வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5



Link -7

bismillah1 (2)

விஞ்ஞான தொழில்நுட்ப புரட்சி Print E-mail
Saturday, 23 August 2008 17:15

எதுவுமேயில்லாமல் வந்தவன் ஒரு கஃபன் துணியை சுருட்டிக் கொண்டு போய் விடுகிறான். இந்தக் கஃபனுக்கு முன்னால் எதையெல்லாமோ தன்னுடன் இணைத்துக் கொள்கிறான். இந்த ஒட்டுதல் அரைஞாண் கயிற்றில் ஆரம்பமாகிறது. அரை டவுசர், மேலாடை, உள்ளாடை, கைக்கடிகாரம், வளையல், மோதிரம், காதணி, கழுத்தணி என எதெல்லாமோ அவனோடு-அவளோடு இணைந்து விடுகிறது. இந்த வகையான ஒட்டுதலில் செல்போன் அட்டையாய் அவனோடு ஒட்டிக்கொண்டு விட்டது. செல்லின்ன்றிச் செல்வதில்லை. அவன் சொல்லெல்லாம் செல்லிலே! கழிப்பறையில் கூட 'ஹலோ" சொல்லுகிறான்.

உங்கள் பெயரென்ன? என்பதை விட 'உங்கள் நம்பரைச் சொல்லுங்கள்" என நம்பரால் நபரை அடையாளம் வைக்கிறான். முகவரியில் முகம் தேடுகிறான்.

செல்போன் பயன்பாடு கோடிக்கணக்கில் பெருகி அங்கிங்கெனாதபடி ஆனந்தமாய் காட்சியளிக்கிறது. நல்லது தான். நம்முடைய வருத்தமெல்லாம் இவ்வளவு அற்புத அழகிய கண்டெடுப்பையும் இவனுக்கு கையாளத் தெரியவில்லையே என்பது தான். இதற்காக யாரேனும் 'செல்போன் உபயோகிக்கும் அழகிய வழிமுறைகள்" என நூலொன்றை தமிழ் கூறும் நல்லுலகிற்கு யாத்துத் தந்தால் தேவலை. (சிறு தகவல் அனுப்புதல் (sms) குறித்து நல்ல வார்த்தைகளைக் கோர்த்து அரபுமொழியில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

Read more...
 
இஸ்லாத்தை நோக்கிய பிரிட்டன் – அதிர்ந்து போயுள்ள கிறிஸ்தவ உலகம்..! Print E-mail
Wednesday, 25 June 2014 06:04

இஸ்லாத்தை நோக்கிய பிரிட்டன் – அதிர்ந்து போயுள்ள கிறிஸ்தவ உலகம்..!

ஜெர்மனி, ஹாலந்தில் அதிகரிக்கும் முஸ்லிம்கள்

மிக விரைவில் ஹலால் உணவு அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் – பிரிட்டிஷ் பிரதமர்!

பிரிட்டனில் பாங்குமேடையுடன் முதல் பள்ளி

தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.

இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் எண்ணிக்கை உயருகின்றது

பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் இலட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறிஸ்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்து கொண்டிருகின்றனர். ''இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்'' என்ற தலைப்பில் “The Independent” என்ற பிர ட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வுத் தகவலைவெளியிட்டுள்ளது.

ஆங்கிலப் பத்திரிகைத் தொகுப்பு:

(பார்க்க: http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)

கிறிஸ்தவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறிஸ்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால், தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.

Read more...
 
ஹஸீனா அம்மா பக்கங்கள் (4) Print E-mail
Thursday, 15 September 2016 07:11

ஹஸீனா அம்மா பக்கங்கள் (4)

      குழந்தை வளர்ப்பு      

"ஒரு மனிதன் தன் குழந்தைக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுப்பது ஒரு மரக்கால் தானியம் தர்மம் செய்வதைவிடச் சிறந்தது" ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

சதக்கா (தர்மம்) செய்வது சிறப்புடையதே, எனினும் தம் மக்கட்கு ஒழுக்கம் கற்றுக்கொடுப்பது அதிலும் சிறப்பானதாகும்.

