Thursday, 22 March 2018 07:53 |

அஹ்ஸாப் (அகழ்ப்) போரின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
முக்கியமான திருப்புமுனை என்று இஸ்லாமிய வரலாற்றில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட நினைத்தால் அஹ்ஸாப் போரைக் குறிப்பிடலாம். இறை நம்பிக்கையாளர்களின் ஈமானிற்கு எதிரிகள் கூட உரைகல்லாக மாறிப்போன அற்புதத்தை அகழ் போரில் நாம் காணலாம்.
பகைவர்களைக் கண்டு, அவர்களுடைய பிரம்மாண்டமான படைகளைக் கண்டு பயப்படாமல், பீதி அடையாமல் பொங்கிப் பொங்கி ஈமான் பிரவாகம் எடுப்பது. உண்மையான இறை நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் தான் என்கிற பேருண்மையும் அங்கே புலப்பட்டது!
‘அகழ்’* என்பது அராபியர்களுக்கு முன்பின் அறிமுகமாகாத ஒன்று! அகழைத் தோண்டும் தற்காப்புக் கலையால் குறைந்த எண்ணிக்கையிலான படையைக் கொண்டே மிகப் பெரிய எதிரிப்படையைச் சமாளிக்கும் வாய்ப்பு இருந்தது. உயிரிழப்பும் மிகவும் குறைவாகவே ஏற்படும்.
|
Read more...
|
|
Friday, 16 February 2018 08:00 |

இஸ்லாமின் முதல் அழைப்பாளர்
அஷ்ஷஹீத் முஸ்அப் ரளியல்லாஹு அன்ஹு
அப்துர் ரஹ்மான் உமரி
இறைவனின் தூதரால் மதீனாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட முதல் இஸ்லாமிய அழைப்பாளர், முஸ்அப் இப்னு உமைர். இளம்வயது நபித் தோழர். இஸ்லாம் வெற்றிகள் பலபெற்று தன் பெயரை நிலைநாட்டும் முன்பே இறைவனைப் போய்ச்சேர்ந்து விட்டவர். இறைத்தூதரின் கண்களுக்கு முன்பாகவே இறைவன் அவரை ஷஹீதாக உயர்த்திக் கொண்டான்.
அற்புதமான பல நபித்தோழர்கள் இவரது கைகளால் இஸ் லாமை ஏற்றுக் கொண்டார்கள். யாருடைய இறப்பின்போது ரஹ்மானின் அர்ஷ் நடுங்கியதோ அந்த ஸஅதும் யார் குர்ஆனை ஓதினால் மலக்குகள் வரிசையில் நின்று கேட்பார்களோ அந்த உஸைதும் இவர் மூலமாகத்தான் இஸ்லாமில் நுழைந்தார்கள்.
அழகும் இளமையும் புகழும் பெருமையும் நிறைந்த குறைஷி குல இளங்காளை முஸ்அப். குறைஷியரின் அவைகளை அலங் கரிக்கும் பொன் விளக்காய் புது நிலவாய் ஜொலித்தவர். இஸ்லாமை ஏற்றபிறகு, ஈமானின் இலக்கணமாய் நன்றியுணர்வின் நெடுந்தூணாய் உருமாறி நின்றவர். அவரது வாழ்வின் ஒவ் வொரு பக்கங்களிலும் மானுடர் குலத்து இளந் தலைமுறைக்கு அரியபல படிப்பினைகள் நிரம்பியுள்ளன.
|
Read more...
|
Thursday, 15 February 2018 07:24 |

