வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

முதிர்ச்சியான அறிவு Print E-mail
Thursday, 28 May 2020 07:02

முதிர்ச்சியான அறிவு

     மௌலவி. ஹிதாயத்துல்லாஹ் நூரி     

முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை மார்க்க விவகாரங்களை விவாதிப்பவர்களாக, முடிவெடுப்பவர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் அதில் *முதிர்ச்சியான அறிவு* பெற்றவர்களாகவே இருந்தனர்.

பிறை விஷயத்தில் மட்டுமல்ல. கருத்து வேறுபாடுகள் கொண்ட பல விவகாரங்களிலும் ஒரு இணக்கமான முடிவிற்கு சமூகம் வருவதற்கு அந்த முதிர்ச்சியான அறிவும் அணுகுமுறையும் தான் அடிப்படையாக இருந்தது.

தேர்ச்சியான கல்வியறிவைப் பெற்ற உலமாக்களில் பலரும் கூட எங்கே முழுமையான புரிதல் இல்லாமல் தவறிழைத்து விடுவோமோ என்று அச்சப்படும் நிலையோடுதான் முடிவுகளை எடுத்தனர். சிலர் ஒதுங்கியும் இருந்துள்ளனர்.

ஆனால் இன்றோ....?

மேலோட்டமாக சில விஷயங்களைப் படித்தும், கேட்டும் ஒரு சிறு புரிதல் ஏற்பட்டவுடன் தனது புரிதலுக்கு முரணாகத் தெரியும் அனைத்தையும் ஷிர்க்கை விட மோசமான குற்றம் போல் கருதி வெறுப்பதும், தரம் தாழ்ந்த விமர்சனங்களையும், ஆக்ரோஷமான எதிர்ப்புக்களையும், கேலி கிண்டல், அவமரியாதை போன்ற அனைத்தையும் (அல்லாஹ்வையும் மறுமையையும் உறுதியாக நம்புகிற சகோதரர்கள் மீதே) வெளிப்படுத்துவதும் யாரிடமிருந்து கற்றுக் கொண்ட பண்புகள்...?

ஷைத்தானிடமிருந்து பெற்ற, பெறவேண்டிய படிப்பினையை மறக்கலாமா...?

Read more...
 
விநோதமான வெட்டுக்கிளி Print E-mail
Monday, 13 February 2017 08:57

விநோதமான வெட்டுக்கிளி

       ரஹ்மத் ராஜகுமாரன்      

வெட்டுக்கிளி வலிமை மிக்க ஏழுவகைப் பிராணிகளின் உருவ அமைப்பில் உள்ளது.

1. அதன் தலை குதிரையின் தலையாகும்.

2. அதன் கழுத்து காளையின் கழுத்தாகும்.

3. அதன் மார்பு சிங்கத்தின் மார்பாகும்.

4. அதன் இறக்கை கழுகின் இறக்கையாகும்.

5. அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்களாகும்.

6. அதன் வால் பாம்பின் வாலாகும்.

7. அதன் வயிறு தேளின் வயிராகும். (நூல்: தஹ்தீபுல் கமால்)

Read more...
 
மாற்றுக் கருத்துக்களும் மாறக் கூடாத நட்புகளும் Print E-mail
Tuesday, 18 April 2017 08:02

மாற்றுக் கருத்துக்களும் மாறக் கூடாத நட்புகளும்

”மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” - அறிஞர் அண்ணா அவர்கள் எதிர்கட்சியில் இருந்த போது, அவர்களது கருத்துக்களையும் அரசு கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் உதிர்த்த முத்தான வார்த்தை இது .

