வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் Print E-mail
Thursday, 09 September 2010 14:35

அதிகாலையில் துயில் எழும் பழக்கம் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. ''அதிகாலையில் எழுவது ஆரோக்கியம்'' என்பதுமட்டுமின்றி அறிவையும் வளப்படுத்தும்.

அதிகாலையில் எழுந்து ''ஸுப்ஹுத்தொழுகையை தொழுது விட்டவர்களுக்கு அன்று முழுவதும் நல்ல நாளே'' என்றல்லவா இஸ்லாம் கூறுகிறது. இதில்தான் எவ்வளவு கருத்துக்கள் அடங்கியுள்ளன! மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா?

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது. வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது!

நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால் இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க விடி காலையிலேயே விழித்தெழுங்கள்.

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்

o சீக்கிரம் எழுந்தால் அதிகாலையை போன்ற அமைதி உங்களிடமும் ஒட்டிக் கொள்ளும். வாகன இயக்கம், ரேடியோ, டி.வி. இரைச்சல், பக்கத்து வீடுகளின் கூச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்று எதுவும் உங்களுக்குத் தொந்தரவு செய்யாது.

o எங்கும் அமைதி நிலவ நீங்கள் நிம்மதியாக செயல்படலாம். அதிகாலையை போன்ற அருமையான பொழுதை வேறு எப்போதும் அனுபவிக்கவே முடியாது. அந்த வேளைதான் சிந்திக்க, செயல்பட, படிக்க, சுவாசிக்க என பலவற்றுக்கும் ஏற்றது.

Read more...
 
வாழ்க்கை ஓர் இனிய அனுபவம் Print E-mail
Monday, 22 November 2010 09:51

 

MUST READ  

o வாழ்க்கை ஓர் இனிய அனுபவம்; உலக உண்மைகளை அறிந்து கொள்ளும் அறிவு. மனிதன் மகத்தானவனாகாக ஆக்கும் முயற்சி தான் வாழ்க்கை!

o மனித வாழ்வில் ஏராளமான பிரச்னைகள் நம்மை தினந்தோறும் மோதுகின்றன. நாம் வாழ்வில் நமக்கு நிகழும் சோதனைகளையும், நம் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களையும் யோசித்துப் பார்த்தோமானால், பல சமயம் நமக்குத் தோல்வியும், ஏமாற்றமும், துன்பங்களும் தான் வருகின்றன. வாழ்வில் ஏற்படும் தோல்விகளுக்கும், கஷ்டங்களுக்கும் காரணம் நாம் எடுத்த முடிவுதான் என்பது புரியவரும்.

o சம்பளம் இல்லாமல், நம் குடும்பத்தின் மனைவி என்ற ஒரு பெண் நம்மை நம்பி தன் வாழ்க்கையை நமக்காக அர்ப்பணித்திருக்கிறாள். தெய்வீக அன்புடன், நம் குழந்தைகள் என்ற அவர்களின் எதிர்காலம் பற்றிய கற்பனை, அதற்கான முயற்சி வாழ்வில் தான் எத்தனை, எத்தனை சந்தோஷங்கள், ஆனந்தங்கள் இருக்கின்றன!

o நமது குழந்தைகளுடனும், மனைவியுடனும் பெற்றோருடனும் இசைபட வாழ்தல், இணைந்து அனுசரித்து பெருமையுடன் வாழ்வது இருக்கிறதே... அதுவும் ஊருக்கு உதவியாக இருப்பதும்தான் பெரிய பாக்கியம்"

o இல்லாதவர்களுக்கு கொடுப்பதில், உதவுவதில் தான் வாழ்வின் அர்த்தம் புரிகிறது. உலகுடனும், இந்த பிரபஞ்சத்துடனும் இசைபட வாழ்வது இருக்கிறதே... அது, எவ்வளவு பெரிய பாக்கியம், எவ்வளவு பெரிய ஆனந்தம்.

Read more...
 
