Home இஸ்லாம் கேள்வி பதில் கேள்வி பதில் பகுதி - 6
கேள்வி பதில் பகுதி - 6 PDF Print E-mail
Monday, 18 August 2008 21:00
Share

97. கேள்வி: மூவர் சேர்ந்து பங்காளிகளாக நடத்தும் ஒரு கடையில் இருவருக்குத் தெரியாமல் ஒருவர் மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் ஒதுக்கி இப்போது அதை பெரிய தொகையாக ஆக்கிவிட்டார். இப்போது தான் செய்த தவறை மனப்பூர்வமாக உணர்ந்து திருந்தி விட்டதாக சிலரிடம் சொல்லி இருக்கிறார்.அந்தப் பணத்திலிருந்து தான் துளியளவுகூட செலவளிக்கவில்லை என்றும் கூறுகிறார்.

இப்போது அந்த பணத்தை நியாயமான முறையில் ஒப்படைக்க விரும்புகிறார் என்றாலும் அவர் மனத்தில் இவ்வளவு பணம் எடுத்தவர் இன்னும் எவ்வளவு பணம் எடுத்திருப்பாரோ என மற்றவர்கள் ஏளனம் செய்வார்களோ என்றும் இதைப்பற்றி மற்றவர்களிடம் வெளிப்படுத்தினால் தனது கௌரவம் பாதிக்கப்படுமே எனவும் எண்ணுகிறார். எனவே அப்பணத்தை அப்படியே தர்மம் செய்து விடலாமா எனவும் யோசிக்கிறார். எனவே இதுபற்றி ஒரு தீர்வைத் தரும்படி வேண்டுகிறோம்.

பதில்: அவரது மனம் திறந்த எண்ணத்தை பாராட்டுகிறோம். எத்தனை ஆண்டுகள் கடை நடத்தியிருக்கிறார் என்று நீங்கள் குறிப்பிடாவிட்டாலும் 'பெரும்தொகை' என்று குறிப்பிட்டிருப்பதால் பல ஆண்டுகள் கடந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஒரு விதத்தில் அவர் செய்தது பெரும் துரோகம்தான். எனினும் காலம் கடந்து அவருக்கு சிந்திக்கும் நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லவேண்டும்.

அந்த பணத்தை தர்மம் செய்ய அவருக்கு உரிமையில்லை. நடுநிலையான ஒருவரை மத்தியஸ்தராக வைத்து அவருடைய நிலையை மற்ற இருவருக்கு தெரியப்படுத்துவதுடன் அல்லாஹ்வைபயந்து அவர்களிருவரிடமும் மன்னிப்புக்கேட்கவும் தயாராக இருப்பதாக அவர் கூறவேண்டும்.
ஏனெனில் சக கூட்டாளிகளுக்கு செய்த குற்றத்தை அவர்கள் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிக்கமாட்டான். இவ்வுலகில் அவர் அல்லாஹ்வுக்காக கௌரவம் பார்க்காமல் பணிந்து போனால் நிச்சயம் அல்லாஹ் அவரை கண்ணியப்படுத்துவான்.
அதேநேரத்தில் அவரது சககூட்டாளிகள் அவரது கடந்தகால தவறுகளை அடியுடன் மறந்து விடவேண்டும். நினைவுபடுத்தவோ குத்திக்காட்டவோ கூடாது.
பெருமானார் ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம் அவர்களின் கீழ்க்கண்ட அறிவுரையை கவனத்தில் கொள்வார்களாக:
"ஒவ்வொரு மனிதரும் தவறு இழைக்கக்கூடியவர்தான். தவறு இழைப்பவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்புக் கேட்பவரே." (-திர்மிதீ)

"பாவத்திலிருந்துமீண்டவர்பாவமேசெய்யாதவரைப்போன்று" (-இப்னுமாஜா) - ஜமாஅத்துல்உலமா

98. கேள்வி: நாம் தொழும்போது நம்முடைய பிரார்த்தனைகளைக் கேட்கலாமா? தொழுகையில் எந்தெந்த இடங்களில் பிரார்த்திக்கலாம்?

