வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

தூய உள்ளம் கொண்டவர்களாக வாழ்வதே மேல்! Print E-mail
Friday, 30 September 2016 07:42

தூய உள்ளம் கொண்டவர்களாக வாழ்வதே மேல்!

       rasminmisc      

"தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது."

இறைவன் மனிதனை பலவிதமான குணங்களும் கொண்டவனாக படைத்திருக்கின்றான். நல்ல குணங்களுடன் சிறப்பாக வாழும் சிறந்த மனிதர்கள் இருப்பதைப் போல, பலவிதமான தீய குணங்களுடன் தீமைகளுடன் இணைந்தே வாழும் பல கெட்ட மனிதர்களும் இவ்வுலகில் வாழத்தான் செய்கின்றார்கள்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்தல், நல்ல முறையில் பேசிப் பழகுதல், பொறுமையாக நடந்து கொள்ளுதல், பெருமையடிக்காதிருத்தல் போன்ற பலவிதமான நல்ல குணங்கள் இருப்பதைப் போல அடுத்தவர்களுக்கு அநியாயம் இழைத்தல், கெட்ட வார்த்தைகள் பேசுதல், குரோதம் கொள்ளுதல், பெருமையடித்தல், பொறாமை கொள்ளுதல் போன்ற பலவிதமான தீய குணங்களும் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படுகின்றது.

இப்படியான பலவிதமான குணங்களின் கலவையாக இருக்கும் மனிதர்கள் தமது வாழ்நாளில் சிறப்பாக வாழ்ந்து இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றியடைய வேண்டுமெனில் தமது வாழ்வை இறைவனும், இறைத் தூதரும் காட்டிய வழியில் நற்குணம் கொண்டவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

Read more...
 
ஏமாற்றம் தரும் பாடம் Print E-mail
Friday, 17 March 2017 08:33

ஏமாற்றம் தரும் பாடம்

பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒன்றை ஒன்றுச் சார்ந்து ஏதாவது ஒன்றின் பக்கம் தேவையுடையதாகவே வாழ்கின்றன. அவ்வாறு தேவை பூர்த்தியாகும் போது மகிழ்ச்சியையும், மனம் நிறைவு பெறாத போது ஏமாற்றம் என்ற தத்துவத்தையும் தன்னுள் நிலை நிறுத்துகிறது.

ஆம்! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் அவற்றில் சிலவற்றை அவன் பெற்றுக்கொள்கிறான், சிலவற்றைத் தவறவிடுகிறான்.

இவ்வாறு நிகழ்வதெல்லாம் இறைவனின் செயல் என எண்ணும்போது, இன்பம் வரும் போதும், துன்பம் வரும் போதும் அவன் அதனை உற்சாகமாக எதிர் நோக்குவான். மனித வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி நிகழ்கிறது.

தன்னை வணங்குவதற்காகவே மனிதனை படைத்த இறைவன் அவனை அறிவற்றவனாக வாழச் செய்யவில்லை.

மாறாக,

சிந்தித்துணரும் சிற்பியாக அவனை தோற்றுவித்துள்ளான்.

மேலும் இறைவன் மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளைப் பற்றியும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்து விட்டான்.

Read more...
 
வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்! Print E-mail
Sunday, 19 February 2017 08:02

வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!

தோல்வியில் துவண்டு விடாதீர்கள், தன்னம்பிக்கை இழந்து விடாதீர்கள், முயற்சியை நிறுத்தி விடாதீர்கள் என்று எல்லாம் பலர் அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறோம்.

ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு யாரும் அதிகம் அறிவுரை சொல்வதில்லை. காரணம் வெற்றி பெற்றவர்கள் அறிவு மிக்கவர்கள், நல்ல உழைப்பாளிகள், எல்லாம் தெரிந்தவர்கள் என்ற அபிப்பிராயம் பலர் மனதிலும் இருப்பது தான்.

அதெல்லாம் மற்றவர்கள் மனதில் இருந்தால் பரவாயில்லை. வெற்றி பெற்றவர்கள் மனதிலேயே அந்த அபிப்பிராயம் உறுதியாகத் தோன்றும் போது அது எதிர்கால ஆபத்திற்கு அஸ்திவாரம் போடுகிறது.