முன்னோர்களின் அமைதியான வாழ்க்கை Print E-mail
Sunday, 26 December 2010 08:39

முன்னோர்களின் அமைதியான வாழ்க்கை

[ நம் முன்னோர்கள் மருத்துவ வசதிகள் வளராத காலத்திலேயே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர். உடலும் உள்ளமும் இசைவோடு இயங்கியது.

பொருள் அளவில் சாதாரண நிலையில் இருந்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருந்தது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது. மொத்தத்தில் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்தனர்.

ஆனால், இந்த நூற்றாண்டு மனிதன், விஞ்ஞான முன்னேற்றம் அடைந்த உலகில் வாழும் மனிதன் இன்பம் மற்றும் துன்பம் என்ற இரண்டு நிலையிலேயே சிக்கித் தவிக்கிறான். அமைதி மற்றும் பேரின்ப நிலை காற்றோடு பறந்துவிட்டது.]

தனி மனிதன் ஒரு நாளை நான்கு வகைளில் தான் செலவு செய்யலாம்.

1. இன்பம். 2. துன்பம. 3. அமைதி 4. பேரின்பம்

இந்த உலகில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலும் அனுபவித்தது, இந்த 4 நிலைகளில் முதல் இரண்டு நிலைகளை மட்டும்தான்.

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதாரண மனிதன் அனுபவித்துக் கொண்டு இருப்பது இன்பமோ அல்லது துன்பமோ என்ற நிலைகளைத்தான்.

Read more...
 
எது நாகரீகம்...? Print E-mail
Tuesday, 15 March 2011 07:00

அது ஒரு பெரிய கிராமம்..

500  வீடுகளுக்குமேல் அந்தகிராமத்தில் உள்ளது.

ஆரம்பகாலத்தில் ஏழெட்டு வீடுகளே தோன்றிய கிராமம் வேகமாக வளர்ந்தது.

அய்நூறு வீடுகள்வரை பெருகி அதன்பின்.. அந்த வளர்ச்சி சட்டென நின்று விட்டது.

அதாவது 1930 ல் உருவான அந்த ஊர் 1950 ஆம் வருடத்துடன் வளர்ச்சியை நிறுத்திக்கொண்டது.

அந்த ஊரை ஒட்டி ஒரு நெடுஞ்சாலை போகிறது.. அதில் அந்த ஊருக்கு தொடர்பாக பல பேருந்துகள் வந்து போகின்றன.

தற்போது ஒரு அய்ந்தாறு நாளாய் ஏதோ கலவரத்தால் பேருந்து போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது.

Read more...
 
ஆளில்லா வீடு! Print E-mail
Friday, 17 September 2010 16:18

ஆளில்லா வீடு!

பாதையிலிருந்து சற்று தள்ளி இருந்த ஆளில்லா வீட்டை கடந்து செல்கையில் ஏதோ ஓர் இனம்புரியா உணர்வினால் நிறுத்தப்பட்டேன். அந்த வீட்டை பார்க்கும் போது மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைபாய ஆரம்பித்தன.

மனிதர்கள் காலி செய்துவிட்டுச் சென்ற வீடுகள் எனக்கு எப்பொழுதும் ஒரு சரித்திர குறிப்பாகவே தெரிகிறது. அந்த வீட்டை காலி செய்ததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். சந்தோசமாக வேறு புது வீட்டிற்கு குடி புகுந்திருக்கலாம், பிரிய மனம் இல்லாமல் ஏதோ ஓர் நிர்பந்தத்தின் காரணமாகவும் சென்றிருக்கக் கூடும்.

அங்கு வாழ்ந்த மனிதர்கள் குடிபெயர்ந்து செல்லும் போது அந்த வீடு என்ன நினைத்திருக்கும். இத்தனை காலம் தன்னோடு வாழ்ந்த மனிதர்கள் தன்னை தனியாக விட்டுச் செல்வதை நினைத்து அழுதிருக்குமோ?

