வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு (1) Print E-mail
Monday, 18 August 2008 17:38

ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு  (1)

[ வில் வித்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற   மாவீரர்   ]

நெடிதுயர்ந்த உடல், சுருள் முடி மற்றும் பரந்த புஜங்களைக் கொண்ட அந்த வாலிபரைப் பார்க்கும் யாரும், இவர் அல்லாஹ்வின் பாதையில் தன்னை அர்ப்பணிக்க வந்தவர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இவரது இரவுகள் வணக்க வழிபாடுகளில் கழிந்தன, வீரம் மற்றும் நேர்மையான வாழ்வுக்குச் சொந்தக்காரராகவும், இறைச் சட்டங்களைக் கண்டிப்புடன் பேணி வாழக் கூடியவராகவும் அவரது வாழ்வு திகழ்ந்தது.

இறையச்சத்துடன் கழிந்த அவரது வாழ்வில், கொடைத்தன்மையும், ஏழைகளுக்கு இரங்கும் தன்மையும், பணிவும் இன்னும் தியாகமும் நிறைந்திருந்தன. இத்தகைய நற்குணங்களுக்குச் சொந்தக்காரரான ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் திருவதனங்களினால் சொர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட 10 ஸஹபாப் பெருமக்களில் ஒருவராகவும் திகழக் கூடிய நற்பேற்றைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.

இன்னும் "ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது பிரார்த்தனைகளை யா அல்லாஹ் நீ ஏற்றுக் கொள்வாயாக! இன்னும் அவரது வில்லிலிருந்து புறப்படுகின்ற அம்பு, எதிரியின் இலக்கைத் துல்லியமாகத் துளைக்க கிருபை செய்வாயாக" என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்காகத் துஆச் செய்யும் பேறு பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.

Read more...
 
அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (1) Print E-mail
Friday, 10 October 2014 06:39

அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (1)

 عبد الله ابن عباس

மதீனாவில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நண்பகல் நேரம். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரங்களில் ஊர் அடங்கி விடுவது வழக்கம். மக்கள் லுஹ்ருத் தொழுகையை முடித்து வீட்டிற்குள் புகுந்தால், சாய்ந்தோ, படுத்தோ இளைப்பாறிவிட்டு, அஸ்ருக்குத் தலையை வெளியே நீட்டுவார்கள்.

ஒரு தோழரின் வீடு. பதின்மப் பருவ இளைஞர் ஒருவர் கொடிய வெயில் தணியும்வரைகூடக் காத்திருக்காமல் நடந்து வந்து கொண்டிருந்தார். அரும்பொருள் ஒன்றைத் தேடும் அளவற்ற ஆவல் அவருக்கு. அதனால் அந்த வெப்பமெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. வீட்டை நெருங்கியவர், கதவைத் தட்டலாமா என்று யோசித்தார்.

‘நிச்சயம் அனுமதி கிடைக்கும். அந்தத் தோழரும் முகம் கோணாமல் வரவேற்பார்தாம். ஆயினும் எதற்கு அவரது இளைப்பாறல் நேரத்தில் குறுக்கிட்டுக்கொண்டு? விலை மதிப்பற்ற செல்வம் வைத்திருக்கும் செல்வந்தர் அவரை உச்சபட்சப் பணிவுடன் அணுகுவதே சரி. வீட்டுக் கதவின் வெளியே படுத்துக் கொள்வோம். வெளியில் வருபவர் எப்படியும் நம்மைப் பார்ப்பார். பேசுவோம். கேட்டுப் பெறுவோம்.’

‘தக தக’ என்று அனல் சூடு பறந்தது. மேலாடையைக் கழற்றி, கையிலிருந்த தம் சிறு மூட்டைக்குள் திணித்துத் தலையணையாக்கிப் படுத்துக் கொண்டார். அந்த வெயிலிலும் களைப்பு மெல்லிய உறக்கத்தில் ஆழ்த்தியது. பாலைப் பகுதியின் வெப்பக் காற்று மெல்லிய தூசியை வீச, உறங்கிக் கொண்டிருந்த அவர் மீது தூசுப் போர்வை.