வெற்றி எப்பேர்ப்பட்டவரையும் ஏமாற்ற வல்லது. அது மூன்று குணாதிசயங்களை வெற்றியாளர்களிடம் ஏற்படுத்த வல்லது.

1) கர்வம்

2) அலட்சியம்

3) எந்த அறிவுரையும் கேளாமை

Read more...
 
''நானும் கடமையில் இருக்கிறேன்'' Print E-mail
Monday, 05 June 2017 18:19

Image result for muslim passenger in flight

''நானும் கடமையில் இருக்கிறேன்''

மது கொடுத்த போது முஸ்லிம் சகோதரர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விமானப் பணிப்பெண்!

ஐரோப்பிய விமான சேவையில் முதல்வகுப்பில் பயணித்த முஸ்லிம் ஒருவரிடம் பணிப்பெண் சென்று மதுக்கோப்பை ஒன்றை எடுத்து நீட்ட அவரும் நாசூக்காக மறுத்துவிட்டார்,

மீண்டும் புரியாமல் மிக அழகிய மனதை கவரும் வடிவமைப்பிலான கோப்பையொன்றில் நிரப்பிய மதுவுடன் அவரைக் குடிக்குமாறு கேட்டு அணுகினாள்,மறுத்துவிட்டார். வேண்டவே வேண்டாம் என்று.

திரும்பியவள், மேலாளரைக் கண்டு சொன்னாள் அந்தப் பயணி என்னிடம் என்னவோ தவறைக் கண்டிருப்பார் போல, அவர் மதுவை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்று அவரைக் காட்டி சொல்ல அவரும் கொஞ்சம் பழங்களுடன் மதுக்கோப்பையை கொண்டுவந்து அவரிடம் நீட்ட அவர் தனது மறுப்பை அவரிடமும் சொல்ல,

ஏன் நீங்கள் குடிக்கக் கூடாது என அவர் கேட்டார், அதுக்கு இவர் நான் முஸ்லிம் மது அருந்துவதில்லை என சொன்னதும்ஸ அதனாலென்ன? என்றவருக்கு இவர் சொன்னார்,

Read more...
 
பொறாமை எனும் போதை! Print E-mail
Monday, 14 May 2018 09:51

பொறாமை எனும் போதை!

மனிதன் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் அவன் படைக்கப்பட்ட காலத்திஇருந்த தீய குணங்கள் இன்று வரை மாறாமல் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. அதிலேயும் மிகுந்த நாசத்தை விளைவிக்கக் கூடிய ஒரு பண்பு தான் பொறாமை. இது தொன்றுதொட்டு நமது முன்னோர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது.   இதற்கு மதங்கள் மொழிகள் காலங்கள் வேறுபாடு கிடையாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் சென்று சமுதாயத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொறாமை வெறுப்பு என்ற நோய் உங்களுக்கும் பரவியுள்ளது. வெறுப்பு என்பது மழித்துவிடக்கூடியது. நான் முடியை மழிப்பதை சொல்லவில்லை மார்க்கத்தை மழித்து விடும்.

முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ஒருவரை ஒருவர் நேசம் கொள்கின்றவரை நீங்கள் நம்பிக்கையாளராகமாட்டீர்கள்.

எதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசம் கொள்வீர்களோ அதை பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களுக்கிடையே ஸலாம் சொல்லுவதை பரப்புங்கள்! (அறிவிப்பவர்: ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மது 1338)

Read more...
 
இரக்கம் Print E-mail
Friday, 10 August 2018 07:08

இரக்கம்

எந்த ஒரு நபருடைய வாழ்வும் இந்த ஒன்று இல்லாமல் கடந்துவிட முடியாது. எந்த ஒரு சாதாரண மனிதனும், என்ன தான் கல் நெஞ்சம் கொண்டவனாக இருந்தாலும் ஏதேனும் ஒரு சூழ்நிலையில், வாழ்வின் ஏதேனும் ஒரு பகுதியில் இதன் மீதேனும் அல்லது யார் மீதேனும் இரக்கம் கொண்டிருப்பான்.