"தந்தை தன் மக்களுக்குச் செய்யும் நன்கொடையில் சிறந்தது நல்ல கல்வியும், சிறந்த ஒழுக்கத்தையும் கற்றுத்தருவதாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

நல்ல கல்வியும், சிறந்த ஒழுக்கமும் இருந்தால் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமை, அடியானுக்கு செய்ய வேண்டிய கடமை முதலியவற்றை உணர்ந்து நிறைவேற்ற முயலுவான். இல்லையெனில், மக்களாலும், பொருளாசையாலும் இம்மை, மறுமை இரண்டுமே சீர்படாது கெட்டொழிந்துவிடும்.

Read more...
 
மக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்! Print E-mail
Thursday, 25 October 2012 07:18

மக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்!

நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும்.

மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது.

நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான்.

1500 வருடங்களுக்கு முன்னால் மடமை நிறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடிப்பதில் பெருமை, விபச்சாரம் செய்வதில் பெருமை, கொள்ளை அடிப்பதில் பெருமை, கொலை செய்வதில் பெருமை, சூதாடுவதில் பெருமை, மூட நம்பிக்கைகளில் பெருமை என அனைத்து வகை ஒழுங்கீனங்களிலும் பெருமை பேசும் சமுதாயமாக மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருந்த காலம்.

தகப்பனுக்குப் பின்னால், தகப்பனின் மனைவிகளையே தாரமாக்கிக் கொள்ளும் மடமை. அளவுக்கதிகமான பெண்களை தாரமாக்கிக் கொள்வதில் பெருமை, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண் சிசுக்களை உயிரோடு குழிதோண்டிப் புதைக்கும் அராஜகம், அற்ப காரணங்களுக்காக தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொள்ளும் கோரம், இப்படி அன்றைய மனித குலம் நரக விளிம்பில் நின்று கொண்டிருந்தது. இந்த நிலையை இறைவனது இறுதி வாழ்க்கை வழி காட்டி நெறிநூல் 3:103-வது இறைவாக்கில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

Read more...
 
குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள் Print E-mail
Sunday, 07 March 2010 19:09

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்

[ நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.

இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.

குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு.

அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் ''கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது'' என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும்.இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.]

Read more...
 
அமெரிக்காவை இஸ்லாம் ஆளும், இன்ஷா அல்லாஹ் Print E-mail
Tuesday, 18 September 2012 21:48

அமெரிக்காவை இஸ்லாம் ஆளும், இன்ஷா அல்லாஹ்   

அமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்

இஸ்லாத்தையும், உத்தம தலைவரையும் கிறிஸ்தவ, யூத சியோனிச பயங்கரவாதம் எதிர்ப்பதற்கு காரணம் என்ன?

அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் மிக வேகமாக பரவும் மார்க்கம்.

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.

இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.

Read more...
 
லிப்ஸ்டிக் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் வெளியில் செல்லலாமா? Print E-mail
Tuesday, 21 September 2010 08:20

o  லிப்ஸ்டிக் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் வெளியில் செல்லலாமா?

o  மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா?

o  பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?

o  நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்களே! இது சரியா?

o  பெண்கள் பள்ளியில் தொழ இறைவன் தடைவிதித்தாக 'குர்ஆன்' வசனத்தில் உள்ளதா?

Read more...
 