வீட்டின் உள்ளே இருந்த தோழருக்கு வெளியில் நடப்பது எதுவும் தெரியவில்லை. உறக்கம் கலைந்தார். பிற்பகலில் செய்யவேண்டியவற்றைக் கவனிப்போம் என்று வெளியே வந்தால், வீட்டு வாசலில் ஓர் இளைஞர். படுத்திருக்கும் அவரும் அவரது கோலமும் ஆச்சரியப்படுத்த,  யார் என்று பார்த்தவர் அதிர்ந்து விட்டார்!

Read more...
 
உம்முல் முஃமினீன் ''ஸவ்தா பின் ஸமாஆ'' ரளியல்லாஹு அன்ஹா (1) Print E-mail
Friday, 18 February 2011 07:49

 முஸ்லிம் பெண்மணிகள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய வரலாறு, ஆண்களும் கூடத்தான்! 

உம்முல் முஃமினீன் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மரணத்தை அடுத்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கைத் துணைவியாக வாழ்க்கைப்பட்ட இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களின் வரிசையில், ஸவ்தா பின் ஸமாஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்தார்கள்.

இறைநம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் அற்பணம் ஆகியவற்றில் தாயவர்கள் மிகச் சிறந்த இடத்தை வகித்தார்கள். இவர்களது எளிமை மற்றும் சுயநலமில்லாத தயாள குணம் ஆகிய நற்குணங்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது மனதை மிகவும் கவர்ந்ததாக இருந்தது.

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய மக்களில் ஒருவராகவும், இன்னும் இருமுறை ஹிஜ்ரத் செய்த பாக்கியத்தைப் பெற்றவர்களுமாவார்கள். ஒருமுறை அபிசீனியாவிற்கும் இன்னுமொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் சென்றார்கள். இவர்களது வாழ்வு, உலகத்துப் பெண்மணிகளுக்கோர் முன்னுதாரணமாகும்.

Read more...
 
முதல் மனிதரின் சுருக்கமான வரலாறு ( A Must Read ) Print E-mail
Sunday, 17 August 2008 11:56

 முதல் மனிதரின் சுருக்கமான வரலாறு

உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு

o இவ்வுலகில் மனித வாழ்வின் துவக்கம் - வானவர்களின் உரையாடல்

o மலக்குகளுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்

o அல்லாஹ¤தஆலா, ஆதம் அலைஹிஸ்ஸலாமுக்கு கற்றுக்கொடுத்தான்

o மறைவான ஞானம் மலக்குகளுக்கு இல்லை

o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸஜ்தா செய்ய ஷைத்தான் மறுத்தான். எனவே இழிவுக்கு ஆளானான்

o இப்லீஸ் சிரம் பணிய மறுத்ததன் நோக்கம்

o இப்லீஸின் இம்மை மறுமை நிலை

o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவருடைய துணைவியாரும் சுவர்க்கத்தில் தங்கியிருத்தல்

o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவருடைய துணைவியாரும் ஷைத்தானால் ஏமாற்றப்படுதல்

o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கற்றுத்தந்த பாவமீட்சிக்கான பிரார்த்தனை

o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் செய்திருந்த வாக்குறுதியை மறந்துவிட்டார்கள்

o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவருடைய துணைவியாரும் பூமிக்கு இறக்கப்படுதல்

o மாந்தர்கள் அனைவரும் ஓரே ஆன்மாவிலிந்து தோன்றியவர்கள்

o அல்லாஹ் மனிதனை கடைந்த களிமண்ணிலிருந்து படைத்தான்

o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்ட நாள்

o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சம்பந்தமாக வந்துள்ள மற்ற ஹதிஸ்கள்

o விதிக்கப்பட்டது நடந்துவிட்டது

o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்ட விதம்

o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன்கள் பற்றி

o ஷைத்தான் மனிதனை வழிகெடுப்பவன்

o ஜின் இனத்தில் ஈமான் கொண்டவர்கள் உள்ளனர்

o ஆதம் அலைஹிஸ்ஸலாம் வரலாற்றிலிருந்து பெரும் படிப்பினை

Read more...
 
நபிகளாரைப் பற்றி இயேசு நாதர் Print E-mail
Friday, 25 August 2017 07:27

நபிகளாரைப் பற்றி இயேசு நாதர்

(இருவர் மீதும் இறைசாந்தி உண்டாகுக!)

