வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

இதுவே நபி வழி! இதுவே நபி வழி! இதுவே நபி வழி! Print E-mail
Sunday, 14 June 2015 06:41

இதுவே நபி வழி! இதுவே நபி வழி! இதுவே நபி வழி!

ஹளரத் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்;

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, அருந்துவதற்கு தண்ணீர் கேட்டார்கள். ஆகவே, அவர்களுக்காக நாங்கள் ஓர் ஆட்டின் பாலை கறந்தோம். பிறகு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, பாலில் கலந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்தேன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இடப்பக்கத்திலும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்பக்கத்திலும், ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வலப்பக்கத்திலும் இருந்தனர்.

அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "இதோ அபூபக்கர் (அவருக்கு மீதியுள்ள பாலை கொடுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!" என்று (இடப்பக்கத்தில் இருந்த) அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சுட்டிக்காட்டிக் கூறினார்கள். எனினும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வலப்பக்கமிருந்த) அந்த கிராமவாசிக்கு கொடுத்தார்கள். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் கொடுக்கவில்லை.

Read more...
 
கோபத்தை அடக்குகின்றவர்களுக்கு அல்லாஹ்வின் பரிசு - ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்கள்! Print E-mail
Saturday, 28 December 2013 09:33

கோபத்தை அடக்குகின்றவர்களுக்கு அல்லாஹ்வின் பரிசு - ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்கள்!

முஆத் பின் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்;

ஒருமனிதன் சினத்தைச் செல்லுபடியாக்க ஆற்றல் பெற்றிருக்கும் நிலையிலும் அதனை மென்று விழுங்கினால் அவனை மறுமை நாளில் எல்லாப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைப்பான். ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்களில் அவன் விரும்புகிறவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவனுக்கு அனுமதி அளிப்பான். (நூல்: அபூ தாவூத், திர்மிதி)

Read more...
 
''லாஇலாஹ இல்லல்லாஹ்'' மொழிந்து ஏற்றுக்கொண்டவர்க்கு சுவனம் உறுதி Print E-mail
Tuesday, 28 February 2012 07:07

 

''லாஇலாஹ இல்லல்லாஹ்'' மொழிந்து ஏற்றுக்கொண்டவர்க்கு சுவனம் உறுதி

ஒரு முஸ்லிம் செய்த பாவத்தை அல்லாஹ் நாடினால் மறுமையில் மன்னிக்கலாம். அவருடைய தண்டனையைத் தள்ளுபடி செய்து நேரடியாகவே அவர் சொர்க்கம் செல்லலாம். இதற்கு நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.

உபாதா பின் ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "அல்லாஹ்விற்கு எதையும் இணைக ற்பிக்கமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்; திருடமாட்டோம் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா?'' என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.

Read more...
 
அறுபது முழ உயரம்...! Print E-mail
Sunday, 26 February 2012 10:41

     அறுபது முழ உயரம்!    

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை (களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது.

பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான்.

அவ்வாறே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள்.

அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.

எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.

Read more...
 
அல் ஹதீஸ் - தும்மினால்.... Print E-mail
Thursday, 17 May 2012 21:31

தும்மினால்.... 

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் ஒருவர் தும்மி, ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறினால், அதைக் கேட்ட அனைத்து முஸ்லிமின் மீதும் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' (அல்லாஹ் உனக்கு அருள் புரிவான்) என்று கூறுவது கடமையாக உள்ளது. கொட்டாவி விடுதல் என்பது, ஷைத்தானின் செயல்களில் உள்ளதாகும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அதை முடிந்த அளவுக்கு தடுத்துக் கொள்ளட்டும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவரைக் கண்டு ஷைத்தான் சிரிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரி)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''உங்களில் ஒருவர் தும்மினால் அவர், ''அல்ஹம்துலில்லாஹ்'' எனக் கூறட்டும்! அவரின் சகோதரர் அல்லது அவரது நண்பர் அவருக்கு ''யர்ஹமுகல்லாஹ்'' என்று கூறட்டும்! யர்ஹமுகல்லாஹ் என அவருக்கு ஒருவர் கூறினால், தும்மியவர், ''யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹுபாலகும்'' (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக! உங்கள் நிலையை சீராக்குவானாக) என்று கூறட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரி)

Read more...
 
