வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

முற்றாய் அறிந்தவன் நுண்ணறிவாளன் Print E-mail
Wednesday, 22 July 2015 19:13

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை.

உடனே அவர், "(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார்.

உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, "மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!' என்றா நீ கூறுகிறாய்?'' என்று கேட்டார்.

உடனே அந்த யூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, "அபுல் காசிம் அவர்களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?'' என்று கேட்டார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, "நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?'' என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொன்னார்.

உடனே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள்.

Read more...
 
இறைத்தூதர் மட்டுமே அறிந்த மூன்று விஷயங்கள் Print E-mail
Tuesday, 12 April 2016 06:43

இறைத்தூதர் மட்டுமே அறிந்த மூன்று விஷயங்கள்

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். "தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்.  பிறகு, 

1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?

2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?

3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ அல்லது தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?'' என்று கேட்டார்கள்.

Read more...
 
அநீதிக்கு உதவி செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்கள் Print E-mail
Thursday, 12 April 2018 08:41

அநீதிக்கு உதவி செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்கள்

      அநீதிக்கு உதவி செய்பவர்கள்       

அதிகாரம் உள்ள பதவிக்கு வருபவர்கள், தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுகம் காண்கிறார்கள்.

மக்களின் தேவைகளையும் அவர்களின் விருப்பங்களையும் கண்டு கொள்வதில்லை.

இப்படிப்பட்ட தலைவர்களின் குறைகளை சுட்டிக் காட்டி அநீதிகளை தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்யும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் பொய்களையும் சரி காண்பவர்களும் இன்று இருக்கத் தான் செய்கிறார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் தலைவர்களிடம் சில பலன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் செய்தியின் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

''எனக்கு பின்னால் சில தலைவர்கள் வருவார்கள்.

அவர்களிடம் சென்று அவர்களின் பொய்களை உண்மைப்படுத்துவார்கள். அவர்களின் அநீத செயல்களுக்கு உதவி புரிவார்கள்.

அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை.

நான் அவனைச் சார்ந்தவனும் இல்லை.

அவர்கள் (மறுமைநாளில்) ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வர மாட்டார்கள்.

Read more...
 
"ஜஸாக்கல்லாஹு ஹைரா" (جزاك الله خيرا) என்று கூறுபவருக்கு... Print E-mail
Tuesday, 04 December 2018 10:13

"ஜஸாக்கல்லாஹு ஹைரா" (جزاك الله خيرا)   என்று கூறுபவருக்கு...

[ (جزاك الله خيرا) "ஜஸாக்கல்லாஹு ஹைரன்" (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!) என்பதற்கு (وَأَنْتَ فَجَزَاكَ اللَّهُ خَيْرًا) "வஅன்த்தும் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்" (அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக!) என்றுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மறுமொழி அளித்துள்ளார்கள் ]

"ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறுபவருக்கு எவ்வாறு மறுமொழி கூறவேண்டும்?

ஒருவர் நமக்கு ஏதேனும் ஒரு உதவி செய்தால் அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒரு சிறிய பிரார்த்தனையை இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது. ஒருவரை நாம் சந்திக்கும்போது முகமன் கூறுவதற்காக சொல்லக்கூடிய ஸலாம் என்பது எவ்வாறு ஒரு பிரார்த்தனையாக அமைகிறதோ அதேபோல, நமக்கு உதவி செய்தவருக்கு நாம் கூறும் வாசகமும் அவருக்கு ஒரு துஆவாக அமைந்துவிடுகிறது. அந்த பிரார்த்தனையின் மூலம் நாம் அவரின் உதவிக்கு நன்றி செலுத்தியவராகிவிடுகிறோம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

حدثنا الحسين بن الحسن المروزي بمكة و إبراهيم بن سعد الجوهري قالا حدثنا الاحوص بن جواب عن سعير بن الخمس عن سليمان التيمي عن أبي عثمان النهدي عن أسمة بن زيد قال : قال رسول الله صلى الله عليه و سلم من صنع إليه معروف فقال لفاعله جزاك الله خيرا فقد أبلغ في الثناء

Read more...
 
