Home இஸ்லாம் நோன்பு 'இஃதிகாஃப்' என்றால் என்ன?
'இஃதிகாஃப்' என்றால் என்ன? PDF Print E-mail
Friday, 15 May 2020 13:07
Share

'இஃதிகாஃப்' என்றால் என்ன?

     அப்துர் ரஹ்மான் உமரி       

[   நம்மில் எவ்வளவு நபர்கள் தொடர்ந்து பத்து நாள் ரமழானில் இஃதிகாஃப் இருக்கிறோம்? ஷரீஅத்தில் ஒரு முக்கியமான கடமை என்று தெரிந்திருந்தும் இறைவனுக்காக அவனுடைய வீட்டில் பத்து நாள் அமர்வதற்கு நம்மால் முடியவில்லை. இது தான் யதார்த்தம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல வருடங்களில் ரமழான் பதினொன்று ஆரம்பித்தவுடன் இஃதிகாஃப்பை ஆரம்பித்து விடுவார்கள். பல ஆண்டுகள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்திருக்கிறார்கள்.

நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பது போன்று லைலத்துல் கத்ரை அடைவதற்கு மட்டுமேயல்ல இஃதிகாப். 

இறைவனுடைய இல்லத்தில் இருப்பதே ஒரு வணக்கம்.

அல்லாஹ்வுடைய வீட்டில் தங்கியிருப்பது.

அல்லாஹ்வை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பது.

அல்லாஹ்வை திக்ரு செய்வது. அல்லாஹ்வின் மறையை ஓதிக் கொண்டிருப்பது.

அல்லாஹ்வுடைய வழிபாட்டில் ஈடுபாட்டோடு கழிப்பது ஓர் இபாதத்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்திருக்கிறார்கள். இறைவனுக்காக கொஞ்ச நேரம். ஒரு நாள், இரண்டு நாள், பத்து நாள், இருபது நாள், ஒரு மாதம், ஐந்து மாதம், இவையெல்லாம் இறைவனுக்காக நாம் காட்டுகின்ற ஈடுபாட்டை வெளிப்படுத் தும் விஷயங்கள். ஒரு விஷயத்தை நீங்கள் எந்தளவிற்கு முக்கிய மானதாக கருதுகிறீர்கள் என்பது பொருத்து உங்களுடைய ஈடுபாடு அமைகின்றது.]

'இஃதிகாஃப்' என்றால் என்ன?

     அப்துர் ரஹ்மான் உமரி       

அகூஃப் என்றால் மற்றெல்லாப் பொருட்களை விட்டும் திரும்பி ஒருமுகத்தோடு ஏதே னும் ஒரு பொருளை நோக்கியாகிவிடுவது எனப்பொருள்.

இதிலிருந்து பிறந்தது தான் ஆகிஃப் என்னும் சொல்.

அதனின்று பிறந்த இன்னொரு சொல்லான இஃதிகாஃப், தியானம், இறைஞானம், திக்ரு, வழிபாடு, இறைசிந்தனை போன்றவற்றைக் குறிக்கின்றது.

அகஃப என்றால் தன்னைத்தானே ஏதேனும் ஒரு பொருளைவிட்டு விலக்கிக் கொள்வது என்றோ ஒன்றையே பற்றியிருப்பது என்றோ பொருள். எல்லாவற்றையும் விட்டுவிலகி ஓரிடத்தில் ஒதுங்கியமதர்ந்து இறைவனின் நினைவிலேயே ஆழ்ந்து போவதை ஷரீஅத் இஃதிகாஃப் என்கின்றது.

ரமழான் மாதத்திற்கும் பள்ளிவாசலில் தங்கியிருந்து வழிபடுகின்ற இந்த இபாதத்திற்கும் தனி உறவு இருக்கின்றது என்பதை குர்ஆனிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

அண்ணலாரின் அருள்மொழிகளும் இதனையே ஆமோதிக்கின்றன.

இறையடியான் அனைத்து விஷயங்களைவிட்டும் முகத்தை திருப்பிக் கொண்டு இறைவனுக்கென்றே போய் உட்கார்ந்துவிடுவது இஃதிகாஃப் எனப்படும்.