இயேசு தனக்குப் பின்னர் வரப் போகின்ற இறுதித் தூதுவர் பற்றி முன்னறிவிப்பு செய்ததைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் எடுத்துக் கூறுகிறான்:

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா ”இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும். எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹமது’ என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் ”இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 61:6)

பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் – புதிய ஏற்பாட்டிலும் எதிர்காலத் தூதுவர் பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய பல்வேறு முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசன உரைகள்) பழைய ஏற்பாட்டில் உள்ளன. இந்த தீர்க்கதரிசன உரைகள் இறைவனால் மோஸேவுக்கு அருளப்படுகின்றன. மோஸேயைப் போலவே ஒரு மார்க்க நிறுவனரை (தலைவரை) – நம்பிக்கையாளரின் சமூகத்திற்கு உரிய அழகிய எடுத்துக் காட்டை இஸ்ரவேலவர்களின் சகோதர சமுதாயத்திலிருந்து எழுப்பச் செய்வேன் என இறைவன் கூறுகிறான்:

உன்னைப் போலொரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக உங்களது சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி எம் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர் சொல்வார். எம் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். (பைபிள்: 18 :18-20)

Read more...
 
வீரம் குடிகொண்ட பெண் நெஞ்சம் Print E-mail
Tuesday, 30 August 2011 10:52

     வீரம் குடிகொண்ட பெண் நெஞ்சம்      

அது ஒரு பெரிய வீடு!பெரிய பெரிய அறைகளைக் கொண்டதாகவும் உயரமானதாகவும் இருந்தது. வீடு என்று சொல்வதைவிட பெரிய அரண்மனை என்றுதான் சொல்லவேண்டும். ஏராளமான பெண்கள் அங்கு இருந்தார்கள். குழந்தைகளும் நிரம்பி இருந்தார்கள்.எல்லோரும் மதீனா நகரத்தைச் சேர்ந்தவர்கள்: முஸ்லிம்கள்.

மதீனாவில் சந்தோஷமாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டிவிடவேண்டும் என்று இஸ்லாமிய விரோதிகள் படை எடுத்து இருந்தார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போர் அது! அகழ்ப் போர் அதாவது அஹ்ஸாப் போர் என்று அதற்குப் பெயர்.

ஆண்கள் எல்லாம் போர்க்களத்திற்கு சென்றுவிட்டார்கள். பெண்களையும் குழந்தைகளையும் போருக்கு அழைத்துக் கொண்டு போக முடியாது அல்லவா?எனவே அவர்களை எல்லாம் ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரளியல்லாஹு அன்ஹு) என்று வயதான ஒரு ஸஹாபி. அவரைக் காவலுக்கு வைத்திருந்தார்கள். உள்ளே பெண்களில் ஸஃபிய்யா (ரளியல்லாஹு அன்ஹா) என்ற ஒரு ஸஹாபிய்யா இருந்தார்கள்.

Read more...
 
தபூக் யுத்தமும் தடுமாற்றமும் (1) Print E-mail
Monday, 16 May 2011 07:14

படிப்பினைகள் நிறைந்த முக்கியமான கட்டுரை

ரியாளுஸ் ஸாலிஹீன்

கஅப் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்:

(இவர்தான் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்பார்வை இழந்த காலத்தில் அவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்பவராக இருந்தார்.) கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் நபியவர்களை விட்டும் பின்தங்கி விட்டபொழுது நடந்த நிகழ்ச்சி பற்றி இவ்வாறு அறிவித்ததை நான் கேட்டுள்ளேன்.

கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கலந்துகொண்ட எந்தப் போரை விட்டும் நான் எப்போதும் பின்தங்கியதில்லை., தபூக் யுத்தத்தைத்தவிர! ஆனால் பத்று போரில் நான் கலந்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்! அதில் கலந்துகொள்ளாமல் இருந்த எவரும் கண்டிக்கப்படவில்லை. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும் – குறைஷிகளின் வாணிபக் குழுவைத் தாக்குவதற்காகத்தான் புறப்பட்டிருந்தார்கள். அங்கே முன்னறிவிப்பு இல்லாமல் அவர்களையும் அவர்களுடைய பகைவர்களையும் மோதச் செய்தான், அல்லாஹ்!