இந்த உலகத்திற்கு வந்து மறைந்து போனவர்கள் எண்ணிலடங்காதவர்கள். இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பின் அவர்களது சந்ததியினர்களுக்குக் கூட அவர்களது முந்திய தலைமுறைகள் குறித்து ஞாபகமிருப்பதில்லை. ஆனால் சில தலைவர்களின் பெயர்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் இருக்கின்றது . ஆழ்ந்து கவனித்தால் தெரியும். அவர்கள் எவ்வாறு பிறர் கருத்துக்களை உள்வாங்கி பிறகு, தங்களது கருத்துக்களை மேம்படுத்தி செயல்படுத்தினார்கள் என்பது

இது இன்றளவில் நம்மிடையே எப்படியிருக்கின்றது என்று பார்ப்போம்,

நமது வட்டத்திற்குள் வசிப்பதே நமக்கு சுகமாக இருக்கின்றது.இந்த வட்டம் எதுவென்றால் அது நாம் சொல்வதை ஆமோதிப்பவர்களின், பாராட்டுபவர்களின் வட்டம் ஆகும். நமது ”Comfort Zone” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். ஆனால் நாம் என்று நமது வட்டங்களை தாண்டுகிறோமோ அன்று தான் நமது சிந்தனைகள், பார்வைகள் அதன் விளைவாக வெளிப்படும் உன்னதமான செயல்பாடுகள் பரந்து விரிகிறது.

Read more...
 
ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற, முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? Print E-mail
Tuesday, 14 February 2017 11:13

ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற, முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

[  ''நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்''. (2:208)

''...மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான். (4:141)

''...அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.(8:7)

''எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம். ஆகவே என்னுடைய நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!'' (39:17)

''எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்''. (2:249)

''எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொல்லாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (3:139)]

Read more...
 
இஸ்லாமிய சிந்தனையின் தேக்க நிலையும், விளைவும் Print E-mail
Friday, 21 April 2017 07:23

இஸ்லாமிய சிந்தனையின் தேக்க நிலையும், விளைவும்

       Usthaz Mansoor      

இஸ்லாம் மனித சமூகத்திற்கான இறுதித் தூது. மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த மார்க்கம் அது.இறை வார்த்தைகளால் ஆனது அதனது அடிப்படை நூலான அல் குர்ஆன்.

உண்மை இவ்வாறாக இருப்பினும் இன்று இம் மார்க்கம் அறிவுத் தலைமையில் இல்லை. மேற்கத்திய உலக சிந்தனைகளே இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன. இஸ்லாமிய சிந்தனை அதற்குப் பின்னால் செல்வது போன்றே தெரிகிறது.

அரசியலில் ஜனநாயகம்

மனித உரிமைகள் பகுதி

இலக்கியப் பகுதி

பெண்ணின் சமூகப் பங்களிப்பு

உலக அமைதியும், சமாதானமும் கொண்ட நாடுகள் சமூகங்களுக்கு மத்தியிலான சக வாழ்வு...

போன்ற இப்பகுதிகளெல்லாம் இஸ்லாம் முற்போக்கான, நாகரீக சிந்தனைகளை கொண்டில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

Read more...
 
''நீ செய்து விட்டு என்னிடம் கூறு'' Print E-mail
Friday, 19 May 2017 08:25

''நீ செய்து விட்டு என்னிடம் கூறு''

       தக்கலை கவுஸ் முஹம்மத்      

நீ செய்து விட்டு என்னிடம் கூறு’ என்று தத்துவம் பேசுபவர்கள் அறிவாளிகளா?.. இது பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள். செய்யாததை சொல்வது இறைவனிடம் வெறுப்புக்குரியதாகும்.” (அல் குர்ஆன் 61:2,3)

இரண்டு விதமான சொற்சொடர்களை இந்த வசனம் தடுக்கின்றது.

1. தாம் செய்யாததை செய்ததாகக் கூறி பெருமையடித்துக் கொள்வது,

2. தாம் செய்யாமல் பிறரை செய்யும் படி தூண்டுவது.

இஸ்லாத்தைப் பொருத்தவரை எடுத்துச் சொல்வதை விட வாழ்ந்துக் காட்டுவதே மிக சிறந்த செயலாகவும் முன் மாதிரியாகவும் கருதப்படும்.

