Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் இஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம்
இஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம் PDF Print E-mail
Monday, 21 January 2019 10:49
Share

   இஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம்!     

  CNM சலீம்     

[   மருத்துவம் வணிக மயமாகி பன்னாட்டு நிறுவனங்களும் பண முதலைகளும் போட்டி போட்டுக் கொண்டு பலஅடுக்கு மருத்துவமனைகளைக் கட்டி மக்களின் உழைப்பை எல்லாம் உறிஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில், அரசின் தெளிவில்லாத மருத்துவக் கொள்கையும் சுகாதாரத் துறையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையும், நாற்றெமெடுத்த லஞ்ச ஊழலும் ஏழை எளிய மக்களின் எதிர்கால நல வாழ்வை கேள்விக் குறியாக்கி விட்டுள்ளது.

"இஸ்லாம் என்பது உலக விடுதலை மார்க்கம். அதில் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுதல் இருக்கிறது. இஸ்லாம் வழிகாட்டாத துறைகள் இந்த பூமியில் வந்ததும் கிடையாது, இனி வரப்போவதும் கிடையாது"    என்று     ஜும்ஆ மேடைகளிலும் இன்னபிற சபைகளிலும் நீட்டி முழங்கும் முஸ்லிம் அறிஞர்கள்,     அதைச் செயல்வடிவமாக நிரூபித்துக் காட்டும் வண்ணம் இஸ்லாமியத் தீர்வை முன்வைப்பதில்லை. அதில் கவனம் செலுத்துவதும் கிடையாது.

அல்லாஹ்வுடைய மார்க்கம் மனித வாழ்விற்கு வழிகாட்டியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்வில் இஸ்லாத்தை "கருத்தியல்" பாடமாக போதித்ததைக் காட்டிலும் நடைமுறை வாழ்வின் வழிகாட்டியாகவே போதித்து, அதன்படியே அவர்கள் வாழ்ந்து காட்டிவிட்டும் சென்றுள்ளார்கள். ஆனால்   இன்றைய முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய மார்க்கத்தை   "தத்துவங்களின் தொகுப்பாக"  சில பிரிவினரும்,   ‘சடங்கு சம்பிரதாயங்களின்’   தொகுப்பாக சில பிரிவினரும் கருதுகின்றனர்.

இஸ்லாத்தை சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளின் விடி வெள்ளியாக, சிக்கலில் தத்தளிக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்காகப் பொருத்த வேண்டியது   ஒவ்வொரு காலத்திலும் வாழும் முஸ்லிம்களின் கடமையாகும்.]

    இஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம்!        

மக்கள் தங்களது வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் நிலத்தடி நீர், காற்று, கடல் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் ஏறக்குறைய மாசடைந்து விட்டன.

விவசாயம் இரசாயன மயமாகி, உணவுப் பொருட்கள் பூச்சி மருந்துகளுடன் இரண்டறக் கலந்து நஞ்சாகி – நாசத்தை உள்ளடக்கிக் கொண்டு விற்பனைக்கு வருகின்றன. வேறுவழியில்லாமல் அவற்றை உண்ணும் மக்கள் புதுப் புது விதமான உயிர்க் கொல்லி நோய்களில் சிக்கிச் சீரழிந்து வருகின்றனர்.

எச்சரிக்கைகள் முஸ்லிம் சமூகத்தில் எத்தனைப் பேரின் கவனத்திற்குச் சென்றுள்ளது? எவ்வளவு பேர் இதை கவனத்தோடு எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியாது. ஆனால் இந்த எச்சரிக்கை எவ்வளவு உண்மைகளை உள்ளடக்கியது என்பதை அன்றாடம் ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் நிதர்சணமாக உணர்த்துகின்றன.

