வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

‘இறை விசுவாசி ஒருபோதும் அசுத்தமடைய மாட்டான்’ Print E-mail
Saturday, 30 October 2010 09:48

[‘உனது மாதவிடாய் உனது கையில் இல்லை’ என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நோக்கி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இஸ்லாத்தில் தீட்டு என்பதும் தீண்டாமை என்பதும் அறவே இல்லை.]

அன்று ஒருநாள்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனத்து மாநகர் வீதி ஒன்றில் வந்து கொண்டிருந்தார்கள். எதிரிலே எதிர்பாரா விதமாக ஆருயிர்த் தோழர் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு வந்து கொண்டிருப்பது அவர்கள் பார்வைக்குத் தென்பட்டது.

சாதாரணமாக அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டதும் ஆரத்தழுவிக்கொள்ளத் துடிக்கும் அத்தோழர் இப்பொழுதோ தவியாய்த் தவித்தார். ஜுனுபாளியாக – குளிப்புக் கடமையானவராக இருக்கும் அவர் தூய்மையே உருவான ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அசுத்தமான நிலையில் எப்படி சந்திப்பது? கூடாது என எண்ணியவராக உடனே தான் வந்த பாதையை மாற்றி வேறு வழியே சென்றுவிட்டார்.

இதற்கிடையில் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனமோ, தம் அன்புத் தோழரின் இச்செயல் கண்டு, ஏன் தன்னைக் கண்டதும் ஓடி ஒளிந்து கொண்டார்? எங்கே போனார்? எதற்காகப் போனார் என்று பலவாராக சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் குளித்து சுத்தமான பிறகு, அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் திரும்பி வந்தார்கள்.வந்த தனது தோழரிடம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘என்ன அபூ ஹுரைராவே! எங்கு சென்று விட்டீர்?’ என்று கேட்டார்கள்.

Read more...
 
இரகசியத்தை வெளியிடாதீர்! Print E-mail
Friday, 29 October 2010 09:05

இரகசியம் என்று சொன்னாலே அது இருவருக்கும் மத்தியில் மட்டும் உள்ளது. அதை மூன்றாம் நபர் கேட்டுவிட்டால் அது இரகசியம் என்ற நிலையைவிட்டு பகிரங்கமாகி விடுகிறது.

ஒருவர் ஒரு இரகசியத்தைச் சொன்னால் அதை கேட்டவர், சொன்னவரின் அனுமதியின்றி வெளியிடக்கூடாது. ஏனெனில் அது ஒரு அமானிதம் என்கிறது இஸ்லாம்.

பொதுவாக ஒருவர் ஒரு இரகசியத்தை வெளியிடாது மறைக்கும்போது அதைத் துருவித் துருவி என்னவென்று கேட்கக்கூடாது. ஆனால் நடைமுறையில் மற்றவர்களின் இரகசியத்தை தெரிந்து கொள்ள விழைவதில் அப்படி ஒரு ஆர்வம் மனிதனுக்கு! அதிலும்,  மற்றவர்களின் இரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆண்களைவிட பெண்களுக்கு ஆர்வம் இன்னும் அதிகம்.

இன்னும் ஒரு சிலர் வினோதமான குணம் படைத்தவர்கள். இவர்கள்மற்றவரிடம் ஒரு விஷயத்தை, ‘இது மிகவும் இரகசியம், உங்களிடம் மட்டும்தான் தெரிவிக்கிறேன், வேறு எவரிடமும் சொல்ல வேண்டாம்’ என்று சொல்லி விட்டு இவரே பலரிடம். இதே ‘டயலக்கை’ மனப்பாடமாக ஒப்பிப்பார்.

ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:  நாங்கள் அப்போது சிறுவர்களாக இருந்தோம். எங்களிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு தேவையின் நிமித்தம் (ஒரு இடத்துக்கு) அனுப்பினார்கள்.

Read more...
 
எழுத்துக்கோ கருத்துக்கோ காப்புரிமை கொண்டாடாதீர்! Print E-mail
Friday, 11 March 2011 08:15

   No Copyright in Islam   

எழுத்துக்கோ கருத்துக்கோ காப்புரிமை கொண்டாடாதீர்!

இஸ்லாம் மட்டுமே இறைவனுடைய மார்க்கம்: ''நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்''. (3:19)

ஆகவே இஸ்லாத்திலுள்ள எந்த விஷயத்தைப்பற்றியும் குறிப்பாக குர்ஆன் மற்றும் ஹதீஸிலுள்ள வசனங்களையோ கருத்துகளையோ பயன்படுத்தி கட்டுரையோ பிற ஆக்கங்களையோ உருவாக்கி இது எனக்கு மட்டும் சொந்தமானது என்று எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. அதற்கான உரிமை உலகிலுள்ள எவருக்கும் கிடையாது. அப்படி எவரேனும் கருதுவாரானால் அவர் ஒன்று அப்பட்டமான சுயநலவாதியாக இருக்க வேண்டும் அல்லது அறியாமையில் மூழ்கியிருப்பவராக இருக்க வேண்டும், கற்றறிந்த அறிஞராக இருந்தாலும் சரியே!