Read more...
 
'தக்தீர்' பற்றி ஓயாத வம்புப் பேச்சு வழக்காடல்கள் Print E-mail
Wednesday, 02 August 2017 07:31

'தக்தீர்' பற்றி ஓயாத வம்புப்   பேச்சு வழக்காடல்கள்

       பொறியாளர், அப்பாஸ் மந்திரி, எல்.சி .இ.     

‘எல்லாம் இறைவன் செயல் என்றால், ஒரு மனிதன் செய்கின்ற பாவத்திற்கும் இறைவன்தானே காரணம்? தானே காரணமாக இருந்து கொண்டு, அந்த மனிதனை இறைவன் தண்டிப்பது எப்படி நியாயமாகும்?’

‘ஷைத்தானையும் படைத்துவிட்டு, அவனுக்கு அபரிமிதமான கெடுக்கும் சக்தியையும் கொடுத்துவிட்டு, இறைவன் மனிதனை பாவம் செய்ததற்காக எப்படி தண்டிக்கலாம்?’

‘எல்லாம் தக்தீர்(விதிப்)படிதானே நடக்கிறது, ஒருவன் பாவம் செய்வதும் தக்தீர்ப்படிதானே நடந்திருக்கிறது? அப்புறம் அவனை நரகத்தில் போடுவதாகச் சொல்வது பொருத்தமா?’

இந்த வினாக்களுக்கு மிகச் சுருக்கமான விடைதான் இக்கட்டுரை.

Read more...
 
பாவம் பலவீனப்படுத்தும்! Print E-mail
Tuesday, 26 September 2017 08:05

Image result for worry symbol

பாவம் பலவீனப்படுத்தும்!

    முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.    

மனித இனத்தைப் படைத்த இறைவன் அவன் இப்பரந்த நிலத்தில் வாழ்வதற்கெனச் சட்டதிட்டங்களை வகுத்தான்; கடமைகளையும் உரிமைகளையும் கட்டமைத்தான்; எல்லைகளை நிர்ணயித்தான்; குறிப்பிட்ட எல்லையை அவன் தாண்டக்கூடாதெனக் கட்டளையிட்டான். இத்தனையும் ஏன் செய்தான்? அவன் இந்நிலத்தில் சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

பிறர் மத்தியில் செல்கின்றபோது அவனுடைய மானத்திற்கும் மரியாதைக்கும் இழுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே சட்டவரையறைகளை நிர்ணயித்தான். அவனுடைய மரியாதைக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவன் செய்துவருகின்ற சின்னச் சின்னப் பாவங்களையும் தவறுகளையும் மறைத்துவிடுகின்றான்.

இறைவன் மனிதனுக்கு விதித்த எல்லைகளை மீறாத வரை அவன் தலைநிமிர்ந்து கம்பீரமாக நடைபோடுகிறான். இறைவன் விதித்த எல்லைகளை அவன் மீறத் தொடங்கிவிட்டால் மனதளவில் தளர்வடைந்துவிடுகிறான். மனத்தில் தளர்வு ஏற்பட்டுவிட்டால் நடையில் கம்பீரம் காணாமல் போய்விடும்.

மனிதன் பாவம் செய்யத் தொடங்கிவிட்டால் அவன் தனது மனத்துணிவை இழந்துவிடுவான்.

எப்போதும் பயமும் அச்சமும் அவனைக் கவ்விக் கொள்ளும்.

எதையும் தீர்மானமாகப் பேசவோ செய்யவோ துணிவு ஏற்படாது.

பிறர்மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவான்; யாரையும் எளிதில் நம்பமாட்டான்.

காரணம் தன்னைப் போலவேதான் பிறரும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

Read more...
 
சுன்னத்தில் தடம் பதிப்போம்! ஜன்னத்தில் இடம் பிடிப்போம! Print E-mail
Saturday, 02 December 2017 07:59

பற்று, நபியைப் பின்பற்று!

