Home இஸ்லாம் வரலாறு ஹாஜியா சோஃபியா (ஆயா சோஃபியா)வில் 80 ஆண்டுகளுக்குப்பிறகு கேட்கும் பாங்கொலி! (2)
ஹாஜியா சோஃபியா (ஆயா சோஃபியா)வில் 80 ஆண்டுகளுக்குப்பிறகு கேட்கும் பாங்கொலி! (2) PDF Print E-mail
Sunday, 12 July 2020 08:07
Share

ஹாஜியா சோஃபியா (ஆயா சோஃபியா)

"நாங்கள் முஹம்மது ﷺ அவர்களைப் பின்பற்றுபவர்களாக இல்லையென்றால், இந்நேரம் உங்கள் உடல்கள் கூறு கூறாகப் பிரிக்கப்பட்டிருக்கும். நாங்கள் முஸ்லிம்களாக இல்லையென்றால் இந்த மண் உங்கள் இரத்தத்தில் குளித்திருக்கும். உங்கள் மகள்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பார்கள். உங்கள் குழந்தைகள் உயிருடன் எரிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் எங்கள் மார்க்கமான இஸ்லாம் இவற்றிற்கெல்லாம் எதிரானது. இவற்றையெல்லாம் தடை செய்கிறது.”

-உதுமானிய சுல்தான் முஹம்மத் அல் ஃபாத்திஹ் ஹிஜ்ரி 857, ஜமாதில் அவ்வல் 20 (மே 29, 1453) அன்று கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றிய பின்னர் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அங்குள்ள கிறிஸ்தவக் கைதிகளிடம் கூறிய வார்த்தைகள் இவை.

“உங்கள் மன்னிப்பை வேண்டுகிறோம். கருணை காட்டுங்கள்” என்று அந்தக் கைதிகள் கோரினார்கள்.

“கிருபையும் கருணையும் கொண்ட இறைவனின் பெயரால் நான் உங்களை மன்னிக்கிறேன். இன்று உங்களுக்கு எந்தக் கொடுமையும் நிகழாது. உங்கள் இல்லங்களுக்குச் செல்லலாம்.” – சுல்தான்.

சுல்தானின் வார்த்தைகளைக் கேட்டதும், நிம்மதிப் பெருமூச்சு விட்ட கைதிகள்,   “நீங்கள் உண்மையில் ஒரு நல்ல தலைவர் என்பதற்கு இது ஒரு சான்று. உங்கள் வீரர்கள் நல்ல வீரர்கள். நாங்கள் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நாங்கள் நல்ல மனிதர்களாக இருப்போம் என்று உறுதியளிக்கிறோம்” என்று சொன்னார்கள்.

அப்போது சுல்தான் கிறிஸ்தவர்களின் நலனைக் கவனித்துக்கொள்ள அவர்களிலிருந்தே ஒருவரை அவர்களே தேர்ந்தெடுக்கும்படி சொன்னார். அவர்கள் பேட்ரிக் என்பவரைத் தேர்ந்தெடுத்தனர்.

பேட்ரிக்கைத் தன் முன் அழைத்த சுல்தான், “நீங்கள் இப்போது கிறிஸ்தவர்களுக்குத் தலைவராக இருக்கிறீர்கள். நீங்கள் என் அமைச்சர்களுக்கு இணையாவர். என்னை உங்கள் நண்பராக நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

"இன்று முதல், கான்ஸ்டான்டினோபிள் நகரம் இஸ்லாம்புல் என்றழைக்கப்படும். இது இஸ்லாமின் ஒட்டுமொத்த அர்த்தத்தையும் கொண்டுள்ளது."

"நீங்கள் எங்களைக் கட்டாய மதமாற்றம் செய்வீர்களா?" என்று பேட்ரிக் கேட்டார்.

"இஸ்லாமில் எந்த நிர்ப்பந்தமும் இல்லாததால் யாரும் மதம் மாற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள்" என்றார் சுல்தான்.

"நாங்கள் முன்பு போலவே எங்கள் சொந்த மதத்தைப் பின்பற்றி சுதந்திரமாக இருக்கப் போகிறோமா?" – நம்ப முடியாமல் மீண்டும் பேட்ரிக் கேட்டார்.

“ஆம். நீங்கள் உங்கள் மதத்தைப் பின்பற்றி சுதந்திரமாக இருக்கலாம். உங்கள் தேவாலயங்களில் எங்கும் எந்த நேரத்திலும் உங்கள் வழிபாடுகளை நடத்தலாம், ஒன்றே ஒன்றைத் தவிர” என்று நிறுத்தினார் சுல்தான்.

“நீங்கள் எதைக் கூறுகிறீர்கள் சுல்தான்?" - பேட்ரிக் கேட்டார்.

“ஹாஜியா சோஃபியா. நாங்கள் அதை மஸ்ஜிதாக மாற்ற விரும்புகிறோம்” என்று சுல்தான் கூறிவிட்டுக் கூட்டத்தைப் பார்த்தார்.

எதிர்பார்த்தபடி, அவர்கள் அந்த அறிவிப்பைக் கேட்ட தருணத்தில் கோபமடைந்து கொதித்தனர்.