அந்த வீட்டு குழந்தை தன்னுள்ளே தவழும்போது எவ்வளவு மகிழ்ந்திருக்கும். அந்த குழந்தை மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதை பார்த்திருக்கும். எந்நேரமும் தன்னோடு விளையாடிய குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட்டு அது அழுதழுது கிளம்புகையில் வீடும் பிரிய மனமில்லாமல் பிரிந்து மாலை வேலைக்காக ஏங்கியிருக்குமோ?

Read more...
 
யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்! Print E-mail
Friday, 28 June 2013 06:48

யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்!

சில தினங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு, எங்களுக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அவரது கணவனோடு வந்திருந்தார்.

அவரின் வயது பற்றி எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருந்தது. மனிசு சொன்னது தன்னொத்த வயது இருக்கும் என்று! அதாவது 35. மகள் சொன்னாள் அவருக்கு 34 மட்டில் தான் இருக்கும் என்று. நான் சொன்னேன் அவர் வந்தவுடன் அவவிடமே கேட்டுப் பார்ப்போம்.

புருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு விருப்பம் இல்லாத பெண்மணி. எங்களின் சிரிப்பை என்ன என்றும் கேட்கவில்லை.

கடைசியில் புருஷனும் பெண்சாதியும் நாங்களும் ஒரு பிளேன் டீ குடித்ததன் பின்பு மகள் தான் கேட்டாள் "அண்ணி உங்களுக்கு என்ன வயது?" என்று! எங்களுக்குள் சர்ச்சை என்றும் சொன்னாள். எங்களில் யாரும் 35 வயதுக்கு மேல் மதிக்கவில்லை என்பதையும் சொன்னோம்.

அதற்கவர் "நான் யாருக்கும் வயது சொல்வதில்லை நீ கேட்டபடியால் மட்டும் சொல்கிறேன் எனக்கு 41" என்றார்.

மகளும் மனிசியும் ஆச்சரியத்தை முகம், கண், வாய் எல்லாவற்றாலும் வெளிப்படுத்தினார்கள். அவ்வளவு இளமை அந்த பெண்மணியிடம்!

Read more...
 
"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (1) Print E-mail
Monday, 29 August 2016 11:34

"இறைவன் கொடுத்த உயிர்"  ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை"  (1)

[ 23 08 2016 (துல்கஃதா, பிறை 20, ஹிஜ்ரி 1437) அன்று இரவு 9 மணியளவில், தனது 91 ஆவது வயதில் அல்லாஹ்வின் நாட்டப்படி மறுமைப்பயணத்தை துவங்கிய எங்களின் அன்புத் தாயார் ஹஸீனா பீவி அவர்கள் 01-01-2003 இல் எழுதிய சுயசரிதையை இங்கு சமர்ப்பிக்கின்றோம்.

இதன் மூலம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு சில   படிப்பினை கிடைக்கலாம் எனும் நம்பிக்கையே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.

தனது தாய்மொழியான வியட்நாம் மொழியில் அவர்கள் எழுதியதை எனது சகோதரிகள் மூலம் அப்பொழுதே தமிழில் மொழிபெயர்க்கச்செய்து குடும்பத்திலுள்ளவர்களுக்கு சமர்ப்பிக்கும்படி செய்திருந்தார்கள் எமது தாயார் அவர்கள். - adm. nidur.info - M.A.Mohamed Ali ]

Read more...
 
கடவுள் Vs அறிவியல் Print E-mail
Sunday, 01 December 2013 06:35

கடவுள் Vs அறிவியல்

ஒரு நாத்திக ஆசிரியர் அறிவியல் ஏன் கடவுளை ஏற்கமறுக்கிறது என்பதை பற்றி விளக்கமளித்தார். ஒரு மாணவனை எழுப்பி கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

ஆசிரியர் : நீ கடவுளை நம்புகிறாயா ?

மாணவர் : ஆம்

ஆசிரியர் : உனது கடவுள் நல்லவரா?