Read more...
 
ஹதீஸ்கலையின் முடிசூடா மன்னர் (1) Print E-mail
Monday, 14 March 2011 09:05

  டாக்டர், அஹ்மது பாகவி PhD 

பார்போற்றும் ஹதீஸ் கலையின் பேரரசர்

அமீருல் முஃமினீன் ஃபில்ஹதீஸ்

இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஹிஜ்ரி 194-256

அலை அடங்கிய ஆழிய நடுக்கடலை அந்தக் கப்பல் கிழித்துச் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் ஒரு மாணவரும் பயணம் செய்தார். அவரிடம் ஆயிரம் பொற் காசுகள் இருந்தன. கப்பலில் வழிப்போக்கன் ஒருவன் மாணவருக்குப் பயணத் தோழனாகக் கிடைத்தான்.அவனுடைய நடை உடை பாவனைகளைக் கண்டு அவனை நல்லவன் என நம்பிய மாணவர், தம்மிடம் ஆயிரம் பொற்காசுகள் இருப்பதை அவனிடம் வெள்ளை மனத்தோடு கூறினார்.

ஒருநாள், காலை நேரம்... மாணவரின் சகத் தோழன் விழித்தெழுந்து, கூச்சல் போட்டு அழுது புலம்பினான். அவனைச் சுற்றிப் பிரயாணிகள் கூடிவிட்டனர். கப்பல் பணியாளர்கள் பரிவோடு அவனை விசாரித்த போது அவன் சொன்னான், நான் ஆயிரம் தங்கக்காசுகள் வைத்திருந்தேன், அதனைக் காணோம். யாரோ எடுத்துக் கொண்டார்கள்.

Read more...
 
காலிப் பானையும் கலீஃபாவும்! Print E-mail
Thursday, 08 October 2015 06:36

காலிப் பானையும் கலீஃபாவும்!

இறையச்சமும் மறுமை நம்பிக்கையும் மனித மனங்களில் விதைக்கப் பட்டால் அது உலகில் எப்படிப்பட்ட அற்புத மாற்றங்களை உண்டாக்கும் எனபதை விளங்க உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.

அறியாமைக் காலத்தில் மக்கா வாசிகளோடு சேர்ந்து நபிகள் நாயகத்தையே கொல்லப் புறப்பட்டவர் உமர் அவர்கள். வழியில் அவர் செவியுற்ற திருக்குர்ஆன் வசனங்கள் அவரது வாழ்க்கையின் திசையை நேர் எதிராக மாற்றியது. அவருக்குள் படைத்த இறைவனைப் பற்றிய முறையான உணர்வும் மறுமை நம்பிக்கையும் நுழைந்தன. உடன் இஸ்லாத்தை ஏற்றார். தொடர்ந்து நபிகளாரின் ஆருயிர் தோழரானார். நபிகளாரின் மரணத்திற்குப் பின் அவரது இன்னொரு தோழரான அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அவரை அடுத்து உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மக்களின் ஜனாதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவராகப் பதவியைத் தேடி அலையவில்லை. ஆனால் ஆட்சிப்பொறுப்பு அவரைத் தேடி வந்தது. இஸ்லாமிய வழக்கில் ஜனாதிபதிக்கு கலீஃபா என்று வழங்கப்படும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! "நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3733)

Read more...
 
ஒரு தாயின் ஆவல்! Print E-mail
Monday, 29 August 2011 08:37

ஒரு தாயின் ஆவல்!

      இது ஓர் வரலாற்றுப் பொக்கிஷம்      

அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

ஹாரிஸா பின் சுராகா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயரான உம்மு ருபய்யிஉ பின் பராஉ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி எனக்கு நீங்கள் கூற மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார். எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று அவர் மீது தாக்கியிருந்தது. அவர் சுவர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக் கொள்வேன். அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஹாரிஸாவின் தாயே! சுவர்க்கத்தில் பல்வேறு (படித்தரங்களைக் கொண்ட) சுவனச் சோலைகள் உள்ளன. உங்கள் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த 'பிர்தவ்ஸ்" எனும் சுவனச் சோலையைப் பெற்றுக் கொண்டார்கள்" என்று பதிலளித்தார். (நூல்: புகாரீ)

ஓர் இலட்சியத் தாயின் ஆவல் இந்த ஹதீஸில் பிரதிபலிக்கிறது. புவிமேற்பரப்பில் கால்பதித்து நின்றாலும் சுவனத் தேடலும், இறைதிருப்தியை பெற்றுக் கொள்ளும் அவாவும் அக்கால தாய்மார்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்திருந்தன.

