Home கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி
அப்துர் ரஹ்மான் உமரி
இறைநம்பிக்கையாளர்களின் அடையாளம் PDF Print E-mail
Thursday, 14 May 2015 06:31

MUSREAD

இறைநம்பிக்கையாளர்களின் அடையாளம்

  சையத் அப்துர் ரஹ்மான் உமரி   

[ o  நம்முடைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலோர் தொழுவதே கிடையாது. அவர்களுக்கும் ஷைத்தானுக்கும் யாதொரு பகையும் கிடையாது; பகையே இல்லாததால் படைக் கருவிகளுக்கும் வேலையே இல்லை! பகைவனோடு தோழமையை ஏற்படுத்திக் கொண்டு, இப்போது அவர்கள் வெகுநிம்மதியாக உள்ளார்கள்.

o  இன்னும் பலபேர் தொழுகையை என்னவோமுறையாகக் கடைபிடித்து வருவார்கள். அதே சமயம், இஸ்லாமுக்கு விரோதமான எல்லாவகையான அனாச்சாரங்களிலும் மாசுகளிலும் மூழ்கிக் கிடப்பார்கள். ஒரே நேரத்தில் அல்லாஹ்வோடும் ஷைத்தானோடும் உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று இத்தகையவர்கள் நினைக்கிறார்கள் போலும்!!

o  இன்னும் சிலருக்கு தொழவேண்டும் என்கிற ஆர்வம் எல்லாம் கிடையாது. ஆனாலும் மக்களுக்காக ஐவேளை தொழுது கொண்டிருப்பார்கள். ஷைத்தானோடு போராடவேண்டும் என்பதற்காக அல்ல, மக்கள் தம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தோழுது வரும் மக்கள் இவர்கள்!

o  அடுத்ததாக, பொதுமக்கள்! பாவம், அவர்கள் தொழுவதே மிகவும் குறைவு. அதுவும் தங்களுடைய பாவக்கறையைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும் தங்களுடைய முறையற்ற அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமே என்ற எண்ணத்திலும் தொழும் மக்களே அதிகம்!!

o  பொதுவாக முஸ்லிம்களை எடைபோட்டுப் பார்த்தால் இப்படித்தான் நாம் அவர்களை வகுக்க வேண்டியிருக்கின்றது. தொழுகை என்றால் என்ன? அதை எவ்வாறு முறையாகத் தொழுக வேண்டும்? என்பதை நன்கு உணர்ந்து தொழக்கூடிய இறைநம்பிக்கையாளர்களும் காணப்படவே செய்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான மக்கள் ஏற்கனவே விளக்கிக் கூறிய கூட்டத்தைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.]

Read more...
 
மாற்றப்படவேண்டிய அழைப்பியல்முறை PDF Print E-mail
Friday, 08 May 2015 06:02

M U S T   R E A D

மாற்றப்படவேண்டிய அழைப்பியல்முறை

  சையத் அப்துர் ரஹ்மான் உமரி   

அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்துலில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும், பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப் பணியை செய்து வருகிறோம். ஆனால், அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும், மாற்றத்திற்கும் ஆட்பட்டு விட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன?      

இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும், வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைய காலத்தில், டிவி, ரேடியோ, பத்திரிக்கை, இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. அப்படி யென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது. ஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம். நாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.

இன்று இஸ்லாம் தான் மிகவும் வேகமாக பரவுகிறது. The Fastest Growing Religion in World என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அன்புச் சகோதரர்களே, நாம் உண்மையான இஸ்லாமை சரியான வடிவில் முறையாக மக்களிடம் சொன்னால் இன்னும் இப்படிப்பட்ட வார்த்தைகளையும், வாக்கியங்களையும் கேட்டுக் கொண்டேயிருக்க மாட்டோம். ஏன்? மக்கள் மாக்களிலிருந்து மக்களாகியிருப்பார்கள். தஅவாவைக் காட்டிலும் இஸ்லாஹ்வே எஞ்சியிருக்கும்.