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறங்கும் ஒழுக்கங்கள் Print E-mail
Sunday, 20 March 2011 09:03

உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறங்கும் ஒழுக்கங்கள்

    மவ்லானா ஸஅத் ஹஸன் ஸாஹிப்    

o நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவின் ஆரம்பத்தில் தூங்கச் செல்வார்கள். நடு இரவுக்குப்பின் அதாவது பின்னிரவில் தொழுகைக்காக எழுந்து கொள்வார்கள்.

o எப்போதும் வலதுபுறம் ஒருக்கணித்துப் படுப்பார்கள். இன்னும் வலது கையின் உள்ளங்கைமீது வலது கன்னத்தை வைத்துப் படுத்துக் கொள்வார்கள்.

o யாராவது முகங்குப்புற படுத்திருந்தால் மிகவும் அதிருப்தி அடைவார்கள். தங்களின் பாதங்களால் அவருடைய பாதத்தில் தட்டி எழுப்பவார்கள்.

o நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில நேரங்களில் பேரிச்சைமரப் பட்டைகளின் சீவல்கள் நிரப்பப்பட்ட மெத்தைகளில் படுத்திருக்கிறார்கள். இன்னும் சிலநேரங்களில் புற்கள் நிரப்பப்பட்ட மெத்தைகளிலும், சிலநேரங்களில் ஈச்சமட்டைகளால் பின்னப்பட்ட பாய்களிலும், சிலநேரங்களில் தோல்விரிப்புகளிலும், சிலநேரங்களில் துணியைக் கீழே விரித்தும், சிலநேரங்களில் வெறும் தரையிலும் படுதிருக்கிறார்கள்.

Read more...
 
நபிமொழி திரட்டிய நன்மக்கள் Print E-mail
Sunday, 20 February 2011 08:56

ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள்.

ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள்.

இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களையே சாரும்.

Read more...
 
"ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று" Print E-mail
Sunday, 01 January 2012 08:04

"ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று"

[ "இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்" என்று கூறிய ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்த வரலாறு ]

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியாரான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்கள்:

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

Read more...
 
இன்பமும் துன்பமும் நன்மையாய் அமைந்திட! Print E-mail
Sunday, 15 May 2011 08:51

ரியாளுஸ் ஸாலிஹீன்

ஸுஹைப் பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:

''ஓர் இறை நம்பிக்கையாளனின் விவகாரம் குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன்.

அவனுடைய ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது.

இது ஒரு நம்பிக்கையாளனுக்கே அன்றி வேறெவருக்கும் வாய்க்கப் பெறவில்லை!

அவனுக்கு மகிழ்வு நிலை வந்தால் நன்றி செலுத்துகிறான்.

அது அவனுக்கு நன்மையாக அமைகிறது.

அவனுக்கு கஷ்ட நிலை வந்தால் பொறுமை காக்கிறான்.

அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது!’ (நூல்: முஸ்லிம்)  

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைநம்பிக்கையாளரின் நிலைமை குறித்து வியப்பை வெளிப்படுத்தியது அவரைச் சிறப்பிக்கும் வகையில்தான்! அவரது இறைநம்பிக்கையையும் அதிலிருந்து மலரும் வாழ்க்கைப் போக்கையும் திருப்பங்களையும் மெச்சிப் பாராட்டியே நபியவர்கள் கூறினார்கள். அவனது ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது என்று!

Read more...
 
தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும் போதாது! Print E-mail
Wednesday, 16 February 2011 08:13

o  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ''ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.'' (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு).

o  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெருகிவிடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)

o  ''பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டுபண்ணி விடுமோ, அத்துணை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டுபண்ணிவிடும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: கஃபுப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

Read more...
 
இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை! Print E-mail
Tuesday, 28 December 2010 08:25

உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:

''நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால், நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு வானவர்கள் 'ஆமின்' கூறுகிறார்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோது, நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! அபூஸலமா இறந்து விட்டார்கள்'' என்று கூறினேன்.

''அல்லாஹு மஹ்ஃபிர்லீ வலஹு, வஅஹ்கிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன் (இறைவனே! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக, அவரை விட சிறந்த துணையை எனக்கு ஏற்படுத்துவாயாக)'' என்று நீ கூறு! என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

அதை நான் கூறினேன். அவரை விட சிறந்தவர்களான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எனக்கு அல்லாஹ் துணையாக்கினான். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 920)

Read more...
 
சொர்க்கத்திற்குத் தகுதியான முஸ்லிமான ஆன்மா! Print E-mail
Saturday, 02 January 2010 12:18

சொர்க்கத்திற்குத் தகுதியான முஸ்லிமான ஆன்மா!

  ஜாஃபர் அலி  

அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைக் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவர் நரகவாசிகளில் ஒருவர், என்று கூறினார்கள்.

போரிடும் நேரம் வந்த போது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து, இவர் நரகவாசிகளில் ஒருவர், என்று குறிப்பிட்டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்து விட்டார் என்று கூறப்பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் நரகத்திற்கே செல்வார் என்று (மீண்டும்) கூறினார்கள்.

மக்களில் சிலர் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்தச் சொல்லை) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது, அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்த போது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். என்று கூறப்பட்டது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கபட்டது. அப்போது அவர்கள், அல்லாஹ் மிகப்பெரியவன் . நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகிறேன், என்று கூறினார்கள்.

Read more...
 
செய்த சத்தியத்தை விட சிறந்ததைக் கண்டால்... Print E-mail
Saturday, 16 January 2010 08:18

''நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது பெரும் பாவமாகும். (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வது சிறந்ததாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி :6624-6625 அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு)

''என் நண்பர்கள் என்னை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் உஸ்ரா(ப் போரின்) படையுடன் செல்லவிருந்தனர் - உஸ்ராப் போரே தபூக் போராகும் - அப்போது நான், ''இறைத்தூதர் அவர்களே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும்படி என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்'' என்று சொன்னேன்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு எந்த வாகனத்தையும் என்னால் தரவியலாது'' என்று கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோபத்திலிருந்த சமயத்தில் நான் அவர்களிடம் சென்றுவிட்டேன். நான் அதை அறிந்திருக்கவில்லை.

Read more...
 
முந்திக்கொள்ளுங்கள்! Print E-mail
Tuesday, 10 November 2009 16:47

ஏழு நிலைகளை நீங்கள் அடைவதற்கு முன் நற்செயல்களைக் கொண்டு முந்திக்கொள்ளுங்கள்.

1  மறதியில் ஆழ்த்தும் வறுமை,

2  அநீதியிழைக்கத் தூன்டும் செல்வம்,

3  உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய்,

4  சொல்லை பலவீனப் படுத்தி விடும் முதுமை,

5  விரைந்து வரும் மரணம்,

Read more...
 
ஏழை யார்? Print E-mail
Friday, 06 November 2009 08:21

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''ஏழை யார்? என்பதை நீங்கள் அறிவீர்களா? என எங்களிடம் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்.

''எவரிடம் வெள்ளிக் காசும், பொருள்களும்,இல்லையோ அவரே எங்களில் ஏழை'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.

''என் சமுதாயத்தில் ஏழை என்பவன், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய நன்மைகளுடன் வருவான்.

ஆனாலும் அவன் இவனை ஏசினான், இவனை இட்டுக்கட்டினான்.