Read more...
 
வீரத்தாயின் புதல்வர் அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ Print E-mail
Wednesday, 18 August 2010 21:57

அம்மார் பின் யாஸிர்ரளியல்லாஹு அன்ஹு

தாயார் பெயர் சுமைய்யாரளியல்லாஹு அன்ஹா தந்தை பெயர் யாஸிர்ரளியல்லாஹு அன்ஹு.

யாஸிர்ரளியல்லாஹு அன்ஹு தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார்ரளியல்லாஹு அன்ஹு.

இணைவைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்ரளியல்லாஹு அன்ஹு சுமைய்யாரளியல்லாஹு அன்ஹா தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யாரளியல்லாஹு அன்ஹா ஆவார்.

குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர். அபூஜஹ்ல் போன்ற இணைவைப்பாளர்களில் முக்கியமானோர் மூதாதையர்களின் மூடப் பழக்க வழக்கங்களையும், இணைவைப்பையும் நியாயப்படுத்தி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஏழைக் குடும்பத்தினரை அடிமைகளை கொடுமைப் படுத்தினர். அம்மாரின் குடும்பமும் இக்கொடுமைகளை சந்திப்பதில் விதிவிலக்கு பெறவில்லை.

சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையாரளியல்லாஹு அன்ஹா அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.

Read more...
 
நீங்கள் என்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள சம்மதிக்காவிட்டால், உங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேன்! Print E-mail
Wednesday, 16 November 2011 07:19

இது ஓர் வரலாற்றுப்பொன்னேடு

''நீங்கள் என்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள சம்மதிக்கவில்லையென்றால், உங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேன்!'' 

நடுநிசி! மக்க மாநகர் வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. அன்று பவுர்ணமியாதலால் பட்டப் பகல்போல் நகரம் ஒளி வீசிக் கொண்டிருந்தது என்றாலும் ஆங்காங்கு இருந்த வீடுகள் நிழலுள் மூழ்கியும் நிழலைப் பரப்பியும் மவுனமொழி பேசின.

நான் என்னை ஒரு போர்வைக்குள் மறைத்துக் கொண்டும் நிழல்களுக்குள் ஒளித்துக் கொண்டும் சந்து பொந்துகளில் நடந்து சென்றேன். பின் முக்கிய வீதியொன்றில் முன்னேறி இலக்கை எட்டும் தூரத்தைக் கடந்து விட்டேன்.

குறைஷிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த போரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த கூடாரங்களை நோக்கியே என் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. முஸ்லிம்கள் பலரும் மக்காவை விட்டு வெளியேறிய பின்னரும் நான் மக்காவிலேயே தங்கியிருப்பதற்குக் காரணம் இருந்தது.

கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் சிலரை இரவில் யாருக்கும் தெரியாமல் மீட்டு மதீனாவுக்குக் கொண்டு சேர்ப்பதே என் பணியாக இருந்தது. அதற்காகவே நான் நடுநிசியில் தன்னந்தனியாக குறைஷிகளின் கூடாரங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.

Read more...
 
மாவீரர் துல்கர்னைன் Print E-mail
Wednesday, 18 November 2009 06:44

மாவீரர் துல்கர்னைன்

   மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்!  

''(நபியே!) 'துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்' என்று கூறுவீராக!. அவருக்கு பூமியில் ஆட்சி செய்ய நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் பயணம் சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் மறைவதைக் கண்டார். அங்கே அவர் சமுதாயத்தைக் கண்டார்.'' (அல் குர்ஆன் 18:83-6)

தரைவழிப் பயணமும் கடல்வழிப் பயணமும் செய்து உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாறு!

