிடும். இதனால் இரத்த அழுத்தம், புற்று நோய், சக்கரை வியாதி போன்ற பயங்கரமான வியாதிகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

ஒரு வகையான ஷைத்தானின் ஊசலாட்டம் தான் இந்த டென்ஷன். எனவே இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் ''திக்ர்'' பெரும் பங்கு வகிக்கிறது.]

Read more...
 
ஹஸீனா அம்மா பக்கங்கள் (7) Print E-mail
Wednesday, 28 September 2016 07:29

    ஹஸீனா அம்மா பக்கங்கள் (7)     

சொர்க்கத்தில் சிறை!

நாங்கள்
சிறுபான்மையினர்தாம்
ஆனால்,
எங்களுக்குத் தலைவர் என்று
இயம்பிக்கொள்வோரோ
எண்ணிக்கையில்
பெரும்பான்மையினர்!

ஆறுமுகங்கொண்டவர் கூட
ஒருமுகமாகப் பேசுகின்றனர்!
ஆனால்,
ஒருமுகமாகப் பேசவேண்டிய
எங்கள் தலைவர்களோ,
ஆறு விதமாகப் பேசுகின்றனரே

Read more...
 
உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன? Print E-mail
Saturday, 26 November 2011 07:17

உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன?

உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாக்கும். வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பலவீனமாக இருக்கும்.

வெய்யில் காலத்தில் ஆண்களின் ஜனனேந்திரிய உறுப்பு – விந்துப்பை தளர்ச்சியாக, அதிகமாக விரிந்து, பெரிதாக தொங்கும். காரணம் பரப்பை அதிகமாக்குவதால் உஷ்ணம் சிக்கிரம் குறையும். குளிர்காலத்தில் விந்துப்பை சுருங்கி இருக்கும். பரப்பளவு குறைவதால் குளிரின் தாக்கம் அதிகம் தெரியாது. இந்த பருவகால மாற்றங்கள் வேறு, உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு வேறு.

சாதாரணமாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று பாலியல் குறைபாடுகள். ஜனனேந்திர உறுப்புகள் ‘கூலாக’ (குளுமையாக) இருக்க வேண்டும். உடலின் மற்ற அவயங்களை விட, உடல் உஷ்ணத்தில் ஒரு டிகிரி குறைந்தே இருக்க வேண்டும். அப்போது தான் கரு உண்டாக்கும் ஆண் தாதுவை விந்துப்பையில், அடிவயிற்றை விட ஒரு டிகிரி உஷ்ணக் குறைவில் வைத்து பாதுகாக்க முடியும்.

Read more...
 
மொபைல் ஃபோன்களும் முஸ்லிம்களும் Print E-mail
Monday, 07 February 2011 09:49

மொபைல் ஃபோன்களும் முஸ்லிம்களும்

      ஜூவைரியா பின்த் முஹம்மது அலி, மேலக்காவேரி       

[ மிக முக்கியக் கடமையான தொழுகையை ஒரு மனிதன் நிறைவேற்றும்போது அவருக்கு அருகில் அமர்ந்து ஒருவர் சப்தமிட்டு திருக்குர்ஆனை ஓதுவது கூட அங்கு தொழுபவற்கு இடைஞ்சலை தரக்கூடும் என்பதால் அவ்வாறு சப்தமிட்டு ஓதுவதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கிறார்கள்.

அப்படியிருக்க,

இந்த மொபைல் ஃபோன்களிலிருந்து தொழுகை நேரத்தில் பள்ளிகளுக்குள் ஒலிக்கும் சங்கீதங்கள் தொழுகையில் ஈடுபட்டு அல்லாஹ்வின் நினைவில் மூழ்கியிருக்கும் இமாம் உட்பட அனைவரது மனவோர்மையையும் சீர்குலைத்து விடுகின்றன. 

