எனக்குத் தேவை ஸாலிஹான ஒரு மனைவி |
![]() |
![]() |
![]() |
Tuesday, 08 January 2019 21:22 | |||
எனக்குத் தேவை ஸாலிஹான ஒரு மனைவி பாத்திமா என்ற முஸ்லிம் மாணவியும் ஜார்ஜ் என்ற கிறிஸ்துவ மாணவனும் மிகுந்த காதலர்களாக கல்லூரியில் படித்து வந்தனர். பாத்திமாவின் தந்தை தன் அருமை மகளுக்கு திருமணம் நடத்த நாடி மாப்பிளை பார்த்துக் கல்யாணமும் முடிவாக்கப்பட்டது. பாத்திமா மௌனம் சம்மதாக இருந்தாள். ஆனால்... தன்னை பெற்று வளர்த்த தாய் தந்தையர்களுக்கே தெரியாமல் இருவரும் தலைமறைவாகி விடாலமென முடிவு செய்தனர். எப்படியோ இந்த விஷயம் அவளின் தந்தைக்கு தெரிந்துவிட்டது. அவள் அழுது கொண்டு தன் தந்தையிடம் கூறினாள். ஜார்ஜைத் தவிர வேறு யாருடனும் என்னால் வாழவே முடியாதென்று அழுது புலம்பினாள். மகளின் ஆசைகளுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் ஒருபோதும் தடையில்லாமல் இருந்த அந்த தந்தை சம்மதித்துவிட்டார் ஊர்வாசிகள்… குடும்பத்தினரிடத்தில் எப்படி பதில் சொல்லுவேன் என்று நினைத்து தனியாக ஏங்கிக்கொண்டிருந்தார். அவர் ஜார்ஜை நேரில் சந்தித்தார். குர்ஆனை கொடுத்து விட்டு கல்யாணத்திற்க்கு முன்னால் இதை படித்து முடித்துவிட வேண்டுமென்று கட்டளையிட்டார். ஜார்ஜ் அதை வாங்கி ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தார்.. இவ்வளவு நாளாக பைபிள் படித்த அவனுக்கு குர்ஆன் ரொம்ப பிடித்தது. யேசுவையும் மர்யத்தையும் கூறுவதினால் அதிக அக்கரையுடன் படித்தான். மாதங்கள் கடந்து சென்றது. அவன் ஹிபாவின் வாப்பாவிடத்தில் போனில் பேசுகிறான். அஸ்ஸலாமு அலைக்கும்... நான் (ஜார்ஜ் என்கிற) முஹம்மது பாஸில் பேசுகிறேன் என்றான். பாத்திமாவின் வாப்பாவிற்க்கு மகிழ்ச்சி தாங்க முடியல. மட்டற்ற மகிழ்ச்சி. சந்தோஷத்தினால் துள்ளிக் குதித்தார். ஆனால், தாங்களின் மகள் எனக்கு தேவையில்லை.. அவளை என்னால் ஒரு போதும் மனைவியாக்க முடியாது. பாத்திமாவின் தந்தை ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் "ஏன்?" என்று கேட்டார். ஜார்ஜ் சொன்னான்... ''இவ்வளவு நாளாக அவளை வளர்த்து ஆளாக்கிய அவளின் தாய் தந்தையை விட்டு, அதை விட மகிமை மிக்க இந்த இஸ்லாத்தை தூக்கி எறிந்துவிட்டு என்னுடன் வந்த அவளை எப்படி நம்புவது? சுவனம் நரகம் இருக்கிறது என்று இவ்வளவு தெளிவாக குர்ஆன் கூறிய பிறகும் கிறிஸ்து மதத்தை சேர்ந்த என்னுடன் வருவதற்க்கு தயாரான அவளை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்...? எனக்கு தேவை, ஸாலிஹான ஒரு மனைவி, அதை நான் அல்லாஹுவிடத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.'' சிறந்த புத்திமதி, மார்க்கம் மறந்த பெண்களுக்கு!
|