சமீபத்தில் மத்திய அரசின் சுகாதாரத் துறையும் (கீபிளி) என்ற) உலக சுகாதார அமைப்பும் சேர்ந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, இந்திய மக்களின் உடல் நலம் மிக மோசமான வகையில் சீர்குலைந்து வருவதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதுடன் விவசாயம், உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல், சுகாதாரம் போன்ற மனித வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத துறைகளில் அந்நிய சக்திகள் மற்றும் தனியார் துறைகளின் ஆதிக்கம் எந்த அளவிற்குப் பரவியுள்ளது என்பதையும், இந்திய அரசுத் துறைகளிலும் கொள்கை முடிவுகளிலும் அந்த சக்திகள் எந்தளவுக்கு ஊடுருவியுள்ளன என்பதையும் அதிர்ச்சியளிக்கும் வகையில் விளக்குகிறது.

அந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த, சுகாதாரத்திற்கான பிரதமரின் ஆலோசகரான மருத்துவர் சிவக்குமார் என்பவர் கூறுகிறார்:

இந்தியாவில் ஆண்டுதோறும் 4 கோடிப் பேர் நோயின் காரணமாக வறுமையின் கோரத்திற்குத் தள்ளப்படுகின்றனர். பணம் இல்லாததால் 30 சதவிகித மக்கள் மருத்துவமே பார்ப்பதில்லை. இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. 47 சதவிகித மக்கள் மருத்துவத்திற்காக தங்களின் பூர்வீகச் சொத்துக்களை விற்று மருத்துவச் செலவு செய்து கொண்டிருக்கின்றனர். 48 சதவிகித மக்கள் மருத்துவத்திற்காக கடனாளியாகின்றனர். "சுகாதாரத் துறையின் கொள்கை முடிவுகளும் திட்டங்களும் சாதாரண மனிதனின் கழுத்தை இறுக்குபவனாக இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.

1960 களில் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தால் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். அந்தப் பஞ்சத்திலிருந்து மீள வேண்டுமானால் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று அமெரிக்க விஞ்ஞானியான ‘நார்மன் போர்லாகின்’ என்பவர் மூலம் அமெரிக்கா ‘தூண்டில்’ போட்டது. அந்தத் தூண்டிலில் மாட்டிக் கொண்ட இந்தியாவில் ‘பசுமைப் புரட்சி’ கொண்டு வரப்பட்டது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் உயிரோட்டம் நிறைந்த இந்திய மண்ணில் இரசாயனத்தையும் பூச்சி மருந்துகளையும் கொட்டி, மண்ணை மலடாக்கி, உணவை நஞ்சாக்கி, அதை உண்ணும் மக்களை அந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்ட 40 – 50 ஆண்டுகளுக்குள்ளாகவே பெரும்பெரும் நோய்களின் பிடியில் தள்ளிஸ. இப்போது மருத்துவமனையே கதி என்ற நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறார்கள்.

 
  பசுமைப் புரட்சியின் விளைவுகள் :    

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. 7 1/2 கோடி தமிழர்களில் ஏறக்குறைய 70 விழுக்காட்டினர் இன்று நோயாளிகளாக மாறிவிட்டனர். ஒரு வியாதிக்கு மருந்து உட்கொண்டால் பல வியாதிகளை உற்பத்தி செய்யும் இயற்பண்பு கொண்ட ஆங்கில (அலோபதி) மருந்துகளை வாங்கிக் குவித்து, அதை மருந்து என்ற நிலையில் உட்கொள்வதாக இல்லாமல் அதை உணவாகவே உட்கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தைலங்கள் இல்லையென்றால் தாய்மார்களுக்கு தூக்கம் போச்சு என்ற நிலை அதி வேகமாகப் பரவலாகிக் கொண்டிருக்கிறது.

தங்கமும், வெள்ளியும் தமிழ்ப் பெண்களின் சொத்துக்களாக இருந்த நிலைமாறி, மாத்திரைகளும் மருந்து பாட்டில்களுமே சொத்துக்கள் என்று சொல்லும் அளவுக்கு இன்று அவை வீடுகளில் நிரம்பிக் கிடக்கின்றன.

இந்த அவலநிலை வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கப் போகிறது என்று மிரட்டுகிறது மேற்கூறிய ஆய்வறிக்கை. பஞ்சமும் நோயும் எதிர்கால சந்ததிக்கு நாம் வழங்கப் போகும் பரிசாகப் போகிறது என்பதை மேற்படி ஆய்வறிக்கையின் மூலம் நாம் அறியும் போது நெஞ்சமே அதிர்கிறது.