அதனுடைய முறையான வடிவத்தை அண்ணலார் நமக்குக் கற்பித்துள்ளார்கள். இறைவனின் அன்பை உருவாக்கி ஊக்குவித்து வளர்த்தெடுப்பது என ஒரு தனிப்பண்பை தவாஃப் பெற்றுள்ளதைப் போல, இஃதிகாஃப்பும் தனக்கென ஒரு தனிச்சிறப்புப் பண்பை பெற்றுள்ளது. இறைநினைவை அகத்திலும உள்ளத்திலும அறிவிலும் ஊட்டுவது என்பதே அப்பண்பு.

1441 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த உலகத்தில் கடைசி வழி காட்டுதலின் முதல் வஹி இறங்கியது. இக்ரஃ. அண்ணல் நபி களார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிரா குகையில் தனியாக அமர்ந்திருந்தார்கள். நாட்கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தன்னந்தனியாக இருந்தார்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிரா குகையில் தங்கியிருந்தார்கள்.

அக்குகையில் அண்ணலார் என்ன செய்து கொண்டிருப்பார் கள்? எதைப் பற்றி அவர்கள் யோசித்திருப்பார்கள்?

அங்கிருந்துதான் புறப்படுகின்றது நாம் பெற்றிருக்கின்ற இந்த இஸ்லாம். இன்று நாம் முஃமினாக இருப்பதற்கான நதிமூலம். அந்நதி அக்குகையிலிருந்து புறப்படுகின்றது.

எப்படி இருந்தது அக்குகை? தனிமை. எதுவுமே கிடையாது. இறைவன் இருக்கிறானா? இல்லையா? என்பது கூட முழுமை யாக தெரியாது.

இறைவன் இருக்கிறான் என ஆணித்தரமாக தெரிந்திருந் தாலும் நாம் இன்று இறைவனுக்காக சில மணித்துளிகளை ஒதுக்க தயாராவது இல்லை.

இறைவன் இருக்கிறானா? எப்படிப்பட்டவன் என்று எதுவுமே தெரியாமல் ஒரு மனிதர் மாதக் கணக்கில் தனிமையில் இருக்கிறார். இறைவன் இருக்கிறான், ஒரே ஒரு இறைவன்தான் அவனுடைய திட்டவட்டமான வழிகாட்டுதல் இது என்பது நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்த பிறகும் நாம் அல்லாஹ்வுக்காக எங்கேனும் போவதற்கோ இரண்டு மூன்று மணிநேரம் தொடர்ந்து உட்காரவோ தயாராக இல்லை. இதுதான் நம்முடைய நிலைமை.

நம்மில் எவ்வளவு நபர்கள் தொடர்ந்து பத்து நாள் ரமழானில் இஃதிகாஃப் இருக்கிறோம்? ஷரீஅத்தில் ஒரு முக்கியமான கடமை என்று தெரிந்திருந்தும் இறைவனுக்காக அவனுடைய வீட்டில் பத்து நாள் அமர்வதற்கு நம்மால் முடியவில்லை. இது தான் யதார்த்தம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல வருடங்களில் ரமழான் பதினொன்று ஆரம்பித்தவுடன் இஃதிகாஃப்பை ஆரம்பித்து விடுவார்கள். பல ஆண்டுகள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்திருக்கிறார்கள். நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பது போன்று லைலத்துல் கத்ரை அடைவதற்கு மட்டுமேயல்ல இஃதிகாப்.

இறைவனுடைய இல்லத்தில் இருப்பதே ஒரு வணக்கம். அல் லாஹ்வுடைய வீட்டில் தங்கியிருப்பது. அல்லாஹ்வை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பது. அல்லாஹ்வை திக்ரு செய்வது. அல்லாஹ்வின் மறையை ஓதிக் கொண்டிருப்பது. அல்லாஹ்வுடைய வழிபாட்டில் ஈடுபாட்டோடு கழிப்பது ஓர் இபாதத்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்திருக்கிறார்கள். இறை வனுக்காக கொஞ்ச நேரம். ஒரு நாள், இரண்டு நாள், பத்து நாள், இருபது நாள், ஒரு மாதம், ஐந்து மாதம், இவையெல்லாம் இறைவனுக்காக நாம் காட்டுகின்ற ஈடுபாட்டை வெளிப்படுத் தும் விஷயங்கள். ஒரு விஷயத்தை நீங்கள் எந்தளவிற்கு முக்கிய மானதாக கருதுகிறீர்கள் என்பது பொருத்து உங்களுடைய ஈடுபாடு அமைகின்றது.

