Home இஸ்லாம் வரலாறு முஹம்மது நபி (Sallallaahu Alaihi Vasallam) Part - 2
முஹம்மது நபி (Sallallaahu Alaihi Vasallam) Part - 2 PDF Print E-mail
Thursday, 21 August 2008 20:26
Share

நபியாக நியமிக்கப்படல்

முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) க்கு முன்பு இறைத்தூதர்களாக இவ்வுலகில் அறியப்பட்டவர்கள் மொத்தம் இருபத்தைந்துபேர். அவர்களுள், முதல்மனிதர் ஆதாம் தொடங்கி, இயேசு வரையிலான பதினேழு பேரை பற்றிய விரிவான அறிமுகங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன.

இறைவனுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியவர்கள், இறைவனாலேயே நல்வழிகாட்டப்பட்டவர்கள் ஒருவகை. இறைவனிடமிருந்து மக்களுக்கு வேதத்தைப்பெற்று அளித்தவர்கள் இன்னொருவகை. முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) க்குமுன்னர் இப்படி வேதம் அருளப்பட்ட சம்பவம் மட்டும் மூன்று முறை நடந்திருக்கிறது.

முதலாவது, மோஸஸுக்கு அருளப்பட்ட "தோரா" (குர்ஆன் இதனை "தவ்ராத்" என்று அழைக்கிறது. யூதர்களின் வேதமாக இருப்பது.)

அடுத்தது, தாவீத் என்கிற டேவிடுக்கு அருளப்பட்ட சங்கீதம். (Psalm என்று ஆங்கிலத்திலும் ஸபூர் என்று குர்ஆனிலும் குறிக்கப்படுவது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் இதனைப் பார்க்கமுடியும்.)

மூன்றாவதாக, இயேசுவுக்கு அருளப்பட்ட "இன்ஜீல்" எனப்படும் Gospel). இயேசுவுக்குச் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குப்பிறகு "இறைத்தூதர்" (நபி) என்று அடையாளம் காட்டப்பட்டவர், முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) .

முஹம்மது(ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம் க்கும் மற்ற இறைத்தூதர்களுக்குமான வித்தியாசங்கள் பல. வேதம் அருளப்பட்ட விதத்தால் மட்டுமல்ல. தாம் ஓர் இறைத்தூதர் என்பதை உணர்ந்த வகையிலேயே முஹம்மது மிகவும் வித்தியாசமானவர். மற்ற தூதர்கள் அனைவரும் எதிர்பாராத ஒருகணத்தில் ஆசீர்வதிக்கப்பட்டதன் பேரில் தம்மைத்தாமே இனம்கண்டு கொண்டு விட்டார்கள். முஹம்மது மட்டும், வருடக்கணக்கில் போராடி, உள்ளும் புறமும் ஏராளமான வேதனைகளை அனுபவித்து, ஆன்மிகச் சாதனை முயற்சிகளின் விளைவாக எத்தனையோ உடல் மற்றும் மனஉபாதைகளை அனுபவித்து, போராடிப்போராடி, இறுதியில் தான் தாம் "அனுப்பப்பட்டிருப்பதன்" காரணத்தைக் கண்டறிந்தார். இந்த ஆன்மிகக்காரணங்கள் மட்டுமல்ல; மற்ற இறைத்தூதர்கள் அனைவரும் ஆன்மிகவாதிகளாக மட்டுமே அடையாளம் காணப்பட்ட நிலையில், முஹம்மது ஒருவர்தாம் மக்கள் தலைவராகவும், மத்திய ஆசியாவின் தன்னிகரற்ற அரசியல் வடிவமைப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

அரேபியர்களின் வாழ்வில் சுபிட்சம் என்பது முதல்முதலாக எட்டிப்பார்க்கத் தொடங்கியதே முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்)வும் அவரது தோழர்களும் வரிசையாக ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து (அவர்கள் கலீஃபாக்கள் எனப்படுவார்கள்.) ஆளத்தொடங்கிய பிறகுதான். அரேபியர்களின் சரித்திரத்தில் முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) ஓர்அத்தியாயம் அல்ல. மாறாக, அவர்களது சரித்திரத்தின் மையப்புள்ளியே அவர்தான். முஹம்மதை மையமாக வைத்துத்தான் அவருக்குமுன், பின் என்று நம்மால் அரபுகளின் சரித்திரத்தை ஆய்வுசெய்யமுடியும்..