மரக்கன்று நடுவதால் இவ்வளவு நன்மைகளா...?! Print E-mail
Thursday, 17 January 2019 08:40

மரக்கன்று நடுவதால் இவ்வளவு நன்மைகளா...?!

"எந்த ஒரு முஸ்லிம் ஒரு மரக்கன்றை நடுகின்றாரோ, அது மரமாக உருவாகி பலனைத்தருகின்றபோது,

அதன் காய் கனிகளை, இலை தழைகளை எந்தப் பிராணி புசித்தாலும், அம்மரக்கன்றை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.

அம்மரத்தின் பொருட்களிலிருந்து ஏதாவதொன்றை எவராவது திருடிச் சென்றாலும் அம்மரத்தை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.

அதாவது, அம்மரத்தின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு பலன்களுக்குப் பதிலாக அம்மரக்கன்றை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்"

என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். (அறிவிப்பளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

Read more...
 
சூரத்துல் பகரா ஓதுவதைக்கேட்டு மிரண்ட குதிரை! Print E-mail
Wednesday, 22 May 2019 13:28

சூரத்துல் பகரா ஓதுவதைக்கேட்டு மிரண்ட குதிரை!

நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன்.

என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது.

உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன்.

குதிரை மிகக் கடுமையாக மிரண்டது.

உடனே ஓதுவதை நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது.

பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது.

நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது.

மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது.

Read more...
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹில்லம் அவர்களே பொறாமைப்படும் நபர்.. Print E-mail
Saturday, 29 June 2019 07:13

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹில்லம் அவர்களே பொறாமைப்படும் நபர்..

மிகவும் சுமை குறைந்த முஃமின்,

தொழுகையில் பெரும் பங்கு பெற்றவர்,

தனது இரட்சகனை சிறந்த முறையில் வணங்கக்கூடியவர்,

தனிமையிலும் அல்லாஹ்வை வழிபடுபவர்,

மக்களிடம் பிரபலமில்லாமல் இருப்பவர்,

அவரை நோக்கி விரல்களால் சுட்டிக்காட்டப்படாதவர்,

போதுமான அளவே தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடியவர்,

மேலும் அதன் மீது பொறுமையுடன் வாழ்க்கையைக் கழிப்பவர்.

Read more...
 
கலப்படமற்ற அன்பு Print E-mail
Monday, 22 July 2019 06:54

கலப்படமற்ற அன்பு

     மவ்லவி, S. லியாகத் அலீ மன்பஈ      

எல்லா அன்பிலும் சுயநலம் உண்டு. உலகில் எத்தனை வகையான நேசம் இருப்பினும் அவற்றிற்கெல்லாம் மிக உயர்ந்தது அல்லாஹ்வுக்காக நேசிப்பதுதான்.    ஏனெனில், இந்த நட்பில் மட்டும்தான் சுயநலம் என்ற கலப்படம் இருக்காது.

எவ்வித உலகியல் நோக்கமுமின்றி நம்மைப் படைத்திட்ட அல்லாஹ்வுக்காக மட்டுமே யாரையும் நேசிப்பது – பெற்றோரையும் மனைவி மக்களையும் உற்றாரையும், உறவினரையும் மட்டுமின்றி மனித இனம் முழுவதையும், பிற உயிரினங்கள் அனைத்தையும்கூட இந்த வரையறைக்குள் நாம் கொண்டு வந்துவிட்டால், அது கலப்படமற்ற அன்பாக மிளிரும்.]

உலகில் மனித இனம் மட்டுமல்ல. எல்லா உயிரினங்களும் ஒன்றையொன்று நேசிப்பதும், பாசத்தைப் பகிந்து கொள்வதும், காதலில் தோய்ந்து கனிந்துருகுவதும் முற்றிலும் இயல்பான விஷயங்களே.

பெற்றோர் தம் பிள்ளைகளிடம் காட்டும் பாசமும், பரிவும் சகோதர சகோதரிகளிடையே காணப்படும் இரத்த பாசமும், கணவன் மனைவியிடையே தோன்றும் பந்த பாசமும் வியப்புக்குரியவை அல்ல.