மாணவர் : ஆம்

ஆசிரியர் : உனது கடவுள் சக்தியுள்ளவரா?

மாணவர் : ஆம்

ஆசிரியர் : எனது அண்ணன் கடவுளை வணங்கியபோதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். கடவுள் அவரை காப்பாற்றவில்லை. பிறகு எப்படி கடவுள் நல்லவராக முடியும்?

மாணவர் : (பதிலேதும் பேசவில்லை)

Read more...
 
முரீது வியாபாரிகள்! Print E-mail
Wednesday, 02 November 2011 17:21

   முரீது வியாபாரிகள்!  

பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர்.

‘ஆன்மீகப் பாட்டை’ என்பார்கள், ‘ஆத்மீகப் பக்குவம்’ என்பார்கள், ‘அந்தரங்கக் கல்வி’ என்பார்கள், ‘ரகசிய ஞானம்’ என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள். எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்!!!!!!!!

இஸ்லாத்தில் இல்லாத இந்த கிரேக்க அத்வைத தத்துவத்தை இவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உருவாக்கி ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுகிறார்கள்.

இவர்களில் பல்வேறு பிரிவினர்கள் உண்டு. சில ஷெய்குகள் தம்மை அண்டி வந்து நெருக்கமானவர்களுக்கு, தனித்தனியாக சில திக்ருகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஒருவருக்கு சொல்லிக் கொடுத்ததை பிறருக்கு சொல்லக்கூடாது என்பார்கள்.

''இல்லற வாழ்க்கை'' முதற் கொண்டு தெள்ளத் தெளிவாக பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தில் ‘ரகசிய ஞானம்’ என்று ஏமாற்றுகிறார்கள்.

Read more...
 
இறைநேசர்களிடம் உதவி கேட்கலாமா? தாருல் உலூம் யூஸூஃபிய்யா மதரஸாவின் தீர்ப்பு! Print E-mail
Monday, 12 April 2010 14:34

திண்டுக்கல் பேகம்பூர் தாருல் உலூம் யூஸூஃபிய்யா அரபிக்கல்லூரியின் தீர்ப்பிலிருந்து:

அல்லாஹ்வுடைய நேசர்கள் கப்ரில் இருந்து கொண்டு நம்முடைய தேவைகளை நிறைவேற்றவும்,

ஆபத்துகளை நீக்கி வைப்பதற்கும் வல்லமை படைத்தவர்கள் என்றும்

அவர்கள் உலக நிர்வாகத்தில் தலையிட்டு தங்களை அழைப்பவர்களுக்கு சாதாகமாக உதவி செய்ய சக்தி படைத்தவர்கள் என்றும்,

நம்புவது ஈமானக்கு விரோதமானது.

குர்ஆன் கூறும் ஏகத்துவக் கொள்கைக்கு முரணானது.

சுன்னத் வல் ஜமாஅத்துடைய கொள்கைக்கு எதிரானது.

எந்த இமாம்களும் இதை ஆதரிக்கவில்லை.

Read more...
 
பையத்தா? மையத்தா? Print E-mail
Wednesday, 02 November 2011 17:11

      பையத்தா?        மையத்தா?    

தெள்ளத் தெளிவாக குர்ஆனுக்கும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைக்கும் முரணாக மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம்களிடையே பிர்- முரீது வியாபாரம் நடந்து வருகிறது. அந்த வியாபாரத்தில் இரகசியம்! இரகசியம்! என்று சொல்லியே மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அந்த ரகசியம் என்ன? என்பதை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்துகிறது. யாரையும் கேவலப்படுத்தும் நோக்கத்துடன் அல்ல. மக்களுக்கு சத்திய மார்க்கத்தை உணர்த்த இக்கட்டுரை இடம் பெறுகிறது.