நகரங்களில் வாழும் சில கொடுமதியாளர்களின் கோணல்புத்தி காரணமாக வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கிராமங்களில் நாசகாரத் திட்டங்கள் அமுல்படுத்தப் படுகின்றன. கிராமங்களில் வாழும் அப்பாவி மக்கள், இந்த நாசங்களெல்லாம் ஏன் ஏற்படுகின்றன என்பதை அறியாமலேயே அவற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அரசின் கிராமப்புற சுகாதாரத் துறையோ ஊட்டச்சத்து இல்லாமல் படு நோஞ்சானாகக் கிடக்கிறது.

அரசு வெளியிட்டுள்ள கிராமப்புற சுகாதாரம் குறித்த புள்ளி விவரத்தின்படி, மருத்துவர்கள் பற்றாக்குறை 76 சதவிகிதம். ஒருலட்சத்து பத்தாயிரம் மருத்துவர்கள் தேவைப்படுகின்ற நிலையில் வெறும் 26 ஆயிரம் பேர் தான் இருக்கின்றனர். சிறப்பு நிபுணர்கள் 59 ஆயிரம் பேர் தேவை. ஆனால் இருப்பதோ 7 ஆயிரம் பேர். ஏழை எளிய மக்களின் நோய் நிவாரணத்திற்கு இருக்கும் ஒரே அமைப்பான ஆரம்ப சுகாதார நிலையங்களின் பற்றாக்குறை 34 சதவிகிதம்.

மருத்துவம் வணிக மயமாகி பன்னாட்டு நிறுவனங்களும் பண முதலைகளும் போட்டி போட்டுக் கொண்டு பலஅடுக்கு மருத்துவமனைகளைக் கட்டி மக்களின் உழைப்பை எல்லாம் உறிஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில், அரசின் தெளிவில்லாத மருத்துவக் கொள்கையும் சுகாதாரத் துறையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையும், நாற்றெமெடுத்த லஞ்ச ஊழலும் ஏழை எளிய மக்களின் எதிர்கால நல வாழ்வை கேள்விக் குறியாக்கி விட்டுள்ளது.

 
  மாற்றுச் சிந்தனை தேவை  :    

மாற்றுச் சிந்தனை என்பது விவசாயம், உணவு உற்பத்தி, சுற்றுச் சூழல், சுகாதாரம், மருத்துவம் போன்ற துறைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த, நெருங்கிய தொடர்புள்ள துறைகளாகும். இவை அனைத்திலும் ஆக்கப் பூர்வமான மாற்றம் ஏற்படுவதற்கான மாற்றுச் சிந்தனை தோன்ற வேண்டும்.

அது ஏற்பட்டால் தான் மக்கள் இந்த கோரமான நோய்களின் பிடியிலிருந்து மீள முடியும். ஆனால் இது அவ்வளவு எளிதாக நடக்கின்ற காரியமாகத் தோன்றவில்லை. இன்னும் சொல்லப் போனால் இது குறித்துத் சிந்தித்தாலே சிந்திப்பவருக்கு சிக்கல் உருவாகும் வகையில் இதன் உற்பத்தி, வர்த்தக வலைப் பின்னல் அமைந்துள்ளது.

அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இங்கே உள்ள சில மக்கள் விரோத சக்திகளுக்கு காலம் முழுவதும் பல மில்லியன், பில்லியன் கோடிகளைக் கொட்டித் தரும் ‘கற்பக விருட்சமாக’ உள்ள இந்தத் துறைகளில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முயன்றால் அல்லது அதற்கான மாற்றுச் சிந்தனையை முன்வைத்தால் – வைப்பவரின் – முயற்சிப்பவரின் "கதையை" முடித்து விடுவார்கள். இதற்கு மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளில் நடந்துள்ள பல சம்பவங்கள் சான்றுகளாக உள்ளன.