உலகில் காணப்படும் சமயங்களோடு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றெண்ணி அல்லாஹ் இஸ்லாமை இறக்கவில்லை. அனைத்து மார்க்கங்களைக் காட்டிலும் மேலோங்க வேண்டும் என்பதற்காக இறக்கி வைத்தான். ஆனால், இன்று உலகில் உள்ள மதங்களில் இஸ்லாமும் ஒன்று என்கிற நிலைமை தான் உள்ளது.

Read more...
 
இஸ்லாமியப் பரவலுக்கான காரணங்கள் PDF Print E-mail
Friday, 01 May 2015 06:09

MUST READ

இஸ்லாமியப் பரவலுக்கான காரணங்கள் 

  மௌலானா சையத் அபுல்அஃலா மௌதூதி (ரஹ்) 

  தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி   

[ இஸ்கந்திரியா நகரைச் சேர்ந்த ஸயீத் இப்து ஹஸன் என்கின்ற யூதர் எழுதுகிறார். முஸ்லீம்களுடைய இபாதத்தைப் பார்த்ததினால் தான் நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை (ஜாமிஆ) பெரிய பள்ளிவாசலில் முஸ்லீம்கள் தொழுவதைப் பார்க்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அங்கே நிகழ்த்தப்பட்ட குத்பா உரை என்னுடைய மனதை மிகவும் ஈர்த்து விட்டது. அதனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் என்னுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்து போய் விட்டன.  உரையாற்றுகின்ற ஃகதீப் இந்த இறை வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்.
 
‘நீதியைக் கடைபிடிக்குமாறும், பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறும், உற்றார்களுக்கு ஈயுமாறும் அல்லாஹ் ஆணையிடுகிறான். ஆபாசமான தடுக்கப்பட்ட காரியங்களை விட்டும் வரம்பு மீறுவதை விட்டும். அல்லாஹ் தடுக்கிறான்.’ (அல்குர்ஆன் 16-90)

இந்த வசனத்தை கேட்டதுமே என்னுடைய உள்ளத்தில் எவ்வளவு அற்புதமான போதனையை கொண்டுள்ள சமயம் கண்டிப்பாக உயர்வானது தான் என்கின்ற எண்ணம் தோன்றி விட்டது! 

பிறகு அவர்கள் தொழுகும் முறையையும் நான் கவனித்துப் பார்த்தேன். அணி, அணியாக வரிசை வரிசையாக முஸ்லீம்கள் நின்று கொண்டிருந்தார்கள். வானவர்களைப் போல எனக்கு அவர்கள் காட்சி அளித்தார்கள். இறைவனே அவர்களுக்கு முன்னால் தரிசனம் தருவதைப் போல எனக்குத் தோன்றியது.

இஸ்ரவேலர்களோடு கடவுள் இரண்டு முறை உரையாடி இருக்கின்றார் என்றால் இந்த முஸ்லீம்களோடு அவர் தினசரி ஐந்து முறை உரையாற்றுகின்றார் என்று நான் நினைக்கலானேன்!’

‘முஸ்லீம்களுடைய இந்த வழிபாட்டைப் பார்த்த பிறகு எந்த மனிதனாலும் மௌனமாக இருக்க முடியாது. அதனால் அவன் ஈர்க்கப்பட்டே தீருவான்.]

Read more...
 
இஸ்லாமின் பார்வையில் சிறுபான்மைச் சமுதாயம்! PDF Print E-mail
Friday, 28 November 2014 08:00

இஸ்லாமின் பார்வையில் சிறுபான்மைச் சமுதாயம்!

  ஜெ. ஹாஜா கனி  

ஓரு நாட்டின் நனிசிறந்த நாகரிகம், அது தனது சிறுபான்மை மக்களை எப்படி நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது. சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்கு அரணாக நிற்கும் கூறுகளைத் தன் இயல்பிலேயே கொண்டிருக்கும் இந்திய அரசியல் சாசனம், விடுதலைப் போரின் விதையாய், விருட்சமாய், விழுதுகளாய் நின்ற, மகத்தான தியாகிகளின் விருப்பங்களுக்குக்கேற்ப வடிவமைக்கப்பட்டு, உலகின் மிகச்சிறந்த அரசியல் சாசனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது என்றால் மிகையில்லை.