ஆனால், இவை போன்ற எந்த உறவுமின்றி – முதலாளி, தொழிலாளி என்பது போல் பொருள் ரீதியான தொடர்புமின்றி நன்றியுணர்வுமின்றி, இப்படிப்பட்ட எந்த காரணமும் காரியமும் இல்லாமல் அல்லாஹ்வுக்காக மட்டுமே.

Read more...
 
இறைவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் உயர்ந்த குணம் Print E-mail
Saturday, 07 February 2015 08:24

இறைவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் உயர்ந்த குணம்

எவ்வகையிலேனும் இறைவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் உயர்ந்த குணத்தைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதை விளக்குவதற்கு ஒரு சில மேற்கோள்களைப் பார்ப்போம்.

“கண்ணுக்குத் தெரிந்த ஒரு வெளிச்சத்தின் கடைக்கோடியை அடைந்துவிட்ட பின்னர், உங்கள் அறிவுக்கு எட்டாத அந்தகாரத்தில் விழப்போகும் அந்தத் தருணத்தில், (நன்மை-தீமை என்ற) இரண்டில் ஒன்று நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் முகிழ்ப்பதுதான் நம்பிக்கை ஆகும்.

இழப்பு எதிர்பார்க்கப்படுமானால், அதில் பொறுமை காக்க வேண்டும்; அல்லது, அதை விட்டு ஆகாசத்தில் பறந்துவிட வேண்டும்.” - Barbara Winters

நம்பிக்கை என்பது, ‘அறிவது என்றே இங்குச் சுட்டிக் காட்டப்படுகின்றது. வேறுபட்ட உலகமது. சற்றேனும் சந்தேகத்திற்கு இடம் கொடாமல் அறிவதுதான் நம்பிக்கையாகும். அதுதான் ஒருவரை முடிந்தவரை முயன்று பார்க்கத் தூண்டுகின்றது.

அழிவில்லை என்ற எதிர்பார்ப்பின் எல்லையைக் கடக்கத் துணிவது, அதனால் இன்னொரு நிலைக்கு உயர்வது, பின்னர் கற்பனையே செய்திருக்காத வகையில் அல்லாஹ்வுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது போன்றவை நிகழ்வதைக் காண முடியும்.

Read more...
 
சொற்களில் விஷமத்தனம்! Print E-mail
Friday, 01 May 2015 06:06

சொற்களில் விஷமத்தனம்!

  S.N.R.ஷவ்கத் அலீ மஸ்லஹி   

ஒரு மனிதனுக்கு மானம் எப்படி மிக முக்கியமோ அவ்வாறே அவன் வாழும் சமூகத்துக்குச் சொந்தமான மனிதம் முக்கியம். இதையே "ஈவு இரக்கம்" என்றும் சொல்வர். இதுவே அரபியில் "ரஹ்மத், ரஹ்மானிய்யத், ரஹீமிய்யத்" என்றும் அழைக்கப்படுகிறது.

நாம் அன்றாடம் தொட்டதெற்கெல்லாம் சொல்லிக் கொள்ளும் "பிஸ்மில்லாஹ்"வில் அந்த ரஹ்மத்தெனும் ஈவு இரக்கம் தானே அடிப்படிக் கூறாக இருக்கிறது.

சொல்லில் மட்டும் பிஸ்மி. செயலில்? யோசிக்க வேண்டிய ஒன்று. "மண்ணில் உள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், விண்ணில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள்" என்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருணைமொழி எவ்வளவு அர்த்தபுஷ்டி மிக்கது, ஆழம் மிக்கது. அதைப் படித்துப் பார்க்க மட்டும் தானா என்ன! அவற்றின் ஆழ அகலங்களை செவ்வனே செயல்படுத்திப் பார்ப்பது எப்போது?

முன்னுக்குப் பின் முரணாக நடக்கும் இவர்களைத் தான் "விஷமிகள்" என்கிறோம்.

Read more...
 
நற்குணங்கள் தடுமாறிப் போனதேன்? Print E-mail
Wednesday, 26 February 2014 22:01

நற்குணங்கள் தடுமாறிப் போனதேன்?

