Home கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி
அப்துர் ரஹ்மான் உமரி
தஸ்கியா (உளத்தூய்மை) என்றால் என்ன? PDF Print E-mail
Tuesday, 05 January 2010 08:15

தஸ்கியா (உளத்தூய்மை) என்றால் என்ன?

  ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி   

[ தீமையைவிட்டுத் தூரவிலகி இருப்பவரே - தூய்மை'யைப்பெற்றுக் கொள்ள முடியும்! ஆதலால், 'தஸ்கியா' அடைவதற்கான மூலகாரணமாக இறையச்சமே அதாவது 'தக்வா'வே உள்ளது. 'தக்வா'வைப் பெற்றவர்தாம் 'தஸ்கியா' வைப்பெற்றுக்கொள்ள முடியும்.

தஸ்கியா'வின் செயல்வடிவ வெளிப்பாடாக உள்ளது தொழுகை ஆகும். ஈமான் பில்லாஹ் என்பதன் முதல் வெளிப்பாடே தொழுகைதான்! ஷரீ அத்தின் துவக்கப் புள்ளியாகவும், ஷரீஅத்தைச் சூழ்ந்து வரையறையாகவும் தொழுகையாகவும் தொழுகையே உள்ளது.]

'தஸ்கியத்துந் நப்ஸ்' என்றால் 'உள்ளத்தூய்மை' எனப்பொருள்! உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகின்ற பயிற்சிகளை 'தஸ்கியா' எனுஞ்சொல்லால் குறிப்பிடுவார்கள்.இஸ்லாமிய சன்மார்க்கப் பணியில் ஈடுபடுபவர்களும் தூய மூமின்களாக வாழும்வேட்கை கொண்டோரும் தத்தமது உள்ளத்தை அவ்வப்போது தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.

'தஸ்கியா' என்றால் தூய்மைப்படுத்துவது, வளர்ந்தோங்குவது எனப்பொருள்! இவ்விரண்டு பொருள்களுக்குமிடையே அபார ஒற்றுமை உள்ளது. எந்தப்பொருள் சீர்குலைவிலிருந்தும் முறைகேட்டிலிருந்தும் 'தூய்மை'யாய் உள்ளதோ அதுவே வளர்ச்சி அடைகின்றது. 'களை'களை நீக்கி தூய்மைப்படுத்தினால்தான் பயிர் செழிப்படைகின்றது. முறைகெடான வழிகளில் செல்வதை தடுத்து நிறுத்தினால்தான் முறையான வழியில் முன்னேறுவது சாத்தியமாகும்.

Read more...
 
நிலவின் இருப்பிடம் சேறல்ல; செவ்வானம்! PDF Print E-mail
Saturday, 02 January 2010 05:43

நிலவின் இருப்பிடம் சேறல்ல; செவ்வானம்!

  ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி   

( கட்டுரையாசிரியர் ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி கோயமுத்தூரைச் சேர்ந்தவர். உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாமி்ல் ஆலிமிய்யத் பட்டம் பெற்றவர். இஸ்லாம் குறித்து பல நூல்களை எழுதியுள்ளவர். பல நூல்களை மொழிபெயர்த்துள்ளவர். இதுவரை ஏறக்குறைய 27 நூல்கள் வெளிவந்துள்ளன. '''இஸ்லாமியப் பார்வை'' என்கின்ற பெயரில் இணையதளம் ஒன்றை நடத்துகிறார். )

அவரது இணையதளம்:

http://islamiyappaarvai.blogspot.com/2008_07_01_archive.html

[[ வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் எந்த விஷயமும் இல்லாது என்றிருக்கும்போது வருகின்ற மக்கள் தாமதமாகத்தான் வருவார்கள். அதனைத் தவிர்க்கவே முடியாது.