எனது மாமனார் வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள பெரியவர் ஒருவர் முரீது பெற்றுள்ளார் எனத் தெரிந்து அவரை சந்தித்து முரீது பெற்றுள்ளதைப் பற்றி விசாரித்தேன். அப்பொழுது அவர் சொன்னதாவது;

‘தம்பி’ நான் தற்போது கலவைக்கு 1 கீ.மீ. முன்னுள்ள அகரம் என்னும் காலனியில் குடியிருக்கும் ஷைகு அப்துல் கரீம் காதிரி என்பவரிடம் முரீது பெற்றேன். எனக்கு ஒரு வருடம் முன்பே என் மூத்த மகன் முரீது வாங்கினான். நான் என் மகனிடம் ஷைகு என்ன சொல்லிக் கொடுத்தார் எனக் கேட்டேன்.

Read more...
 
ஏகத்துவத்தையே முறியடிக்கும் சமாதி வணக்கத்துக்கு முடிவு கட்டுவோம்! Print E-mail
Wednesday, 15 May 2013 13:10

ஏகத்துவத்தையே முறியடிக்கும் சமாதி வணக்கத்துக்கு முடிவு கட்டுவோம்!

சமூகத்தில் படர்ந்த அனாச்சார லீலைகள் பல. அவற்றுள் மிகக் கொடியது பாவகரமானது இஸ்லாத்தின் மூலக் கொள்கை ஏகத்துவத்தையே முறியடிக்கும் தன்மை கொண்டது சமாதி வணக்கம். இந்த நிலை ஓரளவு மாறுதல் அடைந்துவிட்டால் பிற சில்லரை அனாச்சார அனுஸ்டானங்களெல்லாம் நாளடைவில் தாமாகவே விடுதலை பெற்றுவிடும் அதற்கு போறாட்டங்களும் கிளர்ச்சிகளும் தேவை இராது.

சில்லரை அனாச்சாரங்கள் என்பது, சொறுகப்பட்டிருக்கும் மின்சார பல்புகள் போன்றவை. அவைகளை உடைத்து விடுவதால் பயனில்லை. வேறு பல்புகள் மாட்டிவிடப்படலாம். எரிவதற்கு இயங்க வைக்கும் இயந்திரம் வேறிடத்தில் இருக்கிறது. அது மெயின் சுவிட்ச். அதை இயங்காமல் செய்து விடுவதால் மட்டுமே தான் கருதிய பலன் கைகூடும். இந்த மூலத்தை இரகசியத்தை உணர்வதில்லை.

சில்லரை அனாச்சார செய்கைகளை கண்டிக்கவும், திருத்தவும் ஈடுபடுகிறோம். அவை வீண் வேலை! பலிபீடம் அங்கல்ல! தர்கா மணி மண்டபங்களுக்குள் இருக்கின்றது. அவைதான் தகர்க்கப்பட வேண்டும். அப்படித் தகர்த்துவிட்டால் ஏகத்தவத்தன்மைக்கு இழிவும் பாதகமும் ஏற்படாது. சமூகம் தாழ்ந்து கொண்டே போகாது.

Read more...
 
சிந்தித்துணரும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் (1) Print E-mail
Thursday, 21 January 2010 11:07

சிந்தித்துணரும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் (1)

''மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.'' (அல்குர்ஆன் 13:3)

''(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்" (என்று இறைவன் கூறுகிறான்). (அல்குர்ஆன் 20:53)

''பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்''. (அல்குர்ஆன் 36:36)

''நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்''. (அல்குர்ஆன் 51:49)

Read more...
 
சிந்தித்துணரும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் (2) Print E-mail
Thursday, 21 January 2010 10:52

சிந்தித்துணரும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் (2)

  ஹாரூன் யஹ்யா  

அனைத்திலும் ஜோடி

''மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன''. (அல்குர்ஆன் 13:3)

''(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்" (என்று இறைவன் கூறுகிறான்).'' (அல்குர்ஆன் 20:53)

''பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்''. (அல்குர்ஆன் 36:36)

''நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.'' (அல்குர்ஆன் 51:49)

Read more...
 
