Home கட்டுரைகள் கவிதைகள் கிடப்பில் போடுங்கள் காழ்ப்புணர்ச்சியை!
கிடப்பில் போடுங்கள் காழ்ப்புணர்ச்சியை! PDF Print E-mail
Saturday, 27 July 2019 08:25
Share

உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்...

 

அஸ்ஸலாமு அலைக்கும்,

 

குறை கண்டதில்

கறை கண்டவனாக!

 

வரிகளில்

வலி உண்டு; வழி இல்லை!

 

அனைத்திற்கும் பெயரோ

இஸ்லாமிய இயக்கம் - வார்த்தையில் மட்டும்தான்

வாழ்க்கையில் இல்லை!

 

வெறி பிடித்த எதிரிகளின் நடுவே

சகோதரனின் கறி சாப்பிடுவதில் எத்தனை இன்பம்!

 

வைகறையில் காணமுடியவில்லை விடியலை;

உணர்வு இருந்தும் மக்களுக்கு உரிமை இல்லை

காரணம் ஒற்றுமை இல்லை!

 

உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்

தொழுகையில் மட்டும்! - மற்ற நேரங்களில்

தொலைவினில் மட்டும்!

 

அனைத்து அமைப்பினருக்கும் விமர்சினம் உண்டு;

மறந்துவிட்டோமோ

மறுமையில் நமக்கு விசாரணை உண்டு!

 

அறிவிக்கவில்லையா அண்ணல் நபி;

உன் மேனியின் ஒரு சதைப் பகுதி உன் சகோதரன் என்று?

மறக்கவில்லை ! மறக்கவில்லை!

சதையினை கடிப்பதற்கு மட்டும் நாம்!

 

கிடப்பில் போடுங்கள் காழ்ப்புணர்ச்சியை;

இந்த சமுதாயம் காணட்டும் புது எழுச்சியை!!!

 

''Jazaakallaahu khairan'' யாஸர் அராஃபத்