இவர் பொருளை சாப்பிட்டான் (கொலை செய்து) இவனது இரத்தத்தை ஓட்டினான்.

இவனை அடித்தான் என்ற குற்ற நிலையிலும் வருவான். அப்போது இவனது நன்மைகளிலிருந்து (இவனால் பாதிக்கப்பட்ட)வர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

Read more...
 
உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் Print E-mail
Monday, 10 June 2019 07:37

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம்!

 

கட்டை விரல்


உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

 

ஆள்காட்டி விரல்


உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது. உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

 

நடுவிரல்


நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

Read more...
 
குழந்தைகளை பள்ளிவாசலோடு இணையுங்கள் Print E-mail
Wednesday, 21 January 2009 07:29

    ஒரு நிகழ்ச்சி:    

"ஒரு தடவை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளில் (ஹஸன் அல்லது ஹுசைன்) ஒருவரைச் சுமந்தவாறு மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு வந்தார்கள். குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு தொழுகையைத் தொடங்கினார்கள்.

அவர்கள் சஜ்தாவுக்குச் சென்றதும் நீண்ட நேரம் அதே நிலையிலேயே இருந்திடவே - நான் சற்று என் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தேன். பேரக்குழந்தை நபியவர்கள் முதுகில் அமர்ந்திருந்தது! நான் மீண்டும் சஜ்தாவுக்குச் சென்று விட்டேன்.

தொழுகை முடிந்ததும் நபித்தோழர்கள் கேட்டார்கள்: யா ரசூலுல்லாஹ்! தாங்கள் நீண்ட நேரம் சஜ்தாவில் இருந்திடவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ அல்லது தங்களுக்கு வஹி வரத் தொடங்கி விட்டதோ என்று நாங்கள் நினைத்து விட்டோம் என்றார்கள்.

நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எனது பேரன் என் முதுகில் அமர்ந்து விட்டார். அவரது மகிழ்ச்சியைக் கெடுத்து விட நான் விரும்பவில்லை!" (நூல்கள்: அன் நஸயீ, அஹ்மது, அல் ஹாக்கிம்)

Read more...
 
உலகம் மறந்த இஸ்லாமிய விஞ்ஞானிகள் Print E-mail
Wednesday, 14 February 2018 08:22

Image result for உலகம் மறந்த இஸ்லாமிய விஞ்ஞானிகள்

உலகம் மறந்த இஸ்லாமிய விஞ்ஞானிகள்

[ ஒவ்வொரு சமூகத்திற்கும் அந்த சமூகத்தின் இறைதூதர் அவர்களின் சொல்லும் செயல்களும் தான் முன்மாதிரி.

அந்த வகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணிலிருந்தௌ பறந்து விண்ணிற்கு சென்று வந்தார்களோ அப்போதே மனித சமூகம் வானில் பறப்பதற்கான சாத்தியக் கூறுகளை இறைவன் திறந்து விட்டான் என்றே தோன்றுகிறது.

நபிகளாரின் மிஹ்ராஜ் பயணம் நவீன விஞ்ஞானத்தை விட மேம்பட்ட பல சம்பவங்களை உள்ளடக்கியது. - அஷ்ரஃப் இஸ்லாம்]

      தொடர் - 1     அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ்       

மனிதன் நடக்கக் கற்றுக் கொண்ட போதே வானத்தை அன்னாந்து பார்த்து பறக்க வேண்டும் என்று கனவு கண்டான் என்று கூறுவார்கள்.

வரலாற்றில் இதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது. பல அறிஞர்கள் வானில் பறவைகளை போல பறக்க ஆசைப்பட்டு அது தோல்வியில் முடிந்த கதை நாம் அறிந்ததே.

ஆனால் மனிதனின் இந்த நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார்கள் இரண்டு வாலிபர்கள்.   19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் கண்டுபிடித்த அற்புதம் தான் விமானம்.  இன்று அதன் பலனை உலகமே வியந்து கொண்டாடுகிறது.