இந்தத் துறைகளில் உலகளாவிய வலைப் பின்னலை அமைத்துக் கொண்டு, உலகம் முழுவதும் உள்ள மக்களை வாட்டி வதைக்கும் இந்த கொள்ளைக்கார "குஃப்ர்" கும்பலின் கொட்டத்தை அடக்கும் ஆற்றலும் வல்லமையும் அல்லாஹ் ஒருவனுக்கும் அவன் வழங்கிய இஸ்லாம் எனும் உலக விடுதலை மார்க்கத்திற்கும் மட்டுமே இருக்கிறது.

"இஸ்லாம் என்பது உலக விடுதலை மார்க்கம். அதில் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுதல் இருக்கிறது. இஸ்லாம் வழிகாட்டாத துறைகள் இந்த பூமியில் வந்ததும் கிடையாது, இனி வரப்போவதும் கிடையாது" என்று ஜும்ஆ மேடைகளிலும் இன்னபிற சபைகளிலும் நீட்டி முழங்கும் முஸ்லிம் அறிஞர்கள், அதைச் செயல்வடிவமாக நிரூபித்துக் காட்டும் வண்ணம் இஸ்லாமியத் தீர்வை முன்வைப்பதில்லை. அதில் கவனம் செலுத்துவதும் கிடையாது.

குறிப்பாக இந்தியாவில் வாழும் இஸ்லாமிய அறிஞர்களில் பெரும்பாலோர், இன்றைய இந்தியச் சமூகம் சந்தித்து வருகின்ற மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட எந்தச் சிக்கலுக்கும் இஸ்லாமியத் தீர்வை சரியாக முன்வைத்ததாகத் தெரியவில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபடுவதாகக் கூடத் தெரியவில்லை.

அல்லாஹ்வுடைய மார்க்கம் மனித வாழ்விற்கு வழிகாட்டியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்வில் இஸ்லாத்தை "கருத்தியல்" பாடமாக போதித்ததைக் காட்டிலும் நடைமுறை வாழ்வின் வழிகாட்டியாகவே போதித்து, அதன்படியே அவர்கள் வாழ்ந்து காட்டிவிட்டும் சென்றுள்ளார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய மார்க்கத்தை "தத்துவங்களின் தொகுப்பாக" சில பிரிவினரும், ‘சடங்கு சம்பிரதாயங்களின்’ தொகுப்பாக சில பிரிவினரும் கருதுகின்றனர்.

இஸ்லாத்தை சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளின் விடி வெள்ளியாக, சிக்கலில் தத்தளிக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்காகப் பொருத்த வேண்டியது ஒவ்வொரு காலத்திலும் வாழும் முஸ்லிம்களின் கடமையாகும்.

நோயின் பிடியில் சிக்கிச் சீரழிந்து வரும் இந்திய, தமிழ்ச் சமூகம் உள்ளிட்ட அனைத்துச் சமூக மக்களையும் பாதுகாப்பதற்கான இஸ்லாமியத் தீர்வு என்ன?

இந்தப் பிரச்சினைகள் உருவாவதற்கு என்ன காரணமோ அந்தக் காரணத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறிவதாகும். அது தான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

 
  விவசாயம் :   

விவசாயத்தில் அதிக ஈடுபாடு காட்டாத மக்களாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றோம். முதலில் விளை நிலங்களை வீட்டுமனை என்ற நோக்கமில்லாமல் விளைச்சலுக்காகவே அதிகம் வாங்கிக் குவிக்கும் சமூகமாக முஸ்லிம்கள் மாற வேண்டும்.

அல்குர்ஆன் மற்றும் பெருமானாரின் வழிகாட்டுதல்களை விவசாயத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். இலாப நோக்கம் பாராமல் இஸ்லாம் அங்கீகரித்த "இயற்கை" வழியிலான விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களைப் புகுத்தி விளைச்சலைப் பெருக்க வேண்டும். மனித இனத்திற்கு தீங்கு இழைக்கின்ற எந்தப் பொருளையும் விளைவிக்கக்கூடாது.

மேற்கத்திய நாசகார விவசாயக் கொள்கைகள் குறித்து மக்களிடமும் விவசாயிகளிடமும் எச்சரிக்கை செய்யவும், இஸ்லாம் அங்கீகரிக்கும் "இயற்கை விவசாயம்" குறித்து கிராமங்கள் தோறும் வழிகாட்டவும் பள்ளிவாசல் உலமாக்களை தயார் செய்ய வேண்டும்.