தீனை (மார்க்கத்தை) எடுத்துச் சொல்லும் எவரும் அதற்கான கூலியாக பணத்தை மட்டுமல்ல புகழை எதிர்பார்ப்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதே! ஏனெனில் தீனுக்காக உழைக்கும்போது அதற்கான கூலியை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்ப்பதுதான் ஒரு உண்மையான முஸ்லிமுக்கு அழகு. உதாரணமாக ஒரு முஸ்லிம் இஸ்லாமிய மார்க்கம் குறித்த செய்திகளை வாய் மொழியாக (சொற்பொழிவாக) வெளியிடும்போது அவர்– தனது பேச்சுக்கு உரிமை கொண்டாடுவதை காணமுடியாது.

ஒரு மார்க்க சொற்பொழிவாளர் பேசியதை இன்னொருவர் வேறு இடத்தில் பேசும்போது அப்படியே எடுத்துப் பேசுவதை எவரும் தடைசெய்யும் நடைமுறை உலகில் எங்குமில்லை. அவ்வாறு இருக்கும்போது அதே பேச்சு, எழுத்து வடிவில் வரும்போது இந்த கட்டுரையோ - இந்த ஆக்கமோ எனக்கு மட்டும் சொந்தமானது என்று எவரேனும் சொன்னால்; இறைவன் வழங்கிய ‘இல்மு’ என்னும் அருட்கெடையை இவ்வுலக ஆதாயத்துக்காக அவர் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று தான் பொருள்.

Read more...
 
ஏழைகளை இழிவாகக் கருதாதீர்! Print E-mail
Monday, 14 March 2011 11:16

ஏழைகளை இழிவாகக் கருதாதீர்!

  M.A.முஹம்மது அலீ B.A.  

[ ஒரு விஷயத்தை செல்வந்தர்கள் எண்ணிப்பார்த்தால் ஏழைகளின் மீது அவர்களுக்கு நிச்சயம் கருணை பிறக்கும். ஆம்! செல்வந்தர்களுக்கு ஏழை மிகப்பெரிய உதவியை செய்கிறார் என்பதை செல்வந்தர்கள் புரிந்து கொண்டார்களேயானால் அவர்களால் ஏழையை நேசிக்காமல் இருக்கவே முடியாது.

ஏழை என்று ஒரு சாரார் இருக்கப்போய்தான் செல்வந்தர்கள் தர்மம் எனும் மகத்துவமிக்க நற்செயலை செய்யும் பாக்கியத்தைப் பெறுகின்றனர்.

தர்மம் நரக நெருப்பை விட்டு மனிதர்களைக் காக்கிறது என்பதை கருத்தில் கொண்டுவந்தால் நரக நெருப்பை விட்டுமல்ல ஒருவரை சுகங்களை அள்ளித்தரும் சுவனத்திற்கு இட்டுச்செல்வவதற்கும் தர்மம் காரணமாக அமைகிறகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த தர்மத்தைச் செல்வந்தர்கள் செய்வதற்கு இந்த ஏழைகள்தானே காரணியாக இருக்கின்றார்கள். ஏழை என்று ஒரு சாரார் இல்லையெனில் செல்வந்தன் எவரிடம் கொண்டுபோய் கொடுக்க முடியும்!

ஏழை பணக்காரன் என்பதெல்லாம் இவ்வுலகைப்படைத்த அந்த ஏக வல்ல இறைவனின் ஏற்பாடு. எனவே ஏழைகள் செல்வந்தர்களைவிட தாழ்ந்தவர்களேயல்ல. இன்னும் சொல்லப்போனால் இவ்வுலகில் ஏழைகள் கஷ்டப்பட்டாலும் மறுமையில் கிடைக்கக்கூடிய இன்பங்களையும் சுகபோகங்களையும் செல்வந்தர்கள் அனுபவிப்பதற்கு முன்பே அதனை அடையக்கூடிய பாக்கியசாலிகள்.

நமது இந்திய நாட்டில் வரும் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும் என்று சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. இந்த 40 கோடி ஏழை மக்களையும் இழிவானவர்களாகக் கருத முடியுமா என்ன?]

Read more...
 
இணைவைப்பில் மாட்டிக்கொண்டு நரக நெருப்பில் வீழ்ந்துவிடாதீர்கள்! Print E-mail
Monday, 01 August 2011 07:45

  எம்.ஏ.முஹம்மது அலீ   

[ ஒரே ஒரு முறைதான் இப்பிறவி.  எதற்காக 'ஷிர்க்கில் - இணைவைப்பில்' மாட்டிக்கொண்டு   வீணாக ரிஸ்க் (risk) எடுக்க வேண்டும்?!]

இணை(ஷிர்க்) வைப்பாளர்கள் செய்யும் அத்தனை வழிபாடுகளும் - அது தொழுகையாக இருந்தாலும், நோன்பாக இருந்தாலும் நிச்சயமாக அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே இணைவைப்பின் துளிநிழல் கூட நம் மீதும், நம் குடும்பத்தார்கள் மீதும் விழாமல் (நாம்) எச்சரிக்கையாக இருக்க வேண்டியது   மிக மிக அவசியம். இல்லையெனில் விடிய விடிய தொழுதாலும், பகலெல்லாம் நோன்பு நோற்றாலும் அத்தனையும் பாழ்.

... إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ -(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். எனும் திரும்பத்திரும்ப ஓதப்படுகின்ற திருக்குர்ஆனின் சூரத்துல் ஃபாத்திஹா வசனத்தில் முழுமையான நம்பிக்கையில்லாமல் தொழுகின்ற தொழுகையினால் என்ன பயன்? அல்லாஹ்விடமே கேட்கச்சொல்லி திருமறை வலியுறுத்தும்போது அந்த திருவசனத்தின் மீது பரிபூரணமான நம்பிக்கை வைக்காமல் இருப்பது இறைவன் மீது அவநம்பிக்கை கொள்வதாகத்தானே அர்த்தம்!

அல்லாஹ்விடம் முழுமையான நம்பிக்கையில்லாமல் தொழுகின்ற தொழுகை எதைச்சார்ந்தது...? சிந்தியுங்கள், அல்லாஹ் நமது ரூஹை எடுப்பதற்குள்ளாக!. எப்பொழுது மலக்குல் மவுத் வருவார் என்று எவருக்கும் தெரியாது. ஆகவே ஈமானைப் புதுப்பித்துக்கொண்டே இருப்போம். "ல இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்".

Read more...
 
உங்களுக்காக வைக்கப்படும் அந்த கடைசீத் தொழுகையைக்கூட சுன்னத்தான முறையில் தொழ வைக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லையா? Print E-mail
Monday, 26 November 2012 21:24

உங்களுக்காக வைக்கப்படும் அந்த கடைசீத் தொழுகையைக்கூட சுன்னத்தான முறையில் தொழ வைக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லையா?

தமிழகத்திலுள்ள ஹனஃபீ மத்ஹபை பின்பற்றும் ஆலிம்களுக்கு ஒரு வேண்டுகோள். மாபெரும் அறிஞர் இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு நீங்கள் ஏன் மதிப்பளிக்க மறுக்கிறீர்கள்? மறுமையில் அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதில் அப்படியென்ன ஆசை உங்களுக்கு?!

இறையச்சத்துடன் அவர்கள் சொல்லிவிட்டுச் சென்ற மிக முக்கியமான ஒரு விஷயத்தை ஏன் அலட்சியப்படுத்துகிறீர்கள்.? (பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லையே அலட்சியப்படுத்தக்கூடியவர்கள் தானே நீங்கள் என்பது ஒருபுறமிருக்க...)

"எமது அறிவுக்கு எட்டியவரை சட்டங்களை வகுத்துத் தந்திருக்கின்றேன். இதற்கு மாற்றமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸை நீங்கள் காணும்பட்சத்தில் என்னுடைய சட்டத்தை பின்பற்றுவது ஹராம்" என்று அவர்கள் எச்சரித்துள்ளது ஏன் உங்கள் காதுகளில் விழவில்லை.

ஜனாஸாத் தொழுகையின்போது முதல் தக்பீருக்குப்பின் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுவதுதான் நபிவழி (ஆதாரம் : முஸ்லிம்) என்றிருக்கும்போது அதை புறக்கணித்துவிட்டு ஃதனாவை ஓதும் பழக்கத்தை பின்பற்றி வருவது நிச்சயமக இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கருத்துக்கு மாற்றமானதே என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள். தன்னுடைய சொல்லுக்கு மாற்றமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் கிடைக்குமானால் அதைத்தான் பின்பற்ற வேண்டும், என்னை அவ்விஷயத்தில் பின்பற்றுவது கூடவே கூடாது என்று அவர்கள் எச்சரித்துச்சொன்ன பிறகும்கூட பிடிவாதம் பிடிக்கின்றீர்களே! சிந்திக்கவே மாட்டீர்களா?!

Read more...
 
இஸ்லாமிய மார்க்கம் மத துவேசத்தை தூண்டியதா? Print E-mail
Thursday, 03 October 2019 17:28

இஸ்லாமிய மார்க்கம் மத துவேசத்தை தூண்டியதா?

      Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)     

2019 செப்டம்பர் கடைசி வாரத்தில் தமிழ் பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப் பட்ட செய்தி என்னவென்றால் திண்டுக்கல் கோட்டையில், ‘சுல்தான்’ படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள இந்து முன்னெனி அமைப்பினர் அந்தப் படப்பிடிப்பு மைசூர் மன்னன் திப்பு சுல்தானைப் புகழ்ந்து எடுக்கப்படும் படமென்று முற்றுகையிட்டு படப் பிடிப்பும் பாதியில் நின்றுவிட்டதாம். அதற்கு இந்து முன்னெனி அமைப்புனர் சொல்லும் காரணம் ‘திப்பு சுல்தான் ஒரு பயங்கர வாதியாம், அவன் தான் அபிராமி சிலையினை மலையின் உச்சியில் உள்ள கோவிலிருந்து கீழே கொண்டு வந்தவனாம்’...

வரலாறு படித்தவர்களுக்கு தெரியும் ஆங்கிலேய கும்பனி அரசுக்கு எதிராக நவீன ஆயுதமான ராக்கெட்டை பயன்படுத்தி வீரமரணமடைந்த சிறந்த தளபதி என்று. இதனை நான் சொல்லவில்லை அவர்களால் பாராட்டப் படும் முன்னாள் ஜனாதிபதி அபுல் கலாம் அவர்களே பல தடவை சொல்லியுள்ளார்.