இறைவனுக்கு நம்மிடத்தில் எந்தளவு முக்கியத்துவம் இருக்கின்றது? இறைவனைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்?

ஒரு மனிதன் தொழுது முடித்து ஸலாம் கூறிவிட்டு நகராமல் அங்கேயே உட்கார்ந்திருந்தால். உட்கார்ந்து கொண்டிருக்கும் வரை தொழுதபோது கிடைத்த அதே நன்மைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்

நம்மை நாமே ஒரு கேள்வியை கேட்போம். என்றாவது ஒரு நாள் பர்ளு தொழுகை முழந்த பிறகு ஸஃப்பை விட்டு எழுந் திருக்காமல் அதே இடத்தில் ஒரு கால்மணிநேரம் 15 நிமிடம் உட்கார்ந்திருக்கிறோமா? சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு பத்து நிமிடம் பயணம் செய்ய வாகனத்தை எதிர்பார்த்து அரைமணி நேரம் இருபது நிமிடம் காத்துக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய முழு வாழ்க்கையையும் தீர்மானிக்கின்ற இறைவனுக்காக தொழுத பிறகு என்றைக்காவது பதினைந்து நிமிடங்கள் அமர்ந்திருக்கிறோமா?

அல்லாஹ், இஸ்லாம், ஈமான், ரஸூல், ஷரிஆ, ஜன்னத், ஜஹன்னம், ஆஃகிரா, ஹயாத் அனைத்து விஷயங்களும் நமக்கு தெரியும் ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்த பிறகும் ஒரு பத்து நிமிடம் அமர்வதற்கு நம்முடைய நஃப்ஸ் முன்வருவதில்லை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைப்பற்றி எதுவுமே தெரியாமல் மாதக் கணக்கில் உட்கார்ந் திருக்கிறார்கள். நோன்பு என்றால் என்ன? என்பதை தெரிய வேண்டுமானால் ஹிரா குகையில் தனியாக உட்கார்ந்து பார்க்க வேண்டும். எந்த நிர்ப்பந்தமும் இல்லாத சூழ்நிலையில், கடமையே இல்லாதபோது, ஒரு மனிதர் தனியாக அமர்ந்து அல்லாஹ் என்றால் யார்? என யோசித்துக் கொண்டே இருந்திருக்கிறார்

எவ்வளவு நாட்கள் எவ்வளவு மணித்துளிகள்? ஈடுபாட் டோடு, அயராமல், தூங்காமல், பேச்சுத் துணை இல்லை. வெளிச்சம் இல்லாத நிலை.

எவ்வளவு நாட்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த குகையில் தங்கியிரந்தால் அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய கவனம் அவர்கள்பால் திரும்பியிருக்கும்? இறைவன் தன்னுடைய கவனத்தை ஹிரா குகையை நோக்கி எப்போது திருப்பியிருப்பான்? ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அவர்களை வஹியோடு அனுப்பி வைக்கும் அளவுக் எத்தகைய பாரிய பெருங்கொண்ட ஈடுபாட்டை அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்படுத்தி இருப்பார்கள்.

அந்த பொழுதுகளை அந்த தருணங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றுதான் இஸ்லாம் சில துரும்புகளை ஷரீஅத்தில் ஆங்காங்கே வைத்திருக்கின்றது. அதிலொன்றுதான் இஃதிகாப்.

நாம் சம்பந்தமே இல்லாமல் இஃதிகாப்பை லைலத்துல் கத்ரு இரவில் சம்பந்தப் படுத்துகிறோம். இஃதிகாப் என்பது வேறு லைலத்துல் கத்ருக்காக முயற்சி செய்வது என்பது வேறு.

அல்லாஹ் ரப்பபுல் ஆலமீன் கஅபதுல்லாஹ்வை கட்டுங்கள் என இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாமிற்கு கட்டளையிட்டான். கஅபதுல்லாஹ்வை கட்ழய பிறகு அங்கே வருபவர்கள் போப வர்களுக்கும் அங்கேயே (இஃதிகாப்பில்) தங்கி இருப்பவர் களுக்கும் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக என் னுடைய வீட்டை சுத்தமாக வையுங்கள் என ஆணையிட்டான்.