அதேநேரம், சுதந்திரம் பெற்று அறுபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகும், சிறுபான்மை இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலை, சகோதர தலித் சமுதாயத்தின் நிலையைவிடவும் மோசமாக உள்ளது என்கிறது நீதிபதி ராஜேந்திர சச்சாரின் அறிக்கை. முஸ்லிம்களின் இத்தகைய அவலமான சூழலுக்குக் காரணம் முஸ்லிம்களை வாக்குவங்கியாக மட்டுமே பயன்படுத்திக்கொண்ட அரசியல் சூதாடிகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அதேநேரம், பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் சிறுபான்மைச் சமுதாயமாக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாகவும், அங்குள்ள அரசுகள் இதற்கு அமைதியாக இருந்து ஆதரவு தெரிவிப்பதாகவும், பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக, இந்து இளம் பெண்களைக் கடத்திக் சென்று கட்டாயத் திருமணம் செய்வது, கட்டாய மதமாற்றம் செய்வது ஆகிய செய்திகள் மனதைக் கொதிக்கவைக்கின்றன. பாகிஸ்தான் அரசு மேற்படிக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

Read more...
 
ஷஹீத் ஆவது என்றால் சாதாரண விஷயமா? PDF Print E-mail
Tuesday, 14 May 2013 06:48

ஷஹீத் ஆவது என்றால் சாதாரண விஷயமா?

    ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி     

அனஸ் இப்னு நள்ரு (ரளியல்லாஹு அன்ஹு) என்பது அவருடைய பெயர். மிகவும் இறைநம்பிக்கை உள்ள நபித்தோழர். இஸ்லாமை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக எதிரிகள் தொடுத்த முதல் போரான பத்ருப் போரில் அவர் கலந்து கொள்ளவேண்டும். ஏதோ காரணத்திற்காக வெளியூர் சென்று இருந்தால் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. அது அவருடைய மனதை மிகவும் வாட்டிக் கொண்டே இருந்தது. பத்ருப் போரில் கலந்து கொள்ளாததை மிகப்பெரிய இழப்பாக அவர் கருதினார்.

''எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய இறைநம்பிக்கை எப்படிப்பட்டது என்று கண்டிப்பாக நிரூபித்துக் காட்டுவேன்'' என்று அவர் அடிக்அடி கூறுவது வழக்கம்! இப்படிப்பட்ட நேரத்தில்தான் உஹதுப் போருக்கான அழைப்பு வந்தது. முஸ்லிம்கள் எல்லாம் கச்சை கட்டிக்கொண்டு போருக்குத் தயாரானார்கள்.

அனஸ் இப்னு நள்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். அவரும் ஸஅது இப்னு அபி வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒன்றாகச் சேர்ந்து போர்க்களம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

சற்று தூரத்தில் எதிரிகளோடு முஸ்லிம்கள் மோதிக் கொண்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்த அனஸ் ரளியல்லாஹு அன்ஹு சட்டென்று நின்றார்.

''ஸஅத்! சொர்க்கத்தின் வாசம் வீசுகின்றதா? சொர்க்கத்தின் வாசத்தை நீ உணரவில்லையா?''

Read more...
 
முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்! PDF Print E-mail
Saturday, 23 July 2011 10:00

 முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்!

      ஸெய்யத் அப்துர் ரஹ்மான் உமரீ     

[ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டி உறவாடி வரும் மாற்றுமதத்தாரின் பண்பாட்டைப் பார்த்து கற்றுக் கொண்டவை அல்லது சிலைவணக்கம் தவறு என்றுணர்ந்து நம் முன்னோர் இஸ்லாமிய ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தபோதும் விடாப்பிடியாக அக்கறையின்றி, கொண்டு வந்த மிச்ச சொச்சங்கள் இவை. மக்களுடைய மனப்போக்கு என்று இதை ஒதுக்கித் தள்ள முடியாது. ஆலிம்கள் உலமாக்களின் பொறுப்பின்மை, கவனக்குறை என்று தான் கூறவேண்டும்.]

நம் நாட்டில் பெண்களின் பிரச்சனைகள் அத்தனையும் திருமணத்தை மையமிட்டதாகவே உள்ளன.