    M.ஜமீலா B.A (Arabic) அஸ்மா அரபி கல்லூரி, ஏர்வாடி     

இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க சொல்லவில்லை. தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக் கட்டளையிருகிறது.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் “நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்கள். (ஆதாரம்: முஅத்தா)

Read more...
 
பெயரை நினைவில் வை! Print E-mail
Wednesday, 17 September 2014 06:55

பெயரை நினைவில் வை!

மனிதனை மதிப்பதன் இன்னொரு பகுதிதான் அவர்களின் பெயர்களை நினைவில் வைப்பது. சிரமமான விஷயம் இது. ஆனால் அவசியமான விஷயம். குறிப்பாக இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கும், மக்கள் தொடர்பை விரும்புகின்றவர்களுக்கும் இருக்கவேண்டிய பண்பு.

பேருந்துப் பயணத்திலோ வங்கியிலோ, கடை வீதியிலோ திருமண வீட்டிலோ எங்காவது ஒரு தடவை மட்டுமே நாம் சந்தித்த மனிதரை மீண்டும் சந்திக்கும்போது அவரின் பெயரை நினைவில் வைத்து, “”வாருங்கள்.....” என்று பெயர் சொல்லி அழைத்துப் பாருங்கள், நிச்சயம் உங்கள் மீது ஒரு வித அன்பும், மரியாதையும் அவருக்கு ஏற்படும். பள்ளிக்கூடத்தில் கூட ஆசிரியர் மாணவர்களிடம் "அந்தக் கடைசியில் இருக்கிறியே நீ சொல்லுப்பா...!” என்றோ அல்லது வேறு எதையோ கூறும் ஆசிரியரைவிட “”அப்துல்லாஹ், நீ சொல்லு...!” என்று பெயர் கூறி அழைக்கும் ஆசிரியரையே மாணவர்கள் மதிப்பார்கள்.

தொலைப்பேசி உரையாடலிலும் அவ்வாறே. வெறுமனே “”ஹலோ என்ன விஷயம் சொல்லுங்க” என்று பேசும் மனிதர்களை விட “”சொல்லுங்க காலித்.. என்ன விஷயம் காலித்?” என்று பெயர் சொல்லிப் பேசுபவராக நீங்கள் இருந்தால் உண்மையில் உங்கள் அழைப்பு மணி ஓசை தொலைப்பேசியில் ஒலிப்பதற்கு முன் அவரின் இதயத்தில் இதமாய் ஒலிக்கும். இதனால் தான் சிலர் “”மாஷா அல்லாஹ்! ஒருதடவை தானே சந்தித்தோம்... என் பெயரை இவ்வளவு கரக்டா ஞாபகம் வெச்சிருக்கீங்களே!” என்று வியந்து கூறுவதைப் பார்க்கலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தாயிஃபில் என்ன நடந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். வீதி எங்கும் அடிமைகளும் அடியாட்களும் இரு ஓரங்களிலும் நின்றுகொண்டு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கருங்கல்லாலும், கடுஞ்சொல்லாலும் அடித்தனர், வேதனைப்படுத்தினர். உடலில் இருந்து இரத்தம் வழிகிறது. பாதங்களும் பாதணிகளும் இரத்தத்தால் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விடுகின்றன. ஊர் எல்லை வரை விரட்டி வந்தனர் மடையர்கள்.

Read more...
 
வாழ்க்கையை அழகாக்கும் முதுமை Print E-mail
Tuesday, 16 December 2014 09:34

வாழ்க்கையை அழகாக்கும் முதுமை

  கே.என். ராமசந்திரன்   

துயரங்களையும் சோதனைகளையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை முதுமை தருகிறது.

“வயதாக வயதாக மகாத்மாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அவரைச் சுற்றி எவ்வளவு இளம் பெண்கள் மொய்க்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கவிதாயினி சரோஜினி நாயுடு ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார்.

உண்மைதான்; வயதாக வயதாக முகத்தில் வசீகரம் கூடுகிறது என்று அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் காட்டுகின்றன.