இளமையை இறையடிமைத்தனத்தில் கழி!
அப்துர் ரஹ்மான் உமரி
‘பருவகால இச்சைகளுக்குப் பலியாகாத இளைஞனைக் கண்டு உன்னிறைவன் வியப்படைகிறான்.’ (அபூ யஅலா, அஹ்மத்/ சஹீஹ் என்கிறார் அல்பானி)
இந்நபிமொழியில் உள்ள ‘ஸப்வத்துன்’ எனும் சொல், பருவ கால இச்சைகள், வாலிபத் தேட்டங்கள், பொழுதுபோக்கு கேளிக்கைகளில் ஆர்வம் போன்றவற்றை இது குறிக்கும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எவ்வளவு அற்புதமான பண்பு இது!
சிறு வயதில் ஞானம் பெற்றவனால்தான் இது சாத்தியம்! அப்புறம் ஏன் இறைவன் வியப்படைய மாட்டான்?
ஒருவன் சிறுவயதிலிருந்தே இறைவனின் பாதுகாப்பைப் பெற்றுள்ளான். பெரும்பாவங்களில் விழாமல் சிறுசிறு குற்றங்களை வழக்கப்படுத்தாமல் பாதுகாக்கப்படுகிறான். அவற்றைப் பற்றிய கேள்விகள் மறுமையில் அவனுக்கு இல்லவே இல்லை! ஸுப்ஹானல்லாஹ்! எவ்வளவு உன்னத பேறு இது!
|
Read more...
|
Thursday, 25 January 2018 07:29 |

அகத்தின் அழகே அழகு . ஸைய்யித் அப்துர் ரஹ்மான் உமரி
(1) பொதுவாக நாம் மற்றவர்களிடம் துஆ செய்யுமாறு கோரும்போதும் மற்றவர்களுக்காக துஆ செய்யும்போதும் உடல்நலத்திற்கு முதலிடம் அளிக்கின்றோம்.
(2) இஸ்லாமியக் கண்ணோட்டத்தின்படி உடல்நலம், உண்மையில் அக நலத்தை சார்ந்துள்ளது, அகநலத்தைப் பின்தொடர்ந்தே வருகின்றது.
(3) அக நலத்தையே இஸ்லாம் பெரிதும் வலியுறுத்துகின்றது.
(4) அஷ்ஷிஃபாஉல் காமில் – Real Shifa – என்பது உண்மையில் அக நலமே ஆகும்.
(5) தூய அகத்தோடு மனிதன் பிறக்கின்றான், அதே நிலையில் தூய அகத்தோடு உலகைப் பிரிந்து தன்னிறைவனை சந்திப்பவன் வெற்றி பெறுகின்றான்.
(6) வாழ்வு முழுக்க அகம் மாசடையாமல் பார்த்துக்கொள்வதே உண்மையில் இஸ்லாமியத் தன்மையாகும்.
(7) சிந்தனைக் கோளாறுகள், மனஅழுக்குகள் ஆகியவையே அகத்தைப் பாழ்படுத்துகின்றன.
(8) இஸ்லாமிய மருத்துவத்தில் அக நலத்திற்கே முதலிடம் முக்கிய இடம் அளிக்கப்படுகின்றது.
(9) அக நலத்தில் தமானிய்யத் (இறைதீர்மானங்களில் திருப்தி) முதல் நிலை வகிக்கின்றது. ஸலாமத் (சலனமற்ற தன்மை) இதன் உச்ச நிலை ஆகும்.
|
Read more...
|
Tuesday, 21 November 2017 08:28 |

