Home கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி உண்மையான அறிவு என்பது!
உண்மையான அறிவு என்பது! PDF Print E-mail
Monday, 08 July 2019 07:08
Share

      மவ்லவி அப்துர் ரஹ்மான் உமரி       

குர்ஆனையும் அறிவியலையும் ஒப்பிட்டுப் பழம்பெருமை பேசி வந்த பேச்சுக்கள் இனி தேவையில்லை!

மதிப்பிற்குரிய Mansoor Ali அவர்கள் ஒரு பின்னூட்டத்தில்... பொதுவாக மனிதன் - தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். புலன்கள் வழியே நாம் பெறுகின்ற அந்த 'அறிவியல் அறிவு' எந்த அளவுக்கு உண்மையானவை? நம்பத் தகுந்தவை?

உண்மையில் நாம் நமது கண்களால் ஒன்றைப் பார்த்து அறிந்து கொள்வது எப்படி தெரியுமா? நம் கண்களின் எதிரே உள்ள ஒரு பொருளின் பிம்பம் நமது விழித் திரையில் (Retina) தலை கீழாக விழுகிறது. அந்த பிம்பம் குறித்து மூளைக்குத் தகவல் அனுப்பப் படுகிறது. மூளை ஒன்றைப் புரிந்து கொள்கிறது. மூளை புரிந்து கொண்டது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். கண்களால் நாம் பெறும் அறிவின் நம்பகத் தன்மை இவ்வளவு தான்! மற்ற புலன்கள் வழி நாம் பெறுகின்ற தகவல்களின் நிலையும் அதே தான்!

அதனால் தான் சொன்னார்களோ - 'கண்ணால் பார்ப்பதுவும் பொய் - காதால் கேட்பதுவும் பொய்' - என்று! விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்களே ஆய்வுக் கூடங்களில். அந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா? அவற்றில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை என்றால் - அதுவும் கேள்விக்குறி தான்! பின் ஏன் நேற்று சொன்ன ஒரு அறிவியல் கறுத்தை இன்று மாற்றிக் கொள்கிறார்கள்?

ஒளி நேர்கோட்டில் பரவுகிறது என்ற கருத்து இன்று எங்கே போயிற்று?

அணுவைப் பிளக்க முடியாது என்று அன்று டால்ட்டன் சொன்ன கோட்பாடு இன்று என்ன ஆனது?

அப்படியிருக்கும் போது இன்று சொல்லப்படுகின்ற அறிவியல் கோட்பாடுகளின் நாளைய கதி என்ன?

அவை எதிர்காலத்தில் மாற்றப் படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

மாற்றங்களுக்கு ஆளாகும் அத்துனை அறிவியல் கோட்பாடுகளையும் வெறும் ஊகங்கள் என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

விஞ்ஞானக் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்து பாப்பர் என்ற விஞ்ஞானி என்ன கூறுகிறார் தெடியுமா?

"Theories are often bold conjectures!" - அதாவது அறிவியல் கோட்பாடுகள் பெரும்பாலும் துணிச்சலான கற்பனைகளே!

அறிவியல் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்துக் கவலைப் படாமல் - இயன்ற அளவுக்கு அதிகம் அதிகமான கோட்பாடுகளை அறிவியல் உலகுக்கு வழங்கிட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் டாவிஸ் என்ற விஞ்ஞானி.

"The world of science should be like a classical free enterprise market place with theories as commodities. When there is a demand for theories (of any sort) it is to the consumer's advantage to allow the largest possible supply...."

'விஞ்ஞான உலகம் என்பது சுதந்திரமான ஒரு வியாபரச் சந்தையைப் போல!

இந்த சந்தையில் விற்கப் படும் பொருள்: விஞ்ஞானக் கோட்பாடுகள் தாம்.

ஒரு குறிப்பிட்ட வகைக் கோட்பாடுகளுக்கு 'கிராக்கி' ஏற்படும்போது,

சந்தைக்கு - எந்த அளவுக்கு இயலுமோ

-அந்த அளவுக்கு வகை வகையான கோட்பாடுகளை அனுமதிப்பது

-அவைகளைப் பயன் படுத்துபவர்களுக்கு வசதி தானே!

நாம் கேட்பது என்னவென்றால் - அறிவியல் கோட்பாடுகளெல்லாம் 'வியாபாரப் பொருட்களா'? கிராக்கி இருக்கிறது என்றால் பொய்யான கோட்பாடுகளையும் 'விற்பனைக்குக் கொண்டு வந்து விடுவீர்களா?

ஆம்! இது தான் இன்றைய அறிவியல் உலகம்!

இங்கே உண்மையும் பொய்யும் கலந்தே விற்பனை செய்யப் படுகின்றன!