20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களிடம் தம்மைப் பற்றிய உயர்வான எண்ணமும் அந்த வயதுக்கே உரிய கர்வமும் நிறைந்திருக்கின்றன.

30 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களிடம் அத்தகைய தற்பெருமை படிப்படியாக மறைந்து, கலக்கமும் கவலைகளும் லேசாக இடம்பெறத் தொடங்குகின்றன.

50 வயதுக்கு மேல் மூளையின் செல்கள் சிதையத் தொடங்குகின்றன. மூளையின் செயல்பாடுகள் மந்தமாகின்றன. தீவிரமான உணர்ச்சிகளைத் தூண்டும் சுரப்புகளின் உற்பத்தி குறைகிறது. மனதில் அமைதியும் நிறைவும் ஆசையின்மையும் நிறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Read more...
 
பசி நீக்கிய ஹஜ் பணம் Print E-mail
Monday, 13 April 2015 07:55

பசி நீக்கிய ஹஜ் பணம்

  சாளை பஷீர்  

செருப்பு தைக்கும் தொழிலாளியான அப்துல் கறீம் பாக்தாத் நகரில் வாழ்ந்துவந்தார். ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்பது அவரின் நெடு நாளைய விருப்பம். அதற்காக ஒவ்வொரு நாளும் தன்னுடைய உழைப்பிலிருந்து ஒரு சிறு தொகையை உண்டியலில் சேமித்துவந்தார். பல வருடங்களுக்குப் பிறகு ஹஜ் செல்வதற்கான தொகை சேமிப்பின் வழியாகத் திரண்டுவிட்டது. அந்த வருடம் ஹஜ் பயணக் குழுவினருடன் தாமும் சேர்ந்து புறப்பட அப்துல் கறீம் ஆயத்தமாகிவிட்டார்.

பயணம் புறப்படுவதற்கு ஒரு சில நாட்களே எஞ்சியிருந்த நிலையில் அவர் உற்சாகமாக இருந்தார். பயணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது, அவரது குட்டி மகன் அழுதுகொண்டே வந்தான். அழுகைக்கான காரணத்தைக் கேட்டார் அப்துல் கறீம். அதைக் கேட்டதும் அவருக்கு கோபம் வந்தது.

பாக்தாதில் அப்துல் கறீமின் இளமைக்கால நண்பர் வீட்டில் அவரது குடும்பத்தினர் கோழி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அப்துல் கரீமின் மகன் அங்கே போய் தனக்கும் அந்த உணவு வேண்டும் என்று கேட்டிருக்கிறான். அப்துல் கறீமின் நண்பரோ கோழியைக் கொடுக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார். அவமானம் தாங்காமல் சிறுவனும் தன் தந்தையிடம் அழுதுகொண்டே நடந்ததைச் சொல்ல அப்துல் கறீமிற்கு தன்மானம் பொங்கியது.

Read more...
 
உடல் மொழி; உலகெங்கும் ஒரே மொழி Print E-mail
Thursday, 06 March 2014 19:27

Related image Related imageRelated image

உடல் மொழி; உலகெங்கும் ஒரே மொழி

[ உள்ளுணர்வு, புலன் மீறிய அறிவு எல்லாம் தேவையில்லை. உடல் மொழிகளை புரிதல் போதும். பல ஆன்மீகவாதிகள் பிழைப்பது இப்படித்தான் என்கிறார்கள். கிரிஸ்டல் பந்து நோக்கிகள் தங்களிடம் வருபவர்களின் மனதை எப்படி அவர்கள் உடல் மொழி மூலம் தெரிந்து கொள்கிறார்கள் என விளக்குவது சுவாரசியம்.

தங்கள் முகம் நீங்கலாக தங்கள் உடல் மொழியே 90% ஆண்களுக்கும் 50% பெண்களுக்கும் தெரியாது என்ற ஆச்சரிய ஆய்வு சிந்திக்க வைக்கிறது.