மனிதர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள் தான். ஆனால் வல்ல ரஹ்மான் அல்லாஹு தஆலா

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَاٰمِنُوْا بِرَسُوْلِهٖ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَّحْمَتِهٖ وَيَجْعَلْ لَّـكُمْ نُوْرًا تَمْشُوْنَ بِهٖ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

ஆகவே, நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுடைய இத்தூதரை (முஹம்மதை)யும் நம்பிக்கைக் கொள்ளுங்கள். உங்களுக்கு அவனுடைய அருளிலிருந்து இரண்டு பங்கு கூலி கொடுப்பான். உங்களுக்கு (நேரான வழியை அறிவிக்கக்கூடிய இந்தக் குர்ஆன் என்னும்) ஒளியையும் கொடுப்பான். அதன் பிரகாசத்தைக் கொண்டு நீங்கள் (நேரான வழியில்) செல்லலாம். (உங்களுடைய) குற்றங்களையும் உங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Read more...
 
நான்கு வகையான மனிதர்கள் Print E-mail
Sunday, 09 September 2018 07:27

நான்கு வகையான மனிதர்கள்

1. வணக்கசாலிகள்.    மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

2. வணக்கசாலிகள்,    சிரமமான வாழ்க்கை

3. பாவம்செய்பவர்; மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

4. பாவம் செய்பவர்; சிரமமான வாழ்க்கை

Read more...
 
முனாஃபிக் (நயவஞ்சகன்) யார்? Print E-mail
Thursday, 20 September 2018 08:01

முனாஃபிக் (நயவஞ்சகன்) யார்?

பொதுவாக நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் காணப்படும் பண்புகள் பலவாக இருக்கலாம். சிலரிடம் நற்பண்புகள் தீயபண்புகள் ஒருங்கே அமைந்தும் இருக்கலாம். நற்பண்புகள் நம்மை சுவனம் அழைத்துச்செல்லும். தீய பண்புகள் நரகம் இட்டுச்செல்லும். அவ்வாறு, நரகத்துக்கு இழுத்துச்செல்லும் ஒரு பண்புதான் இந்த நயவஞ்சகம்.

அதாவது, உள்ளத்தில் உள்ளதை உலகுக்குத்தெரியாமல் மறைத்து, தம்மைச்சார்ந்திருப்போர் மனம் மகிழும்படி நடித்து, அவர்களை வழிகெடுத்து, தம் வழிக்கு கொண்டு வரும் இந்த நாசகார பண்புதான் நயவஞ்சகம்.

இத்தீய பண்பை கொண்டவனை 'முனாஃபிக்' (நயவஞ்சகன்) என்று அரபியில் அழைபார்கள். சுருக்கமாக சொன்னால், வெளிப்பார்வைக்கு தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்களிடம் உள்ளத்தில் இஸ்லாம் இருக்காது. உள்ளங்களை அறிபவன் அல்லாஹ் மட்டுமே.

இந்நயவஞ்சகர்கள் அன்றிலிருந்து இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களோடு பழகினால் அன்றி... இவர்களின் தோற்றங்களை வைத்து இவர்களை அடையாளம் காண நம்மால் இயலாது.

இருப்பினும் இந்நயவஞ்சகத்தின் அடிப்படைகளாகத்திகழும் இவர்களின் ஒருசில நடவடிக்கைகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

Read more...
 
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் Print E-mail
Saturday, 23 February 2019 08:49

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்

சொற்களில் அந்த மூன்று எழுத்துகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் எல்லோருமே எதிர்பார்க்கும் ‘நன்றி’ என்ற ஒற்றைச் சொல்லாகும். நன்றியை எதிர்பார்க்காத இதயம் எங்குமே இல்லை எனலாம்.

ஒருவர் பிறரிடம் பெற்றுக் கொண்ட உபகாரங்களுக்காக ‘நீங்கள் செய்த உதவிக்கு மிகுந்த நன்றி’ என்று சொல்லக் கேட்டால், கேட்பவர் மனம் முழுவதுமாகக் குளிர்ந்து போகும்.