இந்தியாவில் 80 சதவீதம் இந்து மக்களைக் கொண்டு உள்ளது. அதனை முஸ்லிம் அரசர்கள் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் படையெடுப்புகள் நடத்தியும், ஆட்சியையும் செய்துள்ளனர். ஆனால் இந்திய மண்ணின் மைந்தர்கள் வழிபடும் வணக்கஸ்தலங்களுக்கு தீங்கு செய்ததில்லை என்பதும், இந்திய செல்வங்களை, புராதான கலைப் பொருட்களை ஆங்கிலேயர் போன்று கொள்ளையடிக்கவில்லை என்பதும் நடுநிலை ஆசிரியர்கள் கூறுவார்.

ஏன் இப்போதுகூட இந்திய சிலைகள், அற்புதமான பொருட்கள் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, அமெரிக்கா நாடுகளிலிருந்து தானே மீட்கப் படுகின்றது, ஆங்கிலேய ராணியின் மகுடத்தில் அலங்கரிக்கும் கோகினூர் வைரம் இந்திய மண்ணைச் சார்ந்தது தானே. திப்பு சுல்தான் மத துவேசம் கொண்டிருந்தால் அபிராமி சிலையினை உடைத்தாரா என்று ஏன் அவர்களால் சிந்திக்க முடியவில்லை. படப் பிடிப்புக்கு குழுவினர் சுல்தான் என்ற படம் திப்பு சுல்தானைப் பற்றி இல்லை என்று விளக்கம் சொன்ன பின்பும் ஏன் வீணான சர்ச்சைகள்.

Read more...
 
நபிகளாரைப் பற்றி இயேசு நாதர் Print E-mail
Friday, 25 August 2017 07:27

நபிகளாரைப் பற்றி இயேசு நாதர்

(இருவர் மீதும் இறைசாந்தி உண்டாகுக!)

இயேசு தனக்குப் பின்னர் வரப் போகின்ற இறுதித் தூதுவர் பற்றி முன்னறிவிப்பு செய்ததைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் எடுத்துக் கூறுகிறான்:

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா ”இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும். எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹமது’ என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் ”இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 61:6)

பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் – புதிய ஏற்பாட்டிலும் எதிர்காலத் தூதுவர் பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய பல்வேறு முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசன உரைகள்) பழைய ஏற்பாட்டில் உள்ளன. இந்த தீர்க்கதரிசன உரைகள் இறைவனால் மோஸேவுக்கு அருளப்படுகின்றன. மோஸேயைப் போலவே ஒரு மார்க்க நிறுவனரை (தலைவரை) – நம்பிக்கையாளரின் சமூகத்திற்கு உரிய அழகிய எடுத்துக் காட்டை இஸ்ரவேலவர்களின் சகோதர சமுதாயத்திலிருந்து எழுப்பச் செய்வேன் என இறைவன் கூறுகிறான்:

உன்னைப் போலொரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக உங்களது சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி எம் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர் சொல்வார். எம் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். (பைபிள்: 18 :18-20)

Read more...
 
மத இணக்கம் காத்த மா மனிதர் திப்புசுல்தான் Print E-mail
Monday, 16 November 2015 06:35

மத இணக்கம் காத்த மா மனிதர் திப்புசுல்தான்

  மஞ்சை வசந்தன்  

[ திப்புசுல்தான் உயிரோடு இருக்கும் வரை, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்தவே முடியாது என்பதே இந்திய வரலாற்றின் உண்மை நிலை.   திப்புசுல்தான் உயிரோடு இருக்கும் இந்தியாவில் ஓர் அங்குலம்கூட ஆங்கில ஆதிக்கத்தை அதிகப்படுத்த முடியாது என்று ஆங்கில அரசே ஒப்புக் கொண்டது.]

வரலாற்று ஆசிரியர்கள் சிலரால் குற்றங் கற்பித்து, களங்கம் கற்பித்து, உண்மைக்கு மாறாக இழிவுபடுத்தி எழுதப்பட்ட திப்பு சுல்தான் ஓர் உன்னத மனிதர், மத இணக்கம் காத்தவர்.

அவரது உண்மையான வரலாற்றையும், அவரது உண்மையான சாதனைகளையும் அறிந்து கொண்டால் அவர்மீது நமக்கு அளவற்ற மதிப்பு ஏற்படும் என்பதோடு அவரை இழித்து எழுதிய வரலாற்று ஆசிரியர்கள்மீது அளவில்லா வெறுப்பு ஏற்படும்.

ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர், இந்திய வரலாறு என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அது கல்லூரி பாடப் புத்தகமாகவும் இருந்தது. திப்புசுல்தான் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்ற முயன்றதால், அதை எதிர்த்து 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று அந்நூலில் எழுதப்பட்டிருந்தது.

திப்புசுல்தான் ஆட்சி பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த, காந்தி தர்ஷன் சமிதியின் தலைவர் பி.என். பாண்டே என்பவர், அந்நூலின் ஆசிரியர் ஹரிபிரசாத்துக்கு உடனே ஒரு கடிதம் எழுதி மேற்கண்ட செய்திக்கு ஆதாரம் என்ன என்று கேட்டார்.

