Home கட்டுரைகள் அரசியல் "கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு"
"கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு" PDF Print E-mail
Sunday, 02 February 2020 08:21
Share

"கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு" -குறள்

கிழக்கிந்திய கம்பெனியை விரட்ட போராடி இன்று காப்பரேட் கம்பெனிகளிடம் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கூட உருவாக்க வக்கில்லாதவர்கள்.. நேரு தொடங்கி காங்கிரஸ் கொண்டுவந்த/உருவாக்கிய மத்திய அரசின் லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார்கள்.

நிதிநெருக்கடி தீர்க்க வழிகாண வக்கில்லாதவர்கள்   பொது சொத்துக்களை விற்று கடைசியில் திவாலாக போகிறார்கள். வங்கிகள் திவாலானால் அதிகபட்சம் நீ எத்தனை கோடிகள் வைப்புநிதியாய் சேமிப்பு நிதியாய் வைத்திருந்தாலும் ஐந்து லட்சம் தருவோம் என பெரியமனதோடு சொல்கிறார் நிதியமைச்சர். சரிந்து வரும் பொருளாதாரத்தை (இப்போதாவது ஒத்துக்கொண்டார்களே) நிமிர்த்த நிர்மலா முயற்சிப்பதாத வலதுசாரி பார்வையாளர்கள் தம்பிடித்து கத்திக்கொண்டிருக்கிறார்கள். சாமானியனும் உணரும் நெருக்கடி குறித்து கவலையில்லை.

பொய் சொல்லி தப்பிக்கும் கலையை மறக்கவில்லை 4000 ஆண்டுகளுக்கு முன்பே வடிகால் பாசனத் தொழில் நுட்பம் கண்டவன் வரலாற்றை திரித்து சரஸ்வதி சிந்து நாகரீகமென சொல்லி வேறோரு அப்பன் இன்சியலை போட்டுக்கொள்கிறார்கள் வரலாற்றை திரிப்பதே வேலையாக கொண்டிருக்கிறார்கள் 

உயர் ஜாதி பார்ப்பனர்கள் 8,00,000 ரூ. சம்பாதித்தால் ஏழைகள் வரிவிலக்குண்டு கூடுதல் பரிசாக அவர்களுக்கு 10% இடஒதுக்கீடும் உண்டு. ஆனால் மற்றவர்கள் 5,00,001 ரூ. சம்பாதித்தால் நீ பணக்காரன் 10 முதல் 15% வரி கட்டவேண்டும்.

92,000 பேர் BSNL MTNL ஊழியர்கள் வேலை இழக்கிறார்கள்.. விடுதலை இந்தியாவில் இப்படியொரு அநீதி நடந்ததில்லை இதை தான் புதிய இந்தியா பிறந்ததென்கிறார்களோ தெரியவில்லை .. LIC பங்குகளை விற்கும் முடிவு சாமானியர்களின் கடைசி வருவாய் என நம்பி அரசை நம்பி அது என்றைக்கும் கைவிடாதென நம்பி இருந்ததற்கு மோடி அரசு மோசம் செய்திருக்கிறது.

லாபம் தரும் நவரத்தின நிறுவனங்களை அதானிக்கும் அம்பானிக்கும் விற்றுவிட்டு நாட்டையே சுடுகாடாக்க பார்க்கிறார்கள். BSNL க்கு 4 ஜியை கூட தராமல் ஜியோ விற்காக மெல்ல அழித்து இரண்டு முன்று மாதங்களாக சம்பளம் கூட கொடுக்கமுடியாமல் கடைசியில் ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தி தனியொருவன் உயர்வுக்கு பாடுபடுகிற அரசாக இந்த பாஜக அரசு இருக்கிறது.

மக்களை கலவரத்தோடு பதட்டத்தோடு வைத்திருந்தால் இதில் எல்லாம் ஆர்வம் காட்டமாட்டார்கள் தங்களின் பாதுகாப்பில் மட்டுமே கவலைக்கொள்வார்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என எண்ணி இந்த மக்கள் விரோத அரசு செயல்படுகிறது மிருகபலம் உண்டென்பதற்காக எதை செய்தாலும் யாரும் கேட்கமாட்டார்களென செயல்படுவது ஆபத்தானது.

மக்களின் குரல்வளை நெறிக்கபடுவது தெரியாமல் அவனை மதவெறியில் சாதிவெறியில் மொழிவெறியில் நிறுத்தி நினைத்ததை செய்ய முயல்கிறது .. இருக்கும் கோவணமும் அவிழ்ந்து விழும் போது சீறி எழும் கோபம்   அடக்கமுடியாமல் போகும்.

எச்சரிக்கை!

"கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு"

என்றான் வள்ளுவன் ..

நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்..

- ஆலஞ்சியார்

https://www.facebook.com/groups/2254508434836202