திருமணம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்திலும் பெண்ணடிமை பிணைந்து கிடக்கின்றது. இவை அனைத்தும் சமயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு சாதிகளின் வழியாகப் பாதுகாக்கப்படுகின்றன. என்று ஒரு பெண்ணியவாதி தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

கருக்கலைப்பு, சிசுக்கொலை, மீறிப் பிறந்தால் வரவேற்பின்றி புறக்கணிப்பு, குழந்தை வளர்ப்பில் பராபட்சம், விளையாட்டுகளில் கூட வேறுபாடு, கல்வி அளிப்பதில் பாகுபாடு என்றிவ்வாறாக சீர், செனத்தி, நகை, நட்டு, வரதட்சணை, தற்கொலை, புகுந்த வீட்டுக் கொடுமைகள் என்ற தொடர்கதையாக நீள்பவை அனைத்தையும் பார்க்கும் போது மேற்கூறப்பட்ட கருத்து உண்மையே என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

Read more...
 
சொர்க்கத்துக்குச் சொந்தக்காரர் PDF Print E-mail
Saturday, 05 February 2011 07:21

சொர்க்கத்துக்குச் சொந்தக்காரர்

  ஸைய்யிது, அப்துர் ரஹ்மான் உமரி  

அப்துல்லாஹ் என்பது அவருடைய பெயர். அவர் ஒரு யூதர். அதிலும் மார்க்க அறிஞர். யூத சட்டதிட்டங்களையும் தவ்ராத் வேதத்தையும் கரைத்துக் குடித்தவர். மதீனாவிற்கு இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தவுடன் ஊரெல்லாம் இஸ்லாமைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.

யூதர்களின் வேதமான தவ்ராத்திலும் இறுதித்தூதரைப் பற்றி கூறப்பட்டிருந்தது. அப்துல்லாஹ் ஒரு மார்க்க அறிஞர் என்பதால் ஏற்கனவே அதைப்பற்றி அறிந்திருந்தார். சத்தியம் இதுதான் என்று தெரிந்த பிறகு அவர் சற்றும் தாமதிக்கவில்லை. உடனே, இறைத்தூதரைச் சந்தித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்.

ஒருநாள் இரவு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கனவு! வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு நந்தவனம்.தென்றல் தாலாட்டில் பூக்கள் எல்லாம் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. பச்சை நிறத்தை பனியில் நனைத்து காணும் இடமெல்லாம் தூவியது போன்ற தோற்றம்.

பூமியில் உள்ள அழகை எல்லாம் ஒன்றாக ஓரிடத்தில் கொட்டியது போலக் காட்சியளிக்கின்றது அந்த அற்புத நந்தவனம். அழகு வனத்தின் நடுவே ஓர் இரும்பு தூண். தூணின் கீழ்ப்பகுதி பூமியில் நன்றாக ஊன்றப்பட்டு இருந்தது. மேற்பகுதியோ வானின் உச்சி வரைக்கும் நீண்டிருந்தது.

Read more...
 
பெண் விடுதலை: ஒருபார்வை! PDF Print E-mail
Wednesday, 29 December 2010 08:23

பெண் விடுதலை: ஒருபார்வை!

  மவ்லவி, ய்யது அப்துர் ரஹ்மான் உமரி 

[ பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனத் தெரிந்து கருவிலேயே தெரிந்து கொண்டு பெண் என்றால் கருவிலேயே அழித்து விடத்தான் இன்று விஞ்ஞானம் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இப்படியாக ஒவ்வொரு வருடமும் உலகில் ஒன்றல்ல, இரண்டல்ல, இலட்சக்கணக்கான பெண் கருக்கள் கொல்லப்பட்டு வருகின்றன.

ஒருபெண் வளரும்போது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் போன்ற கருத்துக்களை வளர்ப்பதன் மூலம் அவள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடுவதிலும் நடனங்கள் மற்றும் கலைகளின் பெயரால் பெண்ணை ஆபாசப் பொருளாக்கி நடனமென்று உடல் அங்க அசைவுகளைக் கூத்தாக்கி பலரும் பார்த்து மகிழும் வண்ணம் அவளை நடுச்சந்திப் பொருளாக்கியதை அறிவோம்.

இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் காலங்காலமாய் பெண் மீது ஏவப்படும் சமூகக் கொடுமைகளும், பெண்ணினம் பற்றிய தவறான கருத்தோட்டங்களும் தான்.]