சுல்தான் அவர்களிடம் அப்பொழுது உரையாடியது வரலாற்றில் வைர வரிகளாகப் பதிந்துவிட்டது.

“கான்ஸ்டன்டைன் பேரரசர் உயிருடன் இருந்தபோது, அவர் விரும்பியதைச் செய்தார். நீங்கள் மேய்ப்பனைப் பின்தொடரும் ஆடுகளைப் போல அவரைப் பின்தொடர்ந்தீர்கள்.

ஆனால் இப்போது, முஸ்லிம்கள் ஆட்சியில் உள்ளனர். நீங்கள் எங்கள் கைதிகள். எங்கள் வெற்றியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் போரின் நடத்தை விதிமுறைகளின்படி, போர்க் கைதிகளான நீங்கள் மரண தண்டனை அல்லது சிறைவாசம் அனுபவித்திருக்க வேண்டும்.

ஆனால் நாங்கள் உங்களை மன்னித்துவிட்டோம். உங்களுக்கு விடுதலை தந்து, உங்கள் வீடுகளுக்குப் பாதுகாப்பாக திரும்ப அனுமதித்தோம். நாங்கள் எங்கள் மார்க்கத்திற்கு மாறும்படியும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை.

உண்மையில் உங்கள் மதத்தைத் தொடர்ந்து நீங்கள் கடைப்பிடிக்கவும் உங்களை அனுமதிக்கிறோம். தேவாலயங்களிலும் உங்கள மத வழிபாடுகளைத் தொடரலாம். இதற்கெல்லாம் கைம்மாறாக நீங்கள் செய்வது இதுதானா?”

சுல்தானின் இந்த வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போனார்கள் கிறிஸ்தவர்கள். அந்த வார்த்தைகள் அவர்களை மின்னல் போல் தாக்கியது. உடனே பேட்ரிக் தன் மக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் சுல்தானிடம் வந்த பேட்ரிக், “ஹாஜியா சோஃபியாவை மஸ்ஜிதாகப் பயன்படுத்துவதற்காக நாங்கள் ஒப்பந்தம் செய்துகொள்கிறோம். நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டோம்” என்றார்.

சுல்தான் அனைத்துக் கைதிகளையும் விடுவித்தார். ஹாஜியா சோஃபியா சுத்தம் செய்யப்பட்டது. சிலுவைகளும் சிலைகளும் அகற்றப்பட்டன.

(Source: “Sultan Muhammad Al-Fateh: The Conqueror of Constantinople” By Abdul Latip Talib)

கான்ஸ்டான்டிநோபிள் நகரம் பலம் கொண்டு விடுவிக்கப்பட்டுள்ளதால் அந்தத் தேவாலயத்தை மஸ்ஜிதாக மாற்றுவது இஸ்லாமிய ரீதியாக சட்டப்பூர்வமானது. மேலும் கட்டாய விடுதலை என்பது ஷரீஆவில் அதன் சொந்தச் சட்டத்தைக் கொண்டுள்ளது. சுல்தான் கிறிஸ்தவர்களுக்கு தங்கள் மத வழிபாடுகளைச் செய்வதற்கும் அவர்களின் மதத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் உரிமை அளித்தார். அவர்களுடைய சிவில் விவகாரங்களில் அவர்களுக்குள் அவர்களே தீர்ப்பளிக்கும் உரிமையையும் அளித்தார். மற்ற பகுதிகளிலுள்ள தேவாலயத் தலைவர்களுக்கும் அவர் அதே உரிமையை வழங்கினார். அதே நேரத்தில், அவர்கள் அனைவருக்கும் ஜிஸ்யாவை (முஸ்லிமல்லாதவர்களுக்குரிய வரி) விதித்தார்.

(Source: “SULTAN MUHAMMAD AL-FATIH, The Conqueror of Constantinople - The Fall of the West and the East” By Dr. Ali Muhammad Al-Salaabi)

அதற்கடுத்த வெள்ளிக்கிழமை அங்கே தொழுகை ஆரம்பமானது. ஒரு குறிப்புப் படி சுல்தானின் ஆன்மீக குருவான ஷேக் ஷம்சுத்தீன் அல் வலீ அவர்கள் ஜும்ஆ தொழுகையை நடத்தினார்கள் என்று வருகிறது.

இன்னொரு குறிப்புப் படி ஷேக் ஷம்சுத்தீன் அல் வலீ அவர்களின் பரிந்துரைப்படி சுல்தான் முஹம்மது அல் ஃபாத்திஹ் ஜும்ஆ தொழ வைத்ததாக வருகிறது.

அன்று மஸ்ஜிதாக மாறிய ஹாஜியா சோஃபியா உதுமானியப் பேரரசு நிலைநின்றவரை மஸ்ஜிதாகவே வீற்றிருந்தது. உதுமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டு ஏகாதிபத்திய அடவருடி முஸ்தஃபா கமால் பதவியேற்றதும் 1935ம் வருடம் அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

தற்பொழுது துருக்கிய நீதிமன்றம் தகுந்த ஆவணங்களின் அடிப்படையில் அதனை அருங்காட்சியகம் என்ற அந்தஸ்திலிருந்து ரத்து செய்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பினையடுத்து துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் எர்துகானின் உத்தரவுப்படி அது மீண்டும் மஸ்ஜிதாக மாற்றப்பட்டுள்ளது.