Read more...
 
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது Print E-mail
Monday, 10 June 2019 06:52

     பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது       

விஞ்ஞான வளர்ச்சியை பொறுப்பற்ற முறையில் பயன் படுத்தியதால் மனிதன் இன்று தான் வாழும் பூமியை பெரும் அபாய கட்டத்தில் கொண்டு நிறுத்தி விட்டான். பூமியின் வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம். ’குளொபல் வார்மிங்’(Global warming) எனப்படும் இந்த பிரச்சனை பூமியை மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக்கி விடும் என விஞ்ஞானிகள் பீதி கொள்கிறார்கள்.

ஆனால் சராசரி மனிதனோ இதைப்பற்றிய எந்த கவலையும் விழிப்புணர்வும் இன்றி சொந்த வீடான பூமியை தன் கழிவுகளால் நிரப்பிக் கொண்டே போகிறான். குடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும், வசிக்கும் இடத்தையும் மாசு படுத்தில் மனிதனுக்கு நிகர் எதுவும் இல்லை.

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் இடையறாது காற்றில் உமிழப்பட்டுக்கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடுகள் போன்ற வாயுக்கள் நம் காற்று மண்டலத்தை விட்டு எங்கோ விண்வெளியில் ஒடிப்போய் விடாது. காற்று மண்டலத்தில் கலக்கும் இது ஒரு போர்வை போல் இது பூமியை சுற்றி மூடிக்கொண்டு மூச்சுத்திணர வைக்கும்.

பூமியின் வெப்பம் வெளியேறாமல் தடுக்கும் இந்தப் போர்வையால் பூமியின் வெப்ப அளவு அதிகரித்துக்கொண்டே போகிறதாம். மரங்கள் இந்த கார்பன் டை ஆக்ஸைடுகளை உட்கொண்டு நமக்கு தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. மரங்களை பெருமளவு வெட்டி சாய்ப்பதும் இந்த கார்பன் டை ஆக்ஸைடு அளவு காற்றில் அதிகரிக்கக் காரணம்.

Read more...
 
உண்மையான தஃவா! Print E-mail
Monday, 10 June 2019 06:30

Image result for the word dawah in arabic

உண்மையான தஃவா!

நபிகளார் ஹஜ்ஜை நிறைவேற்றும் போது ஒரு லட்சத்தி இருபதாயிரம் தோழர்கள் ஒன்றாக ஹஜ் கடமையை செய்தார்கள்.

ஆனால், மூன்று மாதம் கழித்து   நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தபோது ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டவர்கள் வெறும் முப்பதாயிரம் பேர் மட்டுமே என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று.

அப்படியானால், மற்றவர்கள் எங்கே?

'இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு என்னிடம் கேட்டதை எடுத்துச்சொல்லுங்கள்'

என, ஹஜ்ஜின் இறுதி உரையில் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற தங்களின் குதிரை மற்றும் ஒட்டகங்கள் நின்ற திசையில், பூமியின் கடைசி எல்லைவரை அவர்கள் சென்று சத்தியத்திற்கு சான்று பகன்றார்கள் என்பது வரலாறு.

இதில் நாம் கவனிக்கத் தவறும் ஒரு செய்தி,

நபித்தோழர்கள் எந்த மொழியில் தஃவா செய்தார்கள் என்பதே!

Read more...
 
சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு! Print E-mail
Friday, 02 September 2011 10:15

              சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு!           

சுமார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.

கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. ஆனாலும், சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம். இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 1612-ம் ஆண்டில் தமது சிறிய தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்து வரைபடமே தயாரித்தார். கட்டுரைகளையும் எழுதினார். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே சூரியனின் ஒளித்தட்டு தொடர்ந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.

சூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டும். பின்னர் அதேபோல மறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் ஒரு காலக்கணக்கு உள்ளது.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 6 of 99

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article