வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்! Print E-mail
Sunday, 21 February 2010 08:17

[ அமெரிக்காவிலும்ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளிலோ முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்லாம் அங்கு வளர்ந்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி கேலிச்சித்திரம் வரைந்த டென்மார்க் நாட்டில் இஸ்லாம் அதிவேகமாக வளர்ந்து வருவதாக அந்த நாட்டைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் கூறுகிறார்.

இத்தகைய அதிவேக வளர்ச்சியைக் கண்டு பொறுக்காத மேலை நாட்டுச் சக்திகளும், மிஷனரிகளும் பல்வேறு வகையான திட்டங்களைத் தீட்டி இஸ்லாத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்த முனைகின்றனர். இவர்களின் இந்த கீழ்தரமான செயல்களை ஒரு பெரிய பட்டியலாகவே வெளியிடலாம்.]

அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களின் கொள்கைகைளைத் தாங்கிப் பிடிக்க இயலாத மேலை நாட்டு சக்திகளும், தாங்கள் பின்பற்றும் சமயத்தை விட சத்திய இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதைத் சகித்துக் கொள்ள இயலாதவர்களும் இஸ்லாத்தைப் பற்றி பொய்யான தகவல்களையும், அவதூறுகளையும் கூறி இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Read more...
 
இந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா? Print E-mail
Monday, 06 May 2013 06:56

Image result for indian muslim politics

இந்திய அரசியல்

முஸ்லீம்களுக்கு ஹராமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

"இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள் " (அல்குர்ஆன் 2:208).

ஒரு முஸ்லீமின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடுக்களை முதல் ஆன்மீகம் வரை, பள்ளிவாயில் முதல் பாராளுமன்றம் வரை என அனைத்திற்கும் தீர்வை குர்ஆன் மற்றும் அதன் விளக்கவுரையாக திகழ்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலிருந்தே தேட வேண்டும் என குர்ஆன் வலியுறுத்துகிறது.

அதனடிப்படையில் வாழ்வின் மற்ற துறைகளை போல் அரசியல் குறித்த இஸ்லாமிய கொள்கையையும் இந்திய அரசியல் குறித்த இஸ்லாத்தின் பார்வையையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இஸ்லாத்தின் அரசியல் கொள்கைஅல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது (அல்குர்ஆன் 33:21) எனும் திருமறை வசனத்திற்கேற்ப அனைத்து விடயங்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்ற வேண்டிய முஸ்லீம்கள் "என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்" (மாலிக் –ஸஹீஹுல் புகாரி 9.352) என்ற ஹதீதின் அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொழுகையில் பின்பற்றும் முஸ்லீம்கள் கூட இஸ்லாமிய அரசியல் கொள்கை குறித்து தெளிவற்றவர்களாக உள்ளனர்.

''ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனை தவிர வேறு யாருக்கும் அடிபணியக் கூடாதென்று இறைவன் கட்டளையிட்டுள்ளான்.'' (அல்குர்ஆன் 12:40, 4:65, 5:18, 6:57, 7:3) என குர்ஆன் பகர்கின்றது.

வானின் அதிபதியே இப்பூமிக்கும் அதிபதி. எந்த இறைவன் பூமியை படைத்தானோ அவனுடைய சட்டங்கள் தான் பூமியை ஆள வேண்டும் என்பதையே பகுத்தறிவு உணர்த்தும்.

Read more...
 
இந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்கள் Print E-mail
Monday, 11 November 2013 14:54

இந்தியப் பிரிவினை: இன்னொரு சாட்சியம்

இந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்களை, மிக அழகிய முறையில்...

மவ்லானா அபுல் கலாம் ஆசாத் எழுதிய ''INDIA WINS FREEDOM''(இந்திய விடுதலை வெற்றி) நூலிலிருந்து சில பகுதிகள்

நான் சொல்ல விரும்பிய வரலாற்றின் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டேன். 1947 ஆகஸ்ட்14-ம் தேதி பாகிஸ்தான் டொமினியனை (ஆட்சிப் பரப்பை) தொடங்கிவைப்பதற்காக லார்ட் மவுண்ட்பேட்டன் கராச்சிக்குச் சென்றார். மறுநாள் இந்தியாவுக்கு அவர் திரும்பி வந்தார். 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு 12 மணிக்கு இந்திய டொமினியன் பிறந்தது.

தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனால் விடுதலை வெற்றி உணர்ச்சிகளை மக்கள் முழுவதும் அனுபவித்து மகிழ்வதற்கு முன் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒரு மகத்தான சோக அனுபவம் தமக்குக் காத்திருந்ததை உணர்ந்தனர்.

நாம் நிம்மதியாக சுதந்திரத்தின் பயன்களை அனுபவிப்பதற்கு முன் தொல்லைகள் நிறைந்த காரியங்களை நீண்ட காலம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தோம்.

ஏன் ஒப்புக்கொண்டார்கள்?

ஒரு விஷயம் இந்தக் கட்டத்தில் எழுவது இயல்பு. எல்லா இந்தியர்களின் மனதிலும் பிரிவினையானது கோபத்தையும் வெறுப்பையும் இவ்வாறு விளைவித்திருக்குமேயானால், ஏன் இந்திய மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள்? அதற்கு ஏன் இன்னும் அதிகமான எதிர்ப்பு காணப்படவில்லை? தவறானது என்று பெரும்பாலும் எல்லோரும் கருதிய ஒரு விஷயத்தைக் குறித்து அவ்வளவு அவசரப்பட்டு முடிவுசெய்திருப்பானேன்?

Read more...
 
குடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்! Print E-mail
Tuesday, 17 April 2012 06:29

குடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்!

இன்றைய சூழலில் படித்த அனைவருக்கும் பாதுகாப்பான அரசு வேலை கிடைப்பது சாத்தியமில்லை. தனியார் துறையும் மாத சம்பளத்திற்கு எல்லோருக்கும் வேலை கொடுத்துவிட முடியாது. ஏதேனும் சொந்தமாக தொழில் துவங்கி முன்னேறுவதே வழி. திருமணமான ஆண்கள் இத்தகைய முயற்சி எடுப்பதை பெண்கள் ஆதரிப்பதில்லை.

’’இங்கு வரும் பெண்களில் பெரும்பாலானோர் எதிர்மறை சிந்தனை(Negative thinking) கொண்டவர்களாக இருக்கிறார்கள்” என்கிறார் சுய தொழில் துவங்க ஆலோசனை வழங்கும் நண்பர் ஒருவர். பெண்கள் திரும்பத்திரும்ப ”நஷ்டம் ஆகி விட்டால் என்ன செய்வது?” என்பதையே அதிகம் கேட்கிறார்கள். ஒரு உதாரணத்தையும் கூறினார்.

சாதாரண அரசுப்பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றவரின் மகன் அவர்.படிப்பு,தந்தை சொத்து இவ்ற்றை வைத்து திருமணமும் ஆகி விட்ட்து. ஒரு தனியார் கம்பெனியில் வேலையில் இருந்தார். நாளாக நாளாக வருமானம் போதவில்லை. இப்போது தந்தையும் இல்லை.சில லட்சங்கள் கையில் இருந்த்து. சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான எதிர்பார்ப்புகள். திறமையான ஆள். எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் மனைவி தொழில் துவங்க மறுத்து விட்டார்.அவர் மனைவி சொன்ன காரணம் எதற்கு ரிஸ்க் என்பதுதான்.

Read more...
 
பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...! Print E-mail
Friday, 11 May 2012 06:12

  பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...! 

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை பெண்களுக்கு மட்டும் தானா?!

தவறு செய்வதற்கு அச்சம் இருப்பதுதானே முறை. நாணப் படுவதற்கு நாணப்படுவதுதானே உயர்வு "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" .இது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் தேவை . வீரம் நிறைந்தவனாக ஆண் மட்டும் இருந்தால் போதுமா! தனக்கு வரும் ஆபத்தினை எதிர்கொள்ள ஒரு பெண்ணுக்கும் அவசியம் தேவை . குணங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் இக்காலத்தில் பலவகையான குணங்களை ஆணும் பெண்ணும் அவசியம் பெற்றுக்கொள்ள தேவைப் படுகின்றது.