உலகப்பற்றில் உம்மத் ஆழ்ந்துபோய்விடாமல் தடுத்து நிறுத்தி ஆஃகிரத் பாதையில் அவர்களை முன்னழைத்துச் செல்லும் பொறுப்பை சுமக்கவேண்டிய அறிஞர் பெருமக்கள் அதற்கு நேர்எதிர் திசையில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளதைக் காணுங்கால் உள்ளம் நொறுங்குகின்றது. இந்தக் கொடுமையை எங்கேபோய் சொல்லி அழ? வெள்ளிக்கிழமை ஜும்ஆ மேடைகளில் 'நஸீஹா' பண்ணாமல் அரசியல்வாதிகளுக்கு இணையாக ஃபிக்ஹுவை அடிப்படையாக வைத்து பிரிந்துசென்றுவிட்ட குழுக்களை விமர்சனம் செய்யும் போக்கு இப்போதெல்லாம் அதிகரித்துக் கொண்டே செல்வதையும் காணத்தானே செய்கிறோம்?

அடுத்தவர்களைத் திட்டும் வேலையை வேறுயார் வேண்டுமானாலும் செய்யலாம். உலமாக்கள் செய்யக்கூடாது! வழிகாட்டும் விண்மீன்கள் என்றால் வானத்தில் அல்லவா இருக்கவேண்டும்? சேற்றில் பிரதிபலிக்கும் நிலாவுக்கும் செவ்வானத்தில் தவழும் நிலாவுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டல்லவா?யாரோ ஒருவருடைய உலக வாழ்க்கைக்காக நாமேன் நமது ஆஃகிரத் வாழ்வைக் கெடுத்துக் கொள்ளவேண்டும்? ]]

சகோதரத்துவம் எனும் சொல்லை உலகிற்கு அறிமுகப்படுத்தியது இஸ்லாம் என்று மார்தட்டிக் கொள்கிறோம். சகோதரன் என்ற வார்த்தை உண்மையில் மிகப்பெரிய வார்த்தை! நம்முடைய நடைமுறை வாழ்வில் அதற்கு எந்தளவு மரியாதை இருக்கின்றது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.இறைவனை ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கான இலக்கணத்தை குர்ஆன் வரையறுத்துள்ளது.

Read more...
 
மனைவி என்றால் ஸாலிஹான மனைவி PDF Print E-mail
Friday, 01 January 2010 07:58

உலக வரலாற்றில் இப்படியோர் சம்பவம் வேறெங்கேணும் உண்டா?

  சையத் அப்துர் ரஹ்மான் உமரி  

அழகான குழந்தை அது! நான் முழுக்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற தோற்றம். அந்தக் குழந்தையை யார் பார்த்தாலும் உடனே எடுத்துக் கொஞ்சத் தொடங்கி விடுவார்கள். ஒருநாள் திடீரென்று அந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. குழந்தையின் தந்தையான அபுதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு வெளியே வேளை விஷயமாக போகக் கிளம்பினார். குழந்தையின் தாய் உம்முஸுலைம் அக்கறையாக குழந்தையைப் பார்த்துக் கொண்டார். வீடு திரும்பியவுடன் குழந்தையைப் பற்றித்தான் முதலில் விசாரித்தார்.

''எப்படி இருக்கிறது? உடம்பு சரியாகிவிட்டதா?''

''பரவாயில்லை. முன்பைவிட இப்போது நிம்மதியாக உள்ளான்!'' என்றார் அந்தத் தாய்!

''குழந்தையை கொண்டு வாருங்கள். பார்க்க வேண்டும் என்று மனசு துடிக்கின்றது!'' என்றார் அந்த தந்தை.

Read more...
 
