வாழ்வைத் தொலைத்து வசதி தேடாதே! |
![]() |
![]() |
![]() |
Sunday, 29 September 2019 07:29 | |
வாழ்வைத் தொலைத்து வசதி தேடாதே! [ கிடைக்கவியலா பொருள் கிடைக்கும் என்றாலும், நீண்ட நாள் மனைவியைப் பிரிந்து பொருள் தேடும் ஆசையை விலக்கிவை. வாழ்நாளில் அந்த எண்ணம் வேண்டாம். ஓவியம் வரைதல் போல் தன் மேல் சந்தனம் பூசிக் கொண்டுள்ள நீ விரும்பும் உன் அழகிய மனைவியின் வலிமையுடைய நெஞ்சத்தில் ஏற்பட்டுள்ள பிரிவு மனவருத்தத்தை நினைத்துப்பார். பொருள் தேடச் செல்பவர் முன் சென்று நடுநிலையாளர், மனையாளின் பிரிவுத்துயரை எடுத்துரைத்தால் கேட்க மறுக்கின்றனர். மனைவியிடம் நீதி செலுத்துதல் தவிர்த்து எத்தகைய செல்வத்தை தேடி வந்தாலும், அதனை அனுபவிக்காமலே போவர். இளம் பிராயம் - சிற்றின்ப ஆசை ஒன்றாகப் பெற்றவர் பழக்க ஒழுக்கம் விரும்பத்தக்கது தானே? உண்மையில் சிறு மகிழ்ச்சி செயல். மாற்று ஆடையில்லாது ஒரே உடையை உடுத்தி வாழும் வறுமையில் அகப்பட்ட கணவன், மனைவி. மூச்சும், நினைவும் ஒன்றாகத் தழுவும் தன்மைக்குப் பொருந்துவோர், தனித்துவமான செல்வநிலையாகவே தமது வாழ்வைக் கருதுவர். பொருளுக்காக இளமையைத் தொலைக்கமாட்டர்.] வாழ்வைத் தொலைத்து வசதி தேடாதே! (சங்க இலக்கியம் கலித்தொகை பாடல் - 18) ‘‘அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ என்தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின் மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண் சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார் இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ? உளநாள் ஓரோ ஓ கை தம்முள் தழீஇ, ஓரோ ஓகை ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ சென்ற இளமை தரற்கு’’. நமது உரை : கிடைக்கவியலா பொருள் கிடைக்கும் என்றாலும், நீண்ட நாள் மனைவியைப் பிரிந்து பொருள் தேடும் ஆசையை விலக்கிவை. வாழ்நாளில் அந்த எண்ணம் வேண்டாம். ஓவியம் வரைதல் போல் தன் மேல் சந்தனம் பூசிக் கொண்டுள்ள நீ விரும்பும் உன் அழகிய மனைவியின் வலிமையுடைய நெஞ்சத்தில் ஏற்பட்டுள்ள பிரிவு மனவருத்தத்தை நினைத்துப்பார். பொருள் தேடச் செல்பவர் முன் சென்று நடுநிலையாளர், மனையாளின் பிரிவுத்துயரை எடுத்துரைத்தால் கேட்க மறுக்கின்றனர். மனைவியிடம் நீதி செலுத்துதல் தவிர்த்து எத்தகைய செல்வத்தை தேடி வந்தாலும், அதனை அனுபவிக்காமலே போவர். இளம் பிராயம் - சிற்றின்ப ஆசை ஒன்றாகப் பெற்றவர் பழக்க ஒழுக்கம் விரும்பத்தக்கது தானே? உண்மையில் சிறு மகிழ்ச்சி செயல். மாற்று ஆடையில்லாது ஒரே உடையை உடுத்தி வாழும் வறுமையில் அகப்பட்ட கணவன், மனைவி. மூச்சும், நினைவும் ஒன்றாகத் தழுவும் தன்மைக்குப் பொருந்துவோர், தனித்துவமான செல்வநிலையாகவே தமது வாழ்வைக் கருதுவர். பொருளுக்காக இளமையைத் தொலைக்கமாட்டர். கருத்து : பொருள் ஈட்டுதலே வாழ்வு எனக் கருதி இளமைக் காலத்தை தொலைக்காதே. செல்வம் செழிப்பு தேடினால் திரும்பக்கூடியவை. இளமை திரும்பக் கூடியதல்ல. மனைவியைப் பிரிந்து சம்பாத்தியம் தேடும் நிலை ஏற்பட்டால் குறித்த காலத்திற்குள் திரும்பு. மனைவி மனக்குறைபடும் வகையில் சென்ற இடத்தில் நீண்ட காலம் தங்காதே. போதும் என்ற மனோ நிலையில் இருப்பதைக் கொண்டு திருப்தி படு. சொற்பொருள் : அரும் பொருள் - கிடைக்கவியலா செல்வம், பயன். வேட்கை - ஆசை. துரப்ப - செலுத்த. பிரித்தல் - நீக்கல். உறை - வாழ்நாள். சூழாதி - எண்ணாதே. ஐய - அழகிய. என்தோள் - மனைவியின் தோள். தொய்யில் - சந்தனம் பூசிக் கொண்ட மகளிர். மைந்துடை - வலிமையுடைய. சுணங்கு - பசலை, மனவருத்தம். சென்றோர் - பொருள் தேடச் செல்வோர். முகப்ப - முன் தோன்றி. பொருள் - வாய்மை, செயல். கிட - பொருட்படுத்தாமை. வாது - நீதி. ஒழிந்தவர் - தவிர்ப்பவர். உண்ணாதும் - அனுபவிக்காதும். செல்வார் - போவார். இளமை - வாலைப்பருவம். காமம் - சிற்றின்ப ஆசை. ஓராங்கு - ஒருசேர. வளமை - வழக்கு, பழக்கவொழுக்கம். ஒரோ ஓ கை - சிறு மகிழ்ச்சி செயல். தம்முள் - மூச்சு, நினைவு. தழீ - தழுவுதல், புகுதல். ஒன்றன் - பொருந்துபவன். கூறு - தன்மை. ஒன்றினார் - தனித்தவர். அரிது அரோ - அருமையானது. -ஜெ. ஜஹாங்கீர், முஸ்லிம் முரசு டிசம்பர் 2011 source: http://jahangeer.in/
|