சந்தேகப் பிடியில் மனம் |
![]() |
![]() |
![]() |
Monday, 22 February 2021 07:36 | |
சந்தேகப் பிடியில் மனம் ரஹமத் ராஜகுமாரன் வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பிய முல்லாவின் ஆடையில் நீளமான ஒரு கருப்பு முடியை பார்க்கிறாள் அவரது மனைவி. அவ்வளவுதான்...பூகம்பமே வெடிக்கிறது. "உங்களுக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அவள் முல்லாவிடம் சண்டை பிடிக்கிறாள். "ஜன நடமாட்டம் நிறைந்த சந்தையின் வழியாக வந்தேன். அப்போது என் ஆடையில் இந்த முடி எப்படியோ ஒட்டியிருக்கும்" - முல்லாவின் பதில் அடுத்தநாள்.. வேலையில் இருந்து வீடு திரும்பிய முல்லாவின் ஆடையில் ஒரு நரைத்த முடி! "அய்யய்யோ... நேற்று இளம்பெண் இன்று தலை நரைத்த பெண்ணா? உங்களால் என் வாழ்க்கையே பறி போய்விட்டது என்று தரையில் விழுந்து புரண்டு அழுதாள். அதற்கு அடுத்த நாள் வீடு திரும்பும்போது, முல்லாவுக்கு மனவி நினைவு வருகிறது. ஆடைகளை நன்கு உதறிவிட்டு வீட்டுக்குள் வருகிறார். முல்லாவின் மனைவி இவரது இவரின் ஆடைகளை பரபரவென்று சோதனை போடுகிறாள் எந்த முடியும் கிடைக்கவில்லை. "அப்பாடா தப்பித்தோம்..! என்று முல்லாவின் உள்ளம் நிம்மதி பெருமூச்சு விட போன சமயம்.... "அடப்பாவி மனுஷா..! போயும் போயும் இன்று மொட்டைத்தலை பெண்ணின் வீட்டுக்கு போய் வந்திருக்கிறீர்கள்".. என்று சொல்லி முதல் இரண்டு நாட்களை விட இன்று அதிகமாக சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள் முல்லாவின் மனைவி. "முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும் ". (குர்ஆன் 49:12) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். ர.ரா
|