மைசூர் கெசட்டரில் இருந்து எடுத்தேன் என்று ஹரி பிரசாத் பதில் எழுத, திரு பி.என். பாண்டே அவர்கள் உடனே மைசூர் பல்கலைக் கழக துணைவேந்தருக்குக் கடிதம் எழுதி இச்செய்தி உண்மையா? மைசூர் கெசட்டரில் உள்ளதா என்று கேட்டார்.

3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட எந்தத் தகவலும் மைசூர் கெசட்டரில் இல்லை.. என்று பதில் வந்தது.

Read more...
 
ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை - திப்புசுல்தான் Print E-mail
Sunday, 06 May 2012 09:43

      ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை - திப்புசுல்தான்        

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினார். 226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்லமையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கிலேயப் படைகளை திணறடித்தது.

மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின்கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தை இந்திய பாதுபாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையன் பார்வைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.

பிறகென்ன... ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருந்த தகவல் உலகுக்குத் தெரிய வந்தது. திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...
 
திப்பு சுல்தான் உண்மை வரலாற்றின் சில துளிகள் Print E-mail
Monday, 14 September 2015 08:22

திப்பு சுல்தான் உண்மை வரலாற்றின் சில துளிகள்

ஹிந்து சகோதரிகளுக்கு மேலாடை அணியும் உரிமையை பெற்று தந்த திப்பு சுல்தான்

விடுதலைப் போரின் விடிவெள்ளி என்றளவில் மட்டும் திப்புவின் வரலாறு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி அவரின் நல்லாட்சி, சீர்திருத்தங்கள், மனித நேயம், சமய நல்லிணக்கம், அறிவு ஞானம், சமூக மாற்றத்திற்கான நடவடிக்கை, ராக்கெட் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் தனி முத்திரை பதித்துள்ளார்.

ஆயினும் திப்பு சுல்தான் ஒரு மதவெறியர், கொடுங்கோலர், என்றெல்லாம் கட்டுக் கதைகள் இன்றளவும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

அக்கட்டுக் கதைகளுக்கு ஆதாரமாக W.Kirkpatrick, M.Wilks ஆகியோர் எழுதிய நூல்களையே மேற்கோளாய்க் காட்டுகின்றனர். இவ்விருவரும் கிழக்கிந்தியக் கம்பெனியிடத்தில் வேலை செய்தவர்கள்.

திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் கலந்து கொண்டு பிரிட்டிஷ் படையின் தோல்வியை நேரில் கண்டவர்கள். திப்புவின் பெருமையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட இவர்களின் நூல்கள் ஆதாரமற்றது என Brittlebank, Habib, Hasan, Chettyபோன்ற வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர்.

Read more...
 
அலீ சகோதரர்களின் அழியாத தியாகங்கள் Print E-mail
Tuesday, 27 January 2015 06:51

MUST READ BY EVERY INDIAN CITIZEN

அலீ சகோதரர்களின் அழியாத தியாகங்கள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இன்றியமையாத வரலாற்றுப் பக்கங்களில் அலீ சகோதரர்கள் என்று அழைக்கப் படும் மெளலானா முஹம்மது அலீ மற்றும் ஷவ்கத் அலீ ஆகியோருக்கு நீக்கப்பட இயலாத பல பக்கங்கள் சொந்தமாகும்.

மகாத்மா காந்தி, இந்த சகோதர்களைப் பற்றி ஒரு முறை குறிப்பிடும்போது, “என் தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளதைக் காணும் போது, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்த சகோதர்களின் பங்கு எந்த அளவுக்கு இருந்து இருக்குமென்று நாம் உணரலாம்.

இந்த சகோதரர்களின் வரலாற்றைக் காணும் முன்பு இவர்களை ஈன்றெடுத்த தாயார் ஹாஜியா ஆலாஜி பானு அவர்கள் பற்றிய ஒரு மறக்க முடியாத வரலாற்றுக் குறிப்பை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அலீ சகோதர்களின் வீட்டுக்கு வருகை தந்த காந்திஜிக்கு அவர்களின் தாயார் ஆலாஜி பானு என்கிற பீவிமா தான் தனது கையால் ராட்டையில் நெய்த ஒரு ஆடையைப் பரிசாக வழங்கி “காந்திஜி! இதைக் கதராக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.

கதர் என்றால் உருது மொழியில் “கவுரவம்” என்று பொருள். அன்று முதல் கதர் என்பது தனது கரங்களால் தானே நெய்து உடுத்தும் ஆடை – அன்னியக் கலப்பில்லாத ஆடை நாட்டின் மக்களுக்கு கவுரவத்தையும் சுய மரியாதையையும் வழங்கும் தன்மை உடையது என்கிற கோட்பாடு காந்தியால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

சுதந்திர இயக்கத்தின் அடையாளமாகக் கருதப் பட்ட கதருக்குப் பெயர் வழங்கியவர் - அதாவது அலீ சகோதரர்களின் அழியாத தியாகங்கள் சகோதரர்களின் தாயார் தனது கைகளால் நெய்த துணியை காந்திக்குப் பரிசாக அலீ சகோதரர்களின் தாய் வழங்கியதன் மூலம் அதன் காரணத்தால் அந்தத் துணிக்கு கதர் என்று பெயர் வந்தது.

