Home கட்டுரைகள் விஞ்ஞானம் டைம் டிராவல் (Time Travel) (1) - ரஹ்மத் ராஜகுமாரன்
டைம் டிராவல் (Time Travel) (1) - ரஹ்மத் ராஜகுமாரன் PDF Print E-mail
Friday, 17 July 2020 06:49
Share

டைம் டிராவல் (Time Travel) 1

      ரஹ்மத் ராஜகுமாரன்       

[ முப்பரிமாணத்தில் வாழ்ந்து வருகின்றோம் உயரம் + நீளம் + அகலம் என்பதே அது. நான்காவது பரிமாணம் உண்டு. அதுவே காலம். இதனோடு நாம் பயணிக்கின்றோம்.

இங்கு கண்ணுக்கு தெரியாத மிக மிக குறுகிய அளவு நேரம் இவற்றையும் தாண்டி பல பரிமாணங்கள் உலகில் உண்டு.

அதாவது இரு நேரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை தொடர்பு படுத்துகின்றதே நேரம் அல்லது காலம் இவ்வாறான இடைவெளியை கண்டுபிடித்து அதன் ஊடாக அதாவது காலத்தின் ஊடாக பயணம் செய்யும் இயந்திரம் அதிக சக்தியை உறிஞ்சும் இயந்திரமாக காணப்படும்.

இவ்வாறான பயணம் சாத்தியம் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்னும் விஞ்ஞானியின் ரிலேட்டிவிட்டி தியரி வலுப்படுத்துகின்றது.

ஜடப் பொருள்கள் அனைத்தும் அணுக் கோர்வைகளால் ஆனது. அதுபோல நேரத்திற்கும் இவ்வாறான அணுத்துகள்கள் மூன்று பரிமாணங்களுக்கு உட்பட்ட அனைத்திலும் இருக்கின்றது.]

டைம் டிராவல் (Time Travel) 1

      ரஹ்மத் ராஜகுமாரன்       

கனவுகளை நனவாக்கும் முயற்சியில் இப்போதைய அறிவியல் பயணிக்கின்றது என்றும் சொல்லலாம் காரணம் மனிதன் விஞ்ஞானத்தில் பயணிக்கிறான்.

ஒரு காலத்தில் தெய்வங்களாக பார்த்து வணங்கிய சூரிய சந்திரனை இப்போது ஓர் ஆற்றலாக நிரூபித்தது இந்த அறிவியல் என்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இப்போதைய அறிவியல் உலகில் காலப்பயணம் டைம் ட்ராவல் என்பது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றது.

காலத்தைக் கடக்கும் ஆற்றல் பெற்றவன் இறைவன் என்று ஒரு புராணம் கூறுகின்றது. இன்னொரு வேதம் காலத்தையே இறைவன் என்று கூறுகின்றது. ஆனாலும் அதே வகை பயணத்தை மனிதராலும் செய்ய முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அப்படி என்றால் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திக்கலாமா வள்ளுவரின் தாடி உண்மையா? பாரதியின் திமிரை நேராக பார்க்க முடியுமா? இவற்றுக்கு "முடியும் " என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அவ்வளவு ஏன் ராஜராஜ சோழனை நேரில் சந்திக்கலாம் உங்களுக்கு வீரம் இருந்தால் அவர் போர் படையில் நீங்கள் சேர்ந்து அவரோடு யுத்த களத்திற்குச் செல்லலாம் என்று அடித்துக் கூறுகிறார்கள்.

263. அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: " நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி (வந்து) என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை "ஸம்ஸம்" நீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக் கொண்டு வந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார். பிறகு (பழையபடியே) நெஞ்சை மூடிவிட்டார்.