இசையில்லாத சாதாரன ரிங் டோன், சைலன்சர், வைப்ரேட்டர், இன்னும் தேவைப்பட்டால் முழுதும் ஆஃப் செய்து வைத்துவிடக்கூடிய சகலவிதமான வசதிகளுடன் எல்லா மொபைல் ஃபோன்களும் தயாரிக்கப்படுகின்றன.
இந்த வசதிகளை கண்டுக்கொள்ளாமல் தாங்கள் இருக்கும் இடம், பொருள், ஏவல் எதையும் பற்றி கவலைப்படாமல் இந்த அரிய சாதனத்தை மனம்போன போக்கில் பயன்படுத்துபவர்களை நினைத்தால் மனம் வேதனையடையத்தான் செய்கிறது.]
Read more...
 
இஸ்லாமியச் சட்டம் (6) Print E-mail
Friday, 24 April 2009 07:45

இஸ்லாமியச் சட்டம் (6)

  நீடூர் A.M.சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி   

o  உயிலும் மரண சாசனமும் (வஸிய்யத்தும்),

o  உயில் எழுதும் முறை,

o  வக்ஃபு சட்டங்கள் - ஒரு பார்வை - 1,

o  இந்திய வக்ஃப் சட்டம்  

உயிலும் மரண சாசனமும்(வஸிய்யத்தும்)-1

இஸ்லாம் அனுமதிக்கின்ற வஸிய்யத் என்ற மரண சாசனத்திற்கு உயில் என்று விளக்கம் அளித்தாலும், இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. (LAW OF WILLS) தன்னாணை, அல்லது விருப்புறுதிச் சட்டத்தைத் தான் உயில் என்கிறோம். இங்கிலாந்தில் உயில்களுக்கான சட்டம் கி.பி.1837ல் இயற்றப்பட்டது. இந்து சாஸ்திரங்களில் உயில் என்பதே தெரியாத ஒன்று. அதை ஒரு புதிராகக் கருதினார்கள்.

கூட்டுக் குடும்பத்திட்டம், தத்து எடுக்கும் பழக்கம் ஆகியவற்றால் பழங்கால இந்தியாவில் உயில் மூலம் சொத்துரிமை வழங்கும் பழக்கம் அறவே இல்லாமல் இருந்தது. ஆனால் உயிலுக்கு மாற்றாக, அல்லது நெருக்கமாக அன்பளிப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்து விருப்புறுதிகளின் சட்டம், இந்து வழியுரிமை மற்றும் வாரிசு சட்டத்தின் ஒரு பாகமே. நீதிமன்றங்களும் கூடுமானவரை இந்து விருப்புறுதிகளுக்கு கொடையளிப்பதற்கான சட்டத்தையே பயன்படுத்தி வந்தன. 1870-ம் ஆண்டில் தான் இந்து உயில் சட்டம் ஏற்படுத்தப்பட்டது.

Read more...
 
இஸ்லாமியச் சட்டம் (10) Print E-mail
Thursday, 04 June 2009 07:11

இஸ்லாமியச் சட்டம் (10)

  நீடூர் A.M.சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி  

இஸ்லாமிய சட்டங்களை நோக்கி... 

இன்றைய உலகியல் சட்டங்களும், தீர்ப்புகளும் இஸ்லாமிய ரீஅத் சட்டங்களை நோக்கி மாறிக் கொண்டிருக்கின்றன. இந்திய குற்றவியல் சட்டம் 299-ம் பிரிவு ஒருவரின் உயிரை போக்குவதற்கு தகுந்த செயலைச் செய்து கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை செய்தால் அதைக் கொலைக்குற்றம் என்று குறிப்பிடுகிறது. கொலை செய்யாது மரணம் விளைவிக்கும் குற்றம் பற்றி பிரிவு 300ல் குறிப்பிடப்படுகிறது.