பெண்கள் சுதந்திரத்தை நாடி இயக்கங்களாக போரிடும் இவ்வேளையில் பெண்கள் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசிய இஸங்கள் யாவும் புறமுதுகிட்டு விட்ட இவ்வேளையில் இஸ்லாம் வழங்கும் பெண்கள் சுதந்திரம் பற்றி நாம் ஒரு ஆய்வுக் கண்ணோட்டம் நிகழ்த்த கடமைப் பட்டுள்ளோம்.

ஒரு மனிதன் தன்னுடைய இயற்கை நியதிக்கேற்ப இறைவன் தனக்கு வழங்கியுள்ள உரிமைகளை சரிவரப் பயன்படுத்தலும், அவற்றில் வேறொருவரின் எந்த வித தலையீடும் இல்லாமல் இருத்தலுமே சுதந்திரம் ஆகும்.

இத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இக்காலத்திய பெண்ணியம் தன்னுடைய சுதந்திரத்தை உரிமைகளை பெறுவதை விட்டும் வெகுதூரம் விலகியும் விலக்கப்பட்டும் உள்ளது தெளிவாகப்புரியும்.

Read more...
 
இஹ்திஸாப் - சுயபரிசோதனை PDF Print E-mail
Friday, 24 December 2010 09:31
 
    மவ்லவி ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி    

''தஜ்கியா'' விற்கான முதல் நிலை அமைப்பு ''இஹ்திஸாப்'' ஆகும்.

இஹ்திஸாப் என்றால் சுய பரிசோதனை என்று பொருள்.

அதாவது தன்னைத் தானே. தன்னுடைய அமல்களைத் தானே - சோதித்துக் கொள்வது ஆகும்!.

வான்மறையில் வல்ல இறைவன் கூறுகிறான்˜

'இறைநம்பிக்கை! கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள். மேலும் நாளைய தினத்திற்காக எதனைத் - தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று ஒவ்வொரு மனிதனும் (எண்ணிப்) பார்க்கட்டும்!' (59˜18)

'நாளைக்காக எவ்வெவ்வற்றை சேகரித்துக் கொண்டுள்ளீர்கள் என்று கணக்கெடுக்கும்படி அல்லாஹ் இவ்வசனத்தில் அறிவுறுத்துகிறான். என்று கூறுவார்கள்.

அதாவது - 'நீங்கள் விசாரிக்கப்படும் முன்னால் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள்!'

இஹ்திஸாப் - ஒரு முஃமினுடைய தவிர்க்க இயலாத பண்பாகும்.

Read more...
 
அல்லாஹ்வோடு செய்துகொண்ட வாக்குறுதி PDF Print E-mail
Saturday, 09 January 2010 08:11

அல்லாஹ்வோடு செய்துகொண்ட வாக்குறுதி

  ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி  

அனஸ் இப்னு நள்ரு (ரளியல்லாஹு அன்ஹு) என்பது அவருடைய பெயர். மிகவும் இறைநம்பிக்கை உள்ள நபித்தோழர். இஸ்லாமை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக எதிரிகள் தொடுத்த முதல் போரான பத்ருப் போரில் அவர் கலந்து கொள்ளவேண்டும். ஏதோ காரணத்திற்காக வெளியூர் சென்று இருந்தால் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. அது அவருடைய மனதை மிகவும் வாட்டிக் கொண்டே இருந்தது. பத்ருப் போரில் கலந்து கொள்ளாததை மிகப்பெரிய இழப்பாக அவர் கருதினார்.

''எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய இறைநம்பிக்கை எப்படிப்பட்டது என்று கண்டிப்பாக நிரூபித்துக் காட்டுவேன்'' என்று அவர் அடிக்அடி கூறுவது வழக்கம்! இப்படிப்பட்ட நேரத்தில்தான் உஹதுப் போருக்கான அழைப்பு வந்தது. முஸ்லிம்கள் எல்லாம் கச்சை கட்டிக்கொண்டு போருக்குத் தயாரானார்கள். அனஸ் இப்னு நள்ரு ரளியல்லாஹு அன்ஹுஅவர்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். அவரும் ஸஅது இப்னு அபி வக்காஸ்ரளியல்லாஹு அன்ஹுஅவர்களும் ஒன்றாகச் சேர்ந்து போர்க்களம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

சற்று தூரத்தில் எதிரிகளோடு முஸ்லிம்கள் மோதிக் கொண்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்த அனஸ் ரளியல்லாஹு அன்ஹுசட்டென்று நின்றார்.