பிறகு என் கையைப் பிடித்து (என்னை அழைத்து)க் கொண்டு விண்ணில் ஏறினார். முதல் வானத்திற்கு நாங்கள் வந்தபோது முதல் வானத்தின் காவலரிடம் ஜிப்ரீல், "திறப்பீராக!" என்று கூறினார். அதற்கு அக்காவலர் "யார் அது?" எனக் கேட்டார். அவர் "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் யாரேனும் வந்திருக்கிறார்களா?" என்று அக்காவலர் கேட்டார். அவர், "என்னுடன் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வந்திருக்கிறார்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று அவர் கேட்க, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் "ஆம்" என்று பதிலளித்தார். (முதல் வானத்தின் கதவை அதன்) காவலர் திறந்தார்.

நாங்கள் முதல் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் இருந்தார். (என்னைப் பார்த்து,) "நல்ல இறைத்தூதரே, வருக! நல்ல மகனே, வருக!" என்று அந்த மனிதர் கூறினார். நான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், "யார் இவர் ஜிப்ரீலே?" என்று கேட்டேன். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், "இவர்தாம் (ஆதிமனிதர்) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

இவை காலப்பயணம் என்பதன் மூலம் சாத்தியமே என்பதே ஆய்வின் முடிவு. அதற்கு விஞ்ஞானிகள் கொடுக்கும் விளக்கம் சற்று குழப்பமானது சிந்தனையை சிதறவிடாமல் அந்த விளக்கத்தை படியுங்கள்.

நேரத்தை (காலம்) தொட அல்லது பார்க்க முடியாது என்றாலும் கூட அதன் விளைவே உணரமுடியும் வயது என்பதே இதற்கு சிறந்த உதாரணம்.

மனிதர்களுக்கு நரை வருகின்றது முகம் பார்க்கும் கண்ணாடி அதைக் காட்டுகின்றது .பக்கத்தில் அவர்களின் குழந்தை கால புகைப்படம் இருக்கிறது .எம் சூழலில் உள்ள மரம் ஒன்று வளர்ந்து கொண்டே செல்கிறது. இவற்றின் மூலம் காலம் எம்முடன் நகருகின்றது அல்லது காலத்தோடு நாம் நகர்கின்றோம் என்பது தெளிவாகின்றது.

இப்போதுகூட படிப்படியாக இதனை நீங்கள் படித்துக் கொண்டு வரும்போது காலத்தோடு பயணித்துக் கொண்டுதான் வருகின்றீர்கள் ஆனாலும் காலத்தை நிறுத்தி விட முடியாது நொடிக்கு நொடி இறந்த காலத்திற்கு பயணம் செய்து கொண்டு இருக்கின்றோம்.

முப்பரிமாணத்தில் வாழ்ந்து வருகின்றோம் உயரம் + நீளம் + அகலம் என்பதே அது. நான்காவது பரிமாணம் உண்டு. அதுவே காலம். இதனோடு நாம் பயணிக்கின்றோம்.

இங்கு கண்ணுக்கு தெரியாத மிக மிக குறுகிய அளவு நேரம் இவற்றையும் தாண்டி பல பரிமாணங்கள் உலகில் உண்டு.

அதாவது இரு நேரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை தொடர்பு படுத்துகின்றதே நேரம் அல்லது காலம் இவ்வாறான இடைவெளியை கண்டுபிடித்து அதன் ஊடாக அதாவது காலத்தின் ஊடாக பயணம் செய்யும் இயந்திரம் அதிக சக்தியை உறிஞ்சும் இயந்திரமாக காணப்படும்.

இவ்வாறான பயணம் சாத்தியம் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்னும் விஞ்ஞானியின் ரிலேட்டிவிட்டி தியரி வலுப்படுத்துகின்றது.

E=mc2 என்பதே அவர் கூறிய தியரி . அதாவது ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் நாம் இறந்த காலத்திற்கும் , எதிர் காலத்திற்கும் கூட செல்லலாம் என்று நிரூபித்துள்ளார்.