நிழலே இல்லாத நாளில்
அல்லாமா இப்னு ஹஜ்ர் அஸ்கலானி
தமிழில்: மவ்லவி, சையித் அப்துர் ரஹ்மான் உமரி . அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழல் தவிர வேறு நிழலே இல் லாத அந்நாளில் நிழல்தரும் மரங்களோ தருக்களோ இதம் தரும் நீர்நிலைகளோ தென்படாது; கூரைவேய்ந்த வீடுகள் எங்கு மிருக்காது. ஒதுங்க ஏதும் வாய்ப்பான இடம் கிடைக்காதா என எல்லா மனிதர்களும் விரண்டோடுவார்கள். தலைக்கு நேர்மே லாக சுட்டெரிக்கும் கதிரவன். திகைப்பும் தவிப்பும் தலைக்கு மேலாக கவிழ்ந்து காணப்படும் அந்நாளில் இறைவன் புறத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்படும். நற்பேறு பெற்றோர் ஒருசிலர் கூவிக்கூவி அழைக்கப்படுவார்கள். . இந்நற்செய்தியை அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு உரைக்கிறார்கள்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது, நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலின் கீழ் ஏழு பேர் காணப்படுவார்கள்.
(1) நெறிதவறா தலைவன்
(2) இறைவழிபாட்டில் இளமையைக் கழித்த இளைஞன்
(3) இறையில்லத்தோடு இணைந்திருக்கும் உள்ளம் கொண்ட மனிதன்
(4) அல்லாஹ் வுக்காகவே ஒருவரையொருவர் நேசித்த இரு வர் -இறைவனுக்காகவே ஒன்று சேர்ந்து, இறைவனுக்காகவே ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தவர்கள்-
(5) அழகும் உயர்குடிச் சிறப்பும் கொண்ட பெண்ணொருத்தி மையலோடு அழைத்தபோது தான் இறைவனுக்கு அஞ்சுகிறேன் என்றவாறு ஒதுங்கிக் கொண்டவர்.
(6) இடக்கரம் அறியாதவாறு வலக்கரத்தால் தானம் செய்தவர்
(7) விழிகளில் கண்ணீர் கசியும் வண்ணம் தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர் ஆகியோரே அவ்வேழு பேர் என இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
|
Read more...
|
Thursday, 16 November 2017 07:15 |

போதையில் மூழ்கும் சமூகம்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
இஸ்லாமிய இளைஞர்கள் பல ஊர்களில் புதுப்புது வகையான போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகி வருகிறார்கள்.
மனிதனை எத்தனை எத்தனையோ பொருட்கள் போதையில் தள்ளுகின்றன. மதுவும் சாராயமும் கஞ்சா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மட்டும்தான் போதையை ஊட்டுகின்றனவா?
மனிதனை எத்தனை எத்தனையோ பொருட்கள் போதையில் தள்ளுகின்றன.
போதையின் வழியாக ஷைத்தான் என்ன சாதிக்க நினைக்கிறான் என்பதை வான்மறை குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதைக் கொஞ்சம் ஆராய்ந்தால் வியப்பு மேலிடுகின்றது.
மதுவிலும் சூதிலும் மூழ்கவைத்து உங்களிடையே பகைமையையும் குரோதத்தையும் கிளறிவிடவும் அல்லாஹ்வை நினைவுகூருவதைவிட்டும் தொழுகையைவிட்டும் தடுக்கவும் ஷைத்தான் ஆசைப்படுகிறான். சொல்லுங்கள், நீங்கள் அவற்றை விட்டுவிடுவீர்கள் அல்லவா? (அல்குர்ஆன் 5:91)
(1) பகைமையை, குரோதத்தை கிளறுதல்
(2) இறைவனை நினைவுகூர விடாது தடுத்தல்
(3) தொழுகையை விட்டு அப்புறப்படுத்தல்
ஷைத்தானுக்கு கிடைக்கவுள்ள ‘இம்மூன்று’ பயன்களை மனதிற்கொண்டு சமூகத்தைப் பார்வையிட்டால் எத்தனை எத்தனை போதை ‘வஸ்த்து’கள் புழங்கி வருகின்றன! அடேங்கப்பா!
ஆகப்பெரிய போதையாக இந்த இஸ்லாமிய உம்மத்தில் உள்ளது பணப்போதைதான்!. அதை மிஞ்ச எதனாலும் முடியாது என்பதை கண்கூடாகக் காணுகிறோம்.
|
Read more...
|
Monday, 11 September 2017 15:19 |