இந்திய குற்றவியல் சட்டம் 302-வது பிரிவின்படி கொலை செய்தவருக்கு மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ அபராதத்துடன் தண்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுவாக ஆயுள் தண்டனை என்பது இருபது வருட சிறை தண்டனையை குறிப்பிடும். அண்மையில் உச்சநீதிமன்றத்தின் ஆயுள் தண்டனை பற்றிய புதிய தீர்ப்பு ஒன்றிய உச்சநீதிமன்ற நீதியரசர்களான றீ.இராஜேந்திரபாபு றீ.ஹி.ஃபுகான் வழங்கிய தீர்ப்பில்

''ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியின் வாழ்க்கை முழுவதையும் பொருத்தாகும். தண்டனை பெற்றவர் சிறைச்சாலையில் நடந்து கொண்ட முறை, அவர் செய்த குற்றம், ஒவ்வொரு வழக்கின் சூழ்நிலை ஆகியவற்றை ஆராய்ந்து அவரை முழுமையான தண்டனை அனுபவிக்கச் செய்வதா அல்லது இடையில் விட்டு விடுவதா என்பதை அரசுதான் முடிவு செய்யும்''.

Read more...
 
வீடு காலி இல்லை... முஸ்லிம்களுக்கு! Print E-mail
Thursday, 09 January 2014 06:32

வீடு காலி இல்லை... முஸ்லிம்களுக்கு!

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகப் பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஆகியவற்றின் வரவு காரணமாக, படித்த நடுத்தரவர்க்கத்தின் இடப்பெயர்வு அதிகரித்திருக்கிறது. சிறு நகரங்கள் எல்லாம் பெருநகரங்கள் என்ற எல்லையைத் தொடுவதற்குக் காத்திருக்கின்றன. கிராமப்புற மனிதர்கள் பிழைப்பு தேடி மாவட்டத் தலைநகரங்களில் அல்லது சென்னைக்கு நகர்வது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதன் மூலம், தமிழ்நாட்டில் சமூக நகர்வு உருவாகியிருக்கிறது. இந்த நிகழ்வு எல்லாச் சமூகங்களுக்கும் சாதகமாக இருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் நிதர்சனம். ஒன்றைப் புறந்தள்ளிவிட்டு மற்றொன்று நகர்வது பன்மைத்தன்மை கொண்ட தமிழ்ச் சூழலுக்கு ஆரோக்கியமானதல்ல.

இடம்பெயரும் முஸ்லிம்கள்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கி, அதே நேரத்தில் நடைபாதைக் கடைகள், பலசரக்கு வியாபாரம் போன்றவற்றைத் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நம்பியிருக்கும் தமிழ் முஸ்லிம் சமூகம், புலம்பெயர்வதன் மூலம் தனக்கான இரையைத்தேடி அலைந்துகொண்டிருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட தமிழ் இஸ்லாமிய இளைஞர்கள் எல்லாம் அரபு நாடுகளில் வாழ்வாதாரத்துக்காகப் படையெடுக்கும் சூழலே பெரும்பாலும் தமிழ்நாட்டில் காணப்படுகிறது.

Read more...
 
பேய் இருப்பது உண்மையா? Print E-mail
Saturday, 25 January 2014 07:34

பேய்களைப்பற்றிய சுவாரஸ்யமான கட்டுக்கதைகள்

பேய் இருப்பது உண்மையா?

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
வெளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க;
உன் வீரத்தைக் குழுந்திலேயே கிள்ளி வப்பாங்க.
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே -நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!

- இந்தப் பாடல் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.

பேய், பூதம், பிசாசு, ஆவி மூடநம்பிக்கைகள். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கை உண்டு. தொலைக்காட்சித் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஊடக வியாபாரிகள் கிராபிக்ஸைப் பயன்படுத்தி பேய் அச்சத்தை இன்னும் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பகுத்தறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் நாம் கேள்விகளை எழுப்பி வருகிறோம். இதுவரை யாரும் பதில் சொன்னதில்லை. மாறாக அவர் சொன்னார் என்றோ, நான் பார்த்தேன் என்றோ சொல்லித் தப்பிவிடுவார்கள்.

எங்களுக்குக் காட்டு என்றால் அதற்கு உடன்பட மாட்டார்கள். மூடநம்பிக்கை வணிகர்களின் பித்தலாட்டங்கள் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்க அமெரிக்காவிலிருந்து வெளிவரும் skeptical inquirer மாதமிருமுறை இதழின் மேலாண்மை ஆசிரியர் பெஞ்சமின் ரட்ஃபோர்ட் (Benjamin Radford) எழுதியுள்ள இந்தக் கட்டுரை அறிவியல் பூர்வமாக பேய்-பிசாசு பற்றி ஆராய்கிறது.