அப்படியானால், நாம் நமது இறைவனுக்கு அவன் தந்த அருட்கொடைகளுக்காக அதிகமதிகம் நன்றி செலுத்தினால் அவன் எவ்வளவு தூரம் மகிழ்ச்சி அடைவான்.

ஆனால் நாம் நம்மைப் படைத்து கருணையோடு பரிபாலிக்கிற இறைவனுக்கு எவ்வளவு தூரம் நன்றி செலுத்துகிறோம் என்பது, கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

இறை வசனம் ஒன்று இப்படி வசனிக்கிறது:

‘அல்லாஹ் அனைவரின் மீதும் அதிக அருளுடையவன்; எனினும் பெரும்பாலான மக்கள் நன்றி செலுத்துவதில்லை’. (அல்குர்ஆன் 40:61)

Read more...
 
தேடல்களும், விடைகளும்! Print E-mail
Tuesday, 12 March 2019 08:51

தேடல்களும், விடைகளும்!

      ஹுஸைனம்மா      

சின்ன வயசுல, கள்ளங்கபடறியா எல்லாப் புள்ளைகளையும் போல, நானும் தெரியாம முழுங்கிட்ட பபிள்கம்மை வெளியே கொண்டுவர தலைகீழா நின்னுகிட்டே, "பபிள்கம் வெளியே வந்துரட்டும். வயித்துக்குள்ளேயே வெடிச்சிடக்கூடாது அல்லாவே"ன்னு பிரார்த்தனை செய்யிற அளவுக்குத்தான் எனக்கும் பக்திப் பரவசம் இருந்துது.

ஆனா, இப்பவும் அப்படியேவா இருப்போம்? "ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி"ன்னு தெரியும்தானே.

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊரில் பிறந்ததால், என்னைச் சுற்றி எல்லாரும் முஸ்லிம்களே. எளியவர்களே அதிகம். தொழுகை, குர்ஆன், நோன்பு என்பவை வசதி படைத்தவர்களுக்கே உரியது என்ற அறியாமையால், ஓரளவு வசதி படைத்த வீட்டினர் மட்டுமே அவற்றைச் செய்து வந்தனர் (அப்போது).

காலச் சுழற்சியில் ஏற்பட்ட மாறுதல்கள் பலரின் அறிவுக் கண்ணைத் திறந்தது. தொழுகை, வசதி பார்த்தோ, ஏற்றத்தாழ்வு பார்த்தோ செய்ய வேண்டியதல்ல; படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் உரியதே என்றும் அறிந்து கொண்டோம்.

எப்போதும் எல்லாவற்றிற்கும் ஒரு "ஏன்" என்ற கேள்வி வரும் என் மனதில். அது, நோன்பாகட்டும், தொழுகையாகட்டும், பள்ளிப் பாடங்கள் ஆகட்டும், செய்திகளாகட்டும், "ஏன்" என்ற கேள்வி வராமல் இருந்ததில்லை.

Read more...
 
ஆத்மாவின் அடி ஆழம் வரை ஊடுருவிச்செல்வது கணவன் - மனைவி உறவுதான் Print E-mail
Saturday, 20 July 2019 14:26

ஆத்மாவின் அடி ஆழம் வரை ஊடுருவிச்செல்வது கணவன் - மனைவி உறவுதான்

பெற்றோர் - குழந்தை, நண்பர்கள், ஆசிரியர் - மாணவர் என உறவுகள் பல இருந்தாலும் உடலாலும் மனதாலும் இரண்டறக் கலந்து, ஆத்மாவின் அடி ஆழம் வரை ஊடுருவிச்செல்வது கணவன் - மனைவி உறவுதான்.

மற்றவர்களின் மன ஓட்டங்களை வெறும் பார்வையாளராயிருந்து கவனிக்கு (observe) முடியும். ஆனால் சுகம், துக்கம், விருப்பு, வெறுப்பு, குழப்பம், பயன் என அனைத்து உணர்வுகளும் அப்படியே தாக்குவது இந்த உணர்வில்தான். ஒரே அலைவரிசையிலிருக்கும் கணவன் - மனைவிக்கு அந்தந்த கணத்தில் எண்ணங்களை பரிமாறப்படுவதால் வார்த்தைகளே வீண்தான்..