மாமியார் மெச்சும் மருமகளாக! Print E-mail
Tuesday, 05 July 2011 09:59

மாமியார் மெச்சும் மருமகளாக!

o  அம்மாவிடம் மகன் பாசமாய் இருப்பது இயல்பே!

o  சிக்கலில் மிக நுட்பமான பகுதி!

o  வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்!

o  மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசுங்கள்!

o  மாமியாருக்கு மதிப்பு கொடுங்கள்!   

o  புகுந்த வீட்டிலும் இயல்பாக இருங்கள்

o  மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற காரணங்கள் பல!

o  வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்!

o  மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்துங்கள்!

o  குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள்!

o  பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். அதை வீட்டுக்கு வரும் மருமகள் மறக்க வேண்டாம்.

Read more...
 
அம்மா உன்னை நேசிக்கிறேன்.... Print E-mail
Thursday, 29 July 2010 12:31

இந்த பூவுலகில் எத்தனையோ உறவுகள் பேனப்பட்டாலும், நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒரு ஆதாயம் நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும் இயற்க்கையாகவே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த உலகில் எந்த எதிப்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு..

இன்று இந்த அன்பிற்க்காக ஏங்கும் பலரைப் பார்க்க முடிகின்ற இவ்வேளையில், இந்த அன்பு கிடைக்கப்பெற்றும் நம்மில் எத்தனைப்பேர் நமது தாயை நேசித்து இருக்கிறோம்..? ஆங்கிலத்தில் ஒரு தத்துவமுண்டு ( Father is a Faith but Mother is a Fact ) அதாவது தந்தை என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விடயம்.

நமது தாய் சொன்னால்தான் தந்தை யார்ரென்பது நமக்கே தெரியும். ஆனால் தாய் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. தாய்க்கும், சேய்க்கும் இயற்க்கையாகவே ஒரு பினைப்பு இருக்கிறது. இந்த வேளையிலே நான் என் தாயை நினைத்துப் பார்கிறேன். அவள் எனக்காகப் பட்ட துன்பங்களையும், ஏற்றுக் கொண்ட தியாகங்களையும் என் விழியில் நிழலாடுகின்றது..

Read more...
 
ஹபாயா தான் பெண்களுக்கான இஸ்லாமிய ஆடையா? Print E-mail
Monday, 27 September 2010 07:50

ஹபாயா தான் பெண்களுக்கான இஸ்லாமிய ஆடையா?

       Rasmin M.I.Sc (India)         

இன்றைய நவீன உலகில் எந்த ஒரு மார்கமும் ஏற்படுத்தாத அளவுக்கு பல விதமான தாக்கங்களையும் உண்டு பண்ணக் கூடிய மார்கம் உண்டெண்ரால் அது இஸ்லாமிய மார்கமாகத்தான் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

அதிலும் இந்த மார்கத்தை பின்பற்றக் கூடியவர்கள் இந்த மார்கத்தை பின்பற்றாத சிலரால் கடுமையாக விமர்சிக்கப் படுகிறார்கள்.

அதிலும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள பலவிதமான உரிமைகளைப் பற்றியும் பலர் விமர்சனம் செய்கிறார்கள் அதிலும் குறிப்பாக பெண்களின் ஆடைகள் தொடர்பில் இன்று பலவிதமான சர்சைகள் ஏற்படுத்தப் படுகின்றன.

ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கண்ணியத்தின் உச்சகட்டமாகவே அவர்களின் உடலை மறைக்கும் விதமான சிறப்பான ஆடை முறையை ஏற்படுத்தியுள்ளது.

காட்டு மிராண்டிகளாக,கல் வணக்கம் செய்பவர்களாக நாகரீகம் என்றால் என்னவென்றே புரியாதவர்களாக பெண்களை ஒரு போதைப் பொருளாகப் பார்த்தவர்களிடம் பெண்களுக்கும் ஆன்மா உண்டென்று உணர்த்தியது இந்த இஸ்லாம் தான்.

பெண்னென்றால் அவள் ஒரு ஜடமாகவே பல ஆயிரம் ஆண்டுகளாக பார்க்கப் பட்டால் ஆனால் அவளை ஒரு உயிரோட்டமுள்ள ஜீவனாக இந்த உலகுக்கு இஸ்லாமே காட்டியது.