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலிருந்து ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு 'துல்கர்னைன்' என்ற அரசர் ஒரு நாட்டில் சிறப்பான ஆட்சி செய்து வந்தார். இந்த அரசரைப் பற்றி அரேபிய மக்களும் நிறைய அறிந்து வைத்திருந்தனர். இவரைப் பற்றிய மேலும் விபரங்கள் அறிய முஹம்மது நபியிடம் அந்த அரபிகள் பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். அந்த அரபிகளின் கேள்விகளுக்கு பதிலாகத்தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.

Read more...
 
தொட்டிலில் பேசிய மூன்று குழந்தைகள் Print E-mail
Thursday, 10 March 2011 07:59

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: ''மூன்று பேர்கள் மட்டுமே தொட்டிலில் இருக்கும்போது பேசியுள்ளார்கள்''.

1. ஈஸா இப்னு மரியம் அலைஹிஸ்ஸலாம்.

2. பனூ இஸ்ராயீல் வம்சத்தில் ஜுரைஜ் என்று ஒரு இறையடியார் இருந்தார். அவர் தனக்கென வணங்குமிடத்தை கட்டி அதில் எப்பொழுதும் இறைவனைத் தொழுது கொண்டிருந்தார். ஒரு நாள் அவரது தாய் அவரை அழைத்தார். தாய்க்கு பதில் கூறாமல் அவர் இறைவனைத் தொழுது கொண்டிருந்தார். இரண்டாவது முறையாக (அவரது தாய்) அவரை அழைத்தார். அப்பொழுதும் ஜுரைஜ் தாயின் அழைப்புக்கு பதில் அளிக்காமல் இறைவனை வணங்கிக் கொண்டிருந்தார்.

இதைக்கண்டு கோபமுற்ற (அவரது) தாய்: ‘யா அல்லாஹ்! இந்த ஜுரைஜ், விபச்சாரியின் முகத்தைப் பார்க்காமல் மரணிக்கச் செய்துவிடாதே!’ என சபித்துவிட்டார். தாயின் சபதம் நிறைவேற – ஒரு விபச்சாரி ஜுரைஜிடம் வந்து தன் ஆசைக்கு இணங்கும்படி அழைக்கும்போது ஜுரைஜ் (விபச்சாரத்திற்கு) மறுத்துவிட்டார். அந்த விபச்சாரியோ ஒரு ஆடு மேய்ப்பவனிடம் உறவு கொண்டுவிட்டு ஒரு மகனையும் ஈன்றெடுத்தாள்.

Read more...
 
நிராகரிப்பை நிராகரியுங்கள் - Dr. ஃபஜிலா ஆசாத் Print E-mail
Saturday, 27 June 2020 19:22

நிராகரிப்பை நிராகரியுங்கள்

    dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்    

மகிழ்ச்சிக்கான தேடலின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமே நிராகரிப்பு – போ. பென்னெட்

நிராகரிப்பு

மீண்டும் ஒரு முறை அவன் தான் எழுதிய கதையை எடுத்து வாசித்துப் பார்க்கிறான் அவனுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுதியது தான்தானா என வியப்பாக கூட இருக்கிறது. மிக அருமையாக வந்திருக்கிறது. நிச்சயம் இது பல பரிசுகளை தனக்கு பெற்றுத் தரக் கூடும் அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

மிக்க தன்னம்பிக்கையோடு அந்த பிரசுரத்திடம் தன்னுடைய கதையை கொடுக்கிறான். ஆனால் அது சுவற்றில் அடித்த பந்து போல பல விமர்சனங்களோடு பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளாமல் அவர்களால் நிராகரிக்கப் படுகிறது. அவன் சோர்ந்து போகிறான். அவன் நம்பிக்கை எல்லாம் சுக்கு நூறாக உடைவதை அவனால் உணர முடிகிறது.

அந்த அலுவகத்தில் அல்லும் பகலும் உழைத்து சர்வதேச அளவிலான தன் பிராஜக்டை அவன் தன் மேலதிகாரியிடம் போய் கொடுக்கிறான். ஏதோ காரணம் சொல்லி அது ஏற்றுக் கொள்ளப் படாமல் அவனிடமே திருப்பித் தரப்படுகிறது. அவன் மனம் எதையோ இழந்ததை போல் தாழ்வு மனப்பான்மையில் உழல்கிறது.