பதில்: தொழுகையில் ஸஜ்தாவிலும், இரண்டாவது மற்றும் நான்காவது ரக்அத்தில் இருப்பில் அமரும்போதும் விரும்பிய பிரார்த்தனையைச் செய்யலாம். இந்த இடங்களில் பிரார்த்திப்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

"அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெறுக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்." என்று நபிகள்நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம் கூறினார்கள். - அறிவிப்பாளர்: அபூ ஹ¤ரைரா ரளியல்லாஹ¤ அன்ஹ¤ - நூல்: முஸ்லிம்.)

99. கேள்வி: எந்தெந்தகாரணங்களுக்காக 'ஸஜ்தாஸஹ்வு' செய்யவேண்டும்?

பதில்: தொழுகையில் இரண்டு தடவை 'ருகூஉ' செய்துவிட்டாலும், அல்ஹம்து ஸ¥ரா ஓத மறந்து விட்டாலும்,

முதல் இரண்டு ரக்அத்துகளில் அல்ஹம்துஸ¥ரா ஓதிய பின் வேறோரு ஸ¥ரா ஓதமறந்து விட்டாலும்,

ஏதேனும் ஒன்றைச்செய்ய மறந்து, மூன்றுதடவை 'ஸ¤ப்ஹானல்லாஹ்' என்று சொல்லக்கூடிய நேரம் வரைச் சிந்தனையிலிருந்து விட்டாலும்,

இருப்பில் அமர்ந்து 'அத்தஹிய்யாத்து' ஓதுவதற்குப் பதிலாகவேறு ஏதேனும் ஓதிவிட்டாலும்,

இரண்டாவது ரக்அத்தில் 'அத்தஹிய்யாத்து' ஓத உட்காராது எழுந்து பாதி உடல் நிமிர்ந்த நிலைக்குச் சென்றுவிட்டாலும்,

தொழுகையில் பலதவறுகள் செய்துவிட்டாலும், 'வித்ரு' தொழுகையில் 'குனூத்' ஓதமறந்துவிட்டாலும்,

'ரக்அத்'துகளை கூடுதலாக தொழுது விட்டாலும்,

ஆக இத்தகைய சந்தர்ப்பங்களில் 'ஸஜ்தாஸஹ்வு' செய்து கொள்ளவேண்டும்.

எந்தச்செயல்களில் ஃபர்ளு - வாஜிபு இல்லையோ, அவை விடுபட்டு விட்டால், அதற்கு 'ஸஜ்தாஸஹ்வு' அவசியமில்லை. தொழுதது எத்தனை 'ரக்அத்' என்று சந்தேகம் வரும்பொழுது மனச்சாட்சி எந்தப்பக்கம் அதிகம் வற்புறுத்துகிறதோ, அதனை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

100. கேள்வி: 'ஸஜ்தாதிலாவத்' எப்படி நிறைவேற்றுவது?

பதில்: திருக்குர்ஆனில் 14 இடங்களில் 'ஸஜ்தா' செய்யக்கூடிய ஆயத்துகள் இருக்கின்றன. 'ஸஜ்தா' வரக்கூடியஆயத்து ஓதியதும், உடனேஎ ழுந்துநின்று 'அல்லாஹ¤ அக்பர்' என்று கூறி ஸுஜூதுக்குச் சென்று மூன்று முறை 'ஸ¤ப்ஹான ரப்பியல் அஃலா' என்று கூறிவிட்டு எழுந்து நின்று கொள்ளவேண்டும்.

உட்கார்ந்த நிலையிலும் இப்படிச்செய்து கொள்ளலாம். ஸஜ்தா ஆயத்தை ஓதுபவர்களும் ஸஜ்தா செய்யவேண்டும். அதனைக் கேட்பவர்களும் 'ஸஜ்தா' செய்யவேண்டும். திருக்குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும் பொழுது 'ஸஜ்தா' ஆயத்துவரும் இடத்தை விட்டுவிட்டு ஓதுவது தவறாகும்.