Home கட்டுரைகள் சமூக அக்கரை நீதியை நேசிக்கும் மக்களே! நாட்டை நேசிக்கும் மக்களே!!
நீதியை நேசிக்கும் மக்களே! நாட்டை நேசிக்கும் மக்களே!! PDF Print E-mail
Friday, 13 March 2020 09:02
Share

நீதியை நேசிக்கும் மக்களே! நாட்டை நேசிக்கும் மக்களே!!

நீதியை நேசிக்கும் மக்களே!

நாட்டை நேசிக்கும் மக்களே!!

நிம்மதியாய் வாழவிரும்பும் மக்களே!!

எல்லோரும் நிம்மதியாய் வாழவேண்டும் என்று விரும்புகின்ற மக்களே!!

சமூக ஒற்றுமையோடு வாழவிரும்பும் மக்களே!!

மனிதநேயத்தோடு வாழவிரும்பும் மக்களே!!

பரஸ்பர அன்போடு, புரிந்துணர்வோடு வாழ விரும்பும் மக்களே!!

இந்திய சுதந்திரத்திற்கு உழைத்த, உயிர் கொடுத்த மக்களே!!

சமயத்தை நேசிப்பதோடு, சமத்துவத்தை நேசிக்கும் மக்களே!!

மதங்களில் வாழ்வதோடு மனிதத்தை மதிக்கின்ற மக்களே!!

மதத்தை பின்பற்றுவதோடு மனிதாபிமானத்தை கடைபபிடிக்கும் மக்களே!!

நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முன்னிலைப் படுத்துகின்ற மக்களே!!

எனதருமை இந்து சமய மக்களே!

எனதருமை கிறிஸ்த்துவ சமய மக்களே!

எனதருமை இசுலாமிய மக்களே!!

இன்னும், ஏதோ ஒரு சமயத்தை அல்லது கொள்கையை பின்பற்றுகின்ற எனதருமை மக்களே!!

அல்லது சமயமே இல்லை என்று சொல்லும் எனதருமை மக்களே!!

செவிகொடுங்கள்!!

ஹிந்துத்துவா என்ற கொள்கையை பரப்பவும், நிலை நாட்டவும் துடிக்கின்ற ஆர். எஸ். எஸ். என்ற அமைப்பு தேசத்தின் தந்தை காந்தியை கொன்றது என்பதை அறிவீர்கள்!!

இந்தியா சுதந்திரம் பெற்றதில் அவர்களின் பங்களிப்பு இருக்கவில்லை என்பதையும் நன்கறிவீர்கள்!!

அறிந்து கொள்ளுங்கள்! நாட்டில் நடந்த, நடக்கின்ற வகுப்புவாத, மதவாத கலவரங்களின் ஆணிவேர் அவர்கள்தான்.

கீழ் சாதி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்கொடுமைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் உடைய சித்தாந்தம்தான் காரணம் என்பதை புரியுங்கள்!

பெரும்பான்மை மக்களின் உள்ளங்களில் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். அதனால், பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினரை இனப்படுகொலை செய்கிறார்கள்.

முந்திய கால வரலாறுகளை திரித்துக் கூறி, பொய்யான கதைகளை இட்டுக்கட்டுகிறார்கள். அவற்றின் மூலம் மக்களுக்கு மத்தியில் காழ்ப்புணர்ச்சிகளை பரப்புகின்றார்கள்.

மேலும், அந்த கதைகள் மூலம் சிறுபான்மை மக்களை அழிக்கும்படி பெரும்பான்மையினரை தூண்டிவிடுகிறார்கள்.

நாட்டின் அரசு நிறுவனங்களை எல்லாம் தங்கள் சித்தாந்தத்திற்கு சாதகமாக நடக்கும்படி கட்டாயப்படுத்துகின்றார்கள்.

நாட்டு அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களை அச்சுறுத்துகிறார்கள்.

அரசாங்கத்தின் அடிமட்டத்திலிருந்து ராணுவம், உச்சநீதிமன்றம், ரிசர்வு பேங்க் வரை அனைத்தையும் தங்கள் வளர்ப்பு பிள்ளைகளைக்கொண்டு ஹிந்துத்துவா அமைப்பாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

மதத்தின் பெயரால் மக்களை மீண்டும் கற்காலத்தை நோக்கி பின்னுக்குத்தள்ள முயற்சிக்கிறார்கள் இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்.

நமது தாய்நாட்டை சின்னாபின்னமாக்கி, சீரழித்து, சிதைத்து, சீர் கெடுத்து, மதவெறியால் மனிதர்களை கொன்று, ஹிந்துத்துவா அஜண்டாவை உடைய ஒரு அரசாங்கத்தை கொண்டுவர நெருங்கிவிட்டார்கள்!