Read more...
 
நேதாஜிக்கே தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதூர்ஷா Print E-mail
Wednesday, 11 November 2015 06:56

ஒரு பிடி மண்

  முனைவர் மு.அப்துல் சமது  

கம்பீரமிக்க போராளியான நேதாஜிக்கே தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன், மாமன்னர் பகதூர்ஷா

[ இந்திய வரலாற்றில் பவுத்த சகாப்தத்திற்கு பின் காலத்தாலும் அழிக்க முடியாத வரலாற்று சுவடுகளை தந்தவர்கள் முகலாயர்கள்.

இந்திய கலாச்சாரத்திற்கும், நிர்வாக முறைக்கும், கட்டிட கலைக்கும் அதற்க்கும் மேலாக வரலாறு என்பது பதிவு செய்யப்படவேண்டிய ஒன்று என்று உணர்ந்து அதை பதிவு செய்வதற்கான ஏற்பாட்டை செய்தவர்கள்.

இந்திய சனாதனத்தில் அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு அதில் இருந்து வெளிவருவதற்கான ஒரு பாதையை கிடைக்க வழி கோலியவர்கள்.

அனைத்திற்கும் மேலாக சிதறுண்டு கிடந்த பெரும் நிலப்பரப்பை ஒன்றிணைத்து பெரும் நாடக மாற்றியவர்கள்.

சகிப்புத்தன்மையின் அடையாளமாக தங்கள் நிர்வாகத்தை நடத்தியவர்கள். தாங்கள் வந்தடைந்த மண்ணையே தங்கள் தாயகமாக கொண்டவர்கள். ஆனால் வியாபாரத்திற்கு வந்த வெள்ளையர்கள் அதிகாரம் கையில் கிடைத்ததில் இருந்து வெளியேறும் வரை இந்த மண்ணில் இருந்து கொள்ளையடித்து சென்ற செல்வம்தான் பிரிட்டனை வளம் கொழிக்கும் நாடாக்கியது.

அப்படிப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போரில் பேரரசர் பகதூர் ஷாவுக்கு பிறகும் எண்ணிலடங்கா இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். -Pattabiraman ]

Read more...
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய கடந்த கால நிகழ்வுகள் Print E-mail
Sunday, 04 May 2014 07:43

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய கடந்த கால நிகழ்வுகள்

  சலீம் எம்.ஐ.எஸ்.ஸி  

o  புதையலைக் கண்டெடுத்த மனிதர்

o  தவறான முறையில் சத்தியமிட்டுக் கூறியவர்

o  பாதையில் இருந்த இடையூறை அகற்றியவர்

புதையலைக் கண்டெடுத்த மனிதர்

பிறருக்குரிய பொருட்களை தவறான முறையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. தமக்கு சொந்தமில்லாத செல்வங்களின் மீது ஆசைப்பட்டு அவற்றை அபகரித்துவிடக் கூடாது. அடுத்தவருக்குரிய பொருட்களை மோசடி செய்துவிடாமல் உரிய முறையில் ஒப்படைத்துவிட வேண்டும். இந்தப் போதனைக்கு மாற்றமாக ஏமாற்றுவதை மட்டுமே தொழிலாக செய்து கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் எப்போது திருந்துவார்களோ?

Read more...
 
முகலாயர்கள் பாரத நாட்டு ரத்தங்களே! Print E-mail
Friday, 13 November 2015 06:30

முகலாயர்கள் பாரத நாட்டு ரத்தங்களே!

இன்று இந்தியாவில் முஸ்லிம்களின் மேல் வைக்கப் படும் குற்றச் சாட்டுகளில் ஒன்று 'முஸ்லிம்கள் அனைவரும் அன்னிய நாட்டவர்'. இதில் ஐந்து சதம் கூட உண்மையில்லை என்று சொன்னாலும் குறிப்பிட்ட சிலரும், சில பத்திரிக்கைகளும் இந்த பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர்.

இப்படி கூப்பாடு போடுபவர்களின் வரலாறை நாம் புரட்டினால் அந்த மக்களே வரலாற்று ரீதியாக இந்நாட்டுக்கு அன்னியராகிறார்கள். 

அன்றைய முகலாயர்கள் இந்தியாவை சுமார் எண்ணூறு வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர்

இந்தியாவிலேயே தங்கி இந்நாட்டு மக்களை திருமணம் செய்து கொண்டு இந்நாட்டோடு இரண்டற கலந்து விட்டனர். இருந்தும் இஸ்லாமியர் அன்னிய தேசத்தவர் என்ற குரல் எப்போதாவது ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கும்.

Read more...
 
மவுலானா எனும் மகத்தான இந்தியர் Print E-mail
Tuesday, 11 November 2014 23:10

மவுலானா எனும் மகத்தான இந்தியர்

      சேயன் இப்ராகிம்    

நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானா அபுல்கலாம் ஆஸாத் பற்றிய நினைவுகூரல்

பிஹாரின் ராம்கர் நகரில் 1940-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்:

“நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமைப் படுகிறேன். 1,300 ஆண்டு பாரம்பரியமிக்க செழுமையும் புகழும் கொண்ட மார்க்கத்துக்குச் சொந்தக்காரன் நான். அதில் அணுவளவுகூடப் பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

நான் ஒரு இந்தியன் என்பதிலும் அதே அளவு பெருமை கொள்கிறேன்.”