ஒரு மாணவியின் அனுபவம் Print E-mail
Thursday, 24 February 2011 07:44

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்

[ பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.

கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன்.

ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது. எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

வகுப்பு இடைவேளையின் போது சகமாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார்.]

Read more...
 
மேற்குலகை ஆள்பவர்கள் தான் தீவிரவாதிகள், முஸ்லிம்கள் அப்பாவிகள் – பிரான்ஸ் தத்துவ மேதை மைக்கேல் ஆன்பரே Print E-mail
Sunday, 25 January 2015 06:55

மேற்குலகை ஆள்பவர்கள் தான் தீவிரவாதிகள், முஸ்லிம்கள் அப்பாவிகள் பிரான்ஸ் தத்துவ மேதை மைக்கேல் ஆன்பரே  

உண்மையாகவே முஸ்லிம்கள் அப்பாவிகள், மேற்குலகை ஆள்பவர்கள் தான் தீவிரவாதிகள் என பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையான மைக்கேல் ஆன்பரே கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் பிரான்ஸின் கேலிப் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ (Charlie hebdo) பத்திரிக்கை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறித்த பத்திரிக்கையின் ஆசிரியர்கள், காட்டூனிஸ்ட்டுகள், அலுவலக ஊழியர்கள் என சுமார் 13 பேர் கொல்லப்பட்டார்கள்.

இஸ்லாத்தின் இறுதித் தூதராகவும், உலக மக்களுக்குறிய உன்னத வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கேலிச் சித்திரமாக வரைந்து இழிவுபடுத்த முயன்றமையை காரணம் காட்டியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

குறித்த தாக்குதலைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறித்த போராட்டங்களுக்கு எதிராக இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாத தாக்குதல்களை ஒரு போதும் ஆதரிப்பதில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முஸ்லிம்களினாலும் பிரான்ஸ் முழுவதும் நடத்தப்பட்டன.

Read more...
 
விஞ்ஞானத்தின் வாலில் Print E-mail
Friday, 29 May 2015 06:05

விஞ்ஞானத்தின் வாலில்

  ஜியாவுத்தீன் சர்தார்   

Don't Miss it, MUST READ

[ முஸ்லிம் விஞ்ஞானிகளின் ஒரு தலைமுறையே அறிவியல் சொல்வது அனைத்தும் உண்மையோ உண்மை என்று நம்புகிறது. அதே நேரத்தில் யாராவது அறிவியலை விமர்சித்தாலோ, சீர்படுத்த நினைத்தாலோ அவர் மீது கேள்விக் கணைகளை தொடுக்கின்றது.

அறிவியல் அனைத்தும் நன்மைக்கே என்று நம்புவதானது, அறிவியல் மனித குலத்துக்கே சேவை செய்கின்றது. எனவே முஸ்லிம் சமூகத்தின் தேவைகளையும் அது பூர்த்தி செய்து தனதாக்கிக் கொள்ளும் என்கிற தீய முடிவின் பால் இட்டுச் செல்லும்.

இறைவனின் வஹியை நீரூபிக்க அறிவியலின் அவசியம் எல்லாம் தேவையில்லை. ஒரு வேலை ஏதேனும் ஒரு அறிவியல் உண்மை குர்ஆனோடு ஒத்துப் போகவில்லை என்றால், அல்லது குர்ஆன் குறிப்பிடுகின்ற ஒன்றை நவீன அறிவியல் தவறு என்று நிரூபித்து விட்டது என்றால் குர்ஆன் 'பாதில்' (நஊதுபில்லாஹ்) ஆகிவிடுமோ?

இப்போது குர்ஆனில் கூறப்பட்டுள்ள, தற்கால அறிவியலால் நிரூபிக்கப்பட்ட ஒரு கருத்து, நாளை தவறு என்று ஒதுக்கப்பட்டு அவ்விடத்தை வேறொரு கருத்து பிடித்துக் கொண்டால் - என்ன ஆகும்?