பொய் சொல்லும் போது கைகள் வாயையோ அல்லது வாயுடன் மூக்கையோ தொடுவது ஏன் என்று படிக்கும் போது எனக்கு ஃப்ராய்ட் ஞாபகம் வந்தது. கை குலுக்குவோரின் அதிகாரத் தேவை அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பகுதி அசைவும் ஒரு உணர்வைச் சார்ந்தது. எதிராளிக்கு மறைமுகமாக அதை உணர்த்துகிறது. எந்த அசைவும் செயலும் எந்த உணர்வை குறிக்கிறது என்பதை படங்களுடன், உலகத் தலைவர்கள் உதாரணங்களுடன், அறிவியல் பின்புலத்துடன் விளக்குகிறார்கள். கைகள், புன்னகை, கண்கள், கை குலுக்கல்கள், பொருட்களை கையாடல், இருக்கை அமைப்புகள், அதிகாரச் சின்னங்கள் என மிக விரிவாக விளக்குகிறது புத்தகம்.]

Read more...
 
எறும்பிடம் கற்க வேண்டிய பாடங்கள்! Print E-mail
Monday, 17 February 2014 21:07

எறும்பிடம் கற்க வேண்டிய பாடங்கள்!

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி), ”எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும், அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாமல் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)” என்று கூறிற்று. (அல்குர்ஆன் 27)

இந்த வசனத்தில் எறும்புக் கூட்டத்தின் தலைமை எறும்பு கீழுள்ள எறும்புகளுக்கு, “சுலைமான் நபியின் படை வருகின்றது. நாம் அனைவரும் புதருக்குள் சென்று விடுவோம்” என்று கூறியது. உடனே அனைத்து எறும்புகளும் புதருக்குள் சென்று விட்டன.

இதில், நாம் உணரும் பாடம்தான் தலைமைத்துவம்.

ஆம்! மனிதர்களைப் போலவே எறும்புகளும் தங்களுடைய வாழ்வை முறையாக அமைத்துக் கொள்கின்றன என்பதை உணர வேண்டும். எறும்பைப் பற்றிய சிறு வரிகளை உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

Read more...
 
மன்னிக்காதவன் ஆன்மீக ஏழை! Print E-mail
Tuesday, 30 September 2014 19:36

மன்னிக்காதவன் ஆன்மீக ஏழை!

`ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்’ என்கிறது பகவத் கீதை. இஸ்லாம் கடவுளை ‘அல் கபிர்’ என்கிறது, “முழுமையாய் மன்னிப்பவர்” என்பது அதன் அர்த்தம். ‘மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்லவே முடியாது’ என்கிறது கிறிஸ்தவம். மதங்கள் எல்லாம் இப்படி மன்னிப்பைக் குறித்து விலாவரியாகச் சொன்னாலும் மனிதனுடைய மனதில் மட்டும் மன்னிப்பு குதிரைக் கொம்பாகத் தான் முளைக்கிறது.

மன்னிப்பது கோழைகளின் செயல் என்றே பலரும் நினைக்கிறார்கள். ‘எதிரி நாட்டு மன்னனைப் போரிட்டு அழிக்கும் பரம்பரை நாம்’ என மீசை முறுக்குகிறார்கள். உண்மையில் மன்னிப்பது தான் போரை விட வீரமானது. போர் உடல்களைத்தான் வெற்றி கொள்ளும், மன்னிப்பு மனதையே வெற்றி கொள்ளும். இதைத்தான் மகாத்மா சொன்னார், ‘மன்னிப்பு பலவான்களின் செயல், பலவீனர்களால் மன்னிக்க முடியாது.

கைகுலுக்கிக் கொள்வது நாம் நட்புடன் இருக்கிறோம் என்பதன் வெளி அடையாளம் மட்டும் தான். மன்னிப்புடன் மனங்களைக் குலுக்கிக் கொள்வது தான் உண்மையான நட்பின் அடையாளம். அடையாளங்கள் வாழ்க்கையை அழகாக்குவதில்லை, அவை காகிதப் பூக்களை ஒட்டி வைத்த முல்லைக் கொடி போல செயற்கையின் பிள்ளையாய் அர்த்தமிழக்கும்.

Read more...
 
நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா? Print E-mail
Tuesday, 29 September 2015 06:38

நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா?

நமது அன்றாட வாழ்க்கையில் தினமும் பல சம்பவங்கள் நிகழ்கின்றன..