அதற்கேற்ப மதரஸா பாடத் திட்டத்தில் ஒரு பாடமாக விவசாயத்தைச் சேர்த்து உலமாக்களுக்கு கற்றுத்தர வேண்டும். இந்தியாவிலும் இஸ்லாமிய உலகிலும் வரலாறு முழுக்க மதரஸா பாடத்தில் விவசாயம் கற்றுத் தரப்பட்டுள்ளதை மூத்த உலமாக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 
   மருத்துவம் :  

சுற்றுச்சூழலும் மனிதனின் உள்ளமும் தான் நோயின் பிறப்பிடமாக இருக்கின்றது. உடலில் ஒரு பகுதி உள்ளது. அந்தப் பகுதி சீரடைந்தால் முழு உடலும் சீரடைகிறது. அது சீர் குலைந்தால் முழு உடலும் சீர் குலைகிறது. (நூல் : புகாரி, முஸ்லிம்) என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை முஸ்லிம்கள் உளவியல் தொடர்பான மருத்துவ ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இந்த ஒரு நபி மொழியைக் கொண்டு ஏழரைக் கோடி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். நோயின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். ‘உள்ளம்‘ தெளிவாக குழப்பம் இல்லாமல் இருந்தாலே மனித வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்.

இன்றைய ஆங்கில மருத்துவம் (அலோபதி) இந்த ‘உள்ளம்‘ என்ற கருத்தை மறுத்து உருவாக்கப்பட்ட மருத்துவமுறையாகும். அதனால் தான் அலோபதி மருத்துவ முறையால் நோய்களை முழுமையாக குணப்படுத்த முடிவதில்லை. பக்க விளைவுகளும் அதிகமாக உள்ளது.

மருத்துவம் என்பது இறைவனின் அருள் நிறைந்த துறை. அரசு தனது குடிமக்களின் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் 4 கலீஃபாக்கள் காலத்திலும் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலத்திலும் இந்த சுகாதாரத் துறையை எவ்வாறு கையாண்டுள்ளனர் என்பதை நாம் அறிய வேண்டும்.

அரசாங்கம்தான் இலவசமாக மருத்துவமனை நடத்த வேண்டும். கூடுதலான நிதிச்சுமைக்கு வசதி படைத்தவர்களின் கொடையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக ஹஸ்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அமைத்துக்காட்டிய "அவுகாஃப்" என்ற "வக்ஃப்" நிறுவனம் நமக்கு காட்டியும் கற்றும் தருகிறது. "வக்ஃப்"; என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கத்தான். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றத்தான். ஆனால் இன்றைக்கு வக்ஃப் நிறுவனங்கள் யார்யார் வாழ்வில் எல்லாம் ஒளியேற்றுகிறது என்பது எல்லோரும் அறிந்த தனிக்கதை.

ஆங்கில (அலோபதி) மருத்துவம் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் இந்தியாவைக் கொள்ளையிட வந்த போது இங்கே அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 40 – 50 ஆண்டுகளில் இந்த மருத்துவ முறை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவி, இன்று அதை விட்டால் வேறு வழியில்லை, ஆங்கில மருத்துவம் தான் நோய்களைத் தீர்ப்பதற்கு உள்ள ஒரே வழி என்ற சிந்தனை மக்களிடம் ஆழமாக வேரூன்றி விட்டது. அரசும் அரசியல்வாதிகளும் அதைத்தான் ஊக்கப்படுத்துகின்றனர். காரணம் "கவனிப்புகள்" பலமாக இருப்பது தான்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழகத்தில் நோய் நிவாரணியாக எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாத இயற்கை வைத்தியமான சித்த மருத்துவம் – அதிலிருந்து காப்பியடிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவம் மற்றும் கிரேக்க மருத்துவமான யூனானி, ஜெர்மன் மருத்துவமான ஹோமியோபதி, நேச்சுரோபதி (இயற்கை வைத்தியம்) போன்ற இந்திய மருத்துவ முறைகளையெல்லாம் கிறீtமீக்ஷீஸீணீtவீஸ்மீ விமீபீவீநீவீஸீமீ அதாவது ‘மாற்று மருத்துவம்‘ என்று அழைக்கும் கேவலமான நிலை அரசிடமும் மக்களிடமும் நிலவுகிறது. "ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது" என்று கிராமங்களில் சொல்வது இங்கே நிஜமாக்கப்படுகிறது.