இருபத்தைந்து வயதில் முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) க்குத் திருமணமானது. அவரைக்காட்டிலும் வயதில்மிகுந்த, அவரைக்காட்டிலும் பொருளாதார அந்தஸ்தில் உயர்ந்த, கதீஜா(ரளியல்லாஹ¤ அன்ஹா) என்கிற விதவைப்பெண்மணி அவரை விரும்பி மணந்துகொண்டார். முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்)-ன் நேர்மையும் கண்ணியமும் அவரைக்கவர்ந்து, அப்படியருமுடிவுக்குவரத்தூண்டியது. திருமணத்துக்குப்பின், ஒரு கணவராகத் தம் கடமைகள் எதிலிருந்தும் விலகாமல், அதேசமயம், ஆன்மிகச்சாதனைகளில் நாட்டம்மிகுந்தவராக அடிக்கடி தனிமை நாடிப்போகக்கூடியவராகவும் இருந்திருக்கிறார் முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்). மக்கா நகரிலிருந்து சிறிது தொலைவில் இருந்த ஹிரா என்கிற குன்றுப்பகுதிக்குத்தான் அவர்தியானத்தின் பொருட்டு அடிக்கடி செல்வதுவழக்கம்.

ஒருநாள், இருநாளல்ல... வாரக்கணக்கில், மாதக்கணக்கில்கூட அவர் அங்கே தன்னிலை மறந்து தியானத்தில் இருப்பது வழக்கம். கிளம்பும்போது கொஞ்சம் உணவுப்பொருள்களை மட்டும் எடுத்துச்செல்வார். குடிக்கக்கொஞ்சம் தண்ணீர். அவருக்கு உடைமை என்று வேறு ஏதும் கிடையாது. தியானத்தில் உட்கார்ந்தால், எப்போது எழுவார், எப்போது எடுத்துச்சென்ற உணவைச்சாப்பிடுவார் என்பதற்கெல்லாமும் கூட உத்தரவாதமில்லை. சிலசமய ம்சாப்பிடுவார். சாப்பிடாமலேயே வாரக்கணக்கில் கண்மூடிக்கிடந்ததும் உண்டு. பல சமயங்களில் வெளியேபோன கணவர் நாள்கணக்கில் திரும்பி வராததைக்கண்டு கதீஜா ஆட்களை அனுப்பித்தேடி அழைத்துவரச் சொன்னதும் உண்டு. ஆனால், முஹம்மதின் ஆன்மிகச்சாதகங்களுக் குகதீஜா (ரளியல்லாஹ¤ அன்ஹா வின் பூரண ஒத்துழைப்பு இருந்திருக்கிறது. செல்வக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, வசதியான வாழ்க்கை படைத்தவராக இருந்தபோதிலும் தம் கணவரின் ஆன்மிக நாட்டத்தைப் புரிந்து கொள்ளக்கூடியவராக அவர் இருந்திருக்கிறார். அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்கிற எண்ணம் அவருக்கு இருந்திருக்கிறது.

முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்)-ன் வாழ்க்கையில் இது மிக முக்கியமானதொருகட்டம். எப்போதும் ஹிராமலைப் பகுதிக் குகைகளின் இருளுக்குள் கரைந்து, தியானத்தில்லயித்திருக்கும் முஹம்மதுக்கு, எப்போதாவது ஒருபிரமாண்டமான ஆகிருதிபடைத்த ஒளியுருவம் கண்ணெதிரேதோன்றும். யாரென்று அடையாளம் தெரியாது. பார்த்தகணத்தில் உடல் தூக்கிப்போட்டு, பதற்றம்மிகுந்து, பேச்சற்றுச் சமைந்துவிடுவார். அந்த உருவம் யார் என்று அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததில்லை. அது தன்னை ஏன் நெருங்கி வருகிறது என்றும் புரிந்ததில்லை. முதலில் கொஞ்சம் பயந்தார். இன்னார் என்று இனம் காணமுடியாததால் ஏற்பட்ட பயம். பலநாள்கள் இந்தப்போராட்டம் அவருக்குத் தொடர்ந்தது. உடலும் மனமும் மிகவும் களைப்புற்று, பதற்றம் மேலோங்கியவராக இருந்தவரை, அவரது மனைவியான கதீஜா(ரளியல்லாஹ¤ அன்ஹா)தான் அவ்வப்போது தேற்றி, தியானத்தில் உற்சாகம் கொள்ளச்செய்து வந்திருக்கிறார்.

மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான், தன்னை நோக்கி வந்த அந்த ஒளியுருவத்தை முஹம்மதால் இனம்கண்டுகொள்ள முடிந்திருக்கிறது. அந்த மாபெரும் உருவம், ஒரு வானவருடையது. வானவர் என்றால் தேவர் என்று கொள்ளலாம். இறைவனின்தலைமைத்தளபதிஎன்றுவைத்துக்கொள்ளலாமா? தவறில்லை. அவரது பெயர் ஜிப்ரீல். முந்தைய "இறைத்தூதர்கள்" அனைவருக்குமே கூட இந்த ஜிப்ரீலின் மூலம்தான் தன் செய்தியை இறைவன் சொல்லி அனுப்பினான் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை. தன்னை வருத்தி, தியானத்தில் தோய்ந்து, ஆன்மிகச் சாதனைகளின் உச்சத்தை முஹம்மது(ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) தொட்டு விட்டிருந்த நேர ம்அது.

அதுவரை தூர இருந்து அவருக்கு அச்ச மூட்டிக்கொண்டிருந்த ஜிப்ரீல், அப்போது நெருங்கிவந்து ஆரத்தழுவினார். "ஓதுவீராக!" என்று முதல் முதலாக ஓர் இறைக்கட்டளையை வெளிப்படுத்தினார். ஆனால் முஹம்மது(ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்)-க்கு என்ன பதில் சொல்லுவது என்று விளங்கவில்லை. அவர் எழுதப்படிக்கத் தெரியாதவர். பள்ளிக்கூடங்களுக்குச் சென்றவரல்லர். நல்லவர், நேர்மையாளர், ஏழைகளுக்காக மனமிரங்குபவர், ஒட்டுமொத்த மக்கா நகரவாசிகளின் நல்லபிப்பிராயத்துக்கு ப்பாத்திரமானவர் என்றாலும், படித்தவரல்லர். அரபியில் ஓர்அட்சரம் கூட அவருக்குத் தெரியாது. சுயமாக அல்ல; எதையும் படித்துக்கூட அவரால் ஓதமுடியாது! ஆனால் ஜிப்ரீல் தொடர்ந்து வற்புறுத்தினார். "ஓதுவீராக.""நான்எப்படிஓதுவேன்?" என்று திரும்பவும் கேட்டார்முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்). மூன்றாவது முறையாக "ஓதுவீராக" என்று உத்தரவிட்ட ஜிப்ரீல், முஹம்மது(ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) அவர்களை இறுகக்கட்டிப்பிடித்து, விடுவித்துப் பிறகு சொன்னார்: "உம்மைப்படைத்த இறைவனின் திருநாமத்தால் ஓதுவீராக. அவனே மனிதனை ரத்தக்கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக. இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக்கொண்டு வந்து கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றைக் கற்றுத் தருபவனும் அவனே. "ஜிப்ரீல் சொல்லச்சொல்ல, தன் வசமிழந்த முஹம்மது இவ்வசனங்களைக் கேட்டு கூடவே சொல்லிக் கொண்டுவந்தார்.

பின்னாளில் இச்சம்பவத்தை நினைவு கூர்ந்தவர், "அந்தச்சொற்கள் உச்சரிக்கப்பட்டதாக அல்ல; என் இதயத்தின் மீது எழுதப்பட்டதாக உணர்ந்தேன்" என்று அவர் சொல்லியிருக்கிறார். விடைபெறும் தருணத்தில்தான் ஜிப்ரீல் தன் வருகையின் நோக்கத்தை அவருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். "ஓ, முஹம்மது! நீர் அல்லாவின் தூதராவீர். நானே ஜிப்ரீல்." இப்படியருசம்பவம் நடந்தது என்று சொன்னால் யார் நம்புவார்கள்? அதுவும் "காட்டரபிகளின்" சமூகத்தில்! ஆனால், முஹம்மது(ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) அவர்களின் அனுபவத்தை அவரது மனைவி கதீஜா(ரளியல்லாஹ¤ அன்ஹா) முழுமையாக நம்பினார். நம்பமுடியாத அளவுக்கு வியப்பூட்டும் பெண்மணியாகத் திகழ்ந்தவர் அவர். தமது கணவர் ஓர் இறைத்தூதர் என்பதை நம்புவதில் அவருக்குச் சிறு தயக்கம் கூட இருக்கவில்லை. அவரது அந்த ஆழமான நம்பிக்கை, இன்னும் ஆழமாக வேரூன்றும் விதத்தில் ஒருசம்பவம் நடந்தது.