''ஸஅத்! சொர்க்கத்தின் வாசம் வீசுகின்றதா? சொர்க்கத்தின் வாசத்தை நீ உணரவில்லையா?''

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு என்ன சொல்கிறார் என்று ஸஅது ரளியல்லாஹு அன்ஹுக்கு உடனே புரியவில்லை.

''அதோ! உஹது மலைக்குப் பின்னால் இருந்து சொர்க்கத்தின் வாசம் வீசுவதை நான் உணர்கிறேன்!'' என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹுகூறினார். கூறியவர் அங்கேயே வெறுமனே நின்று கொண்டிருக்கவில்லை. தன்னுடைய வாளை உருவிக் கொண்டு போர்க்களத்தில் பாய்ந்துவிட்டார். எதிரிகளோடு மிகவும் வீரதீரத்தோடு போரிட்டார்.இவ'ரைப் போல இன்னொரு வீரர் யார் இருக்க முடியும்?'' என்று எல்லோரையும் கேட்க வைத்தார்.

Read more...
 
நவீனகால சிக்கல்களுக்கு தீர்வு PDF Print E-mail
Thursday, 07 January 2010 09:18

MUST READ

நவீனகால சிக்கல்களுக்கு தீர்வு

   ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி   

[ மனிதர்கள் யாவரும் சரிசமமானவர்கள். மனித உரிமைகளும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உறவுமுறைகளும் யாவருக்கும் பொதுவானவை.

ஒரே குடும்பத்தின் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் என்பதால் சமூகம் பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் பொதுவான உரிமையைப் பெற்றவர்கள்.எண்ணிக்கை பெருகிவிட்டதால் இந்த ஓர்மைச் சிந்தனை குறுகிவிட்டது.

ஓரிறைவனை மட்டும் வழிபட்டாக வேண்டும் என்ற சிந்தனையை மனதில்கொண்டு அவ்வழியே உலகைப் பார்த்தால் உண்மை சொரூபம் அப்பட்டமாகத் தெரியும்.

நிறம் இனம் மொழி என்று எதுவுமே இல்லாமல் மனிதர் அனைவரும் ஒரே பெற்றோருக்குப் பிறந்த ஒரு குடும்பத்துப் பிள்ளைகளாகத் தெரிவர்!

குர்ஆனும் நபிமொழிகளும் முன்னிலைப் படுத்துகின்ற ஒரே குலம் எனும் இந்தச் சித்தாந்தத்தில் இன நிற மொழி சிக்கல்கள் அனைத்திற்கு நிவாரணம் இருக்கின்றது. ]

இந்நவீன உலகில் நாம் சந்திக்கும் சிக்கல்கள் துன்பங்களுக்கெல்லாம் தீர்வு இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய போதனைகளில் மறைந்துள்ளது. மனிதர்களுக்கு வழிகாட்டுவதை இறைவன் தன்மீது விதியாக்கிக் கொண்டுள்ளான். அதன் காரணமாகவே அவன் பல்வேறு நிலப்பகுதிகளுக்கும் பல்வேறு காலக்கட்டங்களிலும் தன்னுடையத் தூதர்களை ஒருவர் பின் ஒருவராக அனுப்பிக்கொண்டே வந்துள்ளான்.

உலகில் உள்ள எல்லா ஊர்களுக்கும் எல்லா நிலப் பரப்புகளுக்கும் இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள். அவ்வகையில் தன்னுடைய கடைசித் தூதராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை அனுப்பிவைத்தான். அவர்தாம் இறுதித்தூதர்: அவருக்குப்பின் யாரும் இனி தூதராக வரமாட்டார் என்றும் தெளிவுபட அறிவித்தும் விட்டான். அப்படியென்றால் என்ன பொருள்?

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 Next > End >>

Page 3 of 4