ஜூலை 10, 2020, வெள்ளிக்கிழமை அந்த மஸ்ஜிதிலிருந்து “அல்லாஹு அக்பர்” என்ற சங்கநாதம் பாங்கொலியாக முழங்கியது.

-MSAH வரலாற்றுத் துளிகள்


History of 'Hagia Sophia' from Wikipedia

Hagia Sophia (/ˈhɑːɡiə soʊˈfiːə/; from the Ancient Greek: Ἁγία Σοφία, romanized: Hagங்a Sophங்a; Latin: Sancta Sophia or Sancta Sapientia, 'Holy Wisdom'), or the Ayasofya Mosque (Turkish: Ayasofya Cami), and formerly the Church of Hagia Sophia (Church of Holy Wisdom) is a Late Antique place of worship in Istanbul that has served as a Greek Orthodox Christian patriarchal cathedral, a Roman Catholic cathedral, an Ottoman mosque, and a secular museum.

Built in AD 537, during the reign of the Roman emperor Justinian I, it was then the world's largest interior space and the first to employ a fully pendentive dome. It is considered the epitome of Byzantine architecture[3] and is said to have "changed the history of architecture"

Built as the Christian cathedral church of Constantinople between 532 and 537 on the orders of the Roman emperor Justinian I, the basilica was designed by the Greek geometers Isidore of Miletus and Anthemius of Tralles.

The present Justinianic building was the third church of the same name to occupy the site, the prior one having been destroyed in the Nika riots. Episcopal see of the ecumenical patriarch of Constantinople, it remained the world's largest cathedral for nearly a thousand years, until Seville Cathedral was completed in 1520.

In 1204, it was converted by the Fourth Crusaders to a Roman Catholic cathedral under the Latin Empire, before being restored to the Eastern Orthodox Church upon the return of the Byzantine Empire in 1261.

After the Fall of Constantinople to the Ottoman Empire in 1453, it was converted to a mosque. In 1935, it was secularized into a museum. In early July 2020, the Council of State annulled the Cabinet's 1934 decision to establish the museum, revoking the monument's status and a subsequent decree of the President of Turkey ordered the reclassification of Hagia Sophia as a mosque.

The church was dedicated to the Wisdom of God, the Logos, the second person of the Trinity, its patronal feast taking place on 25 December (Christmas), the commemoration of the birth of the incarnation of the Logos in Christ.[10] Sophia is the phonetic spelling in Latin of the Greek word for wisdom and although sometimes referred to as Sancta Sophia, 'Saint Sophia', it is not connected with Sophia the Martyr.

Its full name in Greek is: Ναός της Αγίας του Θεού Σοφίας, romanized: Naந்s tis Hagங்as tou Theou Sophங்as, lit. 'Temple of the Holy Wisdom of God'.

The church housed a large collection of relics and featured a 15-metre (49 ft) silver iconostasis.[citation needed]

The centre of the Eastern Orthodox Church for nearly one thousand years, the building witnessed the excommunication of Patriarch Michael I Cerularius officially delivered by Humbert of Silva Candida, the papal envoy of Pope Leo IX in 1054, an act that is commonly considered the start of the East–West Schism. The doge of Venice who led the Fourth Crusade and the 1204 Sack of Constantinople, Enrico Dandolo, was buried in the church.

In 1453, Muhmed the Conqueror ordered the cathedral converted into a mosque. The patriarchate moved to the Church of the Holy Apostles, which became the city's cathedral. Although some parts of the city had fallen into disrepair, the cathedral had been maintained with funds set aside for this purpose, and the Christian cathedral made a strong impression on the new Ottoman rulers who conceived its conversion.

The bells, altar, iconostasis, ambo and baptistery were removed and relics destroyed. The mosaics depicting Jesus, his mother Mary, Christian saints, and angels were eventually destroyed or plastered over.[15] Islamic architectural features were added, such as a minbar (pulpit), four minarets, and a mihrab – a niche indicating the direction of prayer (qibla). From its initial conversion until the construction in 1616 of the nearby Sultan Ahmed Mosque, aka the Blue Mosque, it was the principal mosque of Istanbul. The Byzantine architecture of the Hagia Sophia served as inspiration for many other Ottoman mosques, including the Blue Mosque, the Şehzade Mosque, the Sற்leymaniye Mosque, the Rற்stem Pasha Mosque and the Kılıவூ Ali Pasha Complex.

The complex remained a mosque until 1931, when it was closed to the public for four years. It was re-opened in 1935 as a museum by the secular Republic of Turkey. Hagia Sophia was, as of 2014, the second-most visited museum in Turkey, attracting almost 3.3 million visitors annually. According to data released by the Ministry of Culture and Tourism, Hagia Sophia was Turkey's most visited tourist attraction in 2015 and 2019.