Read more...
 
'பணமற்ற பொருளாதாரம்’ என்ற மோடியின் மோசடி Print E-mail
Friday, 02 December 2016 08:21

'பணமற்ற பொருளாதாரம்' என்ற மோடியின் மோசடி!

மக்களின் 'அந்தரங்கம்' கடுமையாக பாதிக்கப்படும்!

    ஆரூர் ஸலீம்    

1968ல், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு கம்ப்யூட்டேசன் சென்டரின் இயக்குனராக இருந்தவர், பேராசிரியர் பால் ஆர்மர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பெரிதாக இல்லாத அந்த காலகட்டத்திலேயே, மக்கள் நேரடிப்ப ரிவர்த்தனையிலிருந்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறும்போது, அவர்களின் அந்தரங்கம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தார்; அது ஆபத்தானது என்று தொடர்ந்து தனது அச்சத்தை வெளியிட்டு வந்தார்.

இன்றைய நிலையில், அவருடைய கவலையும் கணிப்பும் உண்மையாகி உள்ளது.

பணமில்லாத சமுதாயமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் லட்சியம் என்று தனது ரேடியோ உரையில் பிரதமர் மோடி கூறியுள்ளார். அதற்காகவே, ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாமல் ஆக்கினேன் என்று சொல்லியுள்ளார்.

கறுப்பு பண ஒழிப்புக்காகவே இந்த நடவடிக்கை என்று முதலில் கூறிய மோடி, தற்போது தனது நோக்கம் குறித்த உண்மையை கொண்டுள்ளது மகிழ்ச்சிதான். இதுதவிர, அவர் சொல்லாத உண்மை ஒன்றும் இருக்கிறது. அது, டிஜிட்டல் பண பரிவர்த்தனையால், யாருக்கு உண்மையிலேயே நன்மை ஏற்படும் என்பதை பற்றியும், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றியும்தான்.

Read more...
 
இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும் Print E-mail
Sunday, 05 January 2014 06:31

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும்

வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை

இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் – அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். சிலர் இஸ்லாம் கருணையில்லாத – காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு சிறிய கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ – அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு – தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?.

நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் – வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து கொல்வோம் என்றும் சொன்னார்கள்.

Read more...
 
ஆரோக்கியமான உலகுக்கு தூய்மையான தண்ணீர் Print E-mail
Wednesday, 24 March 2010 08:16

"உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை."  (அல்குர்ஆன்7:31)

உலகம் முழுவதும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டிற்கான தண்ணீர் தின முழக்கமாக "ஆரோக்கியமான உலகுக்கு தூய்மையான தண்ணீர்" என அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கடைப்பிடிக்கத் துவங்கி பல்வேறு தலைப்புகளில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த முழக்கங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு தண்ணீரைக் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் தன்னார்வலர்களும் ஐ.நாவின் துணை அமைப்புகளின் பணியாளர்களும் உலக முழுவதும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். ஆண்டுக்கொரு முறை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மட்டும் ஈடுபடுவதிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கடைபிடிப்பதிலோ எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஏனெனில் ஆண்டுதோறும் தண்ணீர் தேவையின் அதிகரிப்பு ஒரு புறம் அதிகரிக்கும் சூழலில் தூய்மையான தண்ணீரின் தட்டுப்பாடும் அதிகரிக்கவேச் செய்கின்றது.

Read more...
 
அறிவியல் சுற்றுலாக்களும் அரங்கேற்றப்படும் அந்நிய ஜாஹிலிய்யத்துக்களும் Print E-mail
Monday, 23 April 2012 17:28

வழிதவறிப்போகும் மதரஸாக்கள்!  

[ உண்மைகளை உரைக்க வேண்டிய உலமா சமூகமும் உறக்கத்தில் உரைந்து கிடக்கிறது.]