அனைத்துக்கும் மேலாக நல்ல காரியங்களுக்காக ஆணும் பெண்ணும் அனுசரித்து போகும் நிலை அவசியம் தேவைப் படுகின்றது. ஆணின் காலில் விழும் பெண்ணின் குணமும் பெண்ணின் காலில் விழும் ஆணின் குணமும் அவசியம் அழிக்கப் படவேண்டும். சுமரியாதையை வளர்த்து இறைவன் ஒருவனுக்கே அடிபணிவேன் என்ற மனப்பக்குவம் வந்தே ஆக வேண்டும். உனது உரிமை எனது உரிமையை பாதிக்கக் கூடாது என்பது பொதுவான சிந்தாந்தம். வாழ்வோம் வாழ விடுவோம் இதுதான் நம் கொள்கையாக மாற வேண்டும்

Read more...
 
XX & XY : யாருக்காக..? Print E-mail
Friday, 10 February 2012 07:17

  ஹுஸைனம்மா  

[ பெண்கள் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான வீடுகளில், அவளது வருமானம் ஒரு உபரியாகவே கருதப்பட்டு, ஆடம்பரங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லலாம்.

குடும்பத்திற்காகத்தானே சம்பாதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே, குடும்பத்தின் நிம்மதி இழக்கவும் காரணமாகிவிடக்கூடாது.

பணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை.

குடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது.

ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் பொறுப்பு என்றால், இன்னொருவருக்கு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு - இரண்டுமே ஒன்றுக்கொன்று பளுவில் குறைவில்லாத வேலைகள்தாம்.]

Read more...
 
அநாதைகளை ஆதரிப்போம் Print E-mail
Wednesday, 08 September 2010 13:56

எம்பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அநாதைகளை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

அயலவர்களை ஆதரியுங்கள், நோயாளர்களை பார்வையிடுங்கள், அவர்களது சுகத்திற்காக பிரார்த்தனை புரியுங்கள், அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மாத்திரம் புசிப்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்.

அல்லாஹ்வின்  கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் என அல்-குர்ஆன் கட்டளையிடும் போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒற்றுமை பற்றி எவ்வளவோ வரைவிலக்கணங்களை விரிவாக விளக்கியுள்ளார்.

ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு துன்பம், நோய் இடையூறு ஏற்படுமிடத்து அதற்காக முன்னின்று உதவக் கூடியவன் மற்றுமொரு முஸ்லிமாகவே இருக்க வேண்டும்.

Read more...
 
நன்மை பயக்கும் நபிமொழி - 17 Print E-mail
Wednesday, 29 October 2008 08:20

"நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளிப்போம் என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்.  நூல்: அபூ தாவூத் (குறிப்பு: முஸ்லிம், நஸயீ, அஹ்மது ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

"ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்" என்று உம்மு சுமைய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்.  (நூல்: அபூ தாவூத்) (குறிப்பு: இது இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.)

"அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து உலூச் செய்வார்கள்" என இப்னு உமர் ரளியல்லாஹுஅன்ஹு அறிவிக்கிறார்கள். முஸத்தத் அவர்களது அறிவிப்பில் 'ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உலூச் செய்வார்கள்" எனக் கூறியுள்ளார்.  நூல்: அபூ தாவூத் (குறிப்பு: நஸயீ, இப்னுமாஜா, முஅத்தா, புகாரி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

"அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் (ஆண்களாகிய) நாங்களும் பெண்களும் ஒரே பாத்திரத்தில் எங்களது கைகளை உள்ளே விட்டு உலூச் செய்வோம்" என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: அபூ தாவூத்)

o "(உம்முல் முஃமினீன்) மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளித்தார்கள்" என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் (நூல்: முஸ்லிம்)

Read more...
 
விவாகரத்தும் குழந்தைகளும் Print E-mail
Sunday, 27 June 2010 09:05
 

விவாகரத்தும் குழந்தைகளும்

குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான் எல்லாமும்.

இதனாலேயே அவர்கள் மீதான நம்பிக்கையும் அன்பும் மிக அதிகம்.