அப்படி நடக்கக்கூடாது...

ஒருகால் அப்படி நடந்துவிட்டால் இந்தியா வசிக்க தகுதியற்ற நாடுகளில் முதல் நாடாக ஆகிவிடும்.

அப்போது மூடர்களும் குண்டர்களும், மதவெறி, இனவெறி, ஜாதிவெறி தலைக்கேறிய புரோகிதர்களும்தான் ஆட்சிசெய்வார்கள்.

அது சமயம் தலித்துகள், கீழ் சாதி மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் எத்தகைய இழிநிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை நினைத்தால் இதயமெல்லாம் நடுநடுங்குகிறது, இரத்தமெல்லாம் உறைந்து நிற்கிறது.

பெரும்பான்மை மக்களில் கால் வாசியினரை தங்கள் கொள்கையை உள்வாங்கியவர்களாக இவர்கள் மாற்றிவிட்டார்கள்.

இந்துக்களுக்கு ஒருநாடு வேண்டாமா என்று கூவிகூவி, பெரும்பான்மையினரின் மனங்களை கெடுத்து விட்டார்கள்.

இந்தியா இந்துக்களின் நாடுதான். அதில் சந்தேகம் இல்லை.

அது செகுலர் நாடாக இருக்கின்ற வரைதான் இந்துக்கள் எல்லோருக்கும் உள்ள நாடாக இந்தியா இருக்கும்.

அது ஹிந்துத்துவா கொள்கையை கொண்ட ஹிந்து நாடாக மாற்றப்பட்டு விட்டால் அங்கு மேல்சாதி இந்துக்கள் மட்டும்தான் வாழமுடியும்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் அது நரகமாக ஆகிவிடும்.

பிராமண சித்தாந்தம் ஒருநச்சு விஷமாகும். அது இருந்தால், கோயில்களுக்குள் மட்டும்தான் இருக்கவேண்டும். நாட்டை ஆளுகின்ற சக்தியாக அது மாறிவிட்டால் அது அனுகுண்டை விட பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும்.

கல்வியையும் அரசாங்கத்தையும் தமதாக்கிக்கொண்டு கேவலமானஅடிமைத்தனத்தை மற்றவர்கள் மீது மதத்தின் பெயரால் தினிப்பதுதான் ஹிந்து ராஷ்டிரம், ஹிந்துத்துவா கொள்கை, மற்றும் ஆர்.எஸ்.எஸ்கொள்கை என்பதை சீக்கிரம் புரிந்துகொள்ளுங்கள்!!

இன்று நீங்கள் எதிர்க்கவில்லை என்றால் இனி நீ ஒருகாலும் அது உங்களால் முடியாது.

அல்லது அதற்கு பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டிவரும். உங்கள் சந்ததிகள் தலை நிமிர்ந்து கண்ணியமாய் வாழ முடியாது, சமத்துவமாய் வாழ முடியாது.

சிலை வழிபாடு என்பது வேறு. பார்ப்பணிய சித்தாந்தம் என்பது வேறு.

உருவ வழிபாடு, விக்கிரக ஆராதனை என்பது வேறு. ஹிந்துத்துவா என்பது வேறு.

பார்ப்பணியம் என்பது மதத்தின் பெயரைச் சொல்லி மனிதனை அடிமையாக்குவது,

சுயமரியாதையை அடியோடு பறிப்பது,

மனிதனை தாழ்த்துவது, மனிதனை வதைப்பது,

மனிதனை தீண்டத்தகாதவனாக ஆக்குவது,

மனிதனை மிருகத்தைவிட கீழ்த்தரமானவனாக ஆக்குவதாகும்.

இவைதான் ஆர்.எஸ்.எஸ், இவைதான் ஹிந்துத்துவா!!

சொல்லுங்கள்!! என்ன செய்யப் போகிறீர்கள்!!

தேச தந்தையிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் உயிர்கள் இவர்களின் பாசிச கொள்கைக்காக பலியாகிவிட்டன.

சிறுபான்மையினர் மீது பலநூறு முறைகள் இனப் படுகொலைகள் நடத்தப்பட்டுவிட்டன. மக்களின், இன்னும் நாட்டின் பல இலட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் சூறையாடப்பட்டுவிட்டன.

நல்ல நேர்மையான அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டார்கள்.!

நீதிவான்கள் மிரட்டப்படுகிறார்கள்!! பந்தாடப்படுகிறார்கள்.