எந்த ஒரு செயலுகுமே அடிப்படை எண்ணங்கள்தான். தங்களது மன ஓட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியாத கணத்தில்தான் பிரச்சினைகள் வெடிக்கின்றன. இன்றைய தினத்தில் அதிகரித்து வரும் குடும்ப உறவுப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் மனம்தான்.

கணவன் - மனைவு உறவு முழுக்க, முழுக்க உணர்வுகளால் பின்னிப் பிணைந்த ஒரு கூடு. இதில் ஒரு இழை அறுந்து போனாலும் அந்த முழுமையே (whole) ஆட்டங்கண்டுவிடும்.

சின்ன சின்ன உணர்ச்சிகள் கூட பெரிய விபரீதகளுக்கு காரணமாகிவிடும். அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையில் தங்கள் உணர்ச்சிகளுக்கே வேலி போட்டுவிடுவர் சிலர். இந்தப் பாதிப்பு இன்னும் அதிகம். தற்காலிகமாக பிரச்சினையை ஒத்தி வைக்கலாமே தவர, முற்றிலும் தடைபோட முடியாது. ஒரே வழி, உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு வெளிப்படுத்துங்கள்!

Read more...
 
குடும்ப உறவில் மலரும் இஸ்லாம் Print E-mail
Sunday, 25 September 2011 07:09

குடும்ப உறவில் மலரும் இஸ்லாம்

குடும்ப உறவு என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனிதமிக்க உறவாகும். அதில் சில சந்தர்ப்பங்களில் சலசலப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், அதன் மூலம் இறைவன் உறவின் வலிமையை மேலும் பலப்படுத்தி விடுகின்றான். ஆனால் நம்மில் சிலர் குடும்ப உறவில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளை பெரிதுபடுத்தி பல்லாண்டுகள் நீடித்து அப்புனித உறவை ஒரே நாளில் சிதைத்து விடுகின்றார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

ஒரு ஆண் தனது ஆண்மையை இழந்து விட்டாலும் பெண் அவனுடன் சகிப்புத்தன்மையோடும், பொறுமையோடும் வாழ முடிவு செய்கிறாள். அதேசமயம் யார் மீது குறை என்பது நிரூபிக்கப்படாத நிலையில் இருந்தால் பெண்ணின் மீதே பழி சுமத்தி ஆண்கள் தம்மை குறையற்றவர்களாக காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரிடத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆராயும் போது அவர்கள் சமுதாய அரங்கில் மிகப் பெரிய அந்தஸ்துள்ளவர்களாக இருந்த போதும் வீட்டுக்கு வந்து விட்டால் மிகச் சிறந்த கணவராக மாறி விடுவார்கள். சமையல் உட்பட அனைத்திலும் மனைவியர்களுக்கு உதவி புரிவார்கள். ஆண்களைப் பார்த்து அல்லாஹ்வும் பின்வருமாறு கூறுகிறான் :

அப் பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையோடிருப்பீர்களாக. ஏனெனில்) ஒரு பொருளை நீங்கள் வெறுக்கக் கூடும். (ஆனால்) அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருப்பான் (அல்குர்ஆன் 4:19)

Read more...
 
இல்லற வாழ்வில் இணையும் முன்னர்... Print E-mail
Monday, 09 August 2010 12:40

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்...

    மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி    

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும்.

இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும்.

இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.

   1. கற்பனையை விட்டு விட்டுக் கையேந்துங்கள்!    

திருமண வயதை எட்டிய எல்லாப் பெண்களுக்கும் தனது எதிர்காலக் கணவன் பற்றிய ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் இருப்பது இயல்புதான். வீட்டில கல்யாணப் பேச்சு அடிபடும் போதே அவள் கனவுகளில் மிதக்க ஆரம்பிக்கின்றாள். கணவனது உடல் அமைப்பு, உருவ அமைப்பு, உடை-நடை-பாவனை, பேச்சு என அனைத்தையும் பற்றிக் கற்பனை பண்ணி, தானே தனக்கென ஒரு கற்பனைக் கணவனைப் படைத்து வைத்துக்கொள்கிறாள்.