உண்மையில் பெற்றோரைவிட, குழந்தைகள் அவர்கள் மீது காட்டும் அன்பு மிக அதிகம்.

எந்த நிலையிலும் தன் அம்மாவோ அப்பாவோ துன்புற, தான் காரணமாகி விடக்கூடாது என்ற பய உணர்ச்சி அவர்களிடம் உண்டு.

விவாகரத்தின் போதோ இல்லை அம்மாவும் அப்பாவும் விவாதங்கள் செய்யும் போதோ இதற்கு தான் காரணமாகிவிட கூடாது என்ற பயமும் அதனால் அவர்களை மகிழ்விக்க செய்யும் சின்ன சின்ன செயல்களிலும் இதை புரிந்து கொள்ளலாம்.

ஒரு வேலையை விட்டுவிட நேரிடும் சில பெண்கள் எந்த காரணம் கொண்டும், ''உன்னால்தான் இதை விட்டேன்" என்று சினந்து சொல்லி விட்டால் குழந்தைகள் மனம் உடைந்து போய் விடுவார்கள்.

Read more...
 
மாமனிதர் (1) Print E-mail
Friday, 19 February 2010 10:35

  அபூமுஹம்மத்  

ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். எனது ஒட்டகம் சண்டித்தனம் செய்து (மற்றவர்களை விட) என்னைப் பின் தள்ளியது.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்து 'ஜாபிரா' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். '(பின் தங்கி வருவதற்கு) என்ன காரணம்?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டனர்.

என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னைப் பின் தள்ளி விட்டது. அதனால் பின் தங்கி விட்டேன் என்று நான் கூறினேன். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் ஒட்டகத்திலிருந்து) இறங்கினார்கள்.

தமது வளைந்த குச்சியால் என் ஒட்டகத்தைக் குத்தி விட்டு 'ஏறுவீராக' என்றனர். நான் ஏறிக் கொண்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட முந்தி விடாதவாறு அதை இழுத்துப் பிடிக்க ஆரம்பித்தேன்.

Read more...
 
ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை! Print E-mail
Sunday, 27 March 2011 08:38

Related image

ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை!

[காஃபிரகளுடன் கூட ஆதாரங்களை முன்வைத்து அழகாகவும், பண்பாடாகவும் விவாதிக்குமாறு அல்-குர்ஆன் பணிக்கின்றது.’மேலும் அவர்களுடன் சிறந்த (பண்பாடன) முறையில் விவாதிப்பீராக.’ (16:125)

ஆனால் நாமோ நமது சகோதர முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற போதெல்லாம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றோம். ஈமானிய உறவை மறந்து சொல்லம்புகளால் தாக்குகின்றோம். சொல்லால் மட்டுமன்றி கையால், கல்லால் அடிக்கவும் நாம் தயங்குவதில்லை. சில போது எமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடுத்த சகோதரர்கள் மீது பழி சுமத்துவதற்கும், அபாண்டங்களைக் கூறுவதற்கும் நாம் துணிந்து விடுவதுண்டு.

மொத்தத்தில் மார்க்கத்தின் பெயரிலேயே அது கூறும் சகோதரத்துவம், அன்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு முதலான பண்புகளுக்கு நாம் சாவு மணி அடிக்கின்றோம். முஃமின்கள் தம்மத்தியில் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நளினமாகவும் நயமாகவும் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் குறிப்பிடும் அல்குர்ஆனின் போதனைகளை காற்றில் பறக்க விடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.]

Read more...
 
மார்க்கத்தை வைத்து உலகாதாயம் தேடாதீர்கள் Print E-mail
Thursday, 17 March 2011 08:41

[ மாயையிலும், பொய்மையிலும், கவர்ச்சியிலும் மனிதன் தன் இதயத்தைப் பறி கொடுக்கிறான். பறிகொடுத்து பறிகொடுத்து பலவீனமான இதயத்தையும் மனிதன் பெறுகின்றான். அவ்வாறு பலவீனமானவை தம் சொந்த இலாபங்களுக்காக மார்க்க வேடதாரி வியாபாரிகள் பயன் படுத்திக் கொள்கின்றனர்.