Read more...
 
எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!! Print E-mail
Saturday, 16 August 2008 19:49

Image result for ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

சாப்பிட்டவுடன் 'டூ பாத்ரூம்' போனால் 'ஆண்மைக்குறைவு' ஏற்படும். அதுவும் இரவு நேர சாப்பாடு முடிந்த உடனேயே 'டூ பாத்ரூம்' போவது, வேண்டவே வேண்டாம்!

அதிலும் புது மாப்பிள்ளைகள் இதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சில ஆண்களின் முதல் இரவு அனுபவம் இதன் காரணமாகக்கூட தோல்வியில் முடிய வாய்ப்புண்டு.

அதனால் தனக்கு உடல் வலு இல்லையோ என்று குழம்பிப்போகக்கூடும். ஆகவே இதில் அலட்சியமாக இருந்து விட்டு கை சேதப்பட வேண்டாம்.

Read more...
 
விஞ்ஞான தொழில்நுட்ப புரட்சி Print E-mail
Saturday, 23 August 2008 17:15

எதுவுமேயில்லாமல் வந்தவன் ஒரு கஃபன் துணியை சுருட்டிக் கொண்டு போய் விடுகிறான். இந்தக் கஃபனுக்கு முன்னால் எதையெல்லாமோ தன்னுடன் இணைத்துக் கொள்கிறான். இந்த ஒட்டுதல் அரைஞாண் கயிற்றில் ஆரம்பமாகிறது. அரை டவுசர், மேலாடை, உள்ளாடை, கைக்கடிகாரம், வளையல், மோதிரம், காதணி, கழுத்தணி என எதெல்லாமோ அவனோடு-அவளோடு இணைந்து விடுகிறது. இந்த வகையான ஒட்டுதலில் செல்போன் அட்டையாய் அவனோடு ஒட்டிக்கொண்டு விட்டது. செல்லின்ன்றிச் செல்வதில்லை. அவன் சொல்லெல்லாம் செல்லிலே! கழிப்பறையில் கூட 'ஹலோ" சொல்லுகிறான்.

உங்கள் பெயரென்ன? என்பதை விட 'உங்கள் நம்பரைச் சொல்லுங்கள்" என நம்பரால் நபரை அடையாளம் வைக்கிறான். முகவரியில் முகம் தேடுகிறான்.

செல்போன் பயன்பாடு கோடிக்கணக்கில் பெருகி அங்கிங்கெனாதபடி ஆனந்தமாய் காட்சியளிக்கிறது. நல்லது தான். நம்முடைய வருத்தமெல்லாம் இவ்வளவு அற்புத அழகிய கண்டெடுப்பையும் இவனுக்கு கையாளத் தெரியவில்லையே என்பது தான். இதற்காக யாரேனும் 'செல்போன் உபயோகிக்கும் அழகிய வழிமுறைகள்" என நூலொன்றை தமிழ் கூறும் நல்லுலகிற்கு யாத்துத் தந்தால் தேவலை. (சிறு தகவல் அனுப்புதல் (sms) குறித்து நல்ல வார்த்தைகளைக் கோர்த்து அரபுமொழியில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

Read more...
 
இஸ்லாத்தை நோக்கிய பிரிட்டன் – அதிர்ந்து போயுள்ள கிறிஸ்தவ உலகம்..! Print E-mail
Wednesday, 25 June 2014 06:04

இஸ்லாத்தை நோக்கிய பிரிட்டன் – அதிர்ந்து போயுள்ள கிறிஸ்தவ உலகம்..!

ஜெர்மனி, ஹாலந்தில் அதிகரிக்கும் முஸ்லிம்கள்

மிக விரைவில் ஹலால் உணவு அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் – பிரிட்டிஷ் பிரதமர்!