Read more...
 
வெள்ளை மனிதன் வடிக்கும் ஆனந்த கண்ணீரும், கருப்பு மனிதன் சிந்தும் வேர்வையின் சுவை உப்பே! Print E-mail
Friday, 26 June 2020 10:12

வெள்ளை மனிதன் வடிக்கும் ஆனந்த கண்ணீரும், கருப்பு மனிதன் சிந்தும் வேர்வையின் சுவை உப்பே!

     Dr.A.P.முஹம்மது அலி, Ph.d., I.P.S.(rd)     

அமெரிக்காவின் மின்னாபோலிஸ் என்ற இடத்தில் 25.5.2020 அன்று ஒரு கடையில் கறுப்பின வாலிபர் 20 டாலர் நோட்டினை கொடுத்து பொருள் வாங்கும்போது கடைக்காரர் நோட்டின் தரம் குறித்து சந்தேகம் வர அவசர காவல் துறையினருக்கு(911) தகவல் கொடுத்துள்ளார்.

காவல் ரோந்துப் படையினர் விரைந்து வந்து ஜார்ஜ் பிளாய்டு என்ற வாலிபரை பிடித்து புறங்கையினில் விலங்கு மாட்டி காவல் வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்பு கீழே குப்பறத்தள்ளி அவரின் கழுத்தில் முனங்காலை வைத்து மூச்சு விடமுடியாது அழுத்த அவர் பரிதாபமாக இறந்தார்.

அந்தக் காட்சியினை சாலையில் நின்ற அனைவரும் கண்டு வெகுண்டெழுந்தனர். அதன் விளைவு உலகில் பல இடங்களில் அதுவும் குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பா, இங்கிலாந்து நாடுகளில் போராட்டங்கள் எழுந்ததினை நீங்கள் அனைவரும் கண்டிருப்பீர்கள். அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு 'Black lives matter' என்று பெயர் இடப்பட்டுள்ளது.

அது மக்கள் இன வெறிக்கு எதிரான அஹிம்சா வழியில் ஒத்துழையாமை இயக்கம் என்று பொருளாகும். (Non violent civil disobedience) அது எந்த அளவிற்கு போய்விட்டது என்றால், 'No more corps' ' abolish the Police' எங்களுக்கு போலீசே தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு சென்று விட்டது.

Read more...
 
உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே இதற்குள்தான் உள்ளது! Print E-mail
Sunday, 07 October 2018 07:32

திருக்குர்ஆன்

      தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்      

திருக்குர்ஆன்

இதன் வருகை வானத்திலிருந்து!

இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து !

இது பூத்தபின்தான் மானுடம் தன்

மணத்தை நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து

தன் மனத்தைப் பகர்ந்தது.

கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம்

கறுப்பல்ல !

Read more...
 
படைப்புகளில் மிக மேலானவர்கள் Print E-mail
Saturday, 10 March 2018 09:27

எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:82)

நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும். (அல்குர்ஆன் 18:107)

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.

எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு. (அல்குர்ஆன் 95:4-6)

Read more...
 
ஐந்து பெண் பெற்றால்...? Print E-mail
Friday, 09 September 2016 07:06

ஐந்து பெண் பெற்றால்...?

      மெளலவி லியாகத் அலீ மன்பஈ    

"ஐந்து பெண் பெற்றால்...? அரசனும் ஆண்டியாவான்!" என்பது பழமொழி. இங்கே நாம் இதற்கு முற்றிலும் வித்தியாசமான ஒருவரைப் பார்க்க உள்ளோம்.

சமீபத்தில் ஒரு சொற்பொழிவுக்காக நாம் கும்பகோணம் சென்றிருந்தபோது அங்கே வியக்கத்தக்க முறையில் அமையப்பெற்றிருந்த ஹாஜியார் பள்ளீவாசலுக்குத் தொழச் சென்றபோது அந்தப் பள்ளியின் இமாம் மவ்லானா மஸ்தான் ஆலிம் மிஸ்பாஹி அவர்கள் நம்மை அன்புடன் வரவேற்று உபசரித்தது மட்டுமின்றி, இன்றைய நாஷ்டா நம் வீட்டில் தான் என்றும் கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வீடு எங்கே இருக்கிறது? என்று வினவியபோது, வாருங்கள் பஸ்ஸுக்கு என்றார்கள்.