அவர்களுக்கு அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனிடமே உங்கள் தேவைகளைக் கேட்டுபெறுங்கள் என்று அறிவுரை பகராமல் உங்களை பேய் பிடித்திருக்கின்றது; பிசாசு துரத்துகின்றது; ஷைத்தான் உங்களை ஆட்டி படைக்கின்றான்; எனவே ரூபாய் நூற்று ஒன்று தாருங்கள்; நான் நல்ல கனமான தாயத்து ஒன்று செய்து தருகின்றேன்; எந்த கெட்ட ஷைத்தானும் உங்களை நெருங்காது என்று கூறி அவர்களிடமிருந்து பணத்தைபறிக்க வழிப்பறிக் கொள்ளைக் காரர்களை விடக் கேவலமாக நடந்து கொள்கின்றனர்.

''எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக்கொள்கிறார்களோ, உறுதியாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தவிர வேறுதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்த மாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'' (அல்குர்ஆன் 2:174)]

Read more...
 
டென்ஷன்! டென்ஷன்!! 10ஷன்!!! Print E-mail
Wednesday, 10 February 2010 09:11

HIGH TENSION - DANGER

ஸஃபிய்யா என்.ஜமான்,

ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பலவிதமான இன்பங்களையும், துன்பங்களையும் சந்திக்கின்றான். இது மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. இதுபற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகையில், நிச்சயமாக கஷ்டத்துடனேதான் இலகு உள்ளது. (அல்குர்ஆன் 94:6)

மேலும் ஓரிடத்தில், நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம் பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (2:155)

அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடினால் அவரை அவன் சோதிக்கிறான் என்றுநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் புஹாரி, முஸ்லிம்)

இவ்வாறு அல்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் ஏராளமாகச் சொல்லப்பட்டு விட்டது. இவைகளையெல்லாம் அதிகமானோர் பார்ப்பதுமில்லை, சிந்திப்பதுமில்லை. மாறாக எதற்கெடுத்தாலும் வீணான தடுமாற்றம், நிலைகுலைதல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றால் ''டென்ஷன்'' எனும் நோய்க்குள்ளாகியே தனது வாழ்வில் பாதியை நரகமாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

''பூமியிலோ உங்களிலோ எந்தவோர் துன்பம் நேர்ந்தாலும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னர் பதிவேட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும்''. (அல்குர்ஆன் 57:22)

Read more...
 
மழலைகளின் நேசமும் மாநபியின் பாசமும் Print E-mail
Saturday, 11 April 2015 09:07

மழலைகளின் நேசமும் மாநபியின் பாசமும்

     இக்பால் M.ஸாலிஹ்      

[ ஒரு கால கட்டத்தில் "மக்க நகர் வீதிகளில் தனியொரு மனிதனாக ஓடி ஓடிப்போய் ஒவ்வொருவனிடமும் ஏகத்துவத்தை ஏந்தி நின்ற எளிய மனிதராக,

ஸபா மலைக் குன்றுகளில் ஏறி நின்று அக்கிரமக்கார அபூஜஹலுக்கும் அநியாயப் பெரியப்பன் அபூலஹபுக்கும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சத்தியத்தை எடுத்துச் சொன்ன சன்மார்க்க நபியாக,

உக்காஸ் சந்தைகளில்கூட ஒருவரையும் விடாமல் சுண்டியிழுக்கும் பேச்சுத் திறனாலும் தங்களின் தங்குதடையற்ற வாதத் திறனாலும் 'வல்லவன் அல்லாஹ் ஒருவனே வணங்கத்தக்கவன்' என்று ஓங்கி ஒலித்த ஒப்பற்ற தூதராக,

தாயிஃப் நகரத்தில் தனிமனிதராக நின்று கயவர்களின் கடுமொழியையும்  காட்டான்களின்  கல்லடியையும் ஏற்று நம் உள்ளமெல்லாம் துடிக்கும் வண்ணம், தங்கள் உதிரத்தையே வடித்து நின்று  பொறுமைக்கே பெருமை சேர்த்த பூமான் நபியாக,

பத்ரிலும் கைபரிலும் ஹுனைனிலும் ஹுதைபியாவிலும் தீர்க்கமான முடிவு எடுத்துத் திறம்பட எதிர்த்து நின்று, பகைவர்களின் படை வென்று வாகை சூடிய வெற்றிகளின் வேந்தராக...