நியாயமாக தீர்ப்பு கூற உச்ச நீதிமன்றமே இப்போது நடுங்குகின்றது!! தீர்ப்புகள் ஓர் இடத்தில் எழுதப்படுகின்றன. பிறகு, அவை நீதிமன்றங்களில் வாசிக்கப்படுகின்றன.

நாட்டின் நிர்வாகத்துறை அவர்களின் கைவசம் பெரும்பாலும் சென்றுவிட்டது என்றே கூறலாம். இது மிகை அல்ல.

இப்போது மீதமிருப்பது, மக்கள் மன்றம் ஒன்றுதான்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடைசெய்யப்பட வேண்டும், அதன் கொள்கையைக் கொண்ட அத்தனை பள்ளிகள், பாடசாலைகள், நிறுவனங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் முடக்கப்படவேண்டும், மூடப்படவேண்டும்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்பில் இருந்த அல்லது இருக்கின்ற அத்தனை அரசு அலுவலர்களும் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அல்லது, அவர்கள் தங்கள் கொள்கையை தவறு என்று புரியுமளவு அவர்களுக்கு கவுன்ஸ்லிங் நடத்தப்பட வேண்டும்.

அரசின் மேல் மட்டத்தில் இருந்து சமூக சமய ஒற்றுமை உரைகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அரசின் பணிகளில் எல்லா மக்களுக்கும் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்..

மொழி, இன, மத, சாதி வெறியை ஊட்டும் பேதங்கள், பாகுபாடுகள், அவை சார்ந்த கோஷங்கள், பிரச்சாரங்கள், பரப்புரைகள், பிரசுரங்கள் அனைத்தும் அதிதீவிரவாத, படு பயங்கரவாத குற்றமாக தீர்ப்பளிக்கப்பட்டு, அதை பரப்புபவர்கள் வாழ்நாள் சிறையில் அடைக்கப்படவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் கொள்கை உடைய அல்லது கிரிமினல் குற்றப் பின்னனி உடைய எவரும் அரசியலில் நுழைய நிரந்தர தடை விதிக்கவேண்டும்.

கல்வி, ஒழுக்கம், கட்டுப்பாடு, சமூக நலன் விரும்புதல், சமூக சேவை, நாட்டின் எல்லாத் தரப்புமக்களின் முன்னேற்றம், நாட்டு மக்களின் உடல், பொருள், உயிர், சமயம் ஆகியவற்றின் பாதுகாப்பு இவைதான் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் கொள்கையாக, குறிக்கோளாக இருக்கவேண்டும். இந்த தகுதி இல்லாத யாரையும் மக்கள் இனம் கண்டு ஒதுக்க வேண்டும், புறக்கணிக்க வேண்டும்.

ஊழல், லஞ்சம், அரசு சொத்துக்களை கையாடல் செய்வது, மக்களின் உரிமைகளை கொடுக்க இழுத்தடிப்பது, அதற்கு பிரதி பலன் பெறுவது ஆகிய இவை அனைத்தும் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான குற்றமாக தீர்ப்பளிக்கப்பட வேண்டும். பிறகு, அதற்கு கடுமையான தண்டனைகள் உடனடியாக கொடுக்கப்பட வேண்டும்.

குற்றங்களின் கடினத்திற்கு ஏற்ப தண்டனையும் கடினமாக இருக்க வேண்டும்.

மனித உயிர்கள், உடமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இத்தகைய மறு சீரமைப்புக்கு தயாராகுங்கள்!!

உங்கள் தலைமுறையை தயாராக்குங்கள்!!

நாம் மதங்களால் பலர்!! ஆனால், நாம் தேசத்தால் ஒருவர்!

நமக்கு பல சமயம்!! ஆனால், நாடு ஒன்றுதான்! சமூகம் ஒன்றுதான்!!

இந்தியா!! இந்தியர்கள்!!!

ஒருநாடு! ஒருசமூகம்!!

இந்தியா நமது நாடு, நாம் இந்தியர்கள்!!

மக்களையும் நாட்டையும் காப்போம், கைகொடுங்கள்!!!

வாழவைப்போம்!! வாழ்வோம்!!

உயர்த்துவோம்!! உயர்வோம்!!

சீர்திருந்துவோம்!! சீர்திருத்துவோம்!

குறிப்பு: நாம் ஒட்டு மொத்த பிராமிணர்களை எதிர்க்கவில்லை. அவர்களில் யார் பார்ப்பனிய கொள்கையை எல்லா மக்களும் ஏற்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டுகின்றார்களோ அவர்களைத்தான் நாம் எதிர்க்கின்றோம்.

சமுதாய நலன் விரும்பி:

அ. உமர் ஷரீஃப் காசிமி.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

so0urce: http://islam-bdmhaja.blogspot.com/2020/03/blog-post_11.html#more