லைலத்துல் கத்ருக்காக மட்டும்தான் இஃதிகாப் இருக்க வேண்டுமா? இஃதிகாப் என்பது வேறு. வாழ்நாளில் பெரும் பகுதியை மர்யம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மிஹ்ராபில் (இஃதிகாப்பில்) கழித்திருக்கிறார்கள். ஸகரிய்யா அலைஹிஸ் ஸலாம் மிஹ்ராபிற்கு சென்றுதான் அவர்களுக்கு உணவைக் கொடுப்பார்கள்.

இஃதிகாப் என்னும் ஓர் இபாதத்தை லைலத்துல் கத்ரோடு தொடர்புடையதாக நாம் மாற்றிவிட்டோம். சரி அதையாவது நாம் செய்கிறோமா? இல்லை. யாருமே அதை செய்யாமல் விட்டுவிடக் கூடாது என்னும் அச்சத்தினால்தான் மார்க்க அறிஞர்கள் ஃபுகஹாக்கள் அதனை பர்ளு கிஃபாயா என்னும் நிலையில் வைத்துள்ளார்கள். ஜனாஸா தொழுகைப் போல. ஜனாஸா தொழுகையை யாருமே தொழுகவில்லை என்றால் குற்றமாகி விடும்.

இஃதிகாப்பை ஷரிஆ பர்ளு கிஃபாயாவாக ஆக்கியிருக் கின்றது. யாராவது ஒரு சிலராவது பள்ளிவாயிலில் இஃதிகாப் இருக்க வேண்டும் இல்லை என்றால் அந்த முஹல்லாவாசிகள் அத்தனை பேரும் பாவிகளாகி விடுவார்கள்.

நாம் இஸ்லாமை பற்றி பேசுகிறோமே தவிர ஒரு சிறு துரும் பையும் கூட அல்லாஹ்வுக்காக நகர்த்துவது இல்லை எனத் தோன்றுகின்றது.

அல்லாஹ்வுடைய வீட்டில் வெறுமனே அல்லாஹ்வை நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க நாம் தயாராக இல்லை. நம்முடைய உலகியல் கணக்கு அதை வீணான செயல் என எடைபோடுகின்றது. வீணாக பொழுதை கழிக்க வேண்டும் வெட்டியாக அமர்ந்திருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.

நமக்கு நேரம் கிடைத்தால் தொழுகலாம் என்றோ இறைவனை தியானிக்கலாம் என்றொ எண்ணுகிறோமா?

‘நீங்கள் ஓய்வு பெறும் போது வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக, உம்முடைய இறை வனின் பக்கம் கவனத்தை திருப்புவீராக’ (அல்குர்ஆன் 94-8)

உங்களுக்கு ஓய்வுப் பொழுது கிடைத்தால் உங்கள் பணிகள் முடிந்து விட்டால் உடனடியாக பள்ளிவாயிலுக்கு போய் இபா தத்தில் ஈடுபட்டுவிட வேண்டும். இது அல்லாஹ்வின் ஆணை.

நமக்கு ஒரு நாளைக்கு எத்தனை ஓய்வுப் பொழுதுகள் கிடைக் கின்றன? நமக்கு கிடைக்கின்ற ஓய்வுப் பொழுதுகளில் நாம் என்ன செய்கிறோம்? நண்பர்களை சந்திக்கிறோம், கதை புத்தகங்களை படிக்கிறோம், டி.வி. பார்க்கிறோம், செல்போனில் பேசுகிறோம். எவ்வளவு காரியங்களை செய்கிறோம்?

ஓய்வுப் பொழுதில் தொழுகலாம் என்றோ அல்லாஹ்வுடைய இல்லத்திற்கு சென்று ஒழுவோடு வெறுமனே உட்கார்ந்திருக்கலாம் என்றோ என்றைக்காவது தோன்றியிருக்கின்றதா? பள்ளிவாயிலில் ஒளு செய்துவிட்டு குர்ஆன் ஓத வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கின்றதா?

ஓர் அடிமை என்பதற்கு அடையாளம் அதுதான். ஒரு அடி மை எனில் அந்த உணர்வு தானாக வரவேண்டும். அப்படியெனில், நாமெல்லாம் அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய அடிமைகளே அல்ல என்பதைத்தானே இந்நிலை எடுத்துரைக்கின்றது.

நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழுபேர் அர்ஷின் நிழலின் கீழ் இருப்பார்கள். அதில் ஒருவர் பள்ளிவாசலோடு தன்னை இணைத்துக் கொண்டவர்.

பள்ளி வாசல் என்பது ஒரு தொழுகும் இடம் அல்ல, பள்ளி வாயில் என்பது இறையில்லம். நம்முடைய வீட்டுடன் எந்த ளவு தொடர்பு இருக்கின்றதோ அதைவிட அதிகமாக இறை யில்லத்தோடு நமக்கு தொடர்பு இருந்தாக வேண்டும். அது தான் ஒரு அடிமையின் அடையாளம்.

உங்களுடைய வீட்டை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள், உங்க ளுடைய வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறீர்கள், ஓய்வு நேரங் களில் உங்களுடைய வீடுகளில் வெறுமனே உட்கார்ந்திருக் கிறீர்கள். இப்படி, ஓய்வு நேரங்களில் வீட்டில் இருந்து எதை யாவது செய்து கொண்டிருக்கிறோம். நம்முடைய வீட்டைப் போன்று நாம் இறைவனுடைய வீட்டை உரிமையோடு நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

என்னுடைய இறைவன் என்னும் சொந்தம் ஓர் அடிமையின் உள்ளத்தில் இயல்பாக இருந்தால் என்னுடைய இறைவனின் இல்லம் என்கின்ற உணர்வு உள்ளத்தில் தானாக வரும். அல் லாஹ்வின் வாசலில் வெறுமனே காத்துக் கொண்டிருப்பது கூட பேரின்பமாகத் தெரியும்.

உங்களுடைய வீட்டிற்கு ஒரு நபர்-உங்களுடைய நண்பரோ, உறவினரோ. அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறார் என்றால் உங்களுடைய வீட்டில் அவருக்கான உரிமைகள் அதிகரித்துக் கொண்டே போகும். உங்களுடைய வீட்டாரில் ஒருவராக அவரையும் எண்ணுவீர்கள். ஒரு நண்பரின் வீட்டோடு ஒரு உற வினரின் வீட்டோடு ஒரு நண்பனின் கடையோடு வியாபாரத்தோடு இருக்கின்ற தொடர்பு அளவுக்குக் கூட நமக்கும் நம்மு டைய இறைவனின் இல்லத்திற்கும் தொடர்பு இல்லை. நம்மு டைய வாழ்க்கையின் எந்த பகுதியிலும் இறையில்லத்தில் தங்கி இருப்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை.

இஃதிகாப் என்றால் தங்கியிருப்பது எனப்பொருள். அல் லாஹ்வின் வீட்டில் வெறுமனே தங்கியிருக்கவோ உட்கார்ந் திருக்கவோ நாம் விரும்புவதே இல்லை. அதற்கு நம் மனம் தயாராவதே இல்லை.

அல்லாஹ்வுடைய வீட்டிற்கு என்றால் சரியாக தொழுகைக்கு சற்று முன்னால் செல்ல வேண்டும். தொழுதவுடனேயே இரண்டு ரகஅத் நஃபில் தொழுதுவிட்டு உடனடியாக வெளியே வந்து விட வேண்டும். பள்ளி என்பது, நம்மைப் பொருத்த வரை தொழுவதற்கான ஓர் இடம். இறைவனின் வீடாக அதை நாம் நினைப்பதே கிடையாது.

இறைவனுக்கு என்றுள்ள ஒரு வீட்டையே நம்முடைய மனம் அங்கீகரிக்க தயாராக இல்லை என்னும் நிலையிருக்கும் போது வீடே இல்லாத ஏதேனும் ஒரு காட்டுப் பகுதியில் ஒரு குகையில் அல்லாஹ்வைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க முடியுமா? சாத்தியமே இல்லை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதராக மாறினார்கள் என்றால் அதற்காக அண் ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக முயற்சிகளை செய்திருக்கிறார்கள்.

இறைவனுக்காக நாம் என்ன மொழிகிறோம் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறோம் என்பது மிக முக்கியமான விஷயம்.

source:   https://www.facebook.com/profile.php?id=100000123744866