ஆம், ஆஸாத் ஒரே நேரத்தில் உண்மையான முஸ்லிமாகவும், சிறந்த இந்தியனாகவும் விளங்கினார்.

Read more...
 
சிலுவைப் போர்கள் மூலம் இருண்ட உலகில் இருந்து வெளிச்சத்திற்கு வந்த ஐரோப்பியர்கள்! Print E-mail
Sunday, 06 April 2014 07:59

சிலுவைப் போர்கள் மூலம் இருண்ட உலகில் இருந்து வெளிச்சத்திற்கு வந்த ஐரோப்பியர்கள்!

அரேபியாவில் இருந்து புதிதாக தோன்றிய இஸ்லாம் என்ற மதம், அரசியல் சக்தியாகி அண்டை நாடுகளையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. அவ்வாறு பரவிய இஸ்லாமிய சாம்ராஜ்யம் பாலஸ்தீனத்தையும், துருக்கியையும் கைப்பற்றியதால், ரோமர்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளுடன் செய்து வந்த வர்த்தகம் தடைப்பட்டது.

அது ஐரோப்பாவில் பெரும் பொருளாதார பிரச்சினையை உருவாக்கியது. உதாரணமாக குளிர்சாதனப்பெட்டி இல்லாத அன்றைய காலத்தில், இறைச்சியை பதனிட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நறுமண சரக்கு தூள்கள் பயன்படுத்தப்பட்டன. அடுத்தது சீனாவில் இருந்து வந்து கொண்டிருந்த பட்டு போன்ற பொருட்கள் யாவும் தற்போது அரிதாகி, விலையும் பலமடங்கு அதிகரித்து விட்டது.

இதனால் அன்றைய பாப்பரசர் கிறிஸ்துவ மதத்தின் பெயரால் சிலுவைப்போரை தொடங்கினார். அத்ற்கு முன்பும் மதத்தின் பெயரால் நடந்த போர்கள் பல இருந்த போதும், உலகம் தற்போது ஐரோப்பிய மையவாத கல்வியை கற்பதால், சிலுவைப்போர்கள் முதன்மைப்படுகின்றன.

கிறிஸ்தவ புனித ஸ்தலங்கள் இருப்பதை காரணமாக காட்டி, அனைத்து ஐரோப்பிய கிறிஸ்தவர்களையும் ஒன்று திரட்டுவது இலகுவாக இருந்தது. மேலும் அன்று ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள் யாவரும், வத்திகானில் இருக்கும் பாப்பரசருக்கு கீழ்படிந்தே ஆட்சி செய்தனர். அன்றைய பாப்பரசர் சிலுவைப்போரை தொடங்கியதற்கு, பாப்பரசரின் அறைகூவலுக்கு பின்னால் இருந்த அரசியல் பற்றி பிற்காலத்திலேயே ஆராயப்பட்டது.

Read more...
 
''இந்தியாவில் எல்லாருக்கும் இடம் இருக்கிறது'' -ஜவஹர்லால் நேரு Print E-mail
Sunday, 17 November 2013 06:12

''இந்தியாவில் எல்லாருக்கும் இடம் இருக்கிறது'' -ஜவஹர்லால் நேரு

[[1948, ஜனவரி, 24-ம் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேரு ஆற்றிய உரை ]]

அலிகாருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். காலத்தால் மட்டுமல்ல, உத்வேகத்தாலும் கண்ணோட்டத்தாலும் நமக்கிடையே இடைவெளி இருக்கிறது.

நீங்கள் இன்று எங்கே நிற்கிறீர்கள், நம்மில் பெரும்பாலானோரும் எங்கே நிற்கிறார்கள் என்பதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஏராளமான கொந்தளிப்பு களையும் பெரும் துயரங்களையும் நாம் கடந்து வந்திருக்கிறோம்.

அதனால், நிகழ்காலம் குழப்பம் நிரம்பியதாகவும், அதைவிட எதிர்காலம் மூட்டமானதாகவும் ஊடுருவிப் பார்க்க முடியாததாகவும் காட்சியளிக்கிறது. இருந்தாலும், நாம் நமது இந்த நிகழ்காலத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; அப்படி எதிர்கொள்வதன்மூலம் எதிர்காலத்தை உருவாக்க முயன்றுதான் ஆக வேண்டும்.

நாம் இப்போது எங்கே நிற்கிறோம் என்பதையும் நாம் எதை அடையாளப்படுத்துகிறோம் என்பதையும் நாம் பார்த்தாக வேண்டும், நம்மில் ஒவ்வொருவரும் பார்த்தாக வேண்டும். எதிர்காலத்தின்மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் நமது நிகழ்காலத்தில் இலக்கின்றித் திரிய நேரிடுவதுடன் வாழ்க்கையை வாழ்ந்துபார்ப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லாமலும் போய்விடும்.

சுமுகமாக உடன்படுவோம்...

சுமுகமாக மாறுபடுவோம்.