உண்மைக்கான ஒரு தேடலே அறிவியல். அதனுடைய கண்டுபிடிப்புகளும், உண்மைகளும் குர்ஆனுடைய வசனங்களை போன்று சரியானவையும் அல்ல. ஆகவும் முடியாது.

“இல்ம்” குர்ஆனோடு முடிந்துவிடுவதில்லை, குர்ஆனில் இருந்து தொடங்குகின்றது.]

Read more...
 
அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் - 3 (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு) Print E-mail
Friday, 26 June 2015 01:18

அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் - 3 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு

  சையத் அப்துர் ரஹ்மான் உமரி  

இந்நபித்தோழரின் பெயர் ‘அப்துல்லாஹ் அல்பத்லி’ என்பதாம். தந்தையின் பெய்ர் மஸ்ஊத். வம்சாவழியாவது இப்னு மஸ்ஊத் இப்னு காஃபில் இப்னு ஹபீப் இப்னு ஷமஃக் இப்னு மஃக்ஸூம் இப்னு சாஹிலா இப்னு காஹில் இப்னு ஹாரிஸ் இப்னு தமீம் இப்னு சஅத் இப்னு ஃபுதைல் இப்னு முத்ரிகா இப்னு இல்யாஸ் இப்னு முழர் இப்னு நிதார் இப்னு அத்னான். மக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். (அத்தபக்காதுல் குப்ரா, இப்னு சஅத், பா: 3 பக்: 50, ஸியர் அஃலாமுன் நுபலா நுபலா, பா: 1 பக்: 461)

ஜாஹிலிய்யா காலத்திலேயே தந்தையார் மரணமடைந்து விட்டார். எனினும் தாயார் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, பா: 7 பக்: 103)

தாயாரின் பெயர் உம்மு அப்த்.

வம்சா வழித் தொடராவது - அப்துல்லாஹ் இப்னு உம்மு அப்த் பின்த் வுத் இப்னு ஸிவாஃ இப்னு வலீம் இப்னு சாஹிலா இப்னு காஹில் இப்னு ஹாரிஸ் இப்னு தமீம் இப்னு சஅத் இப்னு ஹுதைல். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் தாய்வழிப்பாட்டியின் பெயர் ஹிந்த் பின்த் அப்த் இப்னு அல்ஹாரிஸ் இப்னு திஹ்ரா இப்னு கிலாப். இவர் பனூ ஜுஹ்ரா கோத்திரத்தைச் சேர்ந்த வராவார்.

அபூ அப்துர் ரஹ்மான் என்பது இவர்தம் விளிபெயராம். ‘எனக்கு மகன் பிறக்கும் முன்பாகவே அண்ணலார் எனக்கு அபூ அப்துர்ரஹ்மான் என்னும் விளிபெயரை சூட்டினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அறிவித்தாக அல்கமா கூறுகிறார் கள். (முஸ்தத்ரக் ஹாகிம் 3/313)

அதன்படி பிற்காலத்தில் குழந்தை பிறந்ததும் அதற்கு அப்துர் ரஹ்மான் என பெயர் சூட்டப்பபட்டது. அதுபோன்றே இவர்தம் தாயோடு தொடர்பு படுத்தி ‘இப்னு உம்மி அப்த்’ எனவும் விளிக் கப்பட்டார்கள். இப்பெயரே புகழ்பெற்று விளங்கியது. (ஸியர் அஃலாமுந் நுபலா, பா: 1 பக்: 462)

Read more...
 
பள்ளிகட்டுவது மட்டுமே ஸதகதுஜ் ஜாரியாவா? Print E-mail
Wednesday, 19 October 2011 07:56

பள்ளிகட்டுவது மட்டுமே ஸதகதுஜ் ஜாரியாவா?

'வெற்றியின் பக்கம் வாருங்கள்' என்று ஒரு நாளைக்கு பத்து தடவை அழைக்கின்ற ஒரு இடம் அது முஸ்லிம்களுடைய வணக்கஸ்தலங்களாகிய பள்ளிவாயல்கள் மட்டுமே.