இவ்வாக்கத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் ஸ்ரீலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரம்புமீறிய செயல்களாகும். அண்டை நாட்டில் இந்த அளவு முன்னேறி (!!!) இருக்கிறார்கள் எனும்பொழுது நாங்கள் மட்டும் என்ன குறைந்தவர்களா? என்று தமிழகத்திலுள்ள சில பழம்பெரும் மதரஸாக்களும் சுற்றுலா எனும் பெயரில் மதரஸா மாணவர்களை இழுத்துக்கொண்டு ஊர் ஊராக தர்ஹாக்களை வலம் வந்து விட்டு பொதுமக்கள் கேட்கும்போது வேறுவிதமான பதிலைக்கூறி தப்பிப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அல்லாஹ்வின்மீது முழுமையான நம்பிக்கைகொள்ளும் உறுதியான ஈமானை மதரஸா மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைக்காமல், கல்வி கற்கும் காலத்திலேயே அவர்களது ஈமானை கெடுத்து அவர்களுக்கு பட்டமும் வழங்கி அவர்களை வெளியில் அனுப்பும்போது எவ்வளவு சமுதாயச் சீர்கேடு உண்டாகும் என்பதை ஒவ்வொரு ஊரின் அறிந்தவர்களும், கல்வியாளர்களும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

மார்க்கத்தை அறிவதற்கு மதரஸாக்களை விட்டால் வேறு வழியில்லை எனும் காலத்தில் நாம் வாழ்வில்லை. நம் முன்னோர்களின் காலத்தைப்பற்றி அல்லாஹ் நம்மிடம் கேள்வி கேட்க மாட்டான். ஆனால், மார்க்கம் சம்பந்தப்பட்ட அனைத்து விளக்கங்களும் கடல்போல் பரவிக்கிடக்கும் இக்காலத்தில், பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள்கூட ஆர்வத்தோடு மார்க்கம் சம்பத்தப்பட்ட உண்மையான விஷயங்களை அறிந்து அதன்படி செயல்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகமுள்ள காலத்தில் வாழக்கூடிய நாம் அலட்சியமாக இருந்தோமானால் நமது அடுத்த தலைமுறை ஜாஹிலியாக்களாகத்தான் உருவாகும்.

Read more...
 
ஹஸீனா அம்மா பக்கங்கள் (6) Print E-mail
Thursday, 22 September 2016 07:57

ஹஸீனா அம்மா பக்கங்கள் (6)

பதவி உயர்வு தருபவை :

பத்து விஷயங்கள் ஓர் அடியானை சிறப்பிற்குறியவர்களின் ஸ்தானத்திற்கு உயர்த்திவிடும்.

1. அதிகமாக தர்மம் செய்வது.

2. அதிகமாக குர்ஆன் ஓதுவது.

3. உலகை விட்டு மறுமையை நினைவுகூர்பவருடன் அமர்வது.

4. உறவினரைச் சேர்ந்து வாழ்வது.

5. நோயாளியை விசாரிப்பது.

6. மறுமையை மறக்கச்செய்யும் பணக்காரர்களுடன் கலந்துறவாடாமல் இருப்பது.

7. மரணத்திற்குப் பின் செல்ல வேண்டிய இடம் பற்றி அதிகம் சிந்தனை செய்வது.

Read more...
 
"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (12) Print E-mail
Saturday, 10 September 2016 07:11

{jcomments on}

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (12)

என் கணவர் ஸலவாத் ஓதுவதில் மிகவும் ஈடுபாடு உள்ளவர்கள். ஸலவாத் பற்றிய நூல்கள் பலவற்றை வாங்கி பிள்ளகளுக்கும், மற்றவர்களுக்கும் கொடுத்து ஸலவாத் ஓதுவதை மிகவும் ஊக்குவிப்பவர்களாக இருந்தார்கள்.