Read more...
 
கணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க! Print E-mail
Sunday, 18 April 2010 08:19

கணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க! 

இன்ப வாழ்வை விரும்பாதவர்கள் எவரேனும் உலகில் இருக்கிறார்களா என்ன! ''அதைத்தானே தேடிக்கொண்டிருக்கிறோம். கிடைக்க மாட்டேன் என்கிறதே!''என்று சிலர்- அல்ல அல்ல, பலர் கூக்குரலிடுவது கேட்கத்தானே செய்கிறது! என்ன காரணமாக இருக்க முடியும். ''பிரச்சனைதான்''

''பிரச்சினை இல்லாமல் மனிதனும் இல்லை, பிரச்சினை இல்லாதவன் மனிதனே இல்லை''என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எதிலும் பிரச்சினை தான். வெளிப்பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம். அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சினைக்குரிய நபரையோ பிரச்சினையையோ தவிர்த்து விடலாம்.

ஆனால் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி! திருமணம் முடித்தவர்கள் பிரச்சினை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது மிகப்பெரிய சாதனை தான்.

"இல்லவே இல்லை நாங்கள் இதுநாள் வரைக்கும் எந்த சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம்'' எனக் கூறும் சில தம்பதியினரும் உள்ளனர். மறுப்பதற்கில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள்.

ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருப்பதனாலேயே குடும்பச் சமனிலை பேணப்படுகிறது. இதற்குப் புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும். "ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்கு நுனிவரை` என்பது பழமொழி.

Read more...
 
காதல்கணவனாய், காதல்மனைவியாய் மாறுங்கள்! Print E-mail
Saturday, 22 October 2011 06:35


 காதல்கணவனாய், காதல்மனைவியாய் மாறுங்கள்!  

இலக்கியம் பல படித்து

இரவு பல வழித்து

கவிதை பல படைக்கிறேன்... ஆனாலும்

தொலைபேசியில் நீ சொல்லும்

.ம்.. என்பதற்கு ஈடான

கவிதை என்னிடம் இல்லை.

 

இனிக்க இனிக்க உன்

நினைவுகளை குடித்துக் கொண்டே

இருப்பதால்...

சர்க்கரை வியாதி வந்துவிடுமோ

என்ற பயம் எனக்கு.

 

இரண்டு வரி கவிதை சொன்னால்

நான்கு முறை வெட்கப் படுவாயே

உன் வெட்கத்தை கடிதம்

மூலம் எப்படி

வெளிக்காட்டப் போகிறாய்...?

Read more...
 
மனைவி தன் கணவனுக்கு ஆடையாக... Print E-mail
Friday, 20 November 2009 09:13

மனைவி தன் கணவனுக்கு ஆடையாக...

"பெண்கள் மெல்லியர்தான்; ஆனால் பெண்மை வலியுடைத்து" என்ற தமிழ்க்கவிஞனின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையிலும் வீரப் போர் நிகழ்த்தினாளே-

கண்ணைக்கசக்கிக் கொண்டு மூலையில் முடங்கி விடாமல், தன் கணவனின் மானம் காக்கப் போராட முனைந்து நின்றாளே-

அந்த மகத்தான நிகழ்வைப் பதிவு செய்வதற்கும் அவளது முன்னுதாரணத்தை நம் வாசகப் பார்வைக்கு வைப்பதற்குமே இந்த கட்டுரை!

தாம்பத்தியப் புரிந்துணர்வின் உயிர்ப்பாக "ஒரு கணவன் மனைவிக்கு ஆடையாகவும், ஒரு மனைவி தன் கணவனுக்கு ஆடையாகவும் அமைதல் வேண்டும்" என தன் திருமறையில் இறைவன் உத்தரவிடுகிறான்.