கதீஜா(ரளியல்லாஹ¤ அன்ஹா)வின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் இருந்தார். மிகவும் வயதான அவரது பெயர் வரகாஹ் (Waragah) என்பது. ஹிரா குகையில் தியானத்தில் இருந்த தம் கணவருக்கு ஜிப்ரீல் தரிசனமாகி, அவரை ஓர் இறைத்தூதர் என்று அறிவித்துப் போனதை வரகாஹ்விடம் கதீஜா(ரளியல்லாஹ¤ அன்ஹா) சொன்னபோது, "சந்தேகமேவேண்டாம். முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) ஒரு நபிதான். அவருடன் வந்து பேசியது ஜிப்ரீல் என்கிற வானவர்தாம்" என்று கூடுதல் நம்பிக்கை அளித்தார் அவர். கண்தெரியாத, பலவேதங்களில் பாண்டித்தியம் பெற்ற ஒருகிறிஸ்துவர் அவர்.

ஜிப்ரீல் என்கிற வானவரின் வழியாக முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு இறைவன் அளித்த குர்ஆன் ஒரேநாளில், ஒரே பொழுதில் மொத்தமாக அளிக்கப்பட்ட வேதமல்ல. கிட்டத்தட்ட இருபத்துமூன்று ஆண்டுகால இடைவெளியில் பகுதிபகுதியாக, வரிசைகள் அற்று முன்னும் பின்னுமாக, வேறுவேறு சூழ்நிலைகளில், அந்தந்தக்காலகட்டத்தின் தேவையை அது எல்லா காலங்களுக்கும் பொருந்துமா என்கிற பார்வையை உள்ளடக்கி அருளப்பட்டது.

வேதவரிகள் தமக்குள் இறங்குவது பற்றிமுஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) சில நுணுக்கமான விவரங்களைத் தந்திருக்கிறார். "மணி ஓசையின் அதிர்வைப்போல் சமயத்தில் அவை என்னுள்ளே இறங்கும். மிகுந்த சிரமம் தரத்தக்க அனுபவம் அது. இறங்கிய வரிகளை நான் உணர்ந்து, புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அதிர்வின் வீச்சு குறைய ஆரம்பிக்கும். முற்றிலும் புரிந்துவிட்டவுடன் அதிர்வு நின்றுவிடும். சில சமயங்களில் ஜிப்ரீல் நேரடியாக வந்து உரையாடுவார். அவரது சொற்கள், அப்படியே உணர்வுகளாக என் மனத்தில் இறங்கித்தங்கும். "ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டுவாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையைமாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர்வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப் போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) தம்மை இறுதிவரை கருதினார்.

தமது வாழ்நாளுக்குள் ஒட்டுமொத்த அரேபிய நிலப்பரப்பையும் இஸ்லாம் என்கிற மார்க்கத்தின் பக்கம் அழைத்து வந்து, நெறிப்படுத்தி, தன்னிகரற்ற தலைவராக ஆண்டு மறைந்தவர் அவர். ஆனால் இறுதிவரை கிழிந்த ஆடைகளை உடுத்தி, வறண்ட ரொட்டிகளை உண்டு, இளமையில் இருந்த மாதிரியேதான் இருந்தார். மனைவி கதீஜா(ரளியல்லாஹ¤ அன்ஹா), ஒரு செல்வப் பெண்மணிதான் என்றாலும், மனைவியுடன் இணைந்து மகிழ்ச்சியாக அந்தச்செல்வங்களை அள்ளிஅள்ளி ஏழைகளுக்குத் தரத்தயாராக இருந்தாரேதவிர, தமக்கென்று ஒருதிர்ஹம் (வெள்ளிக்காசு) கூட அவர் எடுத்துக்கொண்டதில்லை. பாசாங்கற்ற இந்த எளிமைதான் முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) அவர்களின் மிகப்பெரிய பலமாக இருந்தது.

முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்), தாமொரு நபி என்றுகண்டு கொண்டதும், முதல்முதலில் அதைத் தம் மனைவியிடம் தெரிவித்தார். அடுத்தபடியாக அவர் இதுகுறித்துப்பேசியது, வரகாஹ்விடம். இருவருமே அதை நம்புவதில் எந்தத்தயக்கமும் காட்டவில்லை. ஆனால் வரகாஹ் மட்டும் ஒருவிஷயம் சொன்னார்: "நான்நம்புகிறேன். ஆனால் நீங்கள் இம்மக்களால் பொய்யன் என்று தூற்றப்படுவீர்கள். கஷ்டப்படுத்தப்படுவீர்கள். ஏன், ஊரைவிட்டே துரத்தப்படுவீர்கள். அவர்கள் உங்களுடன் போரிடவும் வருவார்கள்." வரகாஹ் சொன்னது சத்தியவாக்கு. அட்சரம் பிசகாமல் அப்படியேதான் நடந்தது.

-நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 13  

நன்றி: குமுதம்ரிப்போர்ட்டர் 6 ஜனவரி, 2005

கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள "next"'கிளிக்" செய்யவும்.