தேடுதல் இல்லையென்றால் தெளிவு இல்லை
அப்துர் ரஹ்மான்
''தேடுதல் இல்லையென்றால் தெளிவு இல்லை
தெளிவு இல்லையென்றால் (ஈருலக)வாழ்வில் வெற்றி இல்லை''
சிந்தனை மட்டுமே ஒரு மனிதனை அனைத்து விஷயங்களிலும் தெளிவுபடுத்தி அவனை நேரான பாதைக்கு இட்டுச்செல்லும் ஆதலால்தான் அல்லாஹுவும் தன் திருமறையில் ''மனிதர்களே சிந்தியுங்கள்'' என்று பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
அல்லாஹுவின் வேதத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் போதனைகளையும் தன் கையில் வைத்திருக்கும் இந்த இஸ்லாமிய சமூகம், உலகை ஆல வேண்டிய இந்த சமூகம், மனிதர்களுக்கு ஒலுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய இந்த சமூகம், அநீதிக்கு எதிராக போராட வேண்டிய இந்த சமூகம், மக்களை ஒரு இறைவனின் பக்கம் அழைக்க வேண்டிய இந்த சமூகம், உலகில் இறையாட்சியை நிழைநாட்ட வேண்டிய இந்த சமூகம், இந்த திருமறையை பொருலுனர்ந்து சிந்திக்கத்தவறியதன் விளைவு.....,
இந்த உலகில் திவிரவாதியாகவும், பயங்கரவாதியாகவும், தாகூத்திய சக்திகளுக்கு அடிமையாகவும், மேலும் தாகூத்திய சக்திகளுக்கு கீழ்படிவதை நியாயப்படுத்திக்கொண்டு ஒரு அடிமைகளை போல தன் வாழ்வில் தேவைப்படும் சுய தேவைகளுக்கு கூட ஒரு தாகூத்திய சக்திகளிடத்தில் கையேந்தி எதிர்பார்த்து நிர்க்கும் அவலநிலையை பார்க்கிறோம்.
|
Read more...
|
Thursday, 04 August 2016 02:41 |

'எது இஸ்லாம் இல்லை?' என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்!
மெளலானா, சத்ருத்தீன் இஸ்லாஹி
தமிழாக்கம்: மெளலவி, அப்துர் ரஹ்மான் உமரி
முஸ்லிமாக இருப்பதற்கு 'இஸ்லாம் என்றால் என்ன?' என்பதைத் தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு 'எது இஸ்லாம் இல்லை?' என்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும். இல்லாவிட்டால் இஸ்லாமை அதன் தனிப்பட்ட தூய வடிவில் பாதுகாப்பதோ, பின்பற்றுவதோ இயலாது போய்விடும்.
இன்று நாம் இஸ்லாமைப் பற்றி உண்மையான நல்ல விஷயங்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம், நாளை இஸ்லாம் அல்லாத வேறு சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். இறுதியில் எது உண்மையான சொத்து என்பதை உணர முடியாமல், இயற்கையான உருவில் - அம்மண வடிவில் - நுழைவதில்லை. இஸ்லாமியப் பசுத்தோலைப் பொற்த்திக்கொண்டும், 'சலுகை'(ருஃக்ஸத்)களின் பெயராலும் தான் நுழைகின்றது. முஸ்லிம்களோ மிகமிக எளிதாக அதற்குப் பலியாகிவிடுகின்றனர். இல்லா மாஷா அல்லாஹ்!
முந்தைய சமூகத்தினர் தங்களுடைய இறைத்தூதர்களிடமிருந்து தூய, கலப்பற்ற தீனைப் பெற்ற பின்னும் - ஒன்றிரண்டு தலைமுறைக்குள்ளாக வழிகெட்டுப் போனதற்கு இதுதான் காரணமாக இருந்துள்ளது.
|
Read more...
|
Monday, 06 July 2015 21:49 |