   காதிர் மீரான் மஸ்லஹி     

ஒருமுறை நபித்தோழர் ஒருவர் அரை குறையாக ருகூவு, சுஜூது செய்து தொழுது கொண்டிருப்பதைக் கண்ட "ஹூதைஃபா அல் யமான்" என்ற நபித்தோழர் தொழுகைக்குப் பின் அவரை உடனடியாக அழைத்து,

"தோழரே...! நீர் தொழவில்லை..! ஒருவேளை நீர் மரணித்தால் நபியின் சுன்னத்தை விட்டுவிட்ட நிலையின் தான் மரணிப்பீர்..!" என்று கண்டித்தார்கள். (நூல்: புகாரி)

இது ஒரு சிறுநிகழ்வு என்றாலும் இதில் பல்வேறு படிப்பினைகள் இச் சமூகத்திற்கு இருக்கவே செய்கிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்...

o    தொழுகை தான் அசலான அமல். அதில் மிகவும் கவனமாக இருங்கள். பொடுபோக்காக இருக்காதீர்கள்!

தக்பீர் கட்டியது முதல் சலாம் கொடுக்கும் வரையுள்ள அனைத்து அமல்களையும் முழுமையாக, நிறைவாகச் செய்யுங்கள். அரைகுறை அமல்கள் என்றைக்கும் வேலைக்கு ஆகாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

o  ஒரு தொழுகைக்கு அதன் ருகூவும் சுஜூதும் தான் அசலாக இருக்கிறது. இங்கு அதுவே சரியில்லையென்றால் பிறகு அவனது தொழுகைக்கு என்ன அர்த்தம் இருக்கிறது? எனவே நாம் நமது ருகூவு, சுஜூது எனும் குனிவு, பணிவுகளை நிறுத்தி நிதானமாக, அமைதியாகச் செய்ய வேண்டும்.

Read more...
 
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் அற்ப கொசு! Print E-mail
Monday, 08 January 2018 11:08

Image result for how mosquito take blood

மனிதர்களை ஆட்டிப்படைக்கும் அற்ப கொசு!

        எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7       

அல்லாஹ் படைத்த படைப்பினங்களில் பிரமாண்டமான உயிரினங்களும்,கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிரிகளும் இவ்வுலகில் வாழ்கின்றன.இந்த படைப்பினங்களின் மூலம் பகுத்தறிவு கொடுக்கப்பட்ட மனிதனுக்கு, அல்லாஹ் பல உதாரணங்களை சொல்லிக் காட்டி பாடம் நடத்துகின்றான். அவற்றுள் ஒன்று நாம் அற்பமாக கருதும் கொசுவின் மூலமாக,

நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை.  (அல்குர்ஆன். 2:26)

உருவத்தில் மிக சிறியதாக, அற்பமானதாக இருந்தாலும், மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளில் கொசுக்களே முதலிடத்தில் இருக்கின்றன. மலேரியா, டெங்கு, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல், ஜிக்கா வைரஸ் போன்ற நோய்களுக்கு கொசுக்களே காரணமாக இருக்கிறது. குறிப்பாக ‘அனாபெலஸ்” பெண் கொசுக்கள் மூலம்தான் மலேரியா,டெங்கு போன்ற நோய்கள் மனிதர்களுக்குப் பரவுகிறது.

உலகளவில் 2015 ஆண்டு கணக்கின்படி சுமார் 21.2 கோடிப்பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 90 சதவீதம் பாதிப்பு ஆப்பிரிக்க நாடுகளில் தான் ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

Read more...
 
வேர்களைப் பாழ்படுத்தி, கிளைகளைப் பாதுகாக்கும் மனிதர்கள்! Print E-mail
Tuesday, 11 December 2018 06:56

வேர்களைப் பாழ்படுத்தி, கிளைகளைப் பாதுகாக்கும் மனிதர்கள்!

       ஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ       

இமாம் இப்னுல் ஜவ்சீ ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்:

“மனிதர்களில் அதிகம் பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அசுத்தமொன்றைத் தெளித்து பூசிக்கொள்ளாதவாறு பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் இருந்து கொள்கிறார்கள்; ஆனால், புறம்பேசுவதிலிருந்து விலகித் தூரமாகாமல் அவர்கள் இருந்து விடுகின்றார்கள்!

தான தர்மங்களை அவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள்; ஆனால், வட்டியுடன் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் அவர்கள் கணக்கில்லாமல் இருக்கிறார்கள்!

இரவில் அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகிறார்கள்; ஆனால், பர்ழான தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்துகிறார்கள்!

Read more...
 
காஃபிர் என்பதற்கு இத்தனை அர்த்தங்களா...?! Print E-mail
Friday, 18 January 2019 11:00

காஃபிர் என்பதற்கு இத்தனை அர்த்தங்களா...?!

காஃபிர் என்பதை இன்று பலர் "இறைமறுப்பாளர்" என்பதோடு மட்டும் பொறுத்தி கெட்ட வார்த்தையாகப் பார்க்கிறார்கள்.

காஃபிர் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு.

மறைப்பது என்பதை அரபு மொழியில் குஃப்ரு என்கிறார்கள்.

அனைத்துப் பொருள்களையும் கவிழ்ந்து மூடிவிடுகின்றது இருள். எனவே இரவை காஃபிர் என்கின்றார்கள்.

உள்ளே இருக்கும் கனியை வெளித் தெரியாமல் மறைத்து விடுவதால் அதன் தொலியை காஃபூர் என்கிறார்கள்.

இரவில் வானில் விண்மீன்களை காணவிடாது மறைத்து விடுகின்ற மேகங்களை காஃபிர் என்கிறார்கள்.

Read more...
 
உண்மையான தஃவா! Print E-mail
Monday, 10 June 2019 06:30

Image result for the word dawah in arabic

உண்மையான தஃவா!

நபிகளார் ஹஜ்ஜை நிறைவேற்றும் போது ஒரு லட்சத்தி இருபதாயிரம் தோழர்கள் ஒன்றாக ஹஜ் கடமையை செய்தார்கள்.

ஆனால், மூன்று மாதம் கழித்து   நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தபோது ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டவர்கள் வெறும் முப்பதாயிரம் பேர் மட்டுமே என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று.

அப்படியானால், மற்றவர்கள் எங்கே?

'இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு என்னிடம் கேட்டதை எடுத்துச்சொல்லுங்கள்'

என, ஹஜ்ஜின் இறுதி உரையில் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற தங்களின் குதிரை மற்றும் ஒட்டகங்கள் நின்ற திசையில், பூமியின் கடைசி எல்லைவரை அவர்கள் சென்று சத்தியத்திற்கு சான்று பகன்றார்கள் என்பது வரலாறு.

இதில் நாம் கவனிக்கத் தவறும் ஒரு செய்தி,

நபித்தோழர்கள் எந்த மொழியில் தஃவா செய்தார்கள் என்பதே!

Read more...
 
லகும் தீனுகும் வலியத்தீனும் மத சார்பின்மையும் Print E-mail
Saturday, 09 November 2019 07:39

லகும் தீனுகும் வலியத்தீனும் மத சார்பின்மையும்

இஸ்லாமிய தீவிரவாதம் எனும் சொல்லாடலை போல் லகும் தீனுகும் வலியத்தீனுக்கும் மத சார்பின்மைக்கும் உள்ள உறவு தொடர்பற்றதை போல் தோன்றினாலும் இன்றைய முஸ்லீம் சமூகத்தில் இரண்டுக்கும் மத்தியில் அழுத்தமான உறவு நிலவுகிறது.

சொல்லப்போனால் இரண்டையும் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமோ அதற்கு நேர்மாற்றமாகவே சமூகம் புரிந்து வைத்துள்ளது என கருதுவது பிழையானதன்று.

