Home இஸ்லாம் கட்டுரைகள் இஸ்லாமில் அவநம்பிக்கைக்கு இடமில்லை! அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது!
இஸ்லாமில் அவநம்பிக்கைக்கு இடமில்லை! அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது! PDF Print E-mail
Wednesday, 01 July 2020 06:55
Share

இஸ்லாமில் அவநம்பிக்கைக்கு இடமில்லை! அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது!

கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கும் வரை இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. கத்தியை வைத்த பிறகே உதவி வந்தது.

மலையளவு நெருப்பில் தூக்கி எறியும் வரை இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. நெருப்பில் தூக்கி எறிந்த பிறகே உதவி வந்தது.

நைல் நதி வரை எதிரிகள் துரத்தி வந்தபோதும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் நதி பிளந்து அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.

இரண்டு மலைகளுக்கு நடுவே ஏழு முறை ஓடும் வரை அல்லாஹ்வின் உதவி அன்னை ஹாஜிரா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதற்கு பிறகே ஜம் ஜம் கிடைத்தது.

மீன் விழுங்கும் வரை அல்லாஹ்வின் உதவி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மீன் விழுங்கிய பிறகே கிடைத்தது.

யூசுஃப்  அலைஹிஸ்ஸலாம்  அவர்களின் சகோதரர்கள் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கிணற்றில் வீசும் வரை அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. வீசிய பிறகே கிடைத்தது.

எந்த மனிதனையும் அவனின் சக்திற்கு மீறி சோதிப்பதில்லை என்பது இறைவனின் வாக்கு. மேலே சொல்லியிருக்கும் எதுவுமே நம்ப முடியாத நடக்குமா என்கிற கேள்வி சிந்திக்கும் எந்த மனிதனுக்கு தோன்றும் நிகழ்வுகள். ஆனாலும் அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு இருந்த மிகப்பெரிய நம்பிக்கையின் காரணமாக அவர்களுக்கு அவர்களின் வேதனையில் உச்சத்தில் அல்லாஹ் (ﷻ) தன்னுடைய உதவியை அனுப்பினான்.

சோதனை என்பதன் ஆழம் என்ன என்பதை நாம் அறிய மாட்டோம் ஆனால் அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது என்பதை அவசியம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இஸ்லாமில் அவநம்பிக்கைக்கு இடமில்லை. நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு இன்பம் இருக்கிறது. ஆம் துன்பத்திற்கு பிறகு தான் இன்பம் இருக்கிறது.

அல்லாஹ்வுடைய அருளில் நிராசையடையாதீர்கள்.