புதிகாக சீவப்பட்ட தென்னங்குச்சிகளை தீப்பெட்டி குச்சிகளைவிட சற்று நீளமான அளவில் ஒரு கோப்பை முழுக்க வைத்திருப்பார்கள். ஆயிரம் ஓதியதும் ஒரு குச்சியை வேறு கோப்பையில் போடுவார்கள்.

இதுபோன்று ஓதி ஓதி கோப்பை நிறைந்ததும் திரும்பவும் ஓதுவார்கள். லட்சக்கணக்கில் ஓதினார்களா, கோடிக்கணக்கில் ஓதினார்களா என்பது அல்லாஹ்வுக்குத்தான் தெரியும்.

பிள்ளைகள் அனைவரும் குல்ஹுவல்லாஹு சூராவை அதிகமதிகம் ஓத ஊக்குவிப்பார்கள். வாகனத்தில் செல்லும்போது ஓதுவது எளிது என்பார்கள்.  அதனால் பிள்ளைகள் மாயூரத்தில் பள்ளிக்கூடத்தில் படிக்க மாட்டுவண்டியில் செல்லும்போது 200 முறை குல்ஹுவல்லாஹு சூராவை எளிதாக ஓதிவிடும்.

இப்பொழுதும் வெளியில் செல்லும்போதெல்லாம் ஓதிக்கொண்டே செல்லும் பழக்கம் என் பிள்ளைகளுக்கு உண்டு. இதனால் எவ்வளவு தூரம் சென்றாலும் களைப்பே தெரியாது. எல்லாம் என் கணவரின் வழிகாட்டுதல் தான். அல்ஹம்துலில்லாஹ்.

Read more...
 
"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (11) Print E-mail
Friday, 09 September 2016 07:19

{jcomments on}

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (11)

ஒருநாள் என் மகன் டாக்டர் ஹாரூனை (முன்னால் முஸ்லிம் லீக் MLC வடகரை M.M.பக்கர் அவர்களின் மூத்த மகனார்) சந்தித்து வந்தபின் சந்தோஷமாக, "டாக்டர் ஹாரூன் தன்னை அவரது தம்பியின் கடைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு கிளியனூர் மதரஸாவின் முதல்வரும், ஜமாஅத்துல் உலமா தலைவருமான அப்துஸ்ஸலாம் ஹஜ்ரத் மிஸ்பாஹி அவர்களை சந்தித்ததாகவும் கூறினார்.

டாக்டர் ஹாரூன் என் மகன் முஹம்மது அலீயை ஹஜ்ரத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். டாக்டர் ஹாரூன் ஹஜ்ரத் அவர்களிடம் அந்த காலத்தில் நீடூரில் அப்துல் வஹ்ஹாப் என்பவரை   தெரியுமா?" என்று கேட்டதும் ஹஜ்ரத் மகிழ்ச்சியுடன், "தெரியுமே, மிகச்சிறந்த மனிதர். நீடூர் நெய்வாசல் பெரியபள்ளியில் நான் மக்தப் ஆசிரியராக இருந்தபோது அவரது இரண்டு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறேன்" என்றார்கள்.

அப்போது டாக்டர் ஹாரூன், "அதில் ஒருவர் தான் இவர்" என்று என் மகன் முஹம்மது அலீயை சுட்டிக் காண்பித்ததும் ஹஜ்ரத் அவர்கள் மிகவும் மகிழ்ந்து, "உங்கள் தந்தையை எனக்கு நன்றாகத் தெரியும். நீடூரில் நம்பர் ஒன் நல்ல மனிதராக இருந்தவர்" என்றார்கள். அதைக்கேட்டு டாக்டர் ஹாரூனும், தானும் மிகவும் மகிழ்வுற்றதாக என் மகனும் கூறினார்.

Read more...
 