இதில் பொதிந்துள்ள நுட்பங்கள் பற்றி பக்கம் பக்கமாக ஆய்வாளர்கள் எழுதித்தள்ளுகிறார்கள். மனிதப்பிறவிகளின் மானத்தைக் காப்பது ஆடை; உடலோடு அண்மித்து ஒட்டியிருப்பது ஆடை; விலங்குகளிலிருந்து மனிதனைப் பிறித்துக் காட்டுவது ஆடை என்று அவ்வாய்வுகள் விரிகின்றன.

சமீபத்திய நிகழ்வொன்று ஒரு முஸ்லிம் கணவனுக்கு அவனது மனைவி அல்லாஹ்வின் ஆணைப்படி ஆடையாகிப்போன அதிசயத்தின் வித்தியாசமான பரிமாணத்தை உணர்த்தியிருக்கிறது. அதனைப் பதிவு செய்வதற்கே இதனை தருகிறோம்.

Read more...
 
அன்புத் தழுவல் உறவின் முதலீடு! மன்னிப்புக் கேளுங்கள் மகிழ்ச்சி பெருகும்! Print E-mail
Monday, 24 October 2011 07:41

[ அன்பு என்பது ஒன்றிணைக்கும் மனோபாவம். இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது அன்பு. சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு.

அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால்! - கணவர் மனைவியை மதிப்பதுபோலவே மனைவியும் கணவரை மதித்தால்! குடும்பத்தில் பிரச்சினையே இல்லை.

கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். தழுவல் உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள்.

கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.]

Read more...
 
மனைவியை காதலியுங்கள்! Print E-mail
Thursday, 06 May 2010 08:35

 Image result for மனைவியை காதலியுங்கள்!

உங்கள் மனைவிதான் உங்கள் காதலி!

உங்கள் காதலி உங்கள் மனைவிதான்!

காதல் மனைவிக்காக உலக அதிசயத்தையே எழுப்பிய ஷாஜஹான் என்று காதலால் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். இவர்களை தலைமுறை தலைமுறையாக நினைவில் கொள்ளும் நாம், மனைவியை மட்டும் காதலியாய் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்.

"அன்பேநீ வெளியில் வராதே;

வண்ணத்து பூச்சிகளெல்லாம்

நீ தான் மலரென்று தேனெடுக்க

முற்றுகையிட்டுவிடும்''

என்று, திருமணமான புதிதில் ஐஸ் மேல் ஐஸ் வைத்தவர்கள்கூட, நாளாக நாளாக, 'அப்படியா நான் சொன்னேன்?' என்று அரசியல்வாதிகள் ஸ்டைலில் பல்டி அடிப்பதையும் நடைமுறை வாழ்வில் பார்க்க முடிகிறது.

அடிக்கடி மெரீனா பீச்சுக்கு விசிட் அடிக்கும் பஷீர் அன்றும் அப்படியே அங்கு சென்றிருந்தார். அது மாலைநேரம் என்பதால் குளுமையை அள்ளிக்கொண்டு வந்து வீசிச்சென்றது கடல்காற்று. அந்த இனிமையில் அப்படியே காலாற நடந்து சென்றார்.

Read more...
 
கணவனை புரிந்து கொள்ளுங்கள்! Print E-mail
Thursday, 13 May 2010 12:44

கணவனை புரிந்து கொள்ளுங்கள்!

[ மலர்ந்த பூவை போல் மனைவி எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எல்லா கணவர்களுமே ஆசைபடுகின்றனர். ஆனால் அந்த மாதிரியான சூழலை கணவர்தான் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதை மனைவிமார்கள் உணர்த்துவது நல்லது.

கணவர்களில் சிலர் சரியான டென்ஷன் பார்ட்டிகளாக இருப்பார்கள். இந்த டென்ஷன் கணவர்கள் வாடிய முகத்துடன் வீடு திரும்பும்போது ''இன்றைக்கு என்ன நடந்துச்சு'' என்று அவர்களை நச்சரிக்காமல், இன்முகத்துடன் அவர்களை வரவேற்பது நல்லது. பின்னர் கணவருக்கு காபி, டீ ஏதாவது குடிக்க கொடுத்துவிட்டு, ''சாப்பிட்டுவிட்டு அப்புறம் பேசலாம்'' என்று அவர்களுடைய கோபத்தை தணிக்கலாம்.