இப்படியெல்லாம், சரித்திரச் சாலைகளில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு வல்லரசின் மாமன்னர் அதோ ஒரு சின்னஞ்சிறுமியின் சுண்டுவிரல் சுட்டும் அன்புக் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அந்தப் பசுந்தளிரின் சின்ன உலகத்தில் ஒரு நல்ல நண்பராக அவளோடு நடந்து செல்கிறார்!  ஏனென்றால், அவர் மாமனிதர்!  மனிதர்களின் ஒளி வீசும் வழிகாட்டி!]

Read more...
 
போன்ஸாய் குழந்தைகள் - "குழந்தை மேதை" Print E-mail
Saturday, 29 September 2012 22:04

  போன்ஸாய் குழந்தைகள் - "குழந்தை மேதை" 

இன்று உலகில் பல சிறுவர்கள் 'சிறுமுது அறிவர்' அதாவது Child Prodigy என்று போற்றப்படுகின்றனர். இரண்டு வார்த்தைகளுமே புரியாத புதிராகத் தோன்றும். புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், "குழந்தை மேதை" என்று சொல்லலாம்.

இவர்களை, "சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குண்டான அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர்" என்று விக்கிபீடியா வரையறுக்கிறது. "அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் சிறுவர்களே சிறுமுது அறிவர்" என்பது இன்னொரு வரையறை.

இதில் சிறுவர்கள் என்பதற்கான அதிகபட்ச வயது எல்லை எதுவென்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

12 வயதுச் சிறுமி அமெரிக்க அல்லது இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள்; 10 வயதுச் சிறுவன் பி.ஹெச்டி முடித்தான்; 8 வயதிலேயே மைக்ரோஸாஃப்ட் தேர்வுகள் எழுதி பட்டயம் பெற்றார் என்றெல்லாம் செய்திகளில் வருவார்களே இவர்கள்தான் இந்தக் குழந்தை மேதைகள்!

Read more...
 
"உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே! அது நடவாது." Print E-mail
Saturday, 24 March 2012 06:46

 

அவசியம் படிக்க வேண்டிய அருமையான, உபயோகமான பதிவு

"உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே! அது நடவாது."

[ குழந்தை வளர்ப்பு என்பது குழந்தையின் கரு உருவாகும்போதே ஆரம்பமாகிறது. ஒரு தாயாகப் போகிற பெண் தன்னை குழந்தை பெற்றுக் கொள்ள தயாரான உடலையும் மனதையும் பெற்றிருக்க வேண்டும்.

சாதிப்பது வேறு. சாதனையாளரை உருவாக்குவதுவேறு. சிறந்த குழந்தைகளை உருவாக்க நாம் நிறைய நேரத்தை அவர்களுக்காக செலவு செய்தாக வேண்டும்.

ஒரு தாய்க்கு குழந்தை பற்றிய தன்மதிப்பு எத்தனை உயர்வாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த குழந்தை தன் வாழ்வில் சாதிக்கிறான்.

குழந்தைகள் புதிய மலர்கள். அவர்கள் சுடப்படாத ஈரக்களிமண். அவர்கள் மீது நாம் நமது சொந்த கருத்துக்களை திணிக்கக்கூடாது.

நம் குழந்தைகள் உண்மையில் நம் குழந்தைகள் அல்ல, அவர்கள் நம் மூலமாக வந்தாலும் நம்மிடமிருந்து வரவில்லை. அவர்கள் இறைவனிடமிருந்து வந்தவர்கள். அவர்கள் இறைவனின் படைப்புகள்.]

Read more...
 
‘என்னைப்பெத்தவனே, என்னைப்பெத்தவனே!’ Print E-mail
Tuesday, 31 January 2012 07:07

Image result for தந்தை மகன்

      ‘என்னைப்பெத்தவனே, என்னைப்பெத்தவனே!’     