குடந்தை அருகே உள்ள திருபுவனம் என்றொரு அழகிய கிராமம். அந்த ஊரையும் அவர்கள் சொந்தமாக வாங்கிக் கட்டியிருந்த வீட்டையும் பார்த்து வியந்து போன நாம், ''ஹஜ்ரத்! தாங்கள் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். அந்த பூமியைவிட்டு இங்கே எப்படி செட்டில் ஆனீர்கள்?" என்று கேட்டபோது தம் வரலாற்றை விளக்கினார்.

Read more...
 
சொர்க்கம் நோக்கிய பயணம் Print E-mail
Thursday, 21 July 2016 08:39

சொர்க்கம் நோக்கிய பயணம் - الرَّحْلة إلى الجنَّة

     மவ்லவி கான் பாகவி     

கல்வியைத் தேடிச் செல்வதன் மகிமை குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும்போது ஒரு நீண்ட ஹதீஸில் இப்படிச் சொன்னார்கள்:

ومن سلك طريقا يلتمس فيه علما سهّل الله له به طريقا إلى الجيّة.

''கல்வியைத் தேடி ஒருவர் ஒரு பாதையில் நடந்தால், அதன்மூலம் அவருக்குச் சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகின்றான்.'' (முஸ்லிம் - 5231)

இதிலிருந்து, கல்வி நோக்கிய பயணம், சொர்க்கம் நோக்கிய பயணமாகும் என்று அறியமுடிகிறது. இதற்குக் காரணம் என்ன?

இறைவேதத்தையும் இறைத்தூதரின் வழிமுறையையும் கற்றறிந்து, இறைவன் படைத்துள்ள இயற்கைச் செல்வங்களை நுணுகி ஆராயும்போது, அது மனிதனுக்கு இறையச்சத்தை ஊட்டும்; நற்பண்புகளை வளர்க்கும்; ஒழுக்கமிக்க உயர் வாழ்க்கைக்கு வழிகாட்டும். அந்த வழியில் நடப்பவர் சொர்க்கத்தை அடைவார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? சொல்லுங்கள்!

ஆனால், இன்று என்ன நடக்கிறது?

உலக நடப்பைச் சற்று ஆழமாக நோக்கினால் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வரும். ஆம்! இன்று உலக நாடுகளை ஆள்வது மன்னர்களோ பிரதமர்களோ அல்லர். அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மூன்று பிரதான சக்திகளே அவர்களை இயக்கி வருகின்றன.

Read more...
 
அநாதைகளின் மார்க்கம் இஸ்லாம்! Print E-mail
Thursday, 27 March 2014 06:23

அநாதைகளின் மார்க்கம் இஸ்லாம்!

  பேராசிரியர் கே. தாஜுத்தீன் 

இன்றைய அநாதைகளின் நிலை...

2 நிமிடத்திற்கு ஒரு அநாதை போதிய ஊட்டச் சத்தின்றியும், பராமரிப்பின்றியும் இறக்கின்றது. 14.4 கோடி அநாதைகள் உலகில் இன்று இருக்கின்றனர். ஆசியாக் கண்டத்தில் மாத்திரம் 8.76 கோடி அநாதைகள் வாழ்கின்றனர்.

எய்ட்ஸ் என்ற கொடிய நோயினால் ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் அநாதைகளாகின்றனர். ஒவ்வொரு 14 வது நொடியிலும் ஒரு புது அநாதைக் குழைந்தை உருவாகிறது.

50 சதவீத அநாதைகளின் இறப்புகள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் நிகழ்கின்றன. ஐந்து வயதுக்கும் குறைவான 50 லட்சம் அநாதைக் குழந்தைகள் இவ்வகையில் இறக்கின்றன.

2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி ஈராக்கில் மட்டும் 45 லட்சம் அநாதைகள் உள்ளனர். அவர்களில் 600,000 அநாதைகள் ஈராக்கின் தெருவோரங்களில் வாழ்கின்றனர். 740,000 பேர்கள் ஈராக்கில் 20 வருட போரினால் விதவைகளாக்கப்பட்டனர்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 8 of 107

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article