பல தவறுகளை நாம் செய்கிறோம்..

பல தவறுகள் நமக்கு செய்யப்படுகிறது.

அதனால் நாம் பொருள் இழப்பு, மனக்கஷ்டங்கள் இன்னும் பல கஷ்டங்களுக்கு ஆளாகிறோம். இதன் விளைவினால் உறவுகள் முறிந்து போகிறது.

இது அனைவர் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்கள்.

இதை எந்த முறையில் நம்மை அனுகவேண்டும் என குர்ஆன் மற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வழிமுறைகள் கற்றுக்கொடுத்திருக்கிறது என்று சற்று ஆராய்வோம்.

Read more...
 
பொய் பேசுவது ஹராம் (தடுக்கப்பட்டது) Print E-mail
Sunday, 11 October 2015 07:53

பொய் பேசுவது ஹராமானதாகும் (தடுக்கப்பட்டதாகும்)

  1) பொய் பேசுவது ஹராமானது ஆகும்!  

அ) அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்:

அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)

ஆ) பொய் பேசுவது முனாபிஃக்கின் அடையாளம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: - முனாபிஃக்கின் அடையாளம் மூன்று பேசினால் பொய் பேசுவான், வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான் நம்பினால் மோசம் செய்வான். (அறிவிப்பவர்: அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் புகாரி, முஸ்லிம்)

Read more...
 
சகிப்புத்தன்மை: அதன் எல்லையும், வலிமையும் Print E-mail
Thursday, 07 January 2016 07:36

சகிப்புத்தன்மை: அதன் எல்லையும், வலிமையும்

    பஷீர் அஹ்மத் உஸ்மானி    

[ அல்லாஹ் கூறுகின்றான்: “ஒரு விஷயம் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும், ஒரு விஷயம் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (இவற்றை) அல்லாஹ் நன்கு அறிகின்றான். ஆனால் நீங்கள் அறிவதில்லை.”]

சகிப்புத்தன்மை தற்போது நாட்டின் விவாதப் பொருளாக மாறிப்போயிருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விஷயமாகும்.

பாமரர்கள், படித்தவர்கள், ஆள்கிறவர்கள், குடிமக்கள் என எல்லோராலும் அதிகம் பேசப்பட்ட ஓர் அம்சமாகும்.

பத்திரிக்கை ஊடகங்கள் பெரிய எழுத்தாளர்களைக் கொண்டும், காணொளி ஊடகங்கள் பெரிய பெரிய மேதாவிகளை அழைத்தும் சகிப்புத்தன்மைக்கு புதியதோர் வரைவிலக்கணத்தைக் கொடுத்திருக்கின்றனர்.

திருக்குறளுக்கு அடுத்து அதிக விளக்கமும், விரிவுரையும் பெற்ற ஒன்று இருக்குமானால் அது சகிப்புத்தன்மை என்ற வார்த்தையாகத்தான் இருக்கும்.

Read more...
 
தேனைவிட இனிப்பான செல்வந்தர்! Print E-mail
Monday, 11 April 2016 08:19

தேனைவிட இனிப்பான செல்வந்தர்!

"சூரியனை எவ்வாறு அதன் சுடர் பற்றிப்பிடித்துக் கொள்கின்றனவோ, அதைவிடவும் அழுத்தமான பிடியாக சிலர் பணமுள்ளோரைப் பற்றிப் பிடித்துக் கொண்டுள்ளனர்.

அத்தகைய மனிதர்களுக்கு செல்வந்தர் தேனைவிட இனிப்பானவர்;

வானத்தைவிட உயர்வானவர்;

தண்ணீரைவிட இனிமையானவர்;

நறுமலர்களைவிட மணமுள்ளவர்.

செல்வந்தர் செய்யும் தவறு அவர்களுக்குச் சரியானது.

தீமையும், நன்மையாகத் தெரியும்.

செல்வந்தர் சொல் ஏற்றுக்கொள்ளக்கூடியது,

அவர் தலம் உயர்வானது என்று பற்றிப்பிடிப்போர் கருதுவர்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 9 of 92

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article