முறிந்த சிலுவை
ரியாஸ் பீட்டர்
தவ்ஹீது கலிமாவை முன்மொழிந்து இஸ்லாமிய சகோதரத்துவத்திற்குள் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட போது பாசத்தோடும் பிரியத்தோடும் முஸ்லிம் சகோதரர்கள் என்னை அரவணைத்துக் கொண்டதை ஒரு போதும் மறக்க முடியாது.
சத்தியத்தைத் தேடி அலைந்த என் கதை “முறிந்த சிலுவை”யை முடிக்குந் தறுவாயில் இன்று நான் அவற்றை நினைத்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் கிருபையும் முஸ்லிம் சகோதரர்களின் அன்பும் தொடர் வற்புறுத்தலும் மட்டும் இல்லாமலிருந்தால் என்னால் இக்காரியத்தை செய்திருக்கவே இயலாது!.
இஸ்லாமிய நந்நெறியைத் தழுவவைத்து என் மீது அல்லாஹ் புரிந்துள்ள பேரருளை நினைத்துப் பார்த்து நன்றி செலுத்தவே இந்த என் கதையை எழுதிக் கொண்டுள்ளேன்.
முறையற்ற என்னுடைய தத்துப்பித்தென்ற சில சொற்கள் யாருடைய உள்ளத்திலாவது சத்திய மெழுகுவர்த்தியை பற்ற வைக்க உதவி விடாதா என்ற எதிர்பார்ப்பும் நப்பாசையுமே என்னை எழுதத் தூண்டியன.
இஸ்லாமை ஆராய்பவர்கள், புதிதாய் இஸ்லாமைத் தழுவியவர்கள், பிறவி முஸ்லிம்கள் அனைவருக்கும் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். தேடல் மற்றும் ஆராய்ச்சியின் பெயர் தான் இஸ்லாம்!. இஸ்லாமைப் புரிந்து தூய்மையான ஒரு முஸ்லிமாக மாற நீங்கள் ஆசைப்பட்டால் நீங்கள் இஸ்லாமைப் பற்றி ஆராய்ச்சி செய்தே தீர வேண்டும்.
|
Read more...
|
Tuesday, 30 June 2015 04:44 |


"ஹிஃப்ழுல் ஈமான்'
தர்கா வழிபாடா? வழிகேடா?
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
"தர்' என்றால் இறந்துபோன உடல் எனப்பொருள். "காஹ்' என்றால் "இடம்' எனப்பொருள். ஈது தொழுகை தொழும் திடலை "ஈத்காஹ்' என்று அழைக்கிறோம் அல்லவா? இவ்வுலகில் வாழ்ந்து மறைந்துபோன அவ்லியாக்கள், இறை நேசர்கள் அடங்கியுள்ளதாகக் கருதப்படும் இடம் "தர்கா' என்று அழைக்கப்படுகின்றது.
இறந்துபோன அவ்லியாக்கள் உயிரோடும் உணர்வோடும் இருக்கிறார்கள். நம்முடைய அழைப்புக்கு செவிமெடுக்கிறார்கள். நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்றொரு பரவலான நம்பிக்கை இந்திய நாட்டு மக்களிடையே காணப்படுகின்றது.
இஸ்லாம் இந்நம்பிக்கையை ஆதரிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இத்தகைய நம்பிக்கைகள் தவறு என்பதை வலியுறுத்தவே இஸ்லாம் இம்மண்ணுலகுக்கு வந்தது.
"தர்கா'வை வலம் வருவது, முத்தமிடுவது போன்ற செயல்கள் செய்யப் படுகின்றன. இவை சரியா, ஷரீஅத் இதைச் சரி காண்கிறதா? என்பது குறித்து மெளலானா அஷ்ரஃப் அலி தானவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆராய்ந்துள்ளார்கள்.
ஹகீமுல் உம்மத் மெளலானா அஷ்ரஃப் அலி தானவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) இந்தியாவில் தோன்றிய தலைசிறந்த உலமாக்களில் ஒருவராவார். இஸ்லாமியக் கல்வியிலும் கேள்வியிலும் சிறந்த குடும்பம் ஒன்றில் ஹிஜ்ரி 1280 ஆம் ஆண்டு மெளலானா பிறந்தார்கள். உ.பி. மாநிலம் தேவ்பந்த் நகரிலுள்ள தாருல் உலூம் படசாலையில் பயின்று ஹி.1301 ஆமாண்டு மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களுடைய கரங்களினால் பட்டம் பெற்றார்கள்.
தொடர்ந்து பல்வேறு பாடசாலைகளிலும் இஸ்லாமிய மையங்களிலும் பணியாற்றினார்கள். அக்கால கட்டத்தில் முஸ்லிம் உம்மாவின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது. இஸ்லாம் என்றால் என்ன? எனும் அடிப்படை அறிவும் அற்ற மக்களாக முஸ்லிம்கள் இருந்தார்கள்.
முஸ்லிம்களிடையே இரண்டு மிகப்பெரும் நோய்கள் பரவிக் கொண்டிருந்தன. ஒருபுறம் ஆங்கிலேய ஆட்சிக்கு அவர்கள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். மேலைப் பண்பாட்டைப் பின்பற்றினால்தான் வெற்றிபெற முடியும் என்ற எண்ணம் அவர்களுடைய சிந்தனையில் வெகுவாக ஊறிப்போயிருந்தது.
|
Read more...
|
Friday, 26 June 2015 01:18 |

அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் - 3
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
இந்நபித்தோழரின் பெயர் ‘அப்துல்லாஹ் அல்பத்லி’ என்பதாம். தந்தையின் பெய்ர் மஸ்ஊத். வம்சாவழியாவது இப்னு மஸ்ஊத் இப்னு காஃபில் இப்னு ஹபீப் இப்னு ஷமஃக் இப்னு மஃக்ஸூம் இப்னு சாஹிலா இப்னு காஹில் இப்னு ஹாரிஸ் இப்னு தமீம் இப்னு சஅத் இப்னு ஃபுதைல் இப்னு முத்ரிகா இப்னு இல்யாஸ் இப்னு முழர் இப்னு நிதார் இப்னு அத்னான். மக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். (அத்தபக்காதுல் குப்ரா, இப்னு சஅத், பா: 3 பக்: 50, ஸியர் அஃலாமுன் நுபலா நுபலா, பா: 1 பக்: 461)
ஜாஹிலிய்யா காலத்திலேயே தந்தையார் மரணமடைந்து விட்டார். எனினும் தாயார் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, பா: 7 பக்: 103)
தாயாரின் பெயர் உம்மு அப்த்.
வம்சா வழித் தொடராவது - அப்துல்லாஹ் இப்னு உம்மு அப்த் பின்த் வுத் இப்னு ஸிவாஃ இப்னு வலீம் இப்னு சாஹிலா இப்னு காஹில் இப்னு ஹாரிஸ் இப்னு தமீம் இப்னு சஅத் இப்னு ஹுதைல். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் தாய்வழிப்பாட்டியின் பெயர் ஹிந்த் பின்த் அப்த் இப்னு அல்ஹாரிஸ் இப்னு திஹ்ரா இப்னு கிலாப். இவர் பனூ ஜுஹ்ரா கோத்திரத்தைச் சேர்ந்த வராவார்.
அபூ அப்துர் ரஹ்மான் என்பது இவர்தம் விளிபெயராம். ‘எனக்கு மகன் பிறக்கும் முன்பாகவே அண்ணலார் எனக்கு அபூ அப்துர்ரஹ்மான் என்னும் விளிபெயரை சூட்டினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அறிவித்தாக அல்கமா கூறுகிறார் கள். (முஸ்தத்ரக் ஹாகிம் 3/313)
அதன்படி பிற்காலத்தில் குழந்தை பிறந்ததும் அதற்கு அப்துர் ரஹ்மான் என பெயர் சூட்டப்பபட்டது. அதுபோன்றே இவர்தம் தாயோடு தொடர்பு படுத்தி ‘இப்னு உம்மி அப்த்’ எனவும் விளிக் கப்பட்டார்கள். இப்பெயரே புகழ்பெற்று விளங்கியது. (ஸியர் அஃலாமுந் நுபலா, பா: 1 பக்: 462)
|
Read more...
|
|
|
|
<< Start < Prev 1 2 3 4 Next > End >>
|
Page 1 of 4 |