"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (2) Print E-mail
Wednesday, 31 August 2016 07:35

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை"  (2)  

1942 ஆம் வருடம் ஒரு நாள் மதியம் கடையில் நான் கைக்குட்டையில் எம்பிராய்டரி செய்து கொண்டிருந்தேன். நான் எம்பிராய்டரி செய்த கைக்குட்டைகள், பின்னிய உல்லன் தொப்பி போன்றவற்றை விற்றால் கிடைக்கும் பணம் எனக்குறியது. கடைக்கு வரும் ஏழை மாணவியர்களுக்கு அந்தப் பணத்தில் புத்தகம் அல்லது நோட்டு வாங்கிக் கொடுத்து விடுவேன்.

அப்போது ஒரு இந்திய வாலிபர் கடைக்கு வந்து ஒரு நோட்டும், ஒரு பேனாவும் வாங்கினார். நான் விற்பனை செய்து விட்டு மீண்டும் எம்பிராய்டரி வேலையில் மூழ்கினேன். பக்கத்துக் கடை பெண்மணி என்னிடம் வந்து சிரித்துக் கொண்டே, "நீ விரைவில் ஒரு இந்தியரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்" எனக் கூறினார். நான் கோபத்துடன் "என்ன உளறுகிறீர்கள்?" என்றேன்.

"நான் சொல்வது உண்மை தான். அந்த இளைஞர் உன் கடையில் நோட்டு வாங்கும்பொழுது கடைக்கு சற்று தள்ளி நான்கு இந்தியர்கள் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அந்த இளைஞர் வந்ததும் ஐவரும் இப்ராஹீம் (என்பவரின்) கடைக்குச் சென்று விட்டார்கள். அதனால் தான் சொல்கிறேன், அவர்கள் உன்னை பெண் கேட்கத்தான் வந்திருந்தார்கள் என நினைக்கின்றேன்" என்று அந்த பக்கத்து கடைப் பெண்மணி கூறிவிட்டு சென்றார்.

Read more...
 
அல்குர்ஆன் ஓர் அற்புதம் (1) Print E-mail
Monday, 28 December 2009 11:56
அல்குர்ஆன் ஓர் அற்புதம் (1)
 
    'இறையருட் கவிமணி' கா.அப்துல் கபூர், எம்.ஏ.டி.லிட்.   

[ ''There is probably in the world no other book which has remained twelve centuries with so pure a text'' (பன்னிரு நூற்றாண்டுகளாகப் பாருலகில் இத்துணைத் தூய்மையுடன் நின்றிலங்கும். இன்னொரு நூலே கிடையாது) என்பார் பாதிரியார் வில்லியம் மூர்

அற்புதங்கள் பலவற்றை விளைவித்துக் காலத்தின் கோலத்தால் கவர்ச்சியை இழந்து விடாமல் பூத்துக் குலுங்கும் அறிவு வளர்ச்சியினால் புதுமை மாறிவிடாமல், இன்றளவும் இணையற்ற நூலாய் விளங்கி வருகின்றதுஅல்குர்ஆன். இத்தகைய அற்புதங்களை ஆறறிவு படைத்த அற்புத மனிதன் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?.]

வையகத்து மக்கள் வாய்பிளந்து வியக்கின்ற அற்புதங்கள் பலவற்றை ஏடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

எகிப்து நாட்டில் ஏற்றத்துடன் மிளிர்கின்ற பிரமிடுகள் எனப்படும் பட்டைக் கோபுரங்கள். அவற்றின் அருகாமையில் 66 அடி உயரத்திலும் 175 அடி நீளத்திலும் ஒற்றைக் கல்லில் உருவாக்கப்பட்டுள்ள ஸஃபிங்கஸ் எனப்படும் சிங்க வடிவச் சிலை.

இராக் நாட்டில் புராத் நதிக்கரையில் திகழ்ந்த பண்டைய பாபிலோனியாவின் தொங்குதோட்டம்.

கிரேக்க நாட்டில் 127 சலவைக் கற்களின் மீது நிறுவப்பட்டிருக்கும் 60 அடி உயரமுடைய ஆர்ட்டிமிஸ் ஆலயம்.