[ குழந்தைகள் அன்பை சொறிவதில் சலிப்படைவதே இல்லை, சோர்வடைவதே இல்லை. காரணம், அவர்கள் எதிர்ப்பின்றி நேசிக்கும் கலையில் தேர்ந்தவர்களாக உள்ளனர்.

தாம் நேசிப்பவை தம்மை நேசிக்கிறதா என்று அவை சந்தேகப்படுவதில்லை. தாமும் மற்றவைகளால் நேசிக்கப்படுவதாகவே குழந்தைகள் நம்புகின்றன. நாம் தான் இந்தக் கலையை வளர்ந்த பிறகு மறந்துவிட்டோம்.]

ஆண் - பெண் எனும் இரண்டு கழித்தல் கோடுகள், இல்லறக் கணக்கில் சமக்குறியாக இணை சேரும். பின்னர் கோடுகளின் தீண்டல்களில் கூட்டல் வரும், சரியான தப்பான பெருக்கல் வரும், இரண்டு புள்ளிக் கண்களோடு ஒற்றைக் கோடாக, வகுத்தல் குறி போலக் குழந்தை வரும், அந்த வகுத்தலுக்குப் பிறகே அந்த இணையர்க்கு ஈவும், இரக்கமும் வரும்.

Read more...
 
திருமணத்தின் நறுமணம் மறுமணத்திலும் உண்டு! Print E-mail
Friday, 06 January 2012 07:39

[ ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.]

உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தங்களுக்கான துணையை முறைப்படித் தேடி திருமண பந்தத்தில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இத்திருமணம் வாரிசுகளை உருவாக்கவும், கற்புக்குப் பாதுகாப்பாகவும், உலக இன்பங்களை அனுபவிக்கவும் அவசியமானது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.

ஆணோ பெண்ணோ, அவர்களின் திருமண வயதை அடைந்துவிட்டால் பெற்றோர்கள் அவசரப்படுத்தி கஷ்டத்தின்மேல் கஷ்டம் அனுபவித்தாவது திருமணத்தை நடத்தத் துடிக்கின்றனர். ஆனால் இந்த இல்லற இன்பத்தை சிலகாலம் சுவைத்துவிட்டுக் கணவனை இழந்து கைம்பெண்ணாக நின்றால் அவர்களுக்கென மற்றொரு துணைவனைத் தேடி இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்க எவரும் முயற்சிப்பதில்லை.

இதுமட்டுமல்லாமல், ஊரிலோ, குடும்பத்திலோ, ஏன் அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கோ ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும்போது அந்த அப்பாவி விதவைகள் எதிர்பட்டால் அந்த காரியம் நிறைவேறாது என்று அந்தப் பெண்ணை ஏசியவர்களாகவே மீண்டும் வீடு திரும்பிவிடுவர். இதுபோன்று விதவைகளை வேதனைப்படுத்தும் ஏராளமான விஷயங்கள் பெரும்பாலும் நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது.

Read more...
 
மதுவை ஒழித்து மாதுவை காப்போம்! Print E-mail
Wednesday, 18 June 2014 12:16

மதுவை ஒழித்து மாதுவை காப்போம்! 

பெண்ணுரிமை பற்றி அதிகம் பேசும் நமது நாட்டில்  தற்போது பெண்களின் கற்பு ஆண் கயவர்களால் அதிகம் சூறையாடப்பட்டுவருவது வேதனைக்குரியதாகும்.

சில நேரங்களில் கற்பழிக்கப்பட்ட பெண்களை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பி விடுகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாகவே நடந்து வந்த போதிலும் தற்போது இதனுடைய வீரியம் அதாவது பெண்கள் கற்பழிக்கப்படும் துயர நிகழ்வுகள் ஆங்காங்கே புற்றீசல் போல கிளம்பியுள்ளதையும் அதிலும் ஒழுங்கீனமான வாழ்க்கையை நவநாகரீகம் என்ற பெயரில் கடை பிடித்து வரும் மேலை நாடுகளில் கூட நடக்காத அளவுக்கு நமது இந்திய தேசத்தில் அதிகமாகி விட்டதே என்ற வேதனையின் வெளிப்பாடே இந்த கட்டுரை!

Read more...
 
காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (1) Print E-mail
Tuesday, 26 January 2010 11:40

 Image result for qayde azam muhammad ali jinnah

காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (1)

[ அரசியலிலும், காயிதே ஆஸாம் அதே அளவிற்குத் துல்லியமாக இருந்தார். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் அவர் எடுத்ததே கிடையாது. பில்லியர்ட்ஸ் விளையாடுவது போலவே, ஒவ்வொரு நிலைமையையும் பல கோணங்களில் ஆராய்ந்து முதல் முயற்சியிலேயே, வேண்டியது கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டே பின்னரே அவர் தன் செயலைத் தொடங்குவார்.

அவர் வேட்டையாடும் பொருளை மிகச் சரியாகக் கணித்து, அதை வீழ்த்துவதற்கு மிகச் சரியான ஆயுதத்தைத் தேர்ந்தொடுப்பார். அவசர அவசரமாக துப்பாக்கியை எடுத்துக் குறிபாராமல் சுடக்கூடிய வகையராக்களைச் சேர்ந்தவர் இல்லை அவர். தாக்குவதற்கு முன்னரே, அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் காயிதே ஆஸாம் அறிந்து தான் இருந்தார்.]

[ காயிதே ஆஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் காரோட்டியாகப் பல வருடங்கள் இருந்த ஆஸாத் அவரைப்பற்றி கூறும் சுவையான வரலாற்றுத்தொடர் ]

''1939ம் வருடம் முஸ்லீம் லீக் அதனுடைய வாலிபப் பருவத்தில் இருந்தது - நானும் அது போலவே தான். ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புள்ள வயதில் இருந்தேன்... ஏதாவது. நான் திடமாகவும் கட்டுமஸ்தான உடலைக் கொண்டவனாகவும் இருந்தேன். என் வழியில் எது வந்தாலும் அதனோடு மோதுவதற்குத் தயாராக இருந்தேன். நான் எதற்கும் துணிந்தவனாக இருந்தேன்.

என் சொந்தக் கரங்களாலேயே ஏதேனும் ஒரு ஜந்துவை வடிவமைத்து அதனோடு கண்மூடித்தனமாக மல்யுத்தம் செய்வதற்கும் நான் தயாராக இருந்தேன். வாலிபம் அப்படிப்பட்டது தான். ஏதேனும் செய்யவேண்டும் என்ற துடிப்பில், அதுவும் அது மிகப் பெரிய விசயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், சதா சர்வகாலமும் அமைதியற்ற நிலையில் தான் இருப்போம். வெறுமனே அமைதியாக உட்கார மட்டும் முடியவே முடியாது.''

Read more...
 
காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (11) Print E-mail
Friday, 05 February 2010 07:44
 
    முஹம்மது அலீ ஜின்னா பற்றி ஜஸ்வந்த் சிங்    
 
[ ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார்.

நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.

இந்து-முஸ்லீகள் ஒற்றுமையின் தூதராக இருந்த ஜின்னா ஏன் பாகிஸ்தானின் தந்தையாக மாறினார். ஏன் நாடு பிளவுபடக் காரணமானார்.. அவரில் ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது.. என்பதை விளக்கும் நூல் தான் இது. இந்தப் புத்தகம் எழுதி நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.

இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை. அவர்களை வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம். அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா?. - முன்னால் மத்திய அமைச்சர், ஜஸ்வந்த் சிங்!]

இரவு 11 மணிக்கு கூட்டம் முடிந்தது. என்ன விவாதிக்கப்பட்டது என்பது பற்றி முழு விவரங்கள் தெரியவில்லை என்றாலும், அவைகளது கூட்டம் மற்றும் எடுத்த தீர்மானங்கள் இந்திய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில், அன்றிலிருந்து மூன்றே மாதங்களில் ''பாகிஸ்தான்'' என்ற தனி நாடு கோரிக்கைத் தீர்மானம் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில், லாகூரில் மார்ச் 25, 1940 அன்று, நிறைவேற்றப்பட்டது. ஏழே மாதங்களில், ''திராவிடஸ்தான்'' கோரிக்கைத் தீர்மானம் ஆகஸ்டு 1940-ல் திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 Next > End >>

Page 91 of 96

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article