Read more...
 
இளம் நோபல் பெண் தவக்குல் கர்மான் Print E-mail
Tuesday, 24 June 2014 11:51

இளம் நோபல் பெண் தவக்குல் கர்மான்

A Priceless Quote from a confident Muslim Woman

வர் அணிந்திருக்கும் ஹிஜாப் பற்றி பத்திரிக்கையாளர்கள் அவருடைய அறிவுத்திறனுக்கும், கல்வித்தகுதிக்கும் அது ஏற்றதாக உள்ளதா என கேட்ட போது அவர் கூறிய பதில்:

'பண்டைய கால மனிதன் பெரும்பாலும் நிர்வாணமாக இருந்தான். அவன் அறிவு வளர வளர அவன் ஆடைகளை அணியத் துவங்கினான். நான் இன்று யாராக இருக்கிறேனோ, என்ன அணிந்திருக்கிறேனோ, அது மனிதன் அடைந்துள்ள எண்ணங்கள் மற்றும் நாகரிகத்தின் உச்சத்தை பிரதிபலிக்கிறதே தவிர, பின்னடைவையல்ல. ஆடைகளை மீண்டும் களைவது தான் பின்னடைவாகும்.'

மனித உரிமை ஆர்வலர், இதழியலாளர், அரசியல்வாதி எனப் பல முகங்களைக் கொண்டவர் ஏமன் நாட்டைச் சேர்ந்த தவக்குல் கர்மான். பெண்களுக்கென கட்டுப்பாடுகள் நிறைந்த அரபு நாட்டில் பிறந்தாலும் வர்த்தகப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அத்துடன் தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும், சட்டக்கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார்.

மனித உரிமை பாதுகாப்புக்காக 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஏமனியப் புரட்சியில் அலி அப்துல்லா சாலேவின் அரசுக்கு எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கினைத்தார். போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சிறையில் இருந்து வெளிவந்தாலும் சோர்ந்து போகாமல் மீண்டும் போராட்டங்களைக் கையிலெடுப்பார். பிப்ரவரி மூன்றாம் நாளை ‘பெருங்கோப நாள்’ என்று அறிவித்தார்.

பெண்களின் பாதுகாப்புக்காக, ‘சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள்’ என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருக்கிறார். பெண்கள் முன்னேற்றத்திற்கு குரல் கொடுத்த அதே நேரத்தில் ஊடகங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். ஏமன் நாட்டு மக்களால் ‘இரும்புப் பெண்மணி’ ‘புரட்சித் தாய்’ என அழைக்கப்படுகிறார்.

Read more...
 
குகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்! (மறைக்கபட்ட உண்மைகள்) Print E-mail
Saturday, 09 November 2013 06:37

குகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்! (மறைக்கபட்ட உண்மைகள்)

'முஹம்மதே! அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்' என்று நீர் நினைக்கிறீரா?' (குர்ஆன் 18 : 9)

இந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகை மற்றும் ஏட்டுக்குரியவர்கள், சுவடிக்கு உரியவர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. 'அந்த ஏடு' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும். அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப் பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே 'அந்த ஏட்டுக்குரியவர்கள்' என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும்.

அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் 'அந்த ஏடு' என்று முக்கியத்துவப் படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களில் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.

Read more...
 
மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை Print E-mail
Tuesday, 19 January 2016 07:33

மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை

கிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்ததே. சிறைப் பிடிப்பட்ட பிறகும் ஒரு மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தப்பட்டார் போரஸ்.

அதுவே மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் கையில் போரஸ் சிக்கியிருந்தால், கதையே வேறு! ஆகவேதான், வரலாறு அலெக்ஸாந்தரை மாபெரும் வீரனாகவும் செங்கிஸ்கானை கொடுங்கோலனாகவும் சித்தரிக்கிறது!

ஒரு போர்வீரனின் குணநலன்களை, சிறுவயதில் அவன் வளர்க்கப்பட்ட முறைதான் நிர்ணயிக்கிறது. அரிஸ்டாடிலிடம் மாணவராக இருந்தவர் அலெக்ஸாந்தர்!

செங்கிஸ்கானின் தந்தை, வேறொரு மங்கோலியப் பிரிவின் தலைவனால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து சிறுவன் செங்கிஸ்கான் எதிரிகளிடம் சிக்கி, சித்ரவதை செய்யப்பட்டான். படை திரட்டிக்கொண்டு எதிரிகளோடு மோதியபோது, அவனுக்கு மிகவும் விசுவாசமான எழுபது வீரர்களைச் சிறைப்பிடித்து, பிரம்மாண்டப் பானைகளில் கட்டிப் போட்டு, அடியில் தீ மூட்டி, நிஜமாகவே எதிரிகளால் வறுத்து எடுத்தார்கள்!

இதையெல்லாம் பார்த்த செங்கிஸ்கானின் இதயம் இறுகிப் போய்விட்டது. நெப்போலியனின் அகராதியில் 'முடியாதது' என்கிற வார்த்தையே கிடையாது என்பார்கள். செங்கிஸ்கானின் அகராதியில் 'இரக்கம்' என்கிற வார்த்தை கிடையாது!

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 7 of 91

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article