கணவன் எப்படி மனைவியை புரிந்துகொள்ள வேண்டுமோ, அதுபோன்று மனைவியும் கணவனைப்புரிந்து நடந்து கொண்டால் இவ்வுலக வாழ்வு மட்டுமின்றி இன்ஷா அல்லாஹ் மறுவுலக வாழ்வும் சொர்க்கம்தான்.]

உறவுகளில் ஒரு அற்புதமான உறவு கணவன் மனைவி உறவு. மனங்கள் அமைதி பெறும் பொருட்டே உங்களிலிருந்தே உங்கள் துனைவிகளை படைத்துள்ளதாகஅல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்.ஆக, கணவனுக்கு மன அமைதியை கொடுக்க வேண்டிய பொருப்பு மனைவியுடையதாகிறது. மன அமைதி எனும்போது உடல் அமைதியும் அதில் அடக்கமாகிவிடுகிறது.

Read more...
 
அதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? Print E-mail
Thursday, 20 October 2011 07:12

அதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?

மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க அதிக அளவு பணமும் நேரமும் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதெல்லாம் இல்லாமல் உங்கள் மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க சில வழிமுறைகள் உண்டு....

1. நாம் செய்யும் சில சின்ன சின்ன செயல்கள் மனைவியின் கவனத்தையும் அன்பையும் பெறுகச் செய்வதோடு, அவர்களை நாம் ஸ்பெஷலாக நடத்துவதையும் நினைப்பதையும் உணர்த்த செய்யும்.

2. ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு சிறிய புன்னகையுடன் மென்மையாக கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தாருங்கள். அது அவர்களுக்கு அந்த நாளை சிறப்பாக தொடங்குவதற்க்கு ஒரு சிறிய டோக்கன் கொடுத்தது போல இருக்கும். அது தன் கணவர் தன்னை உணர்வுபூர்வமாக நேசிப்பதை உணர்த்தும்.

3. அது போல முடிந்தால் வார இறுதியில் அவர்களுக்கு முன்பாக எழுந்திருந்து காலை டிஃபன் பண்ணி அவர்களூக்கு கொடுத்து உதவுங்கள். வாரம் முழுவதும் அவர்கள் அதிகாலையில் எழுந்திருந்து நமக்காக கஷ்டப்படுவர்களுக்கு நாம் செய்யும் இந்த உதவி அவர்களூக்கு நல்ல சந்தோஷத்தை தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை நாம் சிறப்பாக நடத்துவதையும் உணர்வார்கள்

Read more...
 
இயற்கையும் இல்லறமும்! Print E-mail
Friday, 21 October 2011 07:56

Image result for இயற்கையும் இல்லறமும்!

இயற்கையும் இல்லறமும்!

[ இல்லறத்தின் தலைவர்கள் ஆண்கள் - இல்லறத்தின் இதயங்கள் பெண்கள்.

வாழ்க்கை என்பது நிலவு! சிலசமயம் இருட்டும், சிலசமயம் முழுமையான ஒளியைத்தரும். இருட்டைக்கண்டு இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டால் வாழ்க்கையில் முழுமையான ஒளியைக் காணமுடியாது.

வாழ்க்கை என்பது ஒரு இருட்டறை! அதில் அன்பும், காதலும் இரண்டு ஒளி விளக்குகள். இந்த விளக்குகள் இல்லையானால் அந்த வாழ்க்கையில் பயன் இல்லை, ஒளியில்லை.

வாழ்க்கை என்பது விளைநிலமாகும். மண்வளத்தையும், அது பராமறிக்கப்படும் விதத்தைப் பொருத்தே பயிர்கள் வளர்ந்து பலன் தருவதுபோல் மணவளத்தைப் பொருத்தே இன்பம் உண்டாகிறது.

வாழ்க்கை என்பது இரண்டு கயிறுகளால் இணைத்துக் கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டுள்ள ஊஞ்சல். அது தானாக ஆடாது. நாம் உந்தித்தள்ளினால்தான் ஆடும். அதிலே ஆடும்போது நம் உள்ளமெல்லாம் இன்ப ஊஞ்சலாடும்.]

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 10 of 92

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article