விழித்துக் கொள்ள வேண்டியது - நம்மைப் போன்ற 'வாடிக்கையாளர்கள்' தான்!

அறிவியல் "பார்வை" என்பது எப்படிப்பட்டது என்று பார்ப்போமா?

"சூரியன் கிழக்கே உதிக்கிறது! மேற்கே மறைகிறது!"

ஆனால் சூரியன் உதிப்பதும் இல்லை! மறைவதும் இல்லை! அப்படித்தானே?

இதனை அல்லாஹ் எப்படி நமக்குப் புரிய வைக்கிறான் தெரியுமா?

சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் (துல்கர்னைன்) சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; (அல்குர்ஆன் 18:86)

சூரியன் சேற்று நீரில் மறைவதை நாம் பார்க்கலாம். ஆனால் ஒரு காலும் சூரியன் சேற்றில் மறைவதில்லை!

குர் ஆனையும் அறிவியலையும் ஒப்பிட்டுப் பழம்பெருமை பேசி வந்த பேச்சுக்கள் இனி தேவையில்லை என்பதே என் கருத்தும்

இறைவன் தனது தூதர்களுக்கு செய்தியை வழங்கிடும் முறைக்கு 'வஹி' என்று பெயர். ஆங்கிலத்தில் இதனை (Revelation) என்று அழைக்கலாம். தமிழில் அதனை 'வெளிப்படுத்துதல்' என்று மொழி பெயர்க்கலாம். எனினும் மொழி பெயர்ப்புகள் வஹி என்பதன் முழுமையான பொருளைத் தந்திட இயலாது. வஹி என்பது முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது. இறைவன் தான் தெரிவு செய்திடும் மனிதர் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட வானவர் (angel) மூலமாக தனது செய்திகளை மிகச் சரியான சொற்களைக் (Exact words) கொண்டு படித்துக் காட்டி அவர் உள்ளத்தில் அப்படியே பதிய வைக்கும் அசாதாரணமானதொரு நிகழ்ச்சிக்குப் பெயர் தான் வஹி என்பது!

இந்த அனுபவம் இறைத்தூதர்களுக்கு மட்டுமே உரித்தானது. வேறு எவரும் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இயலாது. எனவே இந்த வஹி எனும் அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை வேறு எவராலும் ஊகித்து அறிந்து கொண்டிட இயலாது!

எனவே வஹி மூலம் பெறப்பட்ட செய்தி - அந்த செய்தியைச் சொல்லிட இறைவனே தேர்ந்தெடுத்த சொற்கள் மூலமாக அப்படியே இறைத்தூதருக்கு வேத வசனங்களாகக் கொண்டு போய் சேர்க்கப்படுவதால் - பெறப்பட்ட அந்த செய்தியை 'இது ஊகம் தான்! இது கற்பனை தான்!' - என்று எண்ணி ஒதுக்கி விட முடியாது.

ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம். ஒருவர் தனக்கு வஹி வருகிறது என்று பொய் சொல்லி விட்டால்? இந்தக் கேள்விக்கு மட்டும் சரியான விடை கிடைத்து விட்டால், ஒருவர் உண்மையான இறைத்தூதர் தான் என நிருவப்பட்டு விட்டால் - இறைவனிடமிருந்து அவருக்கும் அவர் மூலமாக நம்மிடமும் வந்து சேர்க்கப்படும் 'இறைவனின் செய்தி'யின் யதார்த்த நிலை என்ன?

இறைவனோ எல்லாம் அறிந்தவன். இறைவனின் தூதரோ உண்மையானவர். எனவே வஹி மூலமாக நம்மிடம் வந்து சேர்கின்ற செய்தி - சத்தியமானது! சந்தேகத்துக்கு இடம் இல்லாதது! அந்தச் செய்தி குறித்து - அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லாமலும் இருக்கலாம் என்று பொத்தம் பொதுவாகக் கருத்துச் சொல்லிட இயலாது! - வஹி மூலம் பெறப்படும் ஒவ்வொரு சொல்லும் இறைவனுடையவை!

ஒவ்வொரு கருத்தும் இறைவனிடமிருந்து பெறப்பட்டவை! ஆதாரப் பூர்வமானவை! எனவே அறிவு என்றால் அது தான் அறிவு! சந்தேகத்துக்கு இடம் இல்லாத அறிவு! கோணல் இல்லாத அறிவு! அது பொய் என்று ஒதுக்கித் தள்ளி விட இயலாத அறிவு! - வஹியின் கருத்துக்கு மாற்றமான எதனையும் உண்மை என்று நிரூபித்திட இயலாத அளவுக்கு உறுதி வாய்ந்த அறிவு!

தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். (அல்குர்ஆன் 18:1)

https://www.facebook.com/syed.umari.7/posts/859215274282869