எவ்வாறு விளங்கி வைத்துள்ளோம்?

சூரத்துல் காஃபிரூன் அத்தியாத்தின் இறுதி வசனமான லகும் தீனும் வலியத்தீன் என்பதற்கு நேரடி அர்த்தம் "உங்களுக்கு உங்கள் மார்க்கம், எங்களுக்கு எங்கள் மார்க்கம்".

இதை முஸ்லீம் சமூகம் அல்லாஹ்வே அவர்கள் அவர்களுடைய மார்க்கத்தை பின்பற்றட்டும். நாம் நம்முடைய மார்க்கத்தை பின்பற்றுவோம். மார்க்கத்தில் கட்டாயம் இல்லை என்று வேறு குர்ஆனில் அல்லாஹ் சொல்லியிருக்கிறான் என்ற ரீதியில் மதசார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக இவ்வசனத்தை பயன்படுத்துகின்றனர்.

Read more...
 
பகைமை மறந்து பாசம் காட்டி வாழ்வோம்! Print E-mail
Tuesday, 10 September 2019 14:46

flower cute bear love rose romance romantic friendship pink toy teddy bear affection relationship stuffed animal greeting card emotion teddy feelings valentine's day stuffed toy

பகைமை மறந்து பாசம் காட்டி வாழ்வோம்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியாரான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல் ரஹ்மதுல்லாஹி அலைஹிகூறினார்;

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்ரளியல்லாஹு அன்ஹு (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள்.

நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்' என்று கூறிவிட்டார்கள்.

Read more...
 
இஸ்லாமும் இயற்கையும் Print E-mail
Tuesday, 31 December 2019 08:09

இஸ்லாமும் இயற்கையும்

[ இயற்கை என்பது இறைவனால் உருவாக்கப்பட்டது, வளப்படுத்தப்பட்டது, அவனே அதனை அறிந்தவனாகவும், அதனுடன் நெருங்கிய தொடர்புள்ளவனாகவும், தொடர்ச்சியாக அவற்றை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனாகவும்  இருக்கிறான்.   

 இன்னும் மிகச் சிறிய அணுத்துகளிலிருந்து இன்னும் மிகப் பிரம்மாண்டமானவைகளான கோள்கள்   அனைத்தையும் அவனே உருவாக்கி, படைத்து, பரிபாளித்து வருவதோடு, அவற்றை அவன் முற்றிலும் அறிந்தவாக இருக்கின்றான்.   இவை அனைத்தும் இறைவனது ஒருங்கிணைந்த சட்ட திட்டங்களைப் பின்பற்றுகின்றன, நடைமுறைப்படுத்துகின்றன, வரம்பு மீறாது நடந்து கொள்கின்றன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காகப் படைக்கப்பட்டுள்ளது, எனவே அவற்றிற்குரிய பங்களிப்பு உண்டு, அது படைக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஏனைய படைப்பினங்களுடன் இயைந்து தன்னுடைய பணியையும் குறிப்பிட்ட தனக்கேயுரிய பாணியில் பணியாற்றுகின்றது,   இவை அனைத்தையும் சூழ்ந்தறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இறைவன் இருக்கின்றான்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன, சேவையாற்றுகின்றன, இன்னும் அவனைப் புகழ்கின்றன, அவை அவை அவற்றிற்கு உரிய பாதையில் பயணிக்கின்றன.]

Read more...
 
இனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால் Print E-mail
Saturday, 18 January 2020 18:53

இனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்

      இஸ்லாம் வருவதற்கு முன் மதீனாவில் யூதர்கள்       

இறைதூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் யூதர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதராக ஆவதற்கு முன்னால், அவர்கள் மதீனாவில் வாழ்ந்து கொண்டு இருந்தனர். மதீனாவில் இவர்கள் குடியேறுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது.

அதாவது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகை குறித்து அவர்களின் வேதங்களில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு இருந்ததால்   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  வருகையை எதிர்பார்த்தே அவர்கள் மதீனாவுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு இருந்தனர்.