பறப்பதற்கே சிறகுகள் PDF Print E-mail
Friday, 05 June 2009 07:51

பறப்பதற்கே சிறகுகள்

  சையத் அப்துர் ரஹ்மான் உமரி   

M U S T    R E A D

[ ஆண்பெண் உறவு மனித வாழ்வில் எவ்வாறு அமைந்து வந்துள்ளது என்பதை நாம் வரலாற்றில் ஆராய்ந்து பார்த்தோமானால் ஒன்று அது முற்றலட்சியப் (Negligence) படுத்தப்பட்டு வந்துள்ளது. இல்லையென்றால் அதிதீவிர பக்கச் சார்பு (Exaggeration) உடையதாக இருந்துள்ளது,

ஒரு பக்கம் எந்த பெண் தாயாக இருந்து மனிதனைப் பெற்றெடுத்து ஆளாக்குகிறாளோ மனைவியாக இருந்து களிப்பையும் மகிழ்வையும் அவனுக்கு அளிக்கிறாளோ, அதே பெண், பணிப்பெண்ணாக அல்ல, அடிமையாக ஆக்கப்படுகிறாள்.

விற்கவும் வாங்கவும் செய்யப்படுகிறாள். சொத்துரிமையும் வாரிசுரிமையும் அவளுக்கு அறவே தரப்படுவதில்லை, குற்றத்தின் வடிவாக, அவமானத்தின் உருவமாக அவள் கருதப்படுகிறாள். அவளுடைய தனித்துவமும் ஆளுமையும் வளர்ந்தோங்க எந்த விதமான விதமான வாய்ப்பும் அளிக்கப்படுவதில்லை. ]

அறிவின் சிகரங்களையெல்லாம் எட்டிப் பிடித்து விட்டதாக என்னதான் மனிதன் மார்தட்டிக் கொண்டாலும், தன்னைப் பற்றிய பௌதிக உண்மைகளைக் கூட அவன் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மையாகும். மனித மூளை எவ்வாறு இயங்குகின்றது? என்பதைக்கூட அவனால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.

Read more...
 
அதிகாரம் மக்களுக்கல்ல! அல்லாஹ்வுக்கே! PDF Print E-mail
Wednesday, 28 January 2009 08:46

நம்மையும் இந்த உலகத்தையும் ஒரே இறைவன் தான் படைத்துள்ளான். இந்த உலகம் தானாகவே தோன்றியுது என்று சொல்வது அறிவுக்குப் பொருந்தாத செயல். யாராலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. உலத்தில் எந்தப் பொருளும் தானாக உண்டாகிவிட முடியாது. அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய உலகமும் அதில் உள்ள கோள்களும் கிரகங்களும் தானாகவே உண்டாகிவிட்டன என்று சொல்வது உண்மைக்குப் மாற்றமானது.

இந்த உலகத்தையும் இதில் உள்ள பொருள்களையும் உண்டாக்கிய ஒரு சக்தி இருக்கின்றது. அது மாபெரும் சக்தி. அந்த சக்தியைத்தான் அந்த ஆற்றலைத்தான் நாம் 'இறைவன்' என்று சொல்கிறோம். இறைவன் என்ற சொல்லைத் தான் அரபி மொழியில் 'அல்லாஹ்' என்று சொல்கிறார்கள்.

இந்த உலகம் எப்படி உண்டாகியிருக்கும்? இந்த உலகத்தை யார் படைத்திருப்பார்கள்? என்ற கேள்வி உலகத்தில் வசிக்கின்ற எல்லா மனிதர்களுடையு உள்ளத்திலும் எழுகின்றது. இந்த கேள்விக்கான பதிலை உலகில் உள்ள எல்லா பொருள்களும் அவனுக்கு தருகின்றன.

உன்னையும் எங்களையும் படைத்தது ஒரே ஒரு இறைவன் தான்!'என்று அவை அனைத்தும் சொல்லிக் கொண்டுள்ளன. இந்தக் கேள்விக்கான பதிலை மனிதன் வெளியே தேட வேண்டிய அவசியமேயில்லை. அவனுடைய உடம்பிலேயே இதற்கான பதில் இருக்கின்றது. அவனுடைய உள்ளமே இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லிக் கொண்டு உள்ளது.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 Next > End >>

Page 4 of 4