பிரிட்டனில் பாங்குமேடையுடன் முதல் பள்ளி

தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.

இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் எண்ணிக்கை உயருகின்றது

பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் இலட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறிஸ்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்து கொண்டிருகின்றனர். ''இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்'' என்ற தலைப்பில் “The Independent” என்ற பிர ட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வுத் தகவலைவெளியிட்டுள்ளது.

ஆங்கிலப் பத்திரிகைத் தொகுப்பு:

(பார்க்க: http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)

கிறிஸ்தவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறிஸ்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால், தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.

Read more...
 
ஹஸீனா அம்மா பக்கங்கள் (4) Print E-mail
Thursday, 15 September 2016 07:11

ஹஸீனா அம்மா பக்கங்கள் (4)

      குழந்தை வளர்ப்பு      

"ஒரு மனிதன் தன் குழந்தைக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுப்பது ஒரு மரக்கால் தானியம் தர்மம் செய்வதைவிடச் சிறந்தது" ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

சதக்கா (தர்மம்) செய்வது சிறப்புடையதே, எனினும் தம் மக்கட்கு ஒழுக்கம் கற்றுக்கொடுப்பது அதிலும் சிறப்பானதாகும்.

"தந்தை தன் மக்களுக்குச் செய்யும் நன்கொடையில் சிறந்தது நல்ல கல்வியும், சிறந்த ஒழுக்கத்தையும் கற்றுத்தருவதாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

நல்ல கல்வியும், சிறந்த ஒழுக்கமும் இருந்தால் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமை, அடியானுக்கு செய்ய வேண்டிய கடமை முதலியவற்றை உணர்ந்து நிறைவேற்ற முயலுவான். இல்லையெனில், மக்களாலும், பொருளாசையாலும் இம்மை, மறுமை இரண்டுமே சீர்படாது கெட்டொழிந்துவிடும்.

Read more...
 
மக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்! Print E-mail
Thursday, 25 October 2012 07:18

மக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்!

நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும்.

மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது.

நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான்.

1500 வருடங்களுக்கு முன்னால் மடமை நிறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடிப்பதில் பெருமை, விபச்சாரம் செய்வதில் பெருமை, கொள்ளை அடிப்பதில் பெருமை, கொலை செய்வதில் பெருமை, சூதாடுவதில் பெருமை, மூட நம்பிக்கைகளில் பெருமை என அனைத்து வகை ஒழுங்கீனங்களிலும் பெருமை பேசும் சமுதாயமாக மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருந்த காலம்.

தகப்பனுக்குப் பின்னால், தகப்பனின் மனைவிகளையே தாரமாக்கிக் கொள்ளும் மடமை. அளவுக்கதிகமான பெண்களை தாரமாக்கிக் கொள்வதில் பெருமை, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண் சிசுக்களை உயிரோடு குழிதோண்டிப் புதைக்கும் அராஜகம், அற்ப காரணங்களுக்காக தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொள்ளும் கோரம், இப்படி அன்றைய மனித குலம் நரக விளிம்பில் நின்று கொண்டிருந்தது. இந்த நிலையை இறைவனது இறுதி வாழ்க்கை வழி காட்டி நெறிநூல் 3:103-வது இறைவாக்கில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

Read more...
 
குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள் Print E-mail
Sunday, 07 March 2010 19:09

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்

[ நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.

இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.

குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு.

அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் ''கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது'' என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும்.இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.]

Read more...
 
அமெரிக்காவை இஸ்லாம் ஆளும், இன்ஷா அல்லாஹ் Print E-mail
Tuesday, 18 September 2012 21:48

அமெரிக்காவை இஸ்லாம் ஆளும், இன்ஷா அல்லாஹ்   

அமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்

இஸ்லாத்தையும், உத்தம தலைவரையும் கிறிஸ்தவ, யூத சியோனிச பயங்கரவாதம் எதிர்ப்பதற்கு காரணம் என்ன?

அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் மிக வேகமாக பரவும் மார்க்கம்.

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.

இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 99 100 Next > End >>

Page 98 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article