ஆனால் மூஸா நபி அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களுக்குள் பல மூடநம்பிக்கைகளும் இனமேன்மை பாராட்டும் பழக்கமும் புகுந்திருந்தது. மதீனாவில் வாழும்போது அவர்கள் தங்களது இனவெறியை தக்க வைத்துக் கொண்டனர். முழுமையாக அரபியர்களுடன் ஒன்றிவிடவில்லை. தாங்கள் இஸ்ரவேலர்கள், யூதர்கள் என்ற உயர் இனம் என்று பெருமை பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அரபியர்களை மிகக் கேவலமாகக் கருதினர். அரபியர்களின் சொத்துகள் தங்களுக்கு ஆகுமானது என்றும், தாங்கள் நாடியபடி அவற்றை அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் கருதினர்.

Read more...
 
வரலாறுடன் போதனைகளையும் எடுத்துச்சொல்ல வேண்டும் Print E-mail
Monday, 09 December 2019 07:10

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ''ஏகத்துவ முழக்கம்''

[ o   அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே! நீ அறிவுடையவனல்ல. அல்லாஹ்வின் பொக்கிஷத்தில் இல்லாதது எதுவுமில்லை.

மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா?"

உனக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அகற்ற முடியாது. எனவே, உனது துன்பத்தை அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடாதே.

o "அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் இவ்விரண்டையும் பின்பற்றாதவரை உனக்கு "இம்மை-மறுமை"யில் வெற்றி கிடையாது.

"அல்-குர்ஆன், அல்-ஹதீஸ்" இரண்டையும் உன் முன் வைத்துக்கொண்டு அவ்விரண்டிலும் ஆழ்மாக சிந்தனை செய்து அவ்விரண்டின்படி நீ செயல்படு. "அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்", இதில் இப்படி இருக்கிறது, அதில் அப்படி சொல்லியிருக்கிறது போன்ற உளறல்களைக் கொண்டு ஏமாந்து விடாதே.

o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி(யை) முறையினைப் பின்பற்றுங்கள்.. "பித்அத்"-ஐ உருவாக்காதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுங்கள். மனமுரண்டு பிடிக்காதீர்கள். இறைவனை ஏகப்படுத்துங்கள். அவனுக்கு (யாரையும், எதனையும்) இணை வைக்காதீர்கள்.

o நாடியவுடன் எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அனைத்தையும் இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை.

யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு விட்டனோ அவன் தான் பலமான கயிற்றை பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றானோ அவன் தண்ணீரை இறுகப்பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான். (முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய ஃபத்ஹுர் ரப்பானி & ஃபுதூஹுல் ஃகைப்")

Read more...
 
இறைநினைவு கமழும் இல்லம் Print E-mail
Sunday, 05 January 2020 19:27

    இறைநினைவு கமழும் இல்லம்    

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வை நினைவு கூறக் கூடிய இல்லங்கள் தான் விரும்பத்தகுந்த இல்லங்கள், அல்லாஹ்வை நினைவு கூறப்படாத இல்லங்கள், (இருளடைந்த) மண்ணறைக்குச் சமமானது.''

அனைத்து வழிகளிலும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இல்லங்களை இறைவனது விருப்பத்திற்குரிய இல்லங்களாக, அவனை நினைவுகூறக்கூடிய இடங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.

உள்ளத்தாலும், சொல்லாலும், தொழுகைகளின் மூலமாகவும் (விரும்பிச் செய்யக் கூடிய சுன்னத் மற்றும் நபிலான வணக்கங்கள்), திருமறையை ஓதுவதன் மூலமாகவும், இன்னும் இஸ்லாத்தைப் பற்றி கலந்தாலோசனை செய்யக் கூடிய தளமாகவும் அல்லது இன்னும் பல் வகையான இஸ்லாமிய நூல்களைப் புரட்டி வாசிக்கக் கூடிய தளமாகவும் அது திகழ வேண்டும்.