திருமண வீடுகளுக்குப் போகும் போது ஆடைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பள்ளிக்குப் போகும் போது கொடுக்க மறந்தது ஏனோ தெரியவில்லை.

தொழுகைக்கு மட்டும் பள்ளிகளை பயன்படுத்தும் காலம் இது.

முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் காலம் இது.

ஸதகதுல் ஜாரியா என்ற நிலையான தர்மத்தை பள்ளிகளை கட்டுவதுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அந்த நிதியை சமூகத்திற்கு தேவையான எல்லா துறைகளுக்கும் விரிவுபடுத்த தூண்டும் ஒரு முயற்சியே இந்த கட்டுரையின் நோக்கம்.

Read more...
 
இகாமத்துஸ் ஸலாத்தும் - இகாமத்துத் தீனும் Print E-mail
Friday, 07 October 2011 07:32

 

    இகாமத்துஸ் ஸலாத்தும் - இகாமத்துத் தீனும்    

முஸ்லிம் உம்மாவின் கடமை

அல்லாஹுத்தஆலா முஸ்லிம் உம்மாவை சிறந்த சமூகமாக படைத்துள்ளான். உம்மத்தே முஸ்லிமாவைக் கொண்டு ஓர் உன்னதமான காரியத்தைச் செயற்படுத்த நினைத்துள்ளான். ஒரு சிறந்த சமூகத்தின் பணி என்னவாக இருக்க முடியும்?

மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள். தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். (ஆல இம்ரான் 110)

நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது சுருக்கமாகச் சொல்வதென்றால் ஷரீஅத்தை நிலைநாட்டுவது, தீனை நிலை நாட்டுவது. உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று தீனைப் பரப்புவது, உலகின் ஏதேனும் ஒருபகுதியிலும் இறைவனுக்கு எதிரான அமைப்பு நிலவுகின்றது. இறைவனின் மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்றால் அதனைக் கண்டு கொதித்து எழுவது. அங்கும் சென்று இறைவனுடைய தூயதீனை எடுத்துரைப்பது.

இதையே நாம் இகாமத்துத் தீன் - தீனை நிலைநாட்டுவது - என்று சொல்கின்றோம். இந்த இகாமத்துத் தீன் பணியை செய்வதற்குத் தான் அல்லாஹ் நம்மை, உம்மத்தன்வஸத் ஆக நடுநிலை சமுதாயமாக ஆக்கியுள்ளான்.

Read more...
 
திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நடக்கும் தவறுகளும் அனாச்சாரங்களும் Print E-mail
Tuesday, 06 September 2011 07:25

திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நடக்கும் தவறுகளும் அனாச்சாரங்களும்

o  மார்க்கம் அனுமதித்த காரணமின்றி திருமணம் செய்வதை தள்ளிப்போடுவது அல்லது திருமணம் செய்வதிலிருந்து விலகி இருப்பது.

o  பெண்கள் தாங்கள் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று காரணம் கூறி திருமணத்தை மறுப்பது.

o  மார்க்கம் அனுமதித்த காரணமின்றி பெற்றோர் தன் பெண் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிப்போடுவது.

o  பாவம் மற்றும் மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபாடுள்ளவர்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுப்பது.

o  பெண்ணை அவளுக்கு விருப்ப மில்லாதவருக்கு நிர்பந்தமாக மணம் முடித்துக் கொடுப்பது.

o  ஒரு பெண், தனது மூத்த சகோதரி மணம் முடிக்காதவரை தான் மணம் முடிக்க மாட்டேன் என்று கூறுவது. மூத்த பெண்ணுக்கு திருமணமானால்தான் இளைய வளுக்கு திருமணம் செய்து கொடுப்பேன் என்று பெண்ணின் பொறுப்பாளர் கூறுவது. (இதனால் இருவரது திருமணமும் தாமதமாகலாம்.)

Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 99 100 Next > End >>

Page 92 of 107

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article