ஹெலிகார்னஸஸ் என்னுமிடத்தில் எழில்மிகு தோற்றத்துடன் எழுப்பப்பட்ட மெளஸலஸ் மண்ணறை.

ரோட்ஸ் நகரத்தில் கிரேக்கர்களின் கதிர்க்கடவுளுக்காக 109 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வெண்கலச் சிலை.

அலெக்சாந்திரியாவில் 600 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட கலங்கரை விளக்கம்.

சீன நாட்டின் வட எல்லையில் 2550 மைல் நீளத்தில் நிருமாணிக்கப்பட்ட உயரமான நெடுஞ்சுவர்.

பைசா நகரத்தில் 116 அடி உயரத்தில் சாய்ந்து நிற்கின்ற கோபுரம்.

பேரரசர் ஷாஜஹான் துணைவியார் மீது கொண்ட காதற் சின்னம் கண்ணீர்த்துளியாக உறைந்துவிட்ட தாஜ் மஹால். இவைகளெல்லாம் பாருலகம் கண்ட பேரற்புதங்களாகப் போற்றப்படுகின்றன. இவற்றினும் மேலான சில அற்புதங்களைப் பற்றி மனிதன் சிந்திப்பதே இல்லை.

Read more...
 
ஹஸீனா அம்மா பக்கங்கள் (3) Print E-mail
Thursday, 25 August 2016 12:01

ஹஸீனா அம்மா பக்கங்கள் (3)

(23 08 2016 அன்று இரவு 9 மணியளவில், தனது 91 ஆவது வயதில் அல்லாஹ்வின் நாட்டப்படி இவ்வுலகில் தனது இறுதி மூச்சாக "லாஇலாஹ இல்லல்லாஹ்" வை மொழிந்து  அவனளவில் மீள, மறுமைப்பயணத்தை மேற்கொண்டுள்ள   எங்களின்  அன்புத்  தாயார் ஹஸீனா பீவி அவர்கள் அவ்வப்போது நூல்களைப்பார்த்து எழுதி வைத்திருந்த குறிப்புகளின் தொகுப்பாகும் இது. -adm. nidur.info]

ஒவ்வொரு நாளும் 

ஒவ்வொரு நாளும் விடிந்திடும் முன்
ஒழுங்காய் எழுந்து தொழுதிடுவாய்!

ஒவ்வொரு நாளும் முறையாக
ஒழுங்காய் குர்ஆன் ஓதிடுவாய்!

ஒவ்வொரு நாளும் ஸலவாத்தை
உள்ளங் குளிர ஓதிடுவாய்!

ஒவ்வொரு நாளும் உன் உடலும்
உடையும் தூய்மை செய்திடுவாய்!

ஒவ்வொரு நாளும் பிறருக்காய்
உதவி புரிந்து வாழ்ந்திடுவாய்!

Read more...
 
Islamic scholar Zakir Naik has served a defamation notice to Times Now TV channel seeking the compensation to the tune of Rs 500 crore Print E-mail
Saturday, 30 July 2016 09:16

Islamic scholar Zakir Naik has served a defamation notice to Times Now TV channel seeking the compensation to the tune of Rs 500 crore.

In legeal notice served on Friday, Naik’s lawyer, Mubin Solkar said that Times Now through its flagship programme, “The Newshour Debate” had continued to make ‘false and defamatory statements against’ the Islamic preacher, ‘thereby tarnishing and damaging my client’s reputation in the eyes of the general public.

Among those made liable for defamation are the channel’s editor-in-chief, Arnab Goswami, Megha Prasad, the channel’s Mumbai bureau chief and the channel’s CEO, Sunil Lulla.

Arnab has been running a campaign often under hashtag #StopZakirNaik on his prime time debate. Times Now was recently left red-faced after it emerged that one of its reporters had twice recorded interviews with Zakir Naik because the first interview wasn’t allegedly deemed sensational enough.

Read more...
 
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 Next > End >>

Page 97 of 98

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article