இயற்கை எனப்படும் எதிர்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் அவற்றைத் தாண்டி மனிதன் செயற்கையாக பயணம் செய்ய முடியுமா எனும் போது கருந்துளை (Warm Hole) - இது காலத்தின் குறுக்குவழி என்பதையும் பௌதிக ஆய்வாளர்கள் கருத்தில் எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஜடப் பொருள்கள் அனைத்தும் அணுக் கோர்வைகளால் ஆனது. அதுபோல நேரத்திற்கும் இவ்வாறான அணுத்துகள்கள் மூன்று பரிமாணங்களுக்கு உட்பட்ட அனைத்திலும் இருக்கின்றது.

இவை நான்காவது பரிமாணம் என ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரத்திலும் காணப்படுகின்றது. அணுவை விட மிகமிகச் சிறிய இடைவெளிகள் நேரத்திலும் காணப்படுகிறது என்பதுதான் விஞ்ஞானிகளின் வியக்கத்தக்க கருத்து.

மிகமிகச் சிறிய இடைவெளிகள் ஆனவை இரு வேறு நேரத்தையும் இடத்தையும் அந்த இடைவெளிகளே இணைக்கின்றன .இந்த இடைவெளி மில்லியன் ட்ரில்லியன் சென்டிமீட்டர் ஒரு சதுர குறுக்குவெட்டு பரப்பளவு இருக்கலாம் இதனால் மனிதன் நுழைவது சாத்தியமில்லை இங்குதான் கால எந்திரத்தின் உதவி தேவை இவ்வாறான மிகச்சிறிய இடைவெளிகளை பெரிதாக வேண்டியது அந்த இயந்திரத்தின் பணி.

விஞ்ஞானிகள் இவ்வாறான இடைவெளி துகள்களில் ஒன்றே பெரிதாக்கினால் அதனுள் மனிதனால் சென்றுவிட முடியும் எனவும் நம்புவதோடு அதற்கான ஆய்வுகளிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஈர்ப்பு விசையுடன் இவை சாத்திய தன்மை குறைவு என்பதற்காக விண்வெளியில் இதற்கான ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது .விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலப்பயணம் சாத்தியம் என்றே கூறுகின்றார். இவை இப்போதும் நடைபெற்று வருகின்றது எனவும் எதிர்கால மனிதர்கள் இறந்த காலத்திற்கு வந்து செல்கின்றார்கள் அது போல இறந்த காலத்து மனிதர்கள் நிகழ்காலத்திலும் வந்து போகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன.

300 வருடத்திற்கு முன் ஜோர்டன் நாட்டு குகையில் தூங்கிய தோழர்கள் தூக்கம் விழித்து நிகழ்காலத்தில் உணவு வாங்க வந்தார்கள் என்பதாக புனித வேதம் திருக்குர்ஆன் சாட்சியம் பகருகின்றது.

وَكَذٰلِكَ بَعَثْنٰهُمْ لِيَتَسَآءَلُوْا بَيْنَهُمْ‌ قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ‌ قَالُوْا رَبُّكُمْ اَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوْۤا اَحَدَكُمْ بِوَرِقِكُمْ هٰذِهٖۤ اِلَى الْمَدِيْنَةِ فَلْيَنْظُرْ اَيُّهَاۤ اَزْكٰى طَعَامًا فَلْيَاْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ اَحَدًا‏

(குகைத் தோழர்கள்) அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம்.

அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)" என்று கூறினர்.

(மற்றவர்கள்) "நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்" என்று கூறி...

"உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டினத்திற்கு அனுப்பி வையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கின்றது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டினத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும். (அல்குர்ஆன் : 18:19)

இவ்வாறாக ஆதாரங்களுக்கு மர்மம் என்ற பெயர் கொடுக்கப்பட்டு இன்றுவரை மறைக்கப்பட்டு கொண்டே வருகின்றது காரணம் மெய்ப்படும் வரை அனைத்துமே மர்மமே.

நிச்சயம் ஒருநாள் காலப்பயணம் சாத்தியம் அப்படி வந்தால் இன்னொரு முறை இந்த பதிவை மறக்காமல் படித்துவிட்டு அந்த காலத்திற்குள் போய்விடுங்கள்.

ர.ரா

இன் ஷா அல்லாஹ்,  பயணம் தொடரும்.