இன்றைக்கு நம்மில் எத்தனை இல்லங்கள் மண்ணறைக்குச் சமமாக இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

Read more...
 
உலகின் மையம் மக்காவா? குர்ஆன்–ஹதீஸ்–அறிவியல் வழி ஆய்வு! Print E-mail
Wednesday, 27 May 2020 10:45

உலகின் மையம் மக்காவா?

குர்ஆன்–ஹதீஸ்–அறிவியல் வழி ஆய்வு!

      எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7      

மக்காவில் உள்ள காபத்துல்லாஹ்வை நோக்கி ஒவ்வொரு தொழுகையிலும், உலகிலுள்ள அனைத்து திசை வாழ் முஸ்லிம்களும் கிப்லாவாக முன்னோக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. கிப்லாவை மையப்படுத்தியே முஸ்லிம்கள் தொழ வேண்டும்.

ஆகவே நீர் இப்போது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தை திருப்பிக் கொள்ளும்.( முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின்போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன். 2:144)

மேற்கண்ட வசனப்படி மக்காவானது உலக முஸ்லிம்களின் ஆன்மீக மையமாக உள்ளது என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. மக்கா முஸ்லிம்களுக்கு மையமாக இருப்பதுஸ முஸ்லிம்கள் அதனை முன்னோக்கி கிப்லாவாக்கித் தொழ வேண்டும் என்ற கட்டளைக்காகவே தவிர வேறில்லை. உலகிலுள்ள மற்ற மார்க்கத்தைப் பின்பற்றும் மக்களுக்கும் மக்காவை மையமாக்குவதில் எந்த பொருளும் இல்லை..

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான்; அது பாக்கியம் மிக்கதாகவும் உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன்.3:96)

Read more...
 
தேடல்களும், விடைகளும்! Print E-mail
Tuesday, 12 March 2019 08:51

தேடல்களும், விடைகளும்!

      ஹுஸைனம்மா      

சின்ன வயசுல, கள்ளங்கபடறியா எல்லாப் புள்ளைகளையும் போல, நானும் தெரியாம முழுங்கிட்ட பபிள்கம்மை வெளியே கொண்டுவர தலைகீழா நின்னுகிட்டே, "பபிள்கம் வெளியே வந்துரட்டும். வயித்துக்குள்ளேயே வெடிச்சிடக்கூடாது அல்லாவே"ன்னு பிரார்த்தனை செய்யிற அளவுக்குத்தான் எனக்கும் பக்திப் பரவசம் இருந்துது.

ஆனா, இப்பவும் அப்படியேவா இருப்போம்? "ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி"ன்னு தெரியும்தானே.

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊரில் பிறந்ததால், என்னைச் சுற்றி எல்லாரும் முஸ்லிம்களே. எளியவர்களே அதிகம். தொழுகை, குர்ஆன், நோன்பு என்பவை வசதி படைத்தவர்களுக்கே உரியது என்ற அறியாமையால், ஓரளவு வசதி படைத்த வீட்டினர் மட்டுமே அவற்றைச் செய்து வந்தனர் (அப்போது).

காலச் சுழற்சியில் ஏற்பட்ட மாறுதல்கள் பலரின் அறிவுக் கண்ணைத் திறந்தது. தொழுகை, வசதி பார்த்தோ, ஏற்றத்தாழ்வு பார்த்தோ செய்ய வேண்டியதல்ல; படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் உரியதே என்றும் அறிந்து கொண்டோம்.

எப்போதும் எல்லாவற்றிற்கும் ஒரு "ஏன்" என்ற கேள்வி வரும் என் மனதில். அது, நோன்பாகட்டும், தொழுகையாகட்டும், பள்ளிப் பாடங்கள் ஆகட்டும், செய்திகளாகட்டும், "ஏன்" என்ற கேள்வி வராமல் இருந்ததில்லை.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 103

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article