பெருகிவரும் நோய்களின் பிடியிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யூனானி, ஹோமியோபதி நேச்சுரோபதி (இயற்கை வைத்தியம்) படித்த மருத்துவர்களை ஒவ்வொரு முஸ்லிம் முஹல்லாவிலும் அமர்த்திட வேண்டும். அவசர சிகிச்சைக்கு மாத்திரம் அலோபதியை பயன்படுத்திக் கொண்டு அடிப்படையான சின்னச் சின்ன நோய்களுக்கும் நாள்பட்ட தீர்க்க இயலாத நோய்களுக்கும் இந்திய மருத்துவ முறைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வீடுகளில் கடைபிடிக்கப்பட்ட வீட்டு வைத்திய முறைகளை {நாட்டு வைத்தியம்} ஒரு நாளும் நாம் மறந்து விடக்கூடாது. அற்புதமான அந்த மருத்துவ அறிவை குழந்தைகளுக்கு கற்றுத்தந்து பாதுகாக்க வேண்டும்.

12ஆம் வகுப்பில் தமிழ் வழியில் உயிரியல் படித்த மாணவிகளில் குறைந்தது ஒருவரையாவது ஒவ்வொரு முஸ்லிம் ஜமாஅத்திலிருந்தும் தேர்வு செய்து ‘இந்திய மருத்துவம்‘ படிக்க அவர்களுக்கு உதவிட வேண்டும். இன்ஷா அல்லாஹ் தமிழக முஸ்லிம் சமூகத்தில் நோய்கள் பெருகுவதை, நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை 5 1/2 ஆண்டுகளில் ஒரளவிற்கு தடுத்திட முடியும்.

 
   இஸ்லாமிய மருத்துவம் :     

மத்தியகால வரலாற்றில் ஏறக்குறைய 500 ஆண்டு காலம் உலகின் தலைசிறந்த மருத்துவ முறை என்று அறியப்பட்ட, அறியப்படுகின்ற ‘இஸ்லாமிய மருத்துவத்தை’ மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்.

அல்குர்ஆனிலும், நபி மொழிகளிலும் கூறப்பட்டுள்ள வாழ்க்கை முறை, உணவுகள், உண்ணும் முறை, மருந்துகள், ‘உள்ளம்‘ தொடர்பான கருத்துக்கள் போன்றவற்றில் நடைபெற்ற அதிகப்படியான ஆய்வுகள் தான் கி.பி 8 ஆம் நூற்றாண்டிலிருந்து ‘இஸ்லாமிய மருத்துவம்‘ என்ற உயர்தரமான உண்மையான மருத்துவ முறையாக உருவெடுத்தது. இது அன்றைய உலகின் அனைத்து வியாதிகளுக்கும் செலவு இல்லாமல் நிரந்தர தீர்வைத் தந்தது.

11ஆம் நூற்றாண்டில், பாக்தாத்தின் அப்பாஸிய கிலாஃபத்தில் அமைந்திருந்த "பைத்துல் ஹிக்மா" {பிஷீusமீ ளியீ கீவீsபீஷீனீ} என்ற ஆய்வுக் கூடத்தில் லத்தீன் மொழியிலிருந்து அரபு மொழிக்கு ஏராளமான கிரேக்கத் தத்துவங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டன. அப்போது கிரேக்கத்தின் "ஹிப்போகிரட்ஸ்" {கி.மு.370} என்ற அறிஞரால் மேம்படுத்தப்பட்ட மருத்துவமான யூனானி மருத்துவக் குறிப்புகளும் மொழியாக்கம் செய்யப்பட்டன.

அதே நேரத்தில் அரசியல் காரணங்களாலும், முஸ்லிம்களிடம் நிலவிய கொள்கை குழப்பங்களாலும் இஸ்லாமிய மருத்துவத்தை மேம்படுத்த வேண்டிய ஆய்வுகள் தேக்க நிலையை அடைந்தன. இன்றைய முஸ்லிம்களிடம் நிலவும் மேற்கத்திய நாகரீக மோகம் போல அன்றைய முஸ்லிம்கள் கிரேக்கத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு யூனானி மருத்துவத்தை எளிதாக உணர்ந்தனர். அதில் அதிகப்படியான ஆய்வுகளை மேற்கொண்டு அதில் சாதனை படைத்தனர். இதனால் பிற்காலத்தில் யூனானி மருத்துவமே முஸ்லிம்களிடம் நிலை பெற்று விட்டது.

யூனானி மருத்துவமும் இஸ்லாமிய அடிப்படையிலான மருத்துவம் அல்ல. அதுவும் மேற்கத்திய தயாரிப்பு தான். இதுவும் இறைவன் மற்றும் ஆன்மா ஆகியவற்றை மறுக்கும் மருத்துவமேயாகும். இறைவனை மறுக்கும் எந்த ஒரு மருத்துவ முறையாலும் எந்தக் காலத்திலும் முழுமையான நிவாரணத்தைக் கொடுக்க இயலாது.

‘நோயைக் கொடுப்பதும் இறைவன், அதை நிவர்த்தி செய்யும் ஆற்றலும் இறைவனிடமே உள்ளது’ என்ற இறைக் கருத்தையும் ‘மருத்துவம் என்பது முதலில் உள்ளத்திற்கு பிறகு உடலுக்கு’ அதாவது முதலில் இறைச்சிந்தனை பிறகு உடம்புக்கு மருந்து. இந்த முறையில் உருவாக்கப்படும் மருத்துவக் கொள்கையால் மட்டுமே நோய்களின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். அதற்கு முஸ்லிம்களே மறந்துபோன "இஸ்லாமிய மருத்துவம்"; குறித்த நீண்ட நெடிய ஆய்வுகள் தேவை.

தமிழகத்தில் இஸ்லாமிய மருத்துவம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளத் தேவையான கட்டமைப்பு வசதி (மாணவர்களே இல்லாத) அரபு மதரஸாக்களில் மட்டும் தான் உள்ளது. கேரளாவில் உள்ள மதரஸாக்களில் இஸ்லாமிய மருத்துவம் தொடர்பான ஆய்வுகள் அதிகளவில் நடைபெறுகின்றன. ஆனால் தமிழகத்தில் அது "உலகக்கல்வி" என்று முத்திரையிடப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மருத்துவம் தொடர்பான ஆய்வுகளை மதரஸாக்களில் வைத்து மேற்கொள்வது எந்த வகையிலும் மார்க்கத்திற்கு முரணானதல்ல. இன்னும் சொல்லப் போனால் அது மார்க்கத்தில் விரும்பத்தக்கதே என்பதை மேற்கூறிய செய்திகளில் இருந்து உணர்ந்து கொள்ளலாம். ஆகவே இன்று சுற்றுப்புறச் சூழலும் நிலத்தடி நீரும் மிக மோசமாக மாசடைந்து மக்களின் நல்வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், உடல் நலத்தை பாதிக்கும் உணவுப் பழக்கத்தை நோக்கி மக்கள் உந்தித் தள்ளப்பட்டு நோய்களின் பிடியில் சிக்க வைக்கப்பட்டு வரும் நிலையில் முறையான மருத்துவ ஆய்வும் சிகிச்சையும் அவசர, அவசியத் தேவையாகிறது.

ஆதலால், மதரஸா நிர்வாகிகளே! நமது மதரஸாக் கல்வியில் மருத்துவத்தை ஒரு பாடமாகவும் நமது மதரஸாவின் ஒரு பகுதியை மருத்துவ ஆய்வுக் கூடமாகவும் "தரம் உயர்த்த" முயலுவோமாக!

இன்னும் எத்தனை காலம் தான் அறியாமையில் மூழ்கி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பின்னடைவில் வைத்திருப்பது? சிந